வியாழன், 30 டிசம்பர், 2010

ஞானசூரியன்-26

இந்துமதமும், ஜீவகாருண்யமும்

இக்காலத்தில் இந்துக்களில் சிலர் அஹிம்ஸா பரமோ தர்ம கொல்லாமையே சிறந்த தருமம், இதுதான் வேதத் தின் கருத்து என்று கூறுகிறார்கள். இவர்களின் கூற்றை யும் சிறிது ஆராய்வோம்.
மனம் முதலிய முக்கரணங்களினாலும் உயிர்களுக்குத் துன்பத்தை விளைவிக்காமல் உயிர்வாழ வேண்டும் என்ற உபதேச மொழியானது புத்தபகவானது திருவாக்கினின்றும் முதன்முதலாக வெளிப்பட்டது. பிற்காலத்தில் இந்து மதத்தலைவர்கள் இந்த வாக்கியத்தைக் கற்றுக் கொண்டு, இதுவும் தங்களுக்கென்று வாய்ப்பேச்சில் மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஆனால், வங்காளிகள் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அவர்களில் நான்கு வருணத்தினரும் மாமிசத்தையும் மச்சத்தையும் உணவாகக் கொள்ளு கிறார்கள். இந்து சமயப்பிரகாரம் சந்நியாசத்திற்கு உரிமை யில்லாதவரும் ஆனால், சந்நியாசி என்ற பெயரால் அறியப் படுபவருமான சுவாமி விவேகானந்தர் சொல்லியி ருப்பதைக் கேளுங்கள்.
என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும், அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டு வந்தார். ஒரு உயிரைக்கொல்வது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது. 1இக்கால நிலைமைக்கு மனிதனுக்கு மாமிச உணவு அவசியமானது. உதவியற்ற சில ஆடுகளைக் கொல்வதும், தனது மனைவி மக்களைப் பகைவர்களிடமிருந்து மீட்க முடியாமலிருப்பதுமாகிய இவ்விரண்டில் எது அதிக பாவம் என்பதை ஆராயவேண்டும். உடலுழைப் பில்லாமல் உயிர் வாழ்கிற சில உயர் குடிப்பிறந்தார். மாமிச உணவை விரும்பாவிடின் அவர்களுக்கு வேண்டாம். உடல் உழைப்பினால் உயிர் வாழும்படியான நிலைமையில் உள்ளவர்கள், இந்த அஹிம்சா விரதத்தைப் பின்பற்றுவதால் சமுதாயத்திற்குப் பெரிய 1. இக்கூற்று விவேகானந்தருடைய மதம் மட்டுமல்ல இந்துக்களுடைய எல்லா முக்கிய நூல்களும் மாமிசம் மரக்கறிப் பதார்த்தம் வேண்டுமளவு கிடைக்கும் நாட்டில் மாமிசம் புசிப்பது மிக்க கெடுதி. அதிலும் ஜீவகாருண்யமே உருவான சந்நியாசிகள் (துறவிகள்) செய்வது பெருங்குற்றம். அராபியா முதலிய நாட்டில் அவர்கள் கொலை புரிந்துண்டாலும், அது குற்றமாகச் சொல்வதற் கில்லை. அந்நாடு பொதுவான மற்ற உணவுகள் கிடைக்காத நாடு. பர்மா, இந்தியா சிலோன் முதலிய நாட்டு ஜனங்களும் இதற்கொத்த நாட்டு ஜனங்களும் ஜீவஹிம்சை செய்வது, உயிர்வாழ்வது பிசகென்றே கூறலாம்.
கேடுவிளையும். இந்துமதத்தை நன்றாக ஆராய்ந்ததனா லேயே சிலர் இவ்விதம் சொல்ல நேர்ந்தது. இந்துக்களும் அவர்களின் தெய்வங்களும் மாமிச உணவையே விரும்புவ தாகக் கீழ்க்காணும் மனுவின் வாக்கியங்களால் உணரக் கிடக்கிறது.
ப்ராணஸ்யான்னமிதம் ஸர்வம் ப்ரஜாபதிரகல் பயத்:
ஸ்தாவரம் ஜங்க மம் சைவ
ஸர்வம் ப்ரா ணஸ்ய போஜனம்.
சரணாம்ன்னமசரா
தம்ஸ்ட்ரிணாமப் யதம்ஷ்ட்ரிண:
அஹஸ்தாஸ்ச ஸ்ஹஸ்தா நாம்
சூரானாம் சைவபீரவ:
நாத்தா துஷ்யத்ய தன்னாத்யான்
ப்ராணினோஹன் யஹன்யபி:
தாத்ரைவ ஸ்ருஷ்டாஹ்யாத்யாஸ்ச
ப்ராணினோத்தாரஏவ்ச
பொருள்: சரம், அசரம் (அசையும் பொருள், அசையாப்பொருள்) ஆகிய இவ்வுலகு உயிர்களின் உணவின் பொருட்டுப் பிரம்ம தேவனால் படைக்கப் பட்டிருக்கிறது. அசையா உயிர்கள் சர உயிர்களுக்கு உணவாவது போலவே, கோரைப் பற்கள் இல்லாதவை அவைகளையுடைய உயிர்களுக்கும், ஏழைகள் வலிமையுடையவர்களுக்கும் உணவாகையால், இவ்விதம் உண்பதனால் பாவமுண்டாகமாட்டாது. ஏனெனின், உண்ணுகின்றனவும் உண்ணத் தக்கனவுமான உயிர்களை இதே கருத்துடன் பிரம்மா படைத்தார்.
இந்தப் பிரமாணப்படிக்கு ஏழைகளைப் பலசாலிகள் கொன்றார்களே ஒழிய, தின்னாமல் இருந்ததே அதிர்ஷ்டவசம். தின்றிருப்பார்களாயின், கொலையானது மிதமிஞ்சிப் பெருகியிருக்கும். புத்தபகவானுடைய புத்திமான் பலசாலியாவதன்றி பலசாலி புத்திமான வதல்ல. இதை நன்றாக மற்றுமுள்ளோர் அறியவேண்டும். புத்திமந்திரம் சித்த மந்திரம், என்கிற பஞ்சப்ர மேட்டி மந்திரத்தையும், அவ்வாறே ஜபம் பண்ணத்தகுந்தது. இதை விரிவாக மற்றோரிடத்தில் கூறுகிறோம்.
கொள்கைக்கு விரோதமாகவே மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனை யும் விதித்திருக்கிறார்.
நியுக்தஸ்து யாதான்யாயம்
யோமாம்ஸம் நாத்திமானவ:
ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:
னேக் விம்சதிம் (மனு)
பொருள்: சிரார்த்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உண்ணாவிடின், இருபத்தொருதடவை மிருகமாகப் பிறப்பான். இத்தகைய வாக்கியங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளுகிறவர்களே, அஹிம்சா தருமம் என்பதற்கு வேதக்கருத்துகள் பல என்றுகூறி, அறிவிலிகளை மயக்குகிறார்கள். யாகங்களில் தேவதை களுக்குச் கள்ளும் ஊனுமே படைக்க வேண்டும்.

- http://www.viduthalai.periyar.org.in/20101229/news09.html