வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

தமிழர் தலைவர் கி.வீரமணி


சொந்த புத்தியைவிட
அய்யா தந்த புத்தி ஒன்றே போதும் என்று
தமிழ் சமூகத்தின்
விடிவெள்ளியாக

தமிழர் தலைவர்

கி.வீரமணி

இனமானப் போரை தலைமை ஏற்று நடத்துபவராக ,
சமூக நீதியைக் காப்பவராக,
ஆரியரை வெல்லும் படையை
வழி நடத்துபவராக உள்ளார்.
ஈரோட்டுக் கண்ணாடி கொண்டு எதையும்
தொலை நோக்கோடு கண்டு தமிழ் சமூகத்தின்
கலங்கரை விளக்காக திகழ்கிறார்.
அகவை ௭௬ ஆனாலும் கொள்கை குன்றாக,
உலகின் எந்த மூலையிலும்
தமிழர் இன்னலுற்றார் என்றால் துடித்து எழுவார்.
தன்முனைப்புக்கு இடமின்றி எடுத்த செயலை செவ்வனே செய்து முடிப்பதில் வல்லவர்.
அய்யாவின் அடிச்சுவட்டில் அயராது என் கடன்
அய்யா பணி செய்துமுடிப்பதே என்று
இலக்கு தவறாத எழுச்சித் தலைவராக
திராவிடர் கழகத்தை தலைமை ஏற்று வழி நடத்துவது மட்டுமின்றி
ஒட்டுமொத்த தமிழர்களின் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

புதன், 25 பிப்ரவரி, 2009

கெடார் சு. நடராசன் நினைவு நாள் விழா



கெடார் நடராசன் நினைவேந்தல் நிகழ்ச்சி

சுயமரியாதைச் சுடரொளி மேனாள் விழுப்புரம் மாவட் டத் தலைவர் கெடார்சு.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 17.2.2009 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு தி.. மாநில பொதுக் குழு உறுப்பினர்சவுந்தரி நடரா சன் அவர்களின் சவுந்தரி இல்லத்தில் நடைபெற்றது. சவுந்தரிநடராசன் தலைமை வகித்தார். .பசுபதி வரவேற்று உரையாற்றினார். புலவர்.எத் திராசன், மாநில பொ.கு..; .மு. தாஸ், மாவட்டத் தலை வர் (விழுப்புரம்); .சுப்பரா யன், மாவட்டச் செயலாளர் (விழுப்புரம்); பி.பட்டாபி ராமன், மாவட்டத்தலைவர், தி.மலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நினைவேந்தல் உரை: துரை. சந்திரசேகரன், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்; .வா.ஏழுமலை, மாவட்டச் செயலாளர், .வந்தியத்தேவன் (மதிமுக); .கதிரவன், மாவட்ட இளை ஞரணி தலைவர்; ஆர். தேவேந் திரநாதன்; ரமேஷ், மாவட்டஇளைஞரணி செயலாளர்; சு.அண்ணாமலை, நகர தலைவர், செஞ்சி; நாகராசன், மாவட்டச் செயலாளர், செய்யார்; முத்து கதிரவன், மாநில இளைஞரணி துணைஅமைப்பாளர்; .விவேகானந்தன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பா ளர்; தில்லை உமாபதி; ஆர். தேவராசன்; ஜி.சாமிக்கண்ணு, ஓய்வு தலைமை ஆசிரியர்; . ரவி கெடார்; பெரியார் பிஞ்சுகள்: ஆடலரசன், அறிவுக் கரசன், பிரபாகரன்மற்றும் கழகத் தோழர்கள் உரையாற்றினர். சு.கருணாகரன் நன்றி கூறினார்.

நன்றி: விடுதலை நாளிதழ், ௨௫ பிப் 00

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

ஈழத் தமிழர் படும் அத்துணை வேதனைகளுக்கும், மனித நேயம் உள்ள எவரும் ரத்தக் கண்ணீர் விடுவார்கள் . ஆனால் , பார்ப்பனர்கள் மட்டும் ஆனந்தப்படுவதன் பொருள் விளங்கவில்லையா ? இதுவே ஆரியர் , திராவிடர் வேறுபாடு . தமிழருக்குஒரு இன்னல் என்றால் தமிழர்தான் கொதித்து எழுவர் . தமிழரை சுரண்டி பிழைக்கும் ஆரியக் கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் தமிழரைப் பிளவுபடுத்திவிட்ட ஆரியக் கூட்டம் தமிழர் என்று அழிவரோ என்று கழுகுக் கூட்டமாகத் திரிகிறது. தமிழர்கள் ஜாதி, மதம், அரசியலைக் கடந்து ஒன்றுபட்டு போராடும் காலம் இது. இன உரிமைப் போரை வென்று காட்டுவோம் .