ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஞானசூரியன்தொடர்-15

ஞானசூரியன - தொடர -15
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010

ஆனால், உதவி புரிந்தோர்களையாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டார்களா? இல்லை. அவர்களையும் 1குரங்குகள் ஆயினும், பக்தியுள்ளவைகள் என்றும் இழிவாகவே பேசினார்கள். இராமனால் செய்யப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் மனிதர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆயினும் இத்தருணத்திற்கேற்ற ஒரு கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். இது இராமாயணம், உத்தரகாண்டத்தில் சீதையைக் காட்டில் கொண்டுபோய் விட்ட பிறகு, அஸ்வமேத யாகஞ் செய்யப்போகும் தருணத்தில் நடந்ததாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளையினுடைய உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங் கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசைமொழி களைப் பொழிந்து கதறினான். அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்போது, சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணுகிறான். அவனைக் கொல்லாமலிருந்த குற்றத்தால், இக்குழந்தையின் உயிர் நீங்கிற்று. ஆயினும், காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும் என்று அசரீரி வார்த்தை மொழிந்ததாம். உடனே கோடை காலத்தில் காட்டுத்தீயின் நடுவில் அகப்பட்டவன் மழையினால், எங்ஙனம் மகிழ்ச்சியுறுவானோ, அத்தகைய மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று,
1. குரங்குகள் இப்போது பேசுவதாகத் தெரிந்தால், அப்போது பேசி இருந்திருக்கும். ஆனதால், தென்னாட்டிலுள்ளாரை இழிவு படுத்தவே இப்படிக் கூறியதென்க. அனுமான் 9 வியாகரணம் வாசித்த குரங்காம். அவர் தோளில் இராமனும், இலட்சுமணனும் சவாரி செய்ய இடம் கண்டனர். அந்தத் துறவியைப் பார்த்து, நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்? என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை, உண்மை நிலை ஒன்றினையே விரும்புகிறேன் என்று விடைபகர, இந்த ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லும், பாவமாகாது. எதிர் மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்து போன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால் பெரும் புண்ணியத்தை அடைவோமே என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து இங்ஙனம் கூறுகிறான்:-
ஹே! ஹஸ்த தக்ஷிண மருதஸ்யசி சோர்த்விஜஸ்ய
ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனௌக்ருபாணம்:
ராமஸ்ய காத்ரமஸி ............................................
பொருள்: ஓ! வலக் கையே, இறந்துபோன 1பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்றன்றோ?
இவ்வாறு அந்தத் 2துறவியைக் கொன்றவுடனேயே சிறுவன் உயிர்த்தெழுந்து விட்டதாயும், இராமாயணத்தில் எழுதியிருப்பதை யாவரும் வெளிப்படையாயறிந்ததே. என்னே இராமனின் கருணையிருந்தவாறு! இவ்வரும் பெரும் காரியஞ் செய்த அந்த ராமன், சாட்சாத் விஷ்ணு வின் அவதாரமாம். இக்காலத்திலும் இராமனைப் போன்ற அரசன் இருந்தால், சூத்திரர்கள் கதி என்ன?
இராமாயணம் கதை எழுதியதன் முக்கியக் கருத்து இக்கதைக்குள் அடங்கியிருக்கிறது. தேவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி விஷ்ணு 1. பிராமணரல்லாதாருடைய நாசம் பார்ப்பனரின் முன்னேற்றம் என்று பொருள்.
2. அழகுடைய மகளிரையும், ரத்தினத்தையும், ஞானத்தையும் சண்டாளனிடத்திலிருந்து பெறலாமென்ற ஸ்மிருதி வசனத்துக்கு முற்றிலும் மாறுபட்டதோடு, வேதத்தில் ரைக்வர் என்ற இருடி தோல் பதனிடுஞ் ஜாதியன்றோ? சஙகராச்சாரியரை எதிரே நின்று கேட்டவன் புலையனன்றோ? இவைகளைக் கவனித்தால், இராமா யணம் முழுப் பொய் என்பது விளங்கும்.
இராமனாக அவதரித்து 1இராவணன் முதலிய இராட்சதர்களை ஒடுக்கி உலகத்திற்கு எண்ணிறந்த நன்மைகளைச் செய்தாரென்றும், குடிகளை மகிழ்விக்கும் பொருட்டுப் பதிவிரதையான தம் மனைவியையும் காட்டிற்கு ஓட்டிவிட்டார் என்றும் மற்றும் பலவிதமாகப் புகழ்ந்து கூறி, நம்மவர்களுக்கு அவரிடம் ஒரு விதமான அன்பை உண்டு பண்ணிய பிறகு மேற்சொன்னவாறு சூத்திரத் துறவியைக் கொன்ற கதையும் சொல்லிவிடுகிறார்கள். இதைப்பற்றி யாதேனும் கேள்விகள் கேட்டால், அது திரேதாயுகம்; அக்காலத்தில சூத்திரன் தவம் பண்ணக்கூடாது. இது கலியுகம் பிராமணர்கள் கெட்டுப்போனார்கள். சூத்திரர்கள் தவம் பண்ணுகிறார்கள். இது யுகதருமம் என்று சொல்லி ஏமாற்றிவிடுகிறார்கள். உண்மையாகச் சொல்லுமிடத்து இவ்வஞ்சகர்கள் சொல்லும் கலியுகமாவது, கிருதயுக மாவது கிடையாது. இந்த உண்மையை. ஸதாம் ஸத்யுக; ஸாக்ஷாத் ஸர்வதை வாஸதாம் கலி
பொருள்: நல்லோர்களுக்கு எக்காலத்துங் கிருதயுகமும், தீயவர்களுக்கு எப்போதும் கலியுகமுமாம் என்கிற வாக்கியத்தினால் அறியக் கிடக்கின்றது.
இந்த இராமாயணக் கதையானது, சூத்திரர்கள் ஒரு குற்றமில்லாமல், மறுமையிலேனும் நற்கதியடையலா மென்று காட்டில் சென்று தவம் பண்ணிக் கொண்டிருந் தாலும், அத்தவத்திற்கு ஆதாரமாகிய உடலை ஒழித்துவிட வேண்டும் என்று ஏனைய அரசர்களுக்கும் போதிப்பதா யிருக்கின்றதன்றோ? இதனால் சூத்திரர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்படுகிற மற்ற சுயமான ஜாதியார் களை, என்றென்றைக்கும் எவ்வழியிலும் முன்னேற வொட்டாமல் தடுக்கவேண்டுமென்ற தீய எண்ணம் பார்ப்பன ஜனங்களுக்கு இருந்து வருகிறதை வெள்ளிடை மலைபோலக் காணக் கிடக்கிறதன்றோ? உண்ட வீட்டுக்கே இரண்டகம் புரியும் வஞ்சக ஜனங்களின் சுயநலத்தை மட்டுங்கோரி, அவர்கள் சொல்லுகிற வழியே ஒத்துக் கொண்டு நடக்கிற அரசனே க்ஷத்திரியன் என்று சொல் லியிருக்கிறார்கள்.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101212/news02.html