புதன், 22 டிசம்பர், 2010

ஞானசூரியன் தொடர்-14

இதற்கு முன் எல்லோருக்கும் முதல்வனான பிராம ணன் எல்லா உரிமைகளையும் தன்வசப்படுத்திக் கொண்டு, சில உரிமைகளை க்ஷத்திரியர்களுக்கும், அதைவிடக் குறைவாக வைசியர்களுக்கும் 1. தென்னாட்டிலும் க்ஷத்திரியர், வைசியர் என்று சில வகுப்பார் இருந்தபோதிலும், சாஸ்திர திருஷ்டியிலும், பிரமாண திருஷ்டியிலும் இங்குப் பிராமணன், சூத்திரன் என்ற இரண்டு வருணத்தினர் மட்டும் இருக்கிறார்கள் என்பது மனு வசனம்.

உதவினான். சூத்திரர்களுக்கு ஒருவகையிலும் உதவி செய்யாமலும், ஏதேனும் ஒரு காலத்தில் அவர்கள் சொந்த நன்மைக்காக முயற்சித்தால், அக்கணமே கொலை முதலிய தண்டனைகளை விதித்து நசுக்கியும் வந்தார்கள். இவ்வுண்மை இதுவரை கூறிவந்த பிராமண வாக்கியங்க ளினால் நன்கு விளங்கும். அய்ரோப்பியர்களும் சுயநன் மையைப் பார்க்கிறவர்களே. எனினும், இந்தியர் என்று முற்கூறிய வகுப்பினர் முன்னேற்றடைய முயற்சிப்பதைத் தடுப்பதில்லை. ஆனால், சுயநலத்திற்குக் கேடுவிளையா வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள். இதை மறுப்பவர்கள், நேபாள தேசத்தின் ஆட்சி முறையை நேரில் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது அங்குச் சென்று பார்த்தவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டால் உண்மை புலப்படும். நேபாளம் சுதந்திர நாடு; பிரிட்டிஷ் அதிகாரத் திற்குக் கீழ்ப்படியவில்லை. இக்காலத்திலும் மனுஸ்மிருதி யின் கொடுங்கோலை அங்கேதான் காணலாம். அங்குச் சூத்திரர்கள் கல்வி கற்கவும், பொருளீட்டவும் உரிமை கிடையாது. நல்லுணவு, நல்லணி, நல்லாடை, நல்வீடு இவைகளும் இவர்களுக்கு ஆகா. அதுவோ பனி மிகுந்த நாடு. ஆயினும், குடிசையில்தான் வசிக்கவேண்டும். பால் குடித்த சூத்திரனை மனுதர்ம நூல் வழியாக இன்றைக்குத் தண்டிக்கிறார்கள். சூத்திர ஜாதியில் எங்காவது அழகிய பெண் ஒருத்தி தோன்றுவாளாயின், அவள் பிராமணனுக் கும், க்ஷத்திரியனுக்கும் சொந்தம். 1இத்தகைய பெண்ணை அவளது தாய் தந்தையர்கள் க்ஷத்தியனிடத்தில் ஒப்பித்து விட வேண்டும். இவ்விதமாகச் சூத்திரர்களைச் சார்ந்த வரையில் மிகவும் பயங்கரமானது. இடைக்காலத்தில் 2ஆரியர்கள் ஆதிக்கம் பெற்றிருந்த நம் நாட்டிலும் இவ் வகையாகக் கொடுங்கோலரசுதான் நடைபெற்றதோவென நினைத்து வருந்தவும் இடம் ஏற்படுகிறது. தேச சரித்திர மும், சிற்சில வகுப்பார்களின் ஒழுக்கங்களும் இதற்குச் சான்றாகும். இத்தகைய அரசாட்சியை வெறுக்க எந்த இந்துவுக்கும் உரிமையில்லை. திலகர், மாளவியா முதலிய இந்துமதத் தலைவர்களின் சுய ஆட்சித் திட்டமும் இத்தகையதே.

1. மலையாளம் இதற்குச் சார்ந்ததாக இருந்தது.

2. சங்க இலக்கியங்களும் நிகண்டும் புகலும் தென் நாட்டில் சூத்திரன் என்று சொல் பிராமண மதத்திற்குப் புறம்பானவர்களையென்க. தங்கள் மதத்திற்குப் புறம்பான வர்களைக் கிறிஸ்தவர் அஞ்ஞானியென்றும், முகம்மதியர் காபா (பாவி) என்பது போலுமென்க.

சூத்திரன் எலும்பு நொறுங்க வேலை செய்தால், அதனால் வரும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் நன்றாய்த் தின்பார் களாம். சூத்திரன் வேலை செய்யாவிட்டால், உலகம் அழிந்து விடுமாம். என்னே மனுவின்நீதி! இத்தகைய மனுவுக்கும் குருக்களாயிருந்து விளங்கிய பிராமணர்களின் கருணைதான் என் னே! இராமாயண சம்பூ என்கிற நூலை இயற்றிய போஜ ராஜன் கூறுவதைக் கேளுங்கள்.

உச்சைர் கதிர் ஜகதி சித்யதி தாம தஸ்சேத்

தஸ்ய ப்ரமா சமரணை க்ருதகேத ரைஸ்சேத்;

தேஷாம் ப்ரகாசனதசாச மஹீசுவாஸ்சேத்

தானந்த ராக்வ நிபதேந்நனு மத ப்ராணாம்!

பொருள்: உலகத்தில் தருமத்தைப் பின்பற்றுவ தனாலேயே நற்கதியடைய முடியும். தரும நெறிகளை விளங்கவைப்பன வேதங்களாம். வெளிப்படுத்திய வர்கள் பிராமணர்கள். ஆகையால், பிராமணர்களைத் தவிர, வேறு யாரை வணங்குவேன்?

இந்தப் போஜராஜன் பெரிய வித்வான். அடுத்தோர்களை ஆதரிக்கும் பெருங்கொடையாளி. அத்தகைய பெரியாரைக் கூட இந்தப் பார்ப்பனர்கள் ஏமாற்றினார்களே! இதனால் அரசன் செய்யவேண்டிய நீதியாவன:- சூத்திரர்கள் முன்னேற்றமடையாமல் தடுத்தல், அவர்களை இரவும், பகலும் வேலை வாங்கி, அதனால் வரும் வருமானத்தில் அன்ன சத்திரங்களும், வேத பாடசாலைகளும், கோயில் களுங்கட்டிப் பிராமணர்களுக்கு எல்லாத் துறைகளிலும் உதவி புரிதல் என்று ஏற்படுகிறதன்றோ? இங்ஙனம் செய்தால் சொர்க்கமும், மீறினால் நரகமும் வருமாம். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்னும் பழமொழிக் கிணங்க, குழந்தைப் பருவ முதற்கொண்டே இங்ஙனம் உபதேசிக்கப்பெற்ற க்ஷத்திரியர்களின் ஆட்சியை வேறெவ்விதம்தான் மாற்றமுடியும்?

இராமாயணம்

இராமாயணம் என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்மவர்கள் பக்தியினால் மெய்மறந்து கூத்தாடுகிறார்கள். இதுவும் அறியாமையேயாகும். இராமன், பார்ப்பனர் சொன்னபடியே பார்ப்பனரல்லாதாரைத் துன்புறுத்தி வந்தவனாதலால், அவனை விஷ்ணுவின் அவதாரமென்று புகழ்ந்து, ஒவ்வொரு புராணத்திலும் பாடி வைத்ததோடு, அவனுக்கென்று தனியாக இராமாயணம் என்னும் ஒரு பெருங்காவியத்தையும் பாடி வைத்திருக்கிறார்கள். இந்த இராமன் இராட்சதர்களைக் கொன்றான் என்று சொல்லும் இடங்கள் எல்லாம் தமிழ் மக்களையே கொன்றதாகச் சரித்திர ஆராய்ச்சியால் ஏற்படும் உண்மையை, நம்மவர்கள் உணராமல் பொருள் நஷ்டமும், அவமானமும் அடைந்து வருகிறார்கள். அந்தோ! கொடுமை! கொடுமை! பார்ப்பனருடைய தீய ஒழுக்கங்களைக் கண்டு மனம் பொறாமல், அவர்களை வெறுத்தவர்களையும், சிவனை வழிபடுகின்றவர்களையும் இராட்சதர், அசுரர், நிசிசரர் இவை முதலிய பல இழிவுப் பெயர்களால் வேதத்திலும் ஸ்மிருதியிலும் எழுதிவைத்துக்கொண்டு ஏமாற்றி வருகிறார்கள்.

-(தொடரும்)

- http://viduthalai.periyar.org.in/20101211/news04.html