ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-21

ஆசீர்வாதத்திலும் வேற்றுமை பாராட்ட வேண்டுமென்று பிரத்திய பிவாதே சூத்ரே என்ற சூத்திரத்தினால் வடமொழி இலக்கண ஆசிரிய ராகிய பாணினி என்பவர் விதித்திருக்கிறார். பரவித்தையைப் போதிக்கிற பகவத்கீதையிலும் இவ்வேற்றுமை காணப்படுகிறது.
யேபிஸ்யு பாபயோனய (கீதை. அத். 9 சுலோ. 32) என்று தொடங்கிய வாக்கியங்களாலும் மற்றும் சூத்தி ரர்களைப் பாவிகள் என்று சொல்லுகிற இடங்களையும் பாருங்கள். வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷியம் செய்ய வந்த சங்கராச்சாரியார், சூத்திரன் சந்நியாசத்திற்கும், சிரவணத்
1. சூத்திரனிடத்தில் பிராமணன் க்ஷேமம் விசாரிப்பது, நீ நோயில்லாமல் இருக்கிறாயா? என்று மட்டுமே. வேறு, குசலம், அனாமயமா, க்ஷேமமா? என்று கேட்கக்கூடாது. நோயில்லாமல் இருந்தாலல்லவோ தின ராத்திரியும் பார்ப்பனர்கட்கு வேலை செய்யலாம். இதுவே கருத்து.
திற்கும், ஞானத்திற்கும் உரியவனன்று என்கிற தனது பொறாமைக் கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு அபசூத்ராதிக்ரணத்தில்,
பர்ஹமசூத்திர - ச்ரவணாத்ய யனார்த்த
ப்ரதிஷேதாத் ஸ்ம்ருதேஸ்ச
(அ. 1 பாகம் 3, சூத்திரம் 38)
இந்தச் சூத்திரங்களின் பாஷியத்தில் மேற்கோளாக எடுத்துக்காட்டிய ஸ்மிருதி வாக்கியங்கள் வருமாறு:-
1அதஹாஸ்ய வேதமுபஸ்ருண்வத; ஸரோத்ரௌத்ர
புஜதுப்யாம் பூரயேத பூரயேத (கோதமதர்ம சூத்திரம்)
பொருள்: வேதம் ஓதுங்கால், அதைக் காதால் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கிவிட வேண்டும்.
பத்யுஹவா ஏதத் ஸ்மசானம் வைசூத்ரஸ்த
ஸ்மாத் சூத்ரஸ் மீபே நாத்யேதவ்யம்
பொருள்: சூத்திரன் நடமாடுகிற இடம் சுடுகாடானதால், அவன் பக்கத்தில் வேதமோதலாகாது2
உச்சாரணே ஜிஹ்வாச்சேதோ தாரணே சரீரபேத:
பொருள்: சூத்திரன் வேதத்தை வாயினால் சொன்னால், நாக்கை அறுக்கவேண்டும். உணர்ந்து வைத்திருந்தால், நெஞ்சைப் பிளக்க வேண்டும்.
1. சூத்திரத்தில் அதஹ என்றும் பூரயேத பூரயேத என்றும் மீண்டும் மீண்டும் கூறியிருப்பது கோதமனுக்குச் சூத்திரர்களிடத்திலிருக்கிற பகையை வெளிப்படுத்துகிறது. இவ்விதம் பார்ப்பனன் இங்கிலீஷாவது பைபிளையாவது வாசித்தால், இவ்விதத் தண்டனையுண்டு என்று சொல்லுவதுடன், இந்திய நாட்டிலுள்ள எந்தப் பாஷையும் வாசிக்க வசதியும், இந்தக் கிறிஸ்தவ கவர்ன்மெண்டு கொடாவிடில், இப்பார்ப்பனர்க்கு எவ்வளவு வருத்தம் உண்டாகுமோ, அவ்வளவு வருத்தம் பாக்கியுள்ள அப்பிராஹ்மண சமூகத்திற்கு உண்டென்று நினைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறேன்.
2. ஆதலால்தான், அய்யங்கார் வீட்டுக்கு அய்யர் போனாலும், அய்யர் வீட்டுக்கு அப்பிராமணன் போனாலும் இவர்கள் குடியிருக் கும் தெருவுக்கு நாடார்கள், பறை யர்கள் வந்தாலும், மயானத்துக் கொப் பிட்டுச் சாணித் தண் ணீர் கொட்டுகிறார் கள். இது ஒரு பரம் பரை வழக்கம்.
நசூத்ராய மதிம் தத்யாத்
பொருள்: சூத்திரனுக்குப் பகுத்தறிவு உண்டாகும்படி யாதுஞ் செய்யலாகாது (யாது ஞான நூலும் கற்பிக்க லாகாது) இவை முதலியன.
பிரமாண வசனங்கள் இப்படியிருக்க, இக்காலத்தில் பார்ப்பனரல்லாதாரில் 1சிலர் சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டவர்களும், ஏனையோரும் பகுத்தறிவில்லாது சங்கராச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லித் திரிகின்றார்களேயெனில், இது இவர்களின் அறியாமையையும், இதனால் இவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் வாழ்ந்து வருவது பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையும் விளக்குகிறது. தங்களின் கட்டளைப்படி நடக்காத பார்ப்பனரல்லாதாரைத் தண்டிக்க, மனுவின் சட்டப்படி பார்ப்பனருக்கு உரிமை இருந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியின் பீரங்கி முனையிலும், கத்தி முனையிலும் அது செல்லாது.
பார்ப்பனன் ஒருவன் எதிர்ப்பட்டதும் பார்ப்பனரல்லா தவர் எழுந்து வணங்குவதை இப்போதும் பார்க்கிறோம். இது பார்ப்பனரிடத்தில் தங்களுக்கிருக்கிற பேரன்பைப் பொறுத்தல்லவென்றும், வெகு நாள்களாகப் பார்ப்பனரால் துன்புறுத்தப்பட்டு, வழி வழியாக வந்த பயமே இதற்குக் காரணம் என்றும் அறியவேண்டும். இதைப்போலவே பார்ப்பனரல்லாதாருக்குள்ளேயே உயர்ந்த ஜாதியா னொருவனைக் கண்ட தாழ்ந்த ஜாதியானும் எழுந்து வணங்குவது பயத்தினாலேயாகும். இறந்துபோய் 2பிரேதங்களான பிறகுங்கூட இவ்வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. சூத்திர பிரேதத்தால் உண்டான துன்பம் வைசியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும் வைசியப் பிரேதத்தின் உபத்திரவம், க்ஷத்திரியப் பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. 1. தென்னாட்டில் காவி கட்டியிருந்தாலும், வெள்ளை கட்டியிருந்தாலும், சூத்திரனைப் பதேசி, பண்டாரம் என்பர். இல்லறத்திலுள்ள பார்ப்பானைச் சாமி சாமியென்று அழைப்பது சகஜமாகிவிட்டது. வேதத்தில் கருமம், பக்தி, ஞானம் என்னும் முக்காண்டங்கள் உள்ளன. கரும காண்டத்தில் ஒரு சிறிதும் அதிகாரமில்லாதவர்கள் ஞான காண்டத்தைப் படிக்கவோ, சந்நியாசம் செய்து கொள்ளவோ உரிமை கிடையாதென்பதை மறந்து கதறுகின்றார்கள். இவர்களுக்கு நல்லுணர்வை இறைவன் அருள் புரிவானாக. -(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101219/news25.html