செவ்வாய், 14 டிசம்பர், 2010

ஞானசூரியன் - தொடர்-17

ஞானசூரியன் - தொடர்-17
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 30 ஆம் பதிப்பு : 2010
அரசும், அமைச்சும்
அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அருவருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம்தான் நமக்குத் தேவை என்று கூறு கிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!
இது முறையன்று. நமது நிலைமை 1சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ் யமும், ராம ராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.
அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:
ஜாதிமாத்ரோபஜீவீவா காமம்ஸ்யாத் ப்ராஹ் மணப்ருவ;
1. கல்வியிலும், மக்கள் சமூகத்திலும், சமயத்திலும் (கொள்கையிலும்) கோவில்களிலும் சமத்துவமாகிய சீர்திருத்தம் ஏற்படாத வரையிலும் ராஜாங்கச் சீர்திருத்தம் மெல்ல மெல்லப் பெறுவதற்காக வேண்டிய வேலை செய்வதே ஜஸ்டிஸ் கட்சியாகும். தமிழர் கட்சி (சாம்மியவாத கட்சி) அதையே கேட்கிறது.
தர்மப்ரவக்தா, ந்ருபதேர்
நது சூத்ர; கதாசன (மனு)
பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினாலேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒருபோதும் அரச சபைக்கு உரியவனாகமாட்டான். இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயிருந்தால், அந்நாடு சீர்கெடு மென்பதற்கு மனு கூறியதாவது:-
யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம் நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்
பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாகயிருக்கி றானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருகுக்கம் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர்களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து 1வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்தநாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும். கல்வியை விரும்புகிற சூத்திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத்தக்க வனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லிலேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமை யில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கி யிருக்கின்றன.
ந சூத்திர ராஜயே நிவஸேந் நதார்மிக ஜனாவ்ருதே;
1. பார்பனர்களாகிய ஆரியர்களை என்க.
ந பாஷண்டி ஜனாக்ராந்தே
நாபஸ்ருஷடேந்த்ய ஜேந்ருபே (மனு)
பொருள்: சூத்திரன் ஆட்சிபுரிகிற நாட்டிலும் குடியிருக்கலாகாது.
இக்கருத்தின்படி பார்ப்பனரல்லாதார் ஆட்சிபுரியும் நாட்டில் பார்ப்பனர்கள் குடியிருக்கலாகாதே? இக்குறை தீர்க்கும் பொருட்டு அரசர்களை 2ஹிரண்ய கருப்பம் என்ற விதியினால் க்ஷத்திரியர்களாகச் செய்துகொள்ள வேண்டியது என்கிற தந்திரத்தையும் செய்தார்கள்; செய்து கொண்டு வருகிறார்கள். இது திருவாங்கூர் சமஸ் தானத்தில் இப்போதும் நடைபெற்று வருகிறது. இவ்விதம் க்ஷத்திரியத் தன்மையை அடைந்த அரசனைத் தங்கள் சுயநலத்தைச் சாதிக்க ஒரு கருவியாகவும் வைத்துக் கொள்ளுகிறார்கள். ஓணான் பெருத்தது உடும்பு, உடும்பு பெருத்தது முதலை என்று மலையாளத் தில் ஒரு பழமொழியுண்டு. அதைப்போலச் செய்கை. க்ஷத்திரியர் களும் தங்களை உயர்ந்தோர்களென்றும், சூத்திரர்கள் இயற்கையாகவே தாழ்ந்தவர்களாகையால், மனுஸ்மிருதிப் படி அவர்களை முன்னுக்கு வரவொட்டாமல் ஒடுக்குவதே தங்கள் கடமை என்றும் நினைக்கிறார்கள். இத்தகைய செயற்கைச் சனியன்கள் இல்லாவிடில், நம்மினத்தவர் என்கிற அபிமானத்திலேனும் சற்று இரக்கங் காட்டுவார் களல்லவா? இவ்வாறு க்ஷத்திரியர்கள் என்று சொல்லி, அவர்களையும் ஏமாற்றிப் பணத்தையும் பறித்து வருகிறார்கள். இச்சூதினை இன்னம் உணராமலிருப்பதே பெரும் வியப்பு!
ஆனால், இங்கு ஒரு அய்யம் நிகழுகின்றது. இவர்களின் நீதி அனுபவத்திற்குப் பொருந்தவில்லை. அய்ரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சைனா முதலிய பிற நாடுகளில் பிராமணர்களும் அவர்களின் சமயமும் கிடையாது. அங்ஙனமிருந்தும், அந்நாடுகள் முன்னேற்ற மடைந்தும், பிராமணர்கள் இருக்கிற இந்நாட்டின் குடிகளும் செல்வமும், அறிவும் வரவரத் தாழ்வடைந்து வருவது என்ன காரணம் பற்றியோ? இதைப் பற்றிப் 2. தங்கத்தால் பசுவின் உருவைச் செய்து, அதன் வயிற்றுள் புகுந்து வெளிப்படுதல் இரணிய கருப்பம். இத்தங்கப் பசுவைப் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டுமாம். (திருவனந்தபுரம் முதலிய) சில ராஜாக்களைப் பட்டத்திற்கு வருமளவும் சூத்திர ஜாதியாகவேயிருந்து பட்டத்திற்கு வந்தவுடன், ஷத்திரிய ஜன்மமெடுக்கச் செய்கிறது என்பது பொருள்.
பிராமணக் கடவுளையோ,மனுவையோ நேரில் கண்டுதான் கேட்க வேண்டும்!
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101214/news13.html