ஞாயிறு, 15 நவம்பர், 2009

periyar-Unesco


புதன், 24 ஜூன், 2009

Thanthai Periyar

Periyar the Prophet of the new Age

The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners.

- Unesco

Thanthai Periyar E.V.Ramasamy
(17.9.1879-24.12.1973)

வியாழன், 18 ஜூன், 2009

அவர் சொன்னார், இவர் சொன்னார்...

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே என்று பகுத்தறிவு சுடரை ஏற்றியவர். எவரையும் தன்னுடைய அறிவுக்கு வேலை கொடுத்து சுயமாக சிந்திக்க சொன்னவர். தந்தை பெரியாரை ஆராய்வது என்பது கூட அவர் பணிக்கு கிடைத்த வெற்றி என்றாலும், தந்தை பெரியார் கூறியது போல் நன்றி என்பது செய்பவர் எதிர்பார்ப்பது இல்லை. பெறுபவர் செலுத்த வேண்டியது ஆகும். இன்றும் தந்தை பெரியாரின் தாக்கங்கள் என்பது பார்ப்பனர்களையும்,  பார்ப்பன அடிவருடிகளையும் தாக்குகிறது. எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பவருக்கு அய்யாவே சொல்கிறார், வேறு எவரும் இப்பணியை செய்ய முன்வராததால் என் மேல் நானே போட்டுக்கொண்டு செய்கிறேன் என்கிறார். பகுத்தறிவு என்பது இனம், மொழி என எல்லாவற்றையும் தாண்டியதே. மனிதநேயம் என்பதுதான் அடிப்படை என்பதால், மதம், ஜாதி, இதற்கெல்லாம் காரணம் கடவுள் என்பதால் அதையும் அழித்து ஒழிப்பேன் என்று வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவரைப்பற்றி அவதூறு பரப்புவது என்பது பிற்போக்குதனங்களை கட்டி காப்பவர்கள் என்று அடையாளம் காண்போம்.

வெள்ளி, 5 ஜூன், 2009

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!

யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!!
என்றோம்,
லெமுரியாவிலிருந்து,
சிந்துவெளி நாகரிகத்திலிருந்து,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
தமிழ்க்குடி என்றெல்லாம்
பழம்பெருமை பேசுகிறோம்.
மறு கன்னத்தை
காட்ட சொன்னவர்கள்தான்
சிலுவைப்போரை நடத்தினார்கள்.

உலகப்போருக்கான ஒத்திகையா?
என்று எண்ணும் வகையில்
நவீன தொழில்நுட்ப
ஆயுதங்களுடன்
சொந்த மண்ணில்
பீரங்கி தாக்குதல்,
செல் வீச்சு,
கொத்து குண்டுகள்,
வான்வெளி தாக்குதல்,
பாஸ்பரஸ் குண்டு வீச்சுக்கள்
என்றெல்லாம் தமிழ் இனத்தை
பூண்டோடு அழித்தொழிக்க
சிங்கள இன வெறிக்கூட்டம்
ஆட்டம் போட்டாலும்,
புவி சார்ந்த சர்வாதிக்க போட்டி என்று
உளுத்துப்போனவற்றை பிதற்றி
மனித நேயத்தை தொலைத்து விட்டது.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பொய்யானதா?

புத்தம் போதித்ததுதான் என்னவென்று
வரும் தலைமுறை கேட்டால்
செம்மணியை சொல்வதா,
செஞ்சோலையை சொல்வதா,
தமிழ் ஈழத்தின்
ஒவ்வொரு பகுதியும்
தாக்கப் படும்போதுதான்
உலகத் தமிழர்களுக்கு
தமிழ் ஈழத்தின் வரை படம்
மனக்கண்ணில் பதிந்தது.
தாக்கப்பட்டப் பகுதிகள்
அத்துணையும்
தமிழனுக்கு சொந்தமானது
என்று சிங்களவனே
உலகோருக்கு
சொல்லி விட்டான்.

போர் இன்னும் ஓயவில்லை.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
ஒடுக்கிவிட்டதாக எக்காளம் இடுகிறதா சிங்களம்?
அச்சத்தின் உச்சியில் நின்று
உண்மைகளை மறைக்க முயன்று தோற்கிறதா?
தமிழர் நாம் ஒன்றுபட்ட உணர்வுடன்
உரிமையை மீட்டிட
ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும் தருணம் இது.
எல்லா வகையிலும் உலகின் கவனத்தை ஈர்க்கும்
போராட்டம் தொடரவேண்டும்.

இழப்புகள் ஈடு செய்ய இயலாதவை.
இமைப்பொழுதும் மறக்க இயலாதவை.
விதைக்கப்பட்டவை வீர விதைகள்.
தமிழர் நம் நெஞ்சில் உரமானவை.

சனி, 2 மே, 2009

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என்கிறார் ஜெயலலிதா - அவர் கனவு பலிக்குமா?

- அ. தமிழ்குமரன், ஈரோடு

பதில் : கனவு காண அவருக்கு உரிமை உண்டு. இப்போதா முதல் முறையாக அவர் சொல்கிறார்? திமுக பதவியேற்ற அடுத்த நாளிலிருந்தே அந்தப் பல்ல வியை பாடியதோடு, உச்சநீதிமன்றம் போய் மூக்குடைபட்டும் அவர் திருந்த வில்லையே!

கேள்வி : கருத்துக் கணிப்புகளை மக்கள் தீர்ப்பு பொய்யாக்கினாலும்.. சில இதழ்கள் அதனைக் கைவிட மறுப்பது ஏன்?

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : தங்கள் இனம் - மனம் பிறரை ஆள வேண்டும் என்பதற்காகவே!

கேள்வி : பா.ஜ.க., ஆட்சி வந்தால் ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்கப் படும் என இல. கணேசன் கூறியுள் ளாரே?

- சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில் : பா.ஜ.க., ஆட்சி வந்தால் மட்டுமா? அம்மா பிரதமராக, வைகோவும் மருத்துவர் இராமதாசும் முன் மொழிந்து, வழி மொழிந்து இடதுசாரிகள் வரிசை யில் நின்று வந்த 100 நாள்களில்கூட அதுதானே நடக்கும். இரு கட்சிகளும் உருவத்தால் மாறுபட்டாலும், உள்ளத் தால் ஒன்றே

கேள்வி : முதல்வர் கலைஞர் எந்த நல்ல காரியத்தை நாட்டு மக்களுக்குச் செய்தாலும், அதனை ஒரு நாடகம் என்று சொல்லுவது எதிர்க்கட்சிகளின் ஃபேஷனாகப் போய் விட்டதா?

- மு.சுகுமாரன், சென்னை-40

பதில் : மக்களை தப்புக் கணக்குப் போட்டு இப்படி பேசிடுபவர்களுக்கு, மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் வரும் தேர்தலில்!

கேள்வி : கலைஞர் உண்ணா விரதத்தைத் தொடர்ந்து ஈழத்தில் போர் நிறுத்த அறிவிப்பைச் செய்தஅந்த அரசு - எவ்வளவு காலத்திற்கு இந்தப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும்?

- வி. குணசுந்தரி, திருவண்ணாமலை

பதில் : இராஜபக்சே அரசின் போக்கினை உலக நாடுகளில்கூட சைனா, ஜப்பான், பாகிஸ்தான் தவிர, வேறு எவையும் ஆதரிக்கவில்லை. பொருளாதாரத் தடையும் வரும். எனவே அவர் மீண்டும் தன் போக்கைக் காட்டினால் புத்திகற்பிக்கப்படுவார் என்பது உறுதி!

கேள்வி : கச்சத் தீவை மீட்பேன் என்று தேர்தல் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா பேசியுள்ளது குறித்து...

- சு. சுப்பிரமணியம், குற்றாலம்

பதில் : அப்படி அவர் முதன் முதலில் முதல்வர் பதவியேற்ற முதல் நாளே சொல்லி பல ஆண்டு காலம் ஆயிற்று- தினத்தந்தியில் எட்டு காலச் செய்தி அன்று! அதற்கு பிறகு அவர் 2 முறை முதல்வராக இருந்தபோது என்ன செய்தார்? பழைய பாட்டு - புதிய ராகம்! இதற்காக வழக்குப் போட்டது தி.க., 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அது இன்னும் நிலுலையில் உள்ளது!

கேள்வி : ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற எந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும்?

- வி. சேட்டு, காரைக்கால் - 1

பதில் : நிச்சயமாக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். உருப்படியாக செய்யும் வாய்ப்பு இந்த அணிக்கே உண்டு. சொன்னதைச் செய்யும் அணி. செய்வதையே சொல்லும் அணி இதுதான்!

கேள்வி : ஈழத் தமிழர் பிரச்சினையைக் கையாளும் அதிகாரி பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் மலையாளி களாகவும் இருப்பது ஏன்?

- தா. நீலமகன், தூத்துக்குடி

பதில் : நம் சுதந்தரத்தின் விடியல் அவ்வளவுதான்!

கேள்வி : ஈழத் தமிழர்களுக்காக தலைவர் மற்றும் அமைச்சர்கள் பங் கேற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பல ஊர்களில் காங்கிரஸ்காரர்களும் பங்கேற்றார்களே? (எடுத்துக்காட்டு சேலத்தில் கே.வி. தங்கபாலு)

- கு. ருத்ரன், சேலம்-2

பதில் : அவர்களும் தமிழர்கள்தானே; இன உணர்வு இருப்பது இயல்பு தானே!

கேள்வி : வாகை சூட வாரீர்! நிகழ்ச்சி தங்கள் அமைப்பினர் திடீர் என்று நடத்த வேண்டிய அவசியம் என்ன?

- மு.வ. சேகரன், புதுச்சேரி

பதில் : விடுதலை ஏடும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் சேர்ந்து இப்படி ஒரு கல்விப் பெருவிழா நடத்துவது இது முதல் தடவை அல்ல.

முதன் முதலில் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் தஞ்சை, திருச்சி போன்ற ஊர்களில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்ததே நாம் தான்!

இப்போது மேலும் விரிவாக யாரும் நடத்தாதநிலையில் ஒரே நாளில் 8 பெரு நகரங்களில் வெற்றிகரமாக நடத்தியதே! வாகை சூடிய வரலாற்றின் பதிவு அல்லவா? அடுத்த ஆண்டு இன்னும் விரைந்து மேலும் பல புதிய உத்திகளுடன் அந்தப் பெரு விழா நடைபெறு வது உறுதி.

nandri: viduthalai 2-5-2009

குகையில் புலியைப் பிடிக்க முடியுமா?

1987 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஒரு நாள். புதுடில்லியின் ஆடம்பர விடுதி ஒன் றின் அறையில் - இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் குழாய்ப்புகை பிடித்தபடி கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தார். ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந் திய அரசும் இலங்கை அரசும் ஈழத்தில் அமை தியை ஏற்படுத்தத் திட் டம் போட்டிருந்த ஒரு யோசனைக்கு அவரின் சம்மதத்தை அளிக்கும் படி வற்புறுத்திக் கொண் டிருந்தார்.
தமிழர் பெரும்பான் மையாக வாழும் பகு திக்கு கூடுதல் அதிகா ரங்களை அளிக்கும் திட் டத்திற்கு நிபந்தனை - புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பதுதான் திட்டம். தனி நாடு கோரிக்கை யைக் கைவிடவேண்டும் என்பதும் மற்றொரு நிபந்தனை. எதையும் ஏற் றிட பிரபாகரன் தயா ராக இல்லை.
நாங்கள் சொல்வ தைக் கேட்காவிட்டால், இந்தப் புகைக் குழாய்ப் புகையிலை தீர்வதற்குள் உம்மைத் தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அந்த அதிகாரி கூறி னார். அவர் இலங்கைக்கான அன்றைய இந்தியத் தூதர் ஜே.என். தீட்சித்.
நான்கு மாதங்களுக் குப் பிறகு விடுதலைப் புலிகளிடம் வசமாகச் சிக்கிக் கொண்டது இந்திய ராணுவம்தான்! ஒரே வாரத்தில் தீர்த்து விடுவோம் என்று போனவர்கள் - மூன்று ஆண்டுகள் போராடி னார்கள் - 1155 இந்திய ராணுவ வீரர்களைச் சாகக் கொடுத்தனர்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இலங்கை ராணுவம் விடு தலைப்புலிகளை முற்றி லுமாகத் தீர்த்துக் கட்டி விடும் என்றும் பிரபாக ரனை உயிருடனோ, இல் லாமலோ பிடித்து விடும் என்றும் கூறு கிறது. புதுக்குடியிருப் பைப் பிடித்துவிட்ட தாக ஏப்ரல் 5 இல் அறி வித்தது. 420 புலிகளின் உடல்களைக் கைப்பற்றி யதாகக் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங் களாக ஏதுமறியாத் தமி ழர்கள் கொல்லப்பட் டுக் கொண்டிருக்கும் போர் இல்லாப் பகுதி யில் 20 கி.மீ. பரப்பிற் குள் பிரபாகரன், அவ ரது மகன் சார்லஸ் ஆன்டனி, பொட்டு அம் மான் போன்ற தலைவர் கள் முடக்கி வைக்கப் பட்டிருப்பதாக ராணு வச் செய்தித் தொடர் பாளர் பிரிகேடியர் உதயா நானயக்கரா கூறுகிறார்.
அவர்கள் தப்பிப்ப தற்கு வழியே இல்லை என்று கொழும்பிலி ருந்து தெகல்கா இத ழுக்குக் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலை வர் நடேசன் இதனை ஏளனமாகப் புறந்தள்ளு கிறார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ராணு வத் தளபதி சரத் பொன் சேகா பத்திரிகையாளர் களிடம் பேசும்போது, கடல் வழியாக பிரபா கரன் தப்பிச் சென்று விட்டார் எனக் கூறி னார்.
ஏப்ரல் முதல் நாளன்று பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன் டனி சண்டையில் காய மடைந்தார் என்றனர். புலிகள் இதனையும் மறுக்கின்றனர். இப் போது இலங்கை ராணு வம் ஆன்டனியைத் தீவி ரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது. அவர் போர் முனையில் படையை நடத்துகிறார் எனத் தெரிகிறது.
ஆன்டனி இரண்டு சக்தி வாய்ந்த குண்டு களைத் தயாரித்துள் ளார் என இணைய தளத்தில் செய்தி வெளி யிட்ட இலங்கை ராணு வம், இதுபற்றிய விவ ரங்களைச் சொல்ல வில்லை. 2007 முதல் பல் வேறு குற்றங்கள் தொடர் பாக அவரைச் சம்பந்தப் படுத்துகிறது ராணுவம்.
அவர் சிறந்த தொழில் நுட்ப அறிவுள்ளவர்; அவர்தான் பிரபாகர னின் லட்சிய தீபத்தைத் தொடர்ந்து தூக்கிப் பிடிப்பவராக இருப் பார்.
இலங்கையின் நிலப் பரப்புக்குள், ஈழம் எனும் பெயரில் தனி மாநிலத்தை பிரபாக ரன் அமைத்துவிட் டார். 150-க்கு 100 கி.மீ. என்ற அளவில் இலங் கையின் வடபகுதியில் அமைத்து தங்களது நிருவாகம், நீதிமன்றம், ராணுவம், கடற்படை, விமானப் படை போன் றவற்றை அவர்கள் வைத் திருந்தார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராஜபக்சே அரசு மீறி விட்ட 6 ஆண்டுகாலத் தில் இவற்றைத் தாக்கி வந்து, கடந்த 2008 ஜனவரியில் நேரடியான போரையே தொடுத்து விட்டது.
குசால் பெரரா எனும் இலங்கையின் இதழா ளர் ஒருவர் கூறுவது போல, இந்தக் குட்டி மாநிலத்தைச் சிறுகச் சிறுக அழித்துவிட்டார் கள். அதில் கடைசியாக அழிக்கப்பட்ட பகுதி தான் புதுக்குடியிருப்பு என அவர் கூறுகிறார். மறுதலிக்கும் லங்கா (Lanka Dissent) எனும் ஏட்டின் ஆசிரியர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வெளி யேற்றப்பட்ட இலங் கையின் கிழக்குப் பகுதி யில் இருந்து, கொரில்லா தாக்குத லைத் தொடங்க விடு தலைப்புலிகள் திட்ட மிட்டிருப்பதாக நம்புகிறார். (அரசின் கொள் கைகளைக் கண்டித்து எழுதிய காரணத்திற் காக பத்திரிகை ஆசிரி யர் வசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட தன் பின்னர், இவரும் தன் இணைய தளத்தை மூடிவிட்டார்).
சிறீலங்காவின் கிழக் குப் பகுதிகளான பட்டி கோலா, திரிகோணமலை, அம்பாறை போன்ற பகுதி களுக்கு விடுதலைப்புலி கள் ஊடுருவிச் சென்றுள் ளதாகப் பெரரா கூறு கிறார். கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து அவர்கள் காவல்துறை, ராணுவம், அரசுக்கு ஆதரவான கரு ணாவின் கூட்டம் ஆகிய வற்றைத் தாக்கி வருகின் றனர்.
அம்பாறையில், ஏப் ரல் 5 ஆம் நாள் காவல் அதிகாரி எச்.எல். ஜமால் தீன் என்பவரைப் புலி கள் சுட்டுக் கொன்றுள் ளனர். இதற்கு 2 நாள் கள் முன்பாகத்தான் 13 புலிகளைக் கொன்ற தாக ராணுவம் கூறியது. ஏப்ரல் 1 இல் ஒரு ராணுவ வீரர் கொல்லப் பட்டார்; ஒருவர் கையெறி குண்டுத் தாக்குதலில் பட்டிகோலாவில் காய மடைந்தார். அதற்கும் சில நாள்கள் முன்ன தாக, அதே பகுதியில் 6 சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கொல்லப் பட்டனர். அம்பாறை யில் மார்ச் 26 இல் கருணா கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கும் ஒரு வாரத் திற்கு முன்பு பட்டி கோலாவில் சிறப்புப் பாதுகாப்புப் படையின ரைத் தாக்கி 3 வீரர் களைக் கொன்றுவிட்ட னர்.
இதுவரை அப்பாவி மக்கள் 3 ஆயிரம் பேர் தாக்குதலில் கொல் லப்பட்டுள்ளனர்.
இலங்கை ராணுவத் திற்கு ஏற்பட்ட சாவுக் கணக்கு பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுவது கிடையாது. இலங்கை எதிர்க்கட்சியான அய்க்கிய சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் சிறீ துங்க ஜயசூரியா, இது வரை 10 ஆயிரம் படை வீரர்கள் கடந்த 2 ஆண் டுகளில் கொல்லப்பட் டனர் எனக் கூறுகிறார். ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் இவர் போட்டியிட்டவர்; அர சின் கொள்கைகளைக் கடுமையாகத் தாக்குபவர்.
ராணுவத்தின் இணைய தளத்தில் உள்ள செய்தி இது: சமீப காலத்தில் திரி கோணமலை, பட்டி கோலா, அம்பாறை ஆகிய பகுதிகளில் நுழைந் துள்ள புலிகள் தாக்குத லில் ஈடுபட்டு மக்களை யும், படையினரையும் ஆத்திரமூட்டுகின்றனர்.
பல விடுதலைப்புலி கள் அடர்ந்த முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக் குள் நுழைந்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் 1980 களில் இந்தியப் படையுடன் புலிகள் மோதிப் பலரையும் கொன்றனர். உண்மை யிலேயே, இந்தப் பகுதி புலிகளின் (குகைகள்) வாழ்விடம்தான். இந்தி யப் படையின் வலு வான தடுப்பு நடவடிக் கைகளுக்குப் பின்னரும் புலிகள் நிறைய படைக் கலன்களைக் கடத்தி வந்தனர் என்று 1987-இல் இப்பகுதியில் போர்ப் படைக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார்.
இதே கருத்தை யாழ்ப் பாணத்தின் நாடாளு மன்ற உறுப்பினர் என் சிறீகாந்தா எதிரொலிக் கிறார். ஆயிரக்கணக் கான புலிகள் காட்டுக் குள் கலந்து உறைகின்ற னர் என்று தெகல்கா ஏட்டுக்கு சிறீகாந்தா தெரிவித்தார்.
சிறீலங்கா படையி னரைத் தாக்கும் கொரில்லா போரை பிரபாகரனின் மகன் ஆன்டனி தலைமை தாங்கி நடத்துவார் என்று நோக்கர் கள் கருதுகின்றனர்.
பிரபாகரனைப் பேட்டி கண்டு பெயர் பெற்ற அனிதா பிர தாப், என்றாவது ஒரு நாள் ஆன்டனி தன் தந் தையிடம் இருந்து தலை மைப் பொறுப்பைப் பெறுவார் என்று கூறு கிறார்.
தலைமைப் பொறுப் பைப் பெறுவது எளிது: ஆனால், அவரின் லட்சி யத்தை வரித்துக் கொள் வது எளிதானதல்ல எனக் கூறும் இவர், அந்த ஆசைகளை நிறை வேற்றுவாரா என்ப தைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்.
தரவு: தெகல்கா, 18.4.2009
தமிழில்: அரசு

courtesy: viduthalai leading rationalist tamil daily. 30-4-2009

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்!

ஈழத்தில் போர் நிறுத்தம் 
ஏற்படச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்!

தமிழர் தலைவர் உணர்ச்சி முழக்கம்

சென்னை, ஏப். 10- ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் - இதற்கான முயற்சியில் செயல்படு வோம் அல்லது செத்து மடிவோம் என்றார் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

இலங்கையில் போரை நிறுத்து என்று அறை கூவல் விட்டு நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பேரணியின் முடிவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி அவர்கள் உரை யாற்றுகையில் குறிப் பிட்டதாவது:

எமது தமிழர்கள் 30 கல் தொலைவில் சொல் லொணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். காக் கைக் குருவிகளைச் சுடு வதுபோல சிங்களப் படை சுட்டுத் தள்ளுகிறது. நச்சு வாயு குண்டுகளைப் போட் டுக் கொடூரமாகக் கொன்று குவிக்கின்றது.

24 மணிநேரத்தில்...

இதனைக் கண்டிக் கும் முறையில் வெறும் 24 மணிநேர இடைவெளி யில் ஒரு அறிக்கைமூலம் இலட்சக்கணக்கான மக்களை நமது முதல மைச்சர் கூட்டியுள்ளார். இன உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டியவர் கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வெறும் தேர்தல் பிரச் சினையல்ல இது - தேர் தலைவிட அடுத்த தலை முறையைப்பற்றி கவ லைப்படுபவர்கள் நாம்.

கலைஞர்
கட்டளையிடட்டும்!

இனி இத்தகைய பேர ணிகள் தேவையில்லை - என்ன செய்யவேண்டும்; எப்பொழுது செய்ய வேண் டும்; எப்படி செய்ய வேண்டும் என்று யூகம் வகுப்பதிலே நமது கலை ஞர் அவர்களுக்கு நிகர் கலைஞர்தான்.

கலைஞர் அவர்கள் கட்டளையிடும் இடத் தில்தான் இருக்கிறார். அதனை ஏற்றுச் செயல் படுத்த இலட்சோப இலட்ச மக்கள் இருக் கின்றனர். உலகில் உள்ள கோடானுகோடி மக்கள் - தமிழர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக் கின்றார்கள். இலங்கை யில் போர் நிறுத்தம் வந்தே ஆகவேண்டும். இனிமேல் பொறுத்துக் கொண்டிருக்க முடி யாது. இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமைக்காக அத்தனை பேரும் கல்லறைக்குப் போகத் தயங்காதவர்கள் தான் இங்கே கூடியிருக் கின்றோம். ஈழத் தமிழர் களுக்காக ஒரு நாள் நாட கம் நடத்தக்கூடியவர்கள் அல்ல நாம்.

திருமாவளவன் போன் றவர்கள் தெளிவாக இருக் கிறார்கள். மக்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு செயல்படுகிறார்கள் - அது நடக்காது.

நமக்கு உள்ள உணர்வு இயற்கையானது, இயல் பானது! குழந்தை யாருக் குச் சொந்தம் என்ற ஒரு வழக்கில் குழந்தையை இரண்டாகப் பிளந்து ஆளுக்குப் பாதிப் பாதி அளித்துவிடலாம் என்று அரசன் சொன்னபோது, வேண்டாம், வேண்டாம், குழந்தையை இரண்டாக வெட்டவேண்டாம்; இந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடமே இருக் கட்டும் என்று ஒரு தாய் சொன்னபோது, உண்மையான தாய் அந்தப் பெண்தான் என்று அர சன் கண்டறிந்ததுபோல, உண்மையான தாயாக விருந்து இந்தப் பிரச்சினையிலே முதலமைச்சர் அக்கறை செலுத்தி வருகிறார்.

- "விடுதலை" 10-4-2009

சனி, 7 மார்ச், 2009

உலக மகளிர் நாள் - தமிழர் தலைவர் கி.வீரமணி -

பெரியாரிடம் உன்னை ஒப்படை!
- தமிழர் தலைவர் கி.வீரமணி -

பெண்ணே, உன் விலங்கை நீ தான் உடைத்தாக வேண்டும்
உன் சுதந்திரத்திற்காக நீ தான் போராட வேண்டும்
உன் சமத்துவத்திற்காக நீ தான் அணிவகுக்க வேண்டும்!
உன் பிள்ளையை வேறு யாரோ பெறுவரோ?

துடை உன் வற்றாத கண்ணீரை
உடை உன் வலிமையான விலங்கை
கடைச் சரக்கானது போதும் - இனி
படைத் தலைமை ஏற்கப் புறப்படு!
புரட்சி செய்யப் புலியெனக் கிளம்பு!

பலி ஆடாய் இருந்த நீ புலியாக
மாறினால் பலி கொடுக்க நெருங்கார் எவரும்!
என்று சொன்ன பெரியார் படைக்குத்
தலைமை தாங்கிடவா, ஓடிவா! தாமதிக்காதே!
புதிய நூற்றாண்டு ஓடி வந்தது; புதுத்தெம்போடு ஓடி வா!
பெரியாரைத் தேடி வா. பெண்ணே! என் கண்ணே!

பெண்ணே, விதவைக் கோலத்தை இளமைக்காலத்திலே
வேண்டாது பெற்றுவிட்ட என் ஆரூயிர்த்தங்கையே
நீ ஆணாய்ப் பிறந்திருந்தால் உனக்கு உண்டா
இந்த விதவைக் கோலம் - அலங்கோலம்?
உன்னை சுதந்திர வாழ்வு வாழவைக்க சமூகத்தடை
உனக்கு சமத்துவ வாழ்வுதர சாஸ்திரத் தடை
இவற்றை உடை என்று முழங்கிய பெரியாரிடம் உன்னை ஒப்படை!
அதுவே உன் வாழ்க்கைக் கணக்குக்குச் சரியான விடை!

(உலக மகளிர் நாள் 2000)

நன்றி: விடுதலை நாளிதழ் ௭-௩-2009

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

தமிழர் தலைவர் கி.வீரமணி


சொந்த புத்தியைவிட
அய்யா தந்த புத்தி ஒன்றே போதும் என்று
தமிழ் சமூகத்தின்
விடிவெள்ளியாக

தமிழர் தலைவர்

கி.வீரமணி

இனமானப் போரை தலைமை ஏற்று நடத்துபவராக ,
சமூக நீதியைக் காப்பவராக,
ஆரியரை வெல்லும் படையை
வழி நடத்துபவராக உள்ளார்.
ஈரோட்டுக் கண்ணாடி கொண்டு எதையும்
தொலை நோக்கோடு கண்டு தமிழ் சமூகத்தின்
கலங்கரை விளக்காக திகழ்கிறார்.
அகவை ௭௬ ஆனாலும் கொள்கை குன்றாக,
உலகின் எந்த மூலையிலும்
தமிழர் இன்னலுற்றார் என்றால் துடித்து எழுவார்.
தன்முனைப்புக்கு இடமின்றி எடுத்த செயலை செவ்வனே செய்து முடிப்பதில் வல்லவர்.
அய்யாவின் அடிச்சுவட்டில் அயராது என் கடன்
அய்யா பணி செய்துமுடிப்பதே என்று
இலக்கு தவறாத எழுச்சித் தலைவராக
திராவிடர் கழகத்தை தலைமை ஏற்று வழி நடத்துவது மட்டுமின்றி
ஒட்டுமொத்த தமிழர்களின் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

புதன், 25 பிப்ரவரி, 2009

கெடார் சு. நடராசன் நினைவு நாள் விழா



கெடார் நடராசன் நினைவேந்தல் நிகழ்ச்சி

சுயமரியாதைச் சுடரொளி மேனாள் விழுப்புரம் மாவட் டத் தலைவர் கெடார்சு.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 17.2.2009 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு தி.. மாநில பொதுக் குழு உறுப்பினர்சவுந்தரி நடரா சன் அவர்களின் சவுந்தரி இல்லத்தில் நடைபெற்றது. சவுந்தரிநடராசன் தலைமை வகித்தார். .பசுபதி வரவேற்று உரையாற்றினார். புலவர்.எத் திராசன், மாநில பொ.கு..; .மு. தாஸ், மாவட்டத் தலை வர் (விழுப்புரம்); .சுப்பரா யன், மாவட்டச் செயலாளர் (விழுப்புரம்); பி.பட்டாபி ராமன், மாவட்டத்தலைவர், தி.மலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நினைவேந்தல் உரை: துரை. சந்திரசேகரன், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்; .வா.ஏழுமலை, மாவட்டச் செயலாளர், .வந்தியத்தேவன் (மதிமுக); .கதிரவன், மாவட்ட இளை ஞரணி தலைவர்; ஆர். தேவேந் திரநாதன்; ரமேஷ், மாவட்டஇளைஞரணி செயலாளர்; சு.அண்ணாமலை, நகர தலைவர், செஞ்சி; நாகராசன், மாவட்டச் செயலாளர், செய்யார்; முத்து கதிரவன், மாநில இளைஞரணி துணைஅமைப்பாளர்; .விவேகானந்தன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பா ளர்; தில்லை உமாபதி; ஆர். தேவராசன்; ஜி.சாமிக்கண்ணு, ஓய்வு தலைமை ஆசிரியர்; . ரவி கெடார்; பெரியார் பிஞ்சுகள்: ஆடலரசன், அறிவுக் கரசன், பிரபாகரன்மற்றும் கழகத் தோழர்கள் உரையாற்றினர். சு.கருணாகரன் நன்றி கூறினார்.

நன்றி: விடுதலை நாளிதழ், ௨௫ பிப் 00

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

ஈழத் தமிழர் படும் அத்துணை வேதனைகளுக்கும், மனித நேயம் உள்ள எவரும் ரத்தக் கண்ணீர் விடுவார்கள் . ஆனால் , பார்ப்பனர்கள் மட்டும் ஆனந்தப்படுவதன் பொருள் விளங்கவில்லையா ? இதுவே ஆரியர் , திராவிடர் வேறுபாடு . தமிழருக்குஒரு இன்னல் என்றால் தமிழர்தான் கொதித்து எழுவர் . தமிழரை சுரண்டி பிழைக்கும் ஆரியக் கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் தமிழரைப் பிளவுபடுத்திவிட்ட ஆரியக் கூட்டம் தமிழர் என்று அழிவரோ என்று கழுகுக் கூட்டமாகத் திரிகிறது. தமிழர்கள் ஜாதி, மதம், அரசியலைக் கடந்து ஒன்றுபட்டு போராடும் காலம் இது. இன உரிமைப் போரை வென்று காட்டுவோம் .

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

NO GOD

No God, No God;

There is No God at all;

He who found the god is Fool;

He who propagates the god is scoundrel;

He who worships the god
is barbarian.

-Thanthai Periyar.

சனி, 3 ஜனவரி, 2009

விடுதலை

தமிழர்கள் தன்மானமும்
இனமானமும் பெற ,
பகுத்தறிவு வளர தவறாது
படிக்க வேண்டியவை:
விடுதலை நாளிதழ்,
உண்மை மாதமிருமுறை,
பெரியார் பிஞ்சு சிறுவர் மாத இதழ்
THE M
ODERN RATIONALIST Monthly