திங்கள், 13 டிசம்பர், 2010

ஞானசூரியன் - தொடர்-16

ஞானசூரியன் - தொடர்-16
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010
1. திருநாவுக்கரசரால் புகழ்ந்தோதப் பெற்ற சிவபக்தன் இவன். இராவணன் மனைவி மண்டோதரியை மணி வாசகர் புகழ்ந்துள்ளார். இவர் தாய் சிவநேசமுடைய மாது. இவன் தங்கை தாடகை அன்பினால் அணியும் பூமாலைக் காகத் திருப்பனந்தாளில் எழுந்தருளிய சிவக்கொழுந்து தலை சாய்ந்ததும், இதனை நிமிரச் செய்வதற்குக் குங்கிலியக்கலய நாயனார் வந்து, தலைசிறந்து விளங்கிய பத்திமையால் நிமிரச் செய்தவருமாவார். விபீஷணன் விஷ்ணு பக்தன். இத்தகைய குடும்பத்தைக் கொடியரென்பது சூதே.
இந்த ஸ்ரீராமன் ஏனைய அரசர்களைப்போல ஒருவனா கவே இருந் திருப்பான். ஆயினும், பார்ப்பனர்களின் சொற் களைக் கொஞ்சமேனும் அலட்சியம் செய்யாமல் இவன் நடந்துகொண்டு வந்திருப்பவன். 1புத்தருடைய கொள்கை களைப்பற்றி உலகத்துக்கு நன்மையே செய்து வந்த அசோகச் சக்கரவர்த்தியை உலகமெல்லாம் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு மனம் பொறாத பார்ப்பனர்கள், எங்களுக்கும் ஓர் அரசனிருந்தான்; அவன் பெயர் இராமன்; அவனும் உலக உபகாரி என்று பலவித கற்பனாலங்காரங் களுடன் புகழ்ந்து இராமாயணக் கதையைப் பாடி, இப்போது சக்தி வாய்ந்த நவீன நாவல்களில் கற்பித்துக் கூறுவது போல இராமாயணத்தை அரங்கேற்றி, இந்தியா முழுவதும் நம்மவர்களை ஏமாற்றிவிட்டார்கள். புத்த பகவானிடத்தும், அவரைப் பின்பற்றி ஒழுகிவந்த நம் ஆன்றோர்களிடத்தும், இவர்களுக்கு இருந்த பொறாமையை இராமாயணத்தி னின்று அறியலாம்.
யாதாஹி சௌர: ஸ்யததாஹி புத்த:
ததாகதம் நாஸ்திகமத்ரவித்தி(வால்மீகி இராமாயணம்)
பொருள்: திருடனும், புத்தனும் ஒப்பாவார். இங்குத் ததாகதனே (புத்தனை) நாஸ்திகன் என்று அறியற்பாலது என்ற வசனங்களால் கண்டு கொள்க.
கேளுங்கள்! மன, மொழி, மெய்களால் எவ்வுயிருக்கும் தீங்கு நேரா முறையைக் கற்பித்து, அதன்படி ஒழுகிக் காட்டிய பெரியாரும், தனூவித்ய சூத்திரத்தில் மோட்சத்தைப் பற்றிக் கூறுமிடத்துப் பரஹ்ம ஸஹவ்யத்தய (பிரமத்தில் இரண்டறக் கலத்தல்) என்று கூறியவருமான பகவான் புத்தரைத் திருடனுக் கொப்பாகவும், அவரது கொள்கை களை நாஸ்திகக் கொள்கை யாகவும் கூறும் பார்ப்பனர்கள் வேறு என்னதான் கூறவும், செய்யவும் துணிய மாட்டார்கள்? அவரை அப்படிச்சொன்னதனால் அல்லவோ இன்றைக்கு இந்நாவலந் தீவிலிருக்கும் ஜனங்கள் சேற்றில் புகுந்த பசுவைப் போலுள்ள தன்மையை அடைந்தது?
சூத்திரனும், அவன் பொருளும்
பிராமணன் சூத்திரன் பொருளைக் கொள்ளை அடிக்குமாறு அரசனுக்குக் கட்டளையிடுவதோடு, கொள்ளையிடத் தங்களுக்கு உரிமை
1. எப்பவோ, நிரூபிக்க இயலாத ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லும் இராமாயணத்தில், சாத்திர வரலாற்றின்படி கணக்கிடப்பட்ட கொஞ்ச காலத்திற்கு முன்னே யிருந்த புத்தருடைய பெயர் வருவதால், புத்தருடைய காலத்திற்குப் பிறகு கற்பிக்கப்பட்ட நூலே அது என்றறியவும். அப்படியே யோக வாசிஷ்டமும் (ஞான வசிஷ்டம்).
யுண்டு என்று பர்த்ரு ஹார்யதனோஹிஸ (சூத்திரன் அடிமையானதால் அவனது பொருளைத் தலைவனாகிய பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்) என்ற வாக்கியத் தினால் உறுதிப் படுத்தினார்கள். இதுதான் சனாதன தர்மம் (மனுமுறை யாட்சி). இத்தகைய வசனங்களால் பார்ப்பனர்களே அரசர்களாகவும், க்ஷத்திரியர்கள் அவர்களின் ஏவலாட் களாகவும் இருந்து வந்தார்கள் என்பது வெளிப்படை. இவர் களின் கருத்துக்கு இசையாதவர் களை எவ்வகையிலும் அரசு இழக்கும்படியே செய்வது 1வழக்கம்.
இன்னும் இச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிற 19 கோடி மக்களும் உருவத்தில் மனிதர்களாகயிருந்தாலும், சமய விஷயத்தில் ஒருவகையான உரிமையும் இல்லாதவர் களாய் விலங்கினங்கள் போல வருந்தி வாட்ட முறுகிறார்கள்.
கடவுள் இங்ஙனம் ஓரவஞ்சனையாக நடத்துவாரா? சூத்திரனுக்கு ஓர் அதிகாரமும் இல்லையே; இது நியாயமா? என்று கேட்டால், இதற்குச சில பார்ப்பனர்கள், ஈசுவரன் கருணாமூர்த்தி; அவருக்குச் சூத்திரர் களிடத்திலும் கருணை அதிகம். ஏனெனில், பிராமணனுக்குப் பணிவிடை செய்வது ஒன்றினாலேயே சூத்திரர்கள முன்னேற்றம் அடைவார்கள் என்று தரும நூல் கூறுகிறதே; என்ன சுகம்? பிராமணனுக்குச் சம்ஸ்காரம், கல்வி, ஞானம், பொருளீட்டல், ஜபம், தவம், ஈசுவர சை, கவர்ன்மெண்டு உத்தியோகம் முதலிய எவ்வளவு தொல்லைகள் இருக் கின்றன. எனவே, பிராமணக் கடவுளின் அருள் திறம்! மனுவின் வாக்கியமும் இதே கருத்தில இருக்கிறது.
ஏகமேவது சூத்திரஸ்ய
ப்ரபு: கர்மஸமாதிசத்!
எதேஷாமேவ வர்ணானாம்
சுஸ்ரூஷா மனஸூயயா
பொருள்: பொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பின்னும் விஸ்ரப்தம் ப்ராஹ்மண: சூத்ராத்
த்ரவ்யோ பாதானமாசரேத்;
1.மைசூரில் நவாப்புக்கு மந்திரியாக இருந்த பூரணையன் சரித்திரம் சான்று பகரும், தமிழ் நாடும் இத் தொல்லைக் குட்பட்டதே!
நஹிதஸ்யாஸ்தி கிஞ்சித்
ஸ்வம் பர்த்ளுஹார்யதனோஹிச
பொருள்: சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால், அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாதலால், அவனுக்கென்று பொருள் சிறி தேனுமில்லை.
இத்தகைய வாக்கியங்களை ஒரு சிறிதுகூட மீறாமல் நேபாளத்தில் இப்போது அரசியல் நடைபெற்று வருகிற தென்று முன்னரே கூறியுள்ளோம். இதற்கு முன் அரசு புரிந்துவந்த க்ஷத்திரியர் ஆளுகையும் இத்தன்மையதே யாகும் என்று அறியத்தக்கது. -(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101213/news32.html