வெள்ளி, 17 டிசம்பர், 2010

பக் 'தீ' யால் பக்தன் கட்டிய அபராதம்

பக் 'தீ' யால் பக்தன் கட்டிய அபராதம்
சென்னை, டிச.17- சென்னை சென்டிரல் அருகே ரயிலில் கற்பூரம் காட்டிய அய்யப்ப பக் தருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏ.சி. பெட்டியில் புகை வந்த தைத் தொடர்ந்து, ரயிலை பயணிகள் நிறுத் தியதால் பரபரப்பு ஏற் பட்டது.
சென்னை சென்டி ரலில் இருந்து திருவனந் தபுரத்திற்கு நேற்று முன் தினம் இரவு 7.45 மணிக்கு திருவனந்தபுரம் மெயில் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் கிளம் பிய சற்று நிமிடத்தில், பி-1 ஏ.சி. பெட்டிக்குள் திடீரென புகை பரவி யது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள்.
ரயில் நின்ற காரணம் புரியாமல், என்னவோ.. ஏதோ.. என்று பயந்து, ரயிலில் இருந்த காவலர் களும், பயணச் சீட்டுப் பரிசோதகரும் சம்பந் தப்பட்ட பெட்டிக்கு ஓடிவந்தனர். அங்கு ஒரே புகை மூட்டமாக இருந் தது. இதனால், பெட் டியில் பயணிகள் அமர்ந் திருந்த ஒவ்வொரு கம் பார்ட்மெண்டாக சென்று ஆய்வு மேற் கொண்டனர்.
அப்போது, 63 ஆம் எண் இருக்கையில் இருந்த பயணி, பய பக்தியுடன் அய்யப்ப சாமி படத்திற்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட் டிக் கொண்டிருந்தார். அவர் அய்யப்பன் கோவி லுக்கு மாலையும் அணிந் திருந்தார். அவர் ஏற்றிய கற்பூரத்தில் இருந்து வந்த புகைதான் ஏ.சி. பெட்டியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்த நபரி டம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவ ரது பெயர் பி.டி. பிள்ளை என்றும், சொந்த ஊர் சென்னை என்றும் கூறினார். எதற் காகக் கற்பூரம் ஏற்றினீர் கள் என்று காவல்துறை யினர் கேட்டபோது, ``ரயில் பயணம் இனிதாக அமைய வேண்டும்'' என் பதற்காக கற்பூரம் ஏற்றி அய்யப்பனை வழிபட் டேன் என்று தெரிவித் தார்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை எச் சரிக்கை செய்துவிட்டு சென்றுவிட்டனர். ரயி லும் 10 நிமிடம் தாமத மாக புறப்பட்டு சென் றது. ஆனால், அந்த பெட்டியில் இருந்த பயணச்சீட்டு பரிசோத கர், அந்த அய்யப்ப பக் தரை விடவில்லை. ரயி லில் கற்பூரம் ஏற்றியது குற்றம் என்று கூறி, ரூ.1000 அபராதம் விதித் தார்.
அந்த அய்யப்பப் பக்த ரும் வேறு வழியில்லா மல், அபராதத் தொகை யைக் கட்டினார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101217/news07.html