புதன், 1 டிசம்பர், 2010

கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள்- அறிவியல் வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்
வேந்தர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள்-
அறிவியல் வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

தஞ்சாவூர், நவ. 30- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீர மணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிவியல் வளர்ச்சி நாளாக டிசம்பர் -2, வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில் குருதிக் கொடை வழங்குதலும் மரக்கன்று விழாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து அறிவியல் வளர்ச்சி நாள் நிகழ்ச் சிகள் நடைபெறுகின் றன. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் மு.அய்யாவு தலைமை வகிக்கிறார். துணை வேந்தர் டாக் டர் நல்.இராமச்சந்திரன் அறிவியல் வளர்ச்சி நாள் பேருரை நிகழ்த்து கிறார். தொடர்ந்து பகுத்த றிவாளர் மன்றத்தின் சார்பில் வெளியிடப் படும் மாணவர் மலரை கல்விப் புலமுதன் மையர் பேராசிரியர் இரா.கந்தசாமி வெளி யிட கட்டடவியல் துறைத்தலைவர் டாக் டர் செந்தமிழ்குமார் பெற்றுக்கொள்கிறார். டாக்டா சு.நரேந்திரன் எழுதிய உறுப்பு, திசு, உடல்கொடை நூலை டாக்டர் சு.நரேந்திரன் வெளியிட, அறிவியல் மற்றும் மேலாண்மை புல முதன்மையர் முனை வர் அல்போன்ஸ் இராஜேந்திரன் பெற்றுக் கொள்கிறார். பெரியார் தொழில் நுட்ப வணிக காப்பகத் தின் ஸ்பைருலினா மாத் திரை மற்றும் உடனடி அரிசி இடியாப்பம் பொருள்களை பல் கலைக்கலைக்கழக கூடுதல் பதிவாளர் முனைவர் கே.சாமிநா தன் வெளியிட வேதியி யல் துறை தலைவர் வி.சேதுராமன் மற்றும் வீரமணி மோகனா வாழ் வியல் ஆய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் ஏ.ஆர்.எலிசபெத் ஆகியோரும் பெற்றுக் கொள்கின்றனர். மின் ஆளுகை குறுந்தகடு வெளி யீட்டை ஆராய்ச்சி புல முதன்மையர் முனைவர் டி.குமார் வெளியிட கணினி அறிவியல் துறை கள் புல துணை முதன் மையர் பேராசிரியர் ஜி.திருச்செல்வி பெற்றுக்கொள்கிறார். பின்னர் அய்யாவின் அடிச்சுவட்டில் தமிழர் தலைவர் என்னும் தலைப்பில் கருத்தரங் கம் நடைபெறுகிறது. கருத்தரங்கிற்கு பெரி யார் சிந்தனை மய்ய இயக்குநர் டாக்டர் பழனி அரங்கசாமி தலைமை வகிக்கிறார். கருத்தரங்கில் மின்னணு தொலைத் தொடர்புத் துறை பேராசிரியர் டி. இராம்குமார், ஆங்கிலத் துறை பேராசிரியை ஜெ. பிரியா, இரண்டா மாண்டு கணினி அறிவி யல் துறை மாணவர்கள் வி.ப.தமிழ்பொன்னி, எம்.அருள், கண்ணன் ஆகியோர் உரையாற்று கின்றனர். பூண்டி புஷ் பம் கல்லுரி தமிழ் துறைத் தலைவர் முனை வர் சி.மனோகரன் சிறப்பு ரையாற்றுகிறார் தமிழர் தலைவரின் தொண்டில் சிறந்து நிற்பது- சமுக நீதிப் பணியே கல்விப் பணியே என்னும் தலைப்பில் பட்டி மன் றம் நடைபெறுகிறது. பட்டி மன்றத்திற்கு திராவிடர் கழக தலை மைக் கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் நடுவராகவும், சமுகநீதிப்பணியே என்னும் தலைப்பில் மென்பொருள் துறை பேராசிரியர் ஹா. அலா வுதீன், முதலமாண்டு கட்டடவியல்துறை மாணவி வ.உ.ஈழ வேங்கை, முதலா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் டி.பர் தீன், மூன்றாமாண்டு உயிரிதொழில்நுட்ப வியல் துறை மாணவர் எஸ்.பிராகரன் ஆகி யோர் விவாதிக்கின்றனர். கல்விப்பணியே! என்னும் தலைப்பில் கணினி அறிவியல் துறை பேராசிரியர் பி.தில்லை ஈசுவரன், முதலாமாண்டு வான்பொறியியல் துறை மாணவர் ம.தினேஷ் குமார், இரண்டா மாண்டு கணினி அறிவி யல் துறை மாணவி பி.சுகன்யா, இரண்டா மாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி எம்.ஏ. மதுமதி ஆகியோரும் விவாதிக்கின்றனர். முதலாமாண்டு கட்டட எழிற்கலைத்துறை மாணவர் து.கவுதமன் வரவேற்றுப் பேசுகிறார். இரண்டாமாண்டு மேலாண்மைத்துறை மாணவி கே.சரண்யா நன்றி கூறுகிறார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101130/news18.html