திங்கள், 20 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-22

ஞானசூரியன்
2. ஈண்டுப் பிரேதங்களென்றது பிசாசுகளையென்க. விண்ணுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் இடையிலுள்ள உலகினை அந்தரீட்சமென்பர் - இவ்விடங்களில் வாசம் செய்வோர்.
பிரேதத்திற்குப் பூசை போடுவதாலும், க்ஷத்திரியப் பிரேதத்தின் துன்பம் பிரம்மராக்ஷசுக்குப் பூசை போடுவதாலும் நீங்குவதைக் கண்கூடாகக் காணலாம். பாலக்காட்டிற்கு அருகில் ஒரு கோயில் இருக்கிறது. இங்கு ஜாதி வேற்றுமை கிடையாது. கண்டத்து இராமன் என்னும் பெயருடைய மந்திரவாதி ஒருவன் இருந்ததாகவும், அவன் பார்ப்பனருக்கு இயற்கைப் பகைவனாயிருந்த வஞ்சனையினால் பார்ப்பனர்கள் அந்த இராமனைக் கொன்றுவிட்டார்களென்றும் பரோபகாரியாக இருந்த இராமனிடத்தில் பொதுமக்களுக்கிருந்த அன்பினால் அவனுக்குக் கோயில் ஒன்றமைத்து, அதில் குடிவைத்துப் பூசித்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். எவ்வளவு கொடிய பிரம்மராட்சசு (பிராமணப் பிசாசு) ஆனாலும் இந்த இராமனுடைய சந்நிதியில் போய்ப் பிரார்த்தித்தால், அது அக்கணமே ஒழிந்துபோகும்.
ஆனால், இந்த இராமன் உயிரோடிருக்கும்போது ஒரு பிராமணக் குடும்பத்துக்கு அடிமையாயிருந்த மையால், இப்போதும் அக்குடும்பத்தாரில் யாரேனும் ஒரு சீட்டெழுதி அனுப்பினால், அந்தக் கட்டளையை மீறி இராமனுடைய சந்நிதியில் ஒன்றும் நடைபெறாது. இது எனது அனுபவம். இதனால் அடிமைத்தனமும் அதனிடத்திலுள்ள நம்பிக்கையும் எவ்வளவு வன்மையுடையது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நான் வேண்டிக் கொள்வது யாதெனில், பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்ட நான்கு வருணங் களுக்கும் மனு முதலியோரின் சட்டத்திற்கும் நாம் கீழ்ப்படிய வேண்டிய தில்லை. பார்ப்பனருக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் இருக்கிற சம்பந்தம்கூட நமக்கும் பார்ப்பனர்களுக்கும் கிடையாது. 1இவ்விரு வகுப்பார்களின் மூதாதைகள் முற்காலத்தில் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களும் மத்திய ஆசியாவில் குடியிருந்தவர்களும் என்று சரித்திரம் கூறுவதால், இவ்விரு இனத்தாரும் இரத்த சம்பந்தம் உள்ளவர்களென்பது மறுக்கமுடியாது. ஆனால், வெள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் மத ஒற்றுமை உண்டு. கிறிஸ்து மதம், பண்டைக் காலத்துப் புத்தர் மதமாகும். புத்தர் பண்டைக் காலத்துத் தமிழர் களாகிய சாம்மியவாதிகளின் (தமிழ்த் தலைவருடைய) மதத்தைக் கையாண்டவர். இந்தச் சித்தமார்க்கம், ஞானமார்க்கம் என்ற இரு வகைப்படும். தலைவர்களும் விஸ்வாமித்திரன், புத்தர், அரஹந்த முனிவர்கள் முக்கிய மானவர்கள்.
ஆனால், இச்சம்பந்தம் இவர்களுடைய சினேகத்தால் குரங்குப் பட்டத்தையும், பகையால் ராட்சதப் பட்டத்தையும் அடைந்த நம்மவர்களுக்கில்லை. சில காலமாக நமது குரங்குப் பட்டத்தை எடுத்துவிட்டுச் சூத்திரப் பட் டத்தைத் தந்தார் கள். அதை ஏற்றுக் கொண்டதனால், இக்கதியை அடைந்தோம். ஆதலால், இந்தப் பார்ப்பனருடைய யாகம் உயிர்களைப் பதைக்கக் கொல்லுகிற ஒரு சடங்கு. கருணை, இரக்கம் முதலிய யாகங்களுக்குத் தடையாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் போதித்து வந்த நமது மூதா தையர்களின் கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகுவோம். இவர்களின் தீச்செயல்களுக்கு உடந்தையாயிராத நமது மூதாதைகளை இராட்சதர் என்றும், பச்சை மாமிசமும் இரத்தமும்தான் அன்னோர்களின் உணவு என்றும் இவர்களது ஆபாசச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பது நமக்கு நம் மூதாதையரிடத்தில் வெறுப்பு உண்டுபண்ணும் படியான தந்திரமென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது பகைவர்களாகிய பார்ப்பனர்களின் வேதத்தால் நமக்கு ஒரு பயனும் இல்லாவிடினும், இவர்கள் நம்மைத் தடைபண்ணின ஒரே குற்றத்திற்காகவும், இத்தகைய வேதத்தின் கருத்து இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும். அதை நமது பிள்ளைகள் அவசியம் கற்கவேண்டும். எத்தகைய தடை நேரிடினும் அதை எதிர்த்து நாம் கொண்ட கருமத்தை நிறைவேற்றுவோம். பயனற்ற விஷயங்களில் கூட இந்தப் பார்ப்பனரை எதிர்த்தும் நமது மூதாதைகளின் பழைய நல் லொழுக்கங்களைப் கைப்பற்றியும் ஒழுகினாலன்றி நாம் ஈடேறப்போவதில்லை.
மூன்றாவது அத்தியாயம்
சுருதி ஸ்மிருதிகளில் தருமம் என்ற பெயரால் சொல்லப்பட்டவைகளுள் வருண தருமம் கூறி முடித்தோம். ஏனைய தருமங்களைப் பற்றியும் சில கூறுகிறோம். அவற்றுள் விவாஹமாவது:
லோகேவ்ய வாயாமிஷமத்ய ஸேவா
நித்யாஸ்து ஜந்தோர் நஹிதத்ரசோதனா (பாகவதம்)
பொருள்: மைதுனம் (பெண் போகம்) மாமிசப் பக்ஷணம், கள் குடித்தல் இவை மனிதர்களுக்கு இயற்கைக் குணங்களாகையால், இவைகளைக் குறித்து விதி அவசியமில்லை.
தினந்தோறும் உண்ண வேண்டும் என்று விதித்தாலும், விதிக்காவிடினும் இயற்கையாகவே புசிப்பார்களன்றோ? ஆயினும், சில ஒழுங்குகள் செய்து ஒரு வரம்பிற்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்பதைக் கருதி, மணவினையானது எட்டுவிதமென்று ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101220/news04.html