புதன், 22 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-24

என்பன முதலிய வேத வாக்கியங்களில் இதே கருத்து அடங்கியிருக்கிறது. இக்காலத்தில் பெண் மக்கள் இத்தகைய விதிகளை அறியாதவர்களாயிருப்பது ஸ்திரீ சூத்ரௌ நாதீயேதாம் என்ற விதியில் கல்வி பயிலப் பெண்களுக்கு அதிகாரமில்லை என்று சொல்லியிருப்பது, இந்து ஆண் மக்களின் அதிர்ஷ்டவசமென்றறிய வேண்டும். இக்காலத்தில் நடைபெற்று வருகிற விவாக கருமங்களையும் அவைகளுக்குரிய மந்திர - தந்திரங்களைக் குறித்தும் நன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும். விரிக்கிற் பெருகும்.

நான்கு வருணத்தினரின் பெண்களையும், பிராமணன் விரும்பியவாறு மணம் முடித்துக் கொள்ளலாம் என்று ஸ்மிருதிகளிலும், அங்ஙனமே நடந்து வந்திருப்பதைப் புராணங்களிலும் அப்படியே மலையாளத்தில் இப்போதும் நடந்து வருவதையும் பார்க்கலாம். மணப் பெண்களால் அனுஷ்டிக்கத் தகுந்த கருமங்களுள் ஒன்று 2ஸ்பத்நீ பாதனம் என்பதாகும். பதினாறாயிரத்தெட்டுப் பெண் களுக்குக் கணவனான கடவுளை 3அவனை வழிபடுகிற ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிற கன்னிகை ஆபிசாரத்தி(சூனியம் முதலிய மந்திர வித்தை)யினாலே யினும் தனது சக்களத்திகளை எதிர்த்து நிற்பதில் குற்றம் ஒன்றுமில்லை. 4ஆரோஹோரும் 1. இம்முறை உடற்கூறும், உடல் தொழிலும் நன் குணர்ந்தவர்களால் வகுத்தது. இதனால் உடல் வலிவு, புத்திக் கூர்மை உள்ள புதல்வரைப் பெறலாம். இல்லையேல் பலவகையிலும் கெடுதலே (பிஞ்சில் பழுத்தது)

2. இச்சொல்லிற்குச் சக்களத்தியைத் துன்புறுத்துதல் என்பது பொருளாகிறது.

3. கிருஷ்ணன்.

4. பிறப்பிலாவது இடையிலாவது ஆண் தன்மை இல்லாமை.

தொடைமீது ஏறு முதலிய வேதமந்திரங்களைக் கற்றுக் கொள்ளுகிற மாணக்கன் குருவினிடத்தில் பணிவுடன் நடந்து கொள்வானானால், அது இக்காலத்தில் அர்த்த ஞானமில்லாத (பொருளையுணராத) அத்தியயனத்தினால் உண்டான நன்மையேயாகும். இத்தகைய மந்திரங்களும் அவைகளின் பொருளும் பெற்றோரிடத்தில் தெளிவாகக் கூறப்படும்.

விவாஹேஷ் வன்ருதம் ப்ரூயாத்

விவாக காலங்களில் பொய் சொல்லலாம் என்றும் விதியுள்ளது. புத்திரப்பேறில்லாமல் கணவன் இறந்துபோன ஸ்திரீயானவள் புத்திரனை விரும்பியவளாய், திருதராட்டிர னுடையவும் பாண்டுவினுடையவும் தாய்களைப் போல நடந்து கொள்ளலாமென்றும் விதியிருக்கிறது.

அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம் புத்ரகாம்யயா:

ஸபிண்டம்வா ஸகோத்ரம் வாக்ருதாப்யக்தம் ருதரவிராத் (யாக்ஞவல்கியர்)

பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின்1 அனுமதியைப் பெற்று ருதுகாலத் தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோ தரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையே னும் புணர்ந்து கொள்ள லாம்.

இவ்விதம் அசர்ப்பஸம்ப வாத கருத்தரிக்கிற வரைக்கும் செய்து கொள்ளலாம். இத னால், கற்புக்கு அழி வில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது. நாகரிகத்தின் முன்னணியில் நிற்கிற வகுப்பார்களுள் முதன்மையானவர்கள் என்று தங்கள் மூதாதைகளைப் பேசுகிற பார்ப்பனரின் கூற்றையும், மேற்குறித்த பிரமாண வாக்கியங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்ஙனமிருக்க, வியபிசாரம் என்று இவர்கள் கூறுவது எத்தகைய தீய ஒழுக்கத்தையோ, நாமறியோம் வியபிசாரத்திற்கும் பிராயச்சித்தம் விதித்திருக்கிறார்கள்.

1. தமிழர்கள் இதனை முற்றும் அருவருப்பார்கள். - இதற்காகவே திண்டுக்கல்லையடுத்த சிறுமலையில் அவிசாரிக் கணவாயென்று ஒன்றுள்ளது. அதில், அவிசாரியாய்ப் போனவளை நிற்கவைத்துத் தள்ளி விடுவது வழக்கம். இன்னும் அப்பெயர் வழங்கி வருகிறது.

ஹ்ருதாதிகாரம் மலிணாம் பிண்டமாத்ரோப ஜிவினீம்;

ப்ரிபூதாமத: சய்யாம் வாஸயேத் வ்யபிசாரிணீம் (யாக்ஞவல்கியர்)

பொருள்: வியபிசாரம் பண்ணினவளின் ஹிமையை எடுத்துவிட்டு, ஓர் உருண்டைச் சோறு மட்டும் கொடுத்து வெறுந்தரையில் படுக்கச் செய்ய வேண்டும். இவ்விதம் ஓர் ஆண்டு வரையில் செய்தால் குற்றமற்றவளாவாள். (இத்தகைய பிராயச்சித்தத்தினால், வியபிசார தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கற்பைக் குறித்துக் கவலைப்படவும் வேண்டியதில்லை.)

அன்றியும், சுலபமான பிராயச்சித்தத்தினால் எத்தகைய குற்றமும் நீங்கிவிடுமென்று விதிக்கிற சமய நூற்கள் மனிதர்களுக்குத் தீமையையே பயப்பனவாம். இந்தப் பிரமாணங்களை நம்பி எண்ணிறந்த தீமைகளை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறார்கள் என்பது நிச்சயம். கீதை மஹாத்மியம், பிரதோஷ மஹாத்மியம், ஏகாதசி மஹாத்மியம், காயத்திரி மஹாத்மியம் முதலிய புண்ணிய கருமங்களை விரித்துரைக்கிற புராணங்களில் எதைப் பார்த்தாலும் அவைகளில் ஒவ்வொன்றிலும் பார்ப்பனக் கொலை, குரு மனைவியைப் புணர்தல் முதலிய கொடும்பாவங்களைக்கூட போக்கடிக்க வல்லமையுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில பண்டிதர்கள் இதை அர்த்தவாதம் என்று சொல்லு கிறார்கள். (பொய் என்பதற்கு அர்த்தவாதம் என்ற பரிபாஷைச் சொல்லை உபயோகிக்கிறார்கள் போலும்) -(தொடரும்).

- http://www.viduthalai.periyar.org.in/20101222/news21.html