செவ்வாய், 7 டிசம்பர், 2010

ஞானசூரியன்-12

ஞானசூரியன்
ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010
இதன் பொருள்: தேவர்களையும், பிதிர்களையும் மகிழ் விக்கவும், தருமத்தைக் காக்கவும் எண்ணிய பிரம்மதேவன் கடுந்தவமியற்றிப் பிராமணர்களைச் சிருஷ்டித்தான். பிராமணர்கள் வேதம் படித்தலே ஒழுக்கமாகவுடைய வர்களும் (அசையும் பொருள், அசையாப் பொருள் என இருவகைப்படும்) இவ்வுலகிற்கெல்லாம் தலைவர்களுமா வார்கள்.
பிரம்ஹஸ்ருஷ்டி என்பது பிராமண சிருஷ்டி. பிராமண மதம் சிரவுத ஸ்மார்த்த தருமம், வைஷம் மியவாதம் என்ற பல பெயர்களுடைய ஒரே சொல்லையே உணர்த்தும். ப்ரஹ்மம் வைப்ராஹ்மண (பிரம்மனே பிராமணன்) என்கிற சதபத ப்ராம்மண (வேதம்) வாக்கியமும், ஸ்மானார்த்தாவேதென ப்ரஹ்ம சப்தோ ப்ராஹ்மண சப்தஸ்ச பிரமன், பிராமணன் இவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளையே உணர்த்தும் என்கிற வியாகரண மஹாபாஷிய வசனமும், இவை போன்ற வேறு பல வசனங்களும் இதற்கு உதாரணங்களாம். இவ்விதம் இருக்க இவர்களுக்கு அடிமைகளாயிருக்கும் 19 கோடி மனிதர்கள் எங்ஙனம் முன்னேற முடியும்? இந்தப் பிரம்ம சிருஷ்டி வலையினின்றும் தப்பித்துக்கொண்டு பலரும் முன்னேற்றத்தை அடைந்து சுகமாக வாழ்ந்து வருவதையும் பார்க்கின்றோம். ஆகையால், பார்ப்பன சமய வலையை அறுத்தெறிந்து சுகமாக வாழ்ந்து வர விரும்புவீர்களானால், ஓ, சகோதரர்களே! இக்கண முதலே சம உரிமை பெற்று வாழக்கூடிய நமது சாமியவாதத்தில் வாழ முயற்சி செய்யுங்கள்.
பிராமணனுடைய உயிர் வாழ்க்கைக்குச் சிறந்த வழி தானம் வாங்குவதே என்று முன்னரே கூறியுள்ளோம். இதற்கொப்பாக வேறு நல்வழி இருக்கிறதா? ஏனையோர் இவர்களை வலிய அழைத்துக் கொடுக்க வேண்டும். அங்ஙனம் கொடுக்காதவர்களும் பாவிகளுமாவார்கள்.
தாதவ்யம் ப்ரத்யஷம் பாத்ரே
நிமித்தேஷு விசேஷத:
யாசிதேனா பிராதவ்யம், ஸ்ரத்தா
பூதத்து சக்தித்; (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: பிராமணனுக்கு நித்தியமும் தானம் கொடுக்க வேண்டும். (கிரகணம், சிரார்த்தம் முதலிய) புண்ணிய காலங்களில் விசேஷ பசு முதலியவைகளைத் தானங்களாகக் கொடுக்கவேண்டும். கையில் ஒன்றுமில்லா விடில் பிச்சையேற்றோ, மற்றெவ்விதமாகவோ கொடுத்தே தீர வேண்டும். இதே கருத்தை அஹாஹர்தம் யாதுத பாத்ராதி என்ற வாக்கியத்தினால் வேதத்திலும் பார்க்கலாம். பிராமணனுக்குப் பசுத்தானம் வழங்கியவன், அப்பசுவிற்கு எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அவ்வளவு காலம் சுகத்தை அனுபவிப்பான். அதாநரூணாமதனம வரருத்வாயோ
ததாதித தர்த்தினே;
ஸவைமோஷண ஜாத்பாபாத்
முகதோ பவதி தத்ஷணம்
இதன் பொருள்: ஈயாத லோபியின் பொருளைக் கொள்ளையிட்டுப் பிராமணனுக்குக் கொடுக்கிறவன், அக்கணமே திருட்டினாலுண்டான பாபத்தினின்றும் விடுபடுகின்றான். பின்னும்,
ச்ராந்தஸம்வாஹனம் ரோகி
பரிசர்யா சுரார்ச் சனம்
பாதசௌசம்த் விஜோச்சி ஷ்டமார் ஜனம் கோப்ரதானவத் (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: களைப்புற்ற பிராமண னது உடலைத் தடவு தல், நோய்வாய்ப்பட்ட பிராமணனுக்குத் தொண்டு செய்தல், பிராமணன் வந்தவுடன் அவனது கால்களை அலம்பிவிடுதல், பிராமணன் உண்ட இடத்தைச் சுத்தம் பண்ணுதல் இவைகளுக்கும் பசுவைக்கொடுத்த பலன் உண்டு.
என்னே! மனிதனை மயக்க உண்டு பண்ணின தர்ம சாஸ்திரங்களின் நேர்மை. அன்றியும், கோதம ஸ்மிருதியில்,
தேன சோத்தரஸ்ததர்த்தோஹ்ஸ்ய நிசய
இதன்பொருள்: சூத்திரன் ஏதேனும் ஒருவகையில் பொருளீட்டினால், அது பிராமணனுக்கே உரியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும், அரசனது தர்மத்தை யாக்ஞவல்கியர் கூறுமிடத்து,
தர்மேணலப் துமீஹேத,
லப்தம்யத்நேன பாலயேத்;
பாலிதம் வர்த்தயேந் நித்யம்
வ்ருத்தம் பாத்ரேஷு நிக்ஷிபேத் (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: தருமமுறைப்படி (தன் குலத்திற்குரிய நெறிப்படியே) பொருளை ஈட்டுக. ஈட்டியதைக் காத்து மேன்மேலும் பெருக்குக. அங்ஙனம் பெருக்கிய பொருளைப் பிராமணனுக்குக் கொடுத்துவிடுக. மேலும்,
நாத: பரதரம் தர்மோ
ந்ருபாணாம் யத் ரணார்ஜிதம்,
விப்ரேப்யோதீயதே
த்ரவ்யம் (யாக்ஞவல்கியர்)
இதன் பொருள்: சண்டையில் பகைவர்களைக் கொன்று, பொருட்களைக் கைப்பற்றி அவைகளை அரசன் பிராமணர்களுக்குக் கொடுக்கவேண்டும். இதற்கொப்பான தருமம் வேறில்லை.
குடிகளின் சரீர உழைப்பினால் உண்டான வியர்வைத் துளிகளின் பெருக்கன்றோ, அரசனது பொருட்குவியல். உழைக்கிறவன் சூத்திரனும் இந்தப் பொக்கிஷத்தை அடைவதனால் மட்டும் திருப்தியடையாத பார்ப்பனர்கள், லோகம் நைவபரிதயஜேத் (பணம் சேர்க்கவேண்டும் என்ற ஆசையை விட்டு விடாதே) என்கிற வெட்கக்கேடான வாக்கியத்தை அனுசரித்துத் 1தமது நாட்டு அரசனுக்கும், அயல்நாட்டு அரசனுக்கும் 2பகையை உண்டுபண்ணி இருக்கிறார்கள். தன்நாட்டு அரசன் வெற்றி பெற்றால், அயல்நாட்டுப் பொருள்கள் தங்களுக்கு வந்து சேரும். அயல்நாட்டான் வெற்றிபெற்றால், இவ்வூர்ப்பொருள் அங்குள்ள தம்மினத்தவரையே அடையும். தங்களுக்கு இதனால் உடலுக்கோ, பொருளுக்கோ ஒரு குறைவும் ஏற்படமாட்டாது. வேதத்திலும் இங்ஙனமே கூறப்பட்டி ருக்கிறது.
பிராம்மணோ நஹிம் ஸிதவ்ய
(பிராமணன் எத்தகைய குற்றம் புரிந்தாலும், அவனது உடலை வருத்தலாகாது) மற்றும்,
நவிஷம் விஷமித்யாஹுர்
ப்ரஹ்மஸ்வம் விஷமுச்யதே;-
(தொடரும்)

- http://viduthalai.periyar.org.in/20101207/news20.html