செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஞானசூரியன்-25

ஞானசூரியன்
1நாள்தோறும் காயத்திரி மந்திரம் ஜபிக்கிறவன் எத்தகைய இழி தொழில்களைச் செய்தாலும், அப்பாவங்கள் அவனையணுகாது. முக்தியானது அவன் கைக்குள்ளிருக்கிறது. திருமால் கோயில் திருப்பணி செய்வோன் அளவிறந்த காலம் விண் நாட்டில் சுகமனுபவிப்பான்.
1. காயத்திரி செய்கிறவன் எத்தகைய கெடுதியும் செய்யமாட்டான் என்று பொருள்; செய்தால் அதன் பயனை அனுபவிப்பான். ஆனால், அந்த மந்திரம் சூத்திரன் ஜபம் பண்ணலாகாதாம்; காயத்திரியை உண்டு பண்ணினவன் அனாரியன். (சாமியவாதி விசுவாமித்திரன்) இது எல்லோருக்கும் ஜபம் பண்ண உரிமையுள்ளது. இது அனாரியனது சொந்தம்.
திருமால் திருவடிகளில் அர்ச்சிக்கிற ஒவ்வொரு பூவும் அர்ச்சிப்பவனைப் பத்தாயிரம் ஆண்டுகள் விண்ணாட்டில் இருக்கச் செய்யும். ஆனால், மக்களின் பெருக்கத்தால் அங்கு இடமில்லாமற் போகாதது ஒன்றே பெரும் வியப்பிற்கு இடந்தருகின்றது. எல்லாப் பாவங்களையும் நாசம் பண்ணுகிற இத்தகைய பிரமாணங்களை நம்புவோர்கள் வியபிசாரம் பண்ணலாகாதா? கள் குடிக்கலாகாதா? எல்லாம் செய்யலாம். ஆனால், இவைகளை நம்பாத அறிவாளிகள் முற்கூறியவர்களின் சுவர்க்க வாசத்தை நரகவாசமென்றே கருதுவார்கள்.

விவாகம் என்கிற முறையே இவர்கள் சமயத்தில் இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. முற்காலங்களில் விலங்குகளைப் போலவே நடந்து வந்தார்கள் என்பது, வைனதேயன் ஆதிதேயா முதலிய பெயர்களினால் வெளிப்படை. பிற்காலங்களில் பிதாவின் பெயரும் சேர்த்துக் குலத்தின் பெயரைக் கூறிவந்தார்கள். இராவன் பார்க்கவன் முதலிய பெயர்கள் பிதாவின் வழியைக் குறிக்கும் சைனதேயன் ஆதிதேயன் முதலிய பெயர்கள் எதிர்மறையாக 2மாதாவின் பெயரைக் குறித்தலால், அக்காலம் பிதாவைக் குறித்து அறிவில்லாதிருந்த காலம் என்று ஊகிக்க இடமிருக் கிறது. முற்காலத்தில் வியபிசாரத்தைக் குற்றமாகக் கருதவில்லையென்பது கீழ்க்காணும் தந்தைகள் இருந்தால், அவ்விருவர்களுக்கும் பிண்டம் போடும்போது செய்யவேண்டிய விதி வருமாறு:
யதி த்விபிதாஸ்யா தேகைகஸ்மின்
பிண்டேத்வெனத் வாவுபல க்ஷயேத் (ஆப்ஸ்தம்பர்)
1. இப்படிப்பட்ட விஷயங்களைப் புத்தக ரூபமாக எழுதியதாலல்லவோ சிவன், விஷ்ணு முதலிய ஆலயங்கள் பஞ்சமாபாதகத்திற்கு மூலஸ்தானமானது. விபச்சாரங்களும் பொய்ப் புரட்டும் ஜயமடைவதற்குக் கோவிலல்லவோ முக்கியவிடம்- இவ்விடங்களை முஸல்மான் இடித்ததைப் பற்றித் துக்கிக்கலாமா? கோயிலையும் கோயிலிலுள்ள கடவுளையும் துலுக்கன் இடிப்பதற்குக் கோயிலும் கோயில் கடவுளும் என்ன கர்மம் செய்தன? கர்ம பலன்தானே அனுபவிக்கும் காரணம்? கோயில் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அன்பர்களுக்கும் அய்ந்து வகையான பெரும் பாதகங்கள் செய்யும் ஓர் ஸ்தலமாகும்.
2. இது பிரஹ தாரணியக உபநிஷத்தில் மாதுர்வர்க்கம், பிதுர்வர்க்கம் என இரண்டு பிரிவாகவே கூறியுள்ளது.
பொருள்: ஒருவனுக்கு இரண்டு தந்தைகளிருந் தால், ஒரு பிண்டத்திலேயே அவ்விருவர்களையும் குறிக்க வேண்டும். பிண்டம் போடும்போது சொல்லவேண்டிய யேசத்வாமனு என்கிற மந்திரத்தை எதத்வாம் - தாதெனயேசயுவாமனு என்றிவ்வாறு சொல்லவேண்டும். (சிரார்த்த காலத்திய உபஸ்தான மந்திரம்) எழுந்து நின்று கீழ்க் குறித்தபடி சொல்லவேண்டியது.
யன்மே மாதா பிப்ரமமாத, யச்சாரனனுவ்ரதம்;
தன்மே ரேத,
பிதாவ்ருங்க்த மாபூரன் யோபபதயதாம்;
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா.
பொருள்: என் தாய் ஒழுக்கந் தவறிவிட்டாள்; அவள் தீய வழியில் ஒழுகினாள்! அந்த ரேதஸை (வீரியத்தை) தந்தையே உமதாக நினைத்துக் கொள்ளவேண்டும். வியபிசாரத்தினால் பிறந்தவனாகிய நான் கொடுக்கிற இந்தப் பிண்டத்தைத் தன் மகனால் கொடுக்கப் படுகிறதென்று நினைத்துப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்பது பொருள். இந்தப் பிரமாணத்தைப் பின்பற்றி இப்போதும் சிரார்த்தம் நடத்திவருகிறார்கள்.
முதற்கூறியபடி நெய் தேய்த்துக்கொண்டு புணர்ச்சி செய்து புத்திரன் பிறந்தால், அவன் தாய்க்கே உரியவன் என்று யாக்ஞவல்கியர் கூறுகிறார். அனேனவிதினா ஜாத; க்ஷேத்ரிண: ஸபவேத்ஸுத்
இங்கு க்ஷேத்ரி என்றசொல்லிற்கு நிலத்தின் சொந்தக்காரன் என்று பொருள். மக்களைப் பெறுதல் பயிர்த் தொழில் போன்றதால், தாயின் சரீரம் நிலமும், தந்தையின் வீரியம் வித்தும் என்பர் வட நூலார்1
இம்முறையை முகம்மது நபியும் தம் குரானில் கூறியுள்ளார்.
இயற்கைக்கு முரணாகவே மனிதப் பெண்களையும் விலங்குகளோடு புணரச் செய்தல் முதலிய அருவருக்கத்தக்க காரியங்களும் கடவுள் வழிபாடாக அக்காலத்தில் நம்பி, அங்ஙனம் செய்து வந்திருந்தனரென்பது நான்காவது அத்தியாயத்தில் விளக்கமாக்கப்படும்.
1. அஸ்வமேதம் முதலிய யாகங்களென்க.

- http://www.viduthalai.periyar.org.in/20101228/news12.html