வியாழன், 30 செப்டம்பர், 2010

30 ஆயிரம் டன் அட்சதை அரிசி வீணாவதைத் தடுத்த வித்தியாசமான மனிதர்

உணவுப் பற்றாக்குறை என்பது இந்தியத் துணைக்கண்டத்திற்கு பழகிப்போன ஒன்று. சுதந்திர இந்தியாவில் கடந்த 63 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு முழக்கம் கேட்டுக் கொண்டு-தானிருக்கிறது. அரசுகள் முயன்று-கொண்டிருப்-பதாகச் சொல்கின்றன.உற்பத்தியை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கின்றன.உணவுப் பொருள் களை இறக்குமதி செய்கின்றன.மானியங்கள் அளிக்கின்றன.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க,மக்கள் இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள்? உணவுத் தேவை, உணவுப் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? _ எனபன பற்றியெல்லாம் சிந்தித்தால் அது பூச்சியம்தான்.

தனிமனிதருக்கே சிக்கனம் பற்றிய சிந்தனை இல்லை.எல்லாம் அரசு பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணமும், அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்ற நிலையில் தான் இருக்-கிறார்கள். பொதுவாகவே வீணாக்குதல் என்பது இங்கே சர்வசாதாரணம். (அரசு உணவை வீணடித்த செய்தி 45ஆம் பக்கத்தில் காண்க) சேமிப்பு என்ற முறைக்கு இன்னும் பாடம் நடத்த வேண்டி-யிருக்கிறது. போதாததற்கு பெரும்-பான்மை மக்கள் சார்ந்துள்ள மதமான இந்து மதமும் இவர்களுக்கு இந்த நல்ல செயல் பற்றியெல்லாம் போதிப்பதில்லை. மாறாக உணவுப்பொருளை பண்டிகைகளின் பெயர்களில் வீணாக்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு 30 நாளுக்கு ஒருமுறை அமாவாசை தினத்தில் பூசணிக்காயை தெருவில் போட்டு உடைத்து வீணாக்குகிறார்கள்; ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கு தேங்காயை உடைத்து வீணடிக்கிறார்கள்;கோவில் விளக்கு-களுக்கு, வீட்டுக் குத்துவிளக்குகளுக்கு எண்ணை ஊற்றி எரிக்கிறார்கள்; திருஷ்டி கழிப்பதற்காக உப்பு, மிளகாயைக் கொட்டி தீ வைத்துக் கொளூத்துகிறார்கள். எலுமிச்சைப் பழத்தை அறுத்து வாகனங்களுக்கு அடியில் வைத்து நசுக்குவது, தூர எறிவது இப்படியான பல சடங்குகள் இங்கே அன்றாட நிகழ்வுகளாக உள்ளன. இவற்றில் வீணாவது எல்லாம் உணவுப்பொருள்கள் என்பதுதான் கொடுமை.

ஏறத்தாழ 60சதவீத மக்கள் வறுமைக்-கோட்டிற்குக் கீழே உள்ள ஒரு நாட்டில் இப்படித்-தான் உணவுப் பொருளை வீணாக்கு-வதா? என்று கேள்வி எழுப்பினால் அது மத
வி-ரோதம் என்கிறது இந்துத்துவா. மக்களை மேலும் மேலும் பிற்போக்குத்தனங்களி-லேயே உழல வைத்து, நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதில் பெரும்பான்மை மதமே முன் நிற்கிறது. இந்த எதார்த்த நிலையில்தான் ஒருவர் சடங்குகளின் பெயரால் முக்கிய உணவுப்-பொருளான அரிசியை வீணாக்காதீர்கள் என்று இடைவிடாது போராடி சாதனை புரிந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊட்டச் சத்து குறைவினால் ஆண்டுக்கு 45,000 குழந்தைகள் உயிரிழக்கும் நிலையில் கலாச்சாரம், பண்பாடு, சடங்கு என்ற பெயரில் உணவு தானியத்தை விண டிப்பது செய்வது நியாயமா? என கேள்வி எழுப்பிய தானேயை சேர்ந்த சமூக சேவகர் கடந்த 3 ஆண்டு களில் 30 ஆயிரம் டன் அரிசியை சேமித்துள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி ஒரு வார காலம் தேசிய ஊட்டச்சத்து வார மாக ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் மாநிலத்தில் ஆண்டுக்கு 45,000 குழந்தை கள் ஊட்டச்சத்து குறைவி னால் உயிரிழந்து வருகின்றன. இந்த நிலையில் உணவு தானியங்களை விரயம் செய்வது நியாயமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வியை தனக்குள்ளே கேட்ட ராகுல் பிரகாஷ் சுவர்னா (26) என்ற இளைஞர், திருமணங் களின் போது மணமக்கள் மீது ஆசிர்வதிப்பதற்காக வீசப்படும் அரிசி (அருகம் புல்லுடன் சேர்த்து வீசப் படும் அறுகிடு) வீணடிக் கப்படும் உணவு தானியமாக கருதினார்.

கலாச்சாரம், பண்பாடு, சடங்கு என்ற பெயரில் உணவு தானியம் வீணடிக்கப்படுவதை தடுக்க முடிவு செய்த ராகுல் அதை தனது வீட்டில் இருந்தே தொடங்கினார். கடந்த 2007 ஆம் ஆண்டு தனது அண் ணனுக்குத் திருமணம் நடந்த போது ஆசிர்வதிப் பதற்காக அரிசி வீசப்படுவதை எதிர்த்தார். உணவு தானியத்தை வீணடிக்க வேண்டாம் என குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இவரது கோரிக்கையை யாரும் கேட்கவில்லை, அவர் கூறுவதில் உள்ள நியாயத்தையாரும் புரிந்து கொள்ளவில்லை.

தனது தரப்பு நியாயத்தை குடும்பத் தினருக்கு உணர்த்த பட்டினி கிடந்தார் ராகுல். 6 நாட்கள் தொடர் உண்ணா நிலையில் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்து ராகுல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதன் பிறகே ராகுலின் கூற்றில் உள்ள நியாயத்தை அவரது குடும்பத்தினர் புரிந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு திருமணம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உணவு தானியத்தை வீண் செய்ய வேண்டாம் என ராகுல் கோரிக்கை விடுப்பார்.

சிலர் இவரது கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளனர், சிலர் மத சடங்குகளுக்கு ராகுல் எதிரானவர் என தூற்றியுள்ளனர், சிலரோ இவரை அடித்து, உதைத்துள்ளனர். ஆனாலும் தனது கொள்கையில் ராகுல் இன்று வரை உறுதியாக இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் இவர் சேமித்த ஆசிர்வாத அரிசியின் அளவு 30 ஆயிரம் டன். திருமணங்களில் இருந்து இவ்வளவு அரிசி சேமிக்க முடியும் என்றால் கூட்டு திருமண நிகழ்ச்சியில் எவ்வளவு அரிசி சேமிக்க முடியும் என எண்ணிய ராகுல், கூட்டு திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் சமூக நலத்துறையை நாடி தனது கொள்கை குறித்து எடுத்து கூறினார்.

அதில் உள்ள நியாயத் தையும் சமூக அக்கறையையும் புரிந்து கொண்ட சமூக நலத்துறை அமைச் சகம், அரிசி ஆசீர்வாத சடங் கை மாற்றி தானியத்தை சேமிப்பது குறித்து ஆலோ சித்து வருகிறது. அன்று பெரியாரின் இயக்கம் சொன்னது உலையில்போடும் அரிசியைத் தலையில் போடாதே என்று. இந்த முழக்கம் தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்னேயே எழுந்தது.சுயமரியாதைத் திருமணங்களால் பார்ப்பனீயச் சடங்குகள் ஒழிக்கப்பட்டு இது போன்ற வீணடிப்புகளுக்கெல்லாம் விடை கொடுக்கப்பட்டது.

இன்று இந்துத்துவ கருத்தியல் வேரூன்றியுள்ள மஹாராஷ்டி-ராவில் அதன் எதிரொலி கேட்கிறது.கருத்து ரீதியாக அறிந்திராத அந்த இளைஞர் ராகுல் சமூக உணர்வோடும், நாடு, மக்கள் மீதான அக்கறையோடும் நல்ல பணியைச் செய்துவருகிறார்.சுயமரியாதைத் திருமணங்கள் வட இந்தியாவிலும் நடைமுறைக்கு வரும்போது அரிசிகள் வீணாக்கப்படாது. அதுவரை ராகுல் போன்ற இளைஞரின் பணி அங்கே தேவைதான்.

- - அன்பன்

-http://www.unmaionline.com/2010/september/16-31/page02.php

பெரியாரின் தொலைநோக்கு

பெரியார் சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; சுதந்திர சிந்தனையாளர். அவர் தொடாத துறைகளே இல்லை. முழுக்க முழுக்க மானுடத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த தலைவர் ஒருவர் உலகில் உண்டென்றால், அவர் பெரியார் ஒருவர் தான். மானுடம் மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ தனது வாழ்நாளை செலவழித்தவர் அவர்.இயந்திரங்களின் யுகம் தொடங்கிய 20 ஆம் நூற்றாண்டில் அவர் பொது வாழ்வுக்கு வந்தவர்.முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், தொழிற்புரட்சி ஆகியவற்றைக் கண்டும்,கேட்டும்,அனுபவித்தும் வந்த காலத்தில் - பழம் பெருமை பேசிய இந்த நாட்டில் பகுத்தறிவைப் பேசியவர்; பரப்பியவர். உலகம் கண்ட மாற்றங்களை தனது இதழ்களில் வெளியிட்டவர்.

அவர் இங்கிலீஷ் படித்தவர் இல்லை.ஆனாலும் இங்கிலீஷ் படியுங்கள் என்றார். அது அந்தக்கால கட்டத்தின் அறிவு மொழி என்பதை உணர்ந்திருந்தார். மனித வாழ்வுக்கான வசதிகளை அளித்த இயந்திரங்கள் அப்போதுதான் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு வரத்தொடங்கின. மனித அறிவின் கொடை வழங்கிய அந்தப் பொறிகளைப் பற்றி மக்களிடம் தனது பிரச்சாரத்தின் போது எடுத்துப் பேசுவார். உடல் உழைப்பைக் குறைத்து முன்னிலும் அதிகமான வாழ்க்கை வசதிகளை வழங்கும் வகையில் இயந்திரங்கள் உருவானால் அதனை வரவேற்பதுதான் சரி என்பது அவரது கருத்து. இந்த அடிப்படையில் தான் அவர் 1944 ஆம் ஆண்டு எழுதிய ஒரு நூல் "இனி வரும் உலகம். எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய பெரியாரின் தொலைநோக்குப் பார்வையே இந்த நூலின் சாரம்.

சமூகம், வாழ்க்கை, ஒழுக்கம், மனிதப்பண்பு, கல்வி, இயந்திரங்கள், அறிவியல், தொழில்நுட்பம், உலக நிலை,அரசியல் இப்படி பல்வேறு பொருள் குறித்தும் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையை இந்நூல் நமக்குத் தருகிறது. அவர் சொல்லிய சில மாற்றங்கள் இப்போது வந்துவிட்டன; சில கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவற்றில் சில இங்கே ....

பெரியாரின் கருத்து:

சரீரத்தால் செய்யப்பட வேண்டிய எல்லாக் காரியங்களும் அநேகமாக இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும்... கக்கூஸ் எடுக்க வேண்டியதும், துலக்க வேண்டியதும், வீதி கூட்ட வேண்டியதும் கூட இயந்திரத்தினாலேயே செய்து முடித்துவிடும்.

மனிதனுக்கு பாரம் எடுக்க வேண்டியதோ, இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவே இருக்காது.

பெரியாரின் கருத்து:

போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும்; அதிவேக சாதனமு மாகவே இருக்கும்

இன்று பயன்பாட்டில்:

தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிகளில் விமான நிலையங்கள் வந்துவிட்டன.

பெரியாரின் கருத்து:

கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்

இன்று பயன்பாட்டில்:

செல்பேசிகள் (Cellphones) இல்லாதவர்களே இன்று இல்லை என்றநிலை வந்துவிட்டது.

பெரியாரின் கருத்து:

உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்

இன்று பயன்பாட்டில்:

3 ஜி (3G Cellphones) எனப்படும் முகம் காட்டிப் பேசும் செல்பேசி வசதி வந்துவிட்டது.

பெரியாரின் கருத்து:

ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்

இன்று பயன்பாட்டில்:

எஃப்.எம். ரேடியோ (FM Radio) என்னும் பண்பலை வானொலிக் கருவி மற்றும் ஐ பாட் (i pod), எம்.பி.3 பிளேயர் கருவிகள்
(mp 3,mp4,mp5 players) பயன்பாட்டில் உள்ளன.

பெரியாரின் கருத்து:

விஞ்ஞான சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்

இன்று பயன்பாட்டில்:

வீடியோ கான்பரன்ஸ் (Video Conference) மற்றும் இ லேர்னிங் (E Learning) என்னும் காணொலித் தொடர்பு மூலம் கல்வி,வணிகம்,நிர்வாக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

பெரியாரின் கருத்து:

பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள்போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சந்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்துவிடக்கூடும்

இன்று பயன்பாட்டில்:

முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன் 1978 ஜூலை 25 இல் பிறந்தார்.அவருக்கு இப்போது வயது32.

சோதனைக் குழாய் மூலம் குழந்தை உருவாக்கம் (Test Tube Baby) இன்று எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளது.

பெரியாரின் கருத்து:

ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்

இன்று பயன்பாட்டில்:

மின்சாரத்தால் இயங்கும் மகிழுந்துகள் (Electric Car), இந்தியாவில் ரேவா கார் (Reva Electric Car) வந்துவிட்டன. நேனோ டெக்னாலஜி (Nano Technology) என்னும் புதிய தொழில் நுட்பத்தால் சிறிய அளவில் பொருள்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன.

உதாரணம் : டாடா நேனோ கார் (Tata Nano Car), கையடக்க மடிக்கணினிகள் (Laptop and Leaptop Computers)

-
http://www.unmaionline.com/2010/september/16-31/page10.php

புதன், 29 செப்டம்பர், 2010

பிரச்சார உரிமை

தந்தை பெரியார் அறிவுரை

முதற்காரணம்

முன்னேற்றமான காலத்திலும்கூடத் தமிழர்கள் மனிதத்தன்மை பெறாததற்கும், அதைப்பற்றிச் சரியான கவலை கொள்ளாததற்கும் இந்தப் புராண இதிகாசக் கதைகளின் உண்மை அறியாத மூட நம்பிக்கையே முதற்காரணம்.

(உண்மை, 14.1.1923)

பிரச்சார உரிமை

சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் கீழ்க்கண்ட முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும் ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ - எச் பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப் பட்டுள்ள நிலையில், திராவிடர் கழகம் தமது கொள்கையின் அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்கையில், அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்க் கும்பல் காவல்துறையிடம் புகார் கொடுப்பதும், அதனை ஆழ்ந்து நோக்காமல் நுனிப்புல் மேயும் தன்மையில் காவல்துறையினர் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து விசாரிப்பதும், திட்டமிட்ட வகையில் ஏற்கெனவே முறைப்படி ஏற்பாடு செய்துள்ள கழகத்தின் நிகழ்ச்சி களுக்கு இடையூறு செய்து வருவதும் சட்டப்படியும், நியாயப்படியும் முறையானது அல்ல என்பதை இம் மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சர் அவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தி, உரிய வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. இத்தீர்மானத்தின் அவசியத்தை அதிகம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் நாட்டு ஊடகங்களும் குறிப்பாக தொலைக்காட்சிகள் காலைமுதல் இரவு வரை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் மூட நஞ்சை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே பழக்கவழக்கம் என்ற பெயரால் மூட நம்பிக்கை என்னும் பொல்லாத நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் அறிவின்மீது பலம் கொண்டு சம்மட்டி அடிகொடுப்பது போல, நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்து வருகின்றன.

விஞ்ஞானம் தந்த கருவிகளைப் பயன்படுத்தி, அஞ்ஞானக் கருத்துகளை மக்கள் மூளையின் மீது திணித்து வருகின்றனர். தீர்மானத்தில் சுட்டிக்காட்டி யுள்ளபடி மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை - சீர்திருத்த உணர்வைப் பரப்புவது இந்த ஊடகங்களின் அவசியமான கடமையாகும். அப்படிச் செயல்படாத இந்த ஊடகங்கள் கண்டிப்பாக அறிவியல் மனப்பான்மையை, வளர்க்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிடவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவேண்டிய கடமை கூட மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

இந்த அடிப்படைக் கடமையினைச் செய்யத் தவறிய ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், கடமை உணர்வோடு சீர்திருத்தப் பிரச்சாரத்தைச் செய்துவரும் திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு வருவது வெட்கக்கேடான தாகும். தங்களால் அந்தக் கடமையினைச் செய்யத் தவறும் பட்சத்தில் சீர்திருத்தக் கடமையினைச் செய்துவரும் கழகத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் எதிராகச் செயல்படாமல் இருக்கவேண்டாமா?

மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வுகளை ஏற்படுத்தும் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்பட கடமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்குமே அந்தக் கடமையை அடிப்படையானதாக இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்போது, அரசிற்கு இதில் கூடுதல் கடமை உணர்வு இருக்கவில்லையா?

சீர்திருத்தப் பணிகளை அடிப்படைக் கடமையாகச் செய்துவரும் அமைப்புகளுக்கு ஊக்கம் தரவேண்டியதும், பாதுகாப்பு கொடுக்கவேண்டியதும் அரசுகளின் கடமை யாகும்.

மூட நம்பிக்கைகளுள் மிகவும் மோசமான மூத்த - முடைநாற்றமடிக்கும் மூட நம்பிக்கை கடவுள் நம்பிக்கையே!

அதிலும் இந்து மதம் கற்பித்துள்ள கடவுள்கள் ஆபாசமும், அருவருப்பும் நிறைந்தவை. அழுக்கில் பிறந்த கடவுள், குதிரைக்குப் பிறந்த கடவுள் அவதாரம், விபச்சாரம் செய்யும் கடவுள், கொலை செய்யும் கடவுள், சண்டை போடும் கடவுள், மகளையே மனைவியாகக் கொண்ட கடவுள் என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இந்த ஆபாச, அறிவுக்குப் பொருத்தமற்ற கடவுளை நம்பி அறிவையும், தன்னம்பிக்கையையும், பொருளையும், பொழுதையும் பலி கொடுக்கும் மக்களைத் திருத்தும் பணியிலே திராவிடர் கழகம் ஈடுபடும்பொழுது, ஆதா ரங்களின் அடிப்படையில் இந்தக் கடவுள்களின் தன்மை கள்பற்றி அச்சிட்டுக் கொடுக்கும்பொழுது, மூட மக்களின் மனது புண்படுகிறது என்று கூறி, காவல்துறையினர் கழகப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிப்பது உகந்தது அல்ல.

அதுவும் மதவெறியைத் தூண்டும் இந்துத்துவா அமைப்புகளின் குரலுக்குச் செவிமடுத்து, துண்டு அறிக்கைகளை வழங்கக் கூடாது என்று தடுக்க முயற்சிப்பது சட்ட விரோதமும், கருத்துரிமையைத் தடுக்கும் தவறான அணுகுமுறையுமாகும்.

இதில் வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக சில ஊர்களில் திராவிடர் கழகத்தினர்மீது வழக்குகளைப் பதிவு செய்தும் உள்ளனர்.

இராமனையும், சீதையையும், இலட்சுமணனையும் பகிரங்கமாகக் கொளுத்தி இராவண லீலாவை நடத்தி தமிழின மக்களின் தன்மான உணர்வை அன்னை மணி யம்மையார் கம்பீரமாக வெளிப்படுத்திக் காட்டினார்களே, தமிழர்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களே, அந்த நிகழ்ச்சிகூட இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக அரசு தொடர்ந்த வழக்கில் கழகம் வெற்றி பெற்றதே - வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதே - இந்த உண்மைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தெரிந்து வைத்திருந்தால் வழக்குப் பதிவு செய்வார்களா?

இந்துக்களைப்பற்றி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தெரிவித்த கருத்தின்மீதுகூட வழக்குப் பதிவு செய்யப் பட்டதுண்டு - பிறகு அது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவூட்டுகிறோம்.

இவர் பகுத்தறிவாளர்

பெயர்: லீவ் ஆர்னெசென் (Liv Arnesen)

பிறப்பு: ஜூன் 1 -1953

பிறந்த இடம்: நார்வே நாட்டில் உள்ள பேரும் (Baerum) நகர்

துறை: கண்டுபிடிப்பாளர்,கல்வியாளர் மற்றும் பேராசிரியர்

சாதனை: 1994ஆம் ஆண்டு, பூமியின் தென் துருவத்தை யாருடைய துணையுமின்றி தனியே 50 நாட்களில்(1200 கிலோ மீட்டர் தொலைவு) கடந்தவர். இதன் மூலம் இச் சாதனையைப் புரிந்த உலகின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் கல்வி குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளித்து கருத்துகளை உள்ளத்தில் விதைக்கும் மிகச்சிறந்த பேச்சாளர். விருதுகள்: * 2008ஆம் ஆண்டுக்கான உமன் ஆப் டிஸ்கவரி கரேஜ் அவார்ட் (Women of Discovery Courage Award) என்ற விருதினை விங்க்ஸ் அமைப்பு இவருக்கு அளித்து சிறப்பித்தது உலகப் புகழ் பெற்ற கிளாமர் பத்திரிகை இவருக்கு 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்மணி விருது வழங்கிச் சிறப்பித்தது அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அரசு சார்ந்த பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். இலக்கியம்,வரலாறு,விளையாட்டு மற்றும் நிருவாக மேலாண்மை கற்ற கல்வியாளரான இவர்,20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியாளராகப் பணியாற்றுவதுடன் போதைக்கு அடிமையானோருக்காகவும் பாடுபட்டுவருகிறார்.

நாத்திக பஞ்ச் : உலகில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நான் தென் துருவத்திற்குச் சென்ற போது அவர் அங்கு இருப்பார் கருதினேன். ஆனால் அங்கு அந்தக்கடவுள் இல்லை.எனக்கு என்மீதும், இயற்கையின் மீதும், இந்த உலகத்தின் மீதும்தான் நம்பிக்கை உள்ளது,மதங்களின் மீது நம்பிக்கை இல்லை.

- புருனோ

- http://www.unmaionline.com/2010/september/16-31/page12.php

என்னைப் பெற்ற ஏழைகள்

தந்தை பெரியார்

அம்மையார் இந்திய மக்களின் சராசரி வாழ்வுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்து விட்டார். தானாக நடக்க, இருக்க, மலஜலம் கழிக்க சவுகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்தி-விட்டு சவுகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்தி-விட்டார். 28ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மையிடம் அனுமதிபெற்றே ஜோலார்பேட்டை பிரச்சாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்குவரவு நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 3 மைலில் உள்ள தாதம்-பட்டி என்கின்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்வமாய் வளர்க்கப்பட்டவர்.

உதாரணமாக, தனது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கை-யில் இருந்தவர். ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில், குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார் காணாமல் போன பிறகு ஒரு மிக ஏழ்மை வாழ்க்கை நடத்திய தாயா-ரால் காப்பாற்றப்பட்டவரும், பள்ளிக்-கூடமே இன்னதென அறியாதவரும், 6 வயதிலேயே கூலி வேலை செய்யவும் 18 வயதில் கல்லுடைப்பு வேலை செய்யவு-மாய் இருந்து வந்தவரும், 25 வயதில் வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டப்-போகிறவருமான வெங்கிட்ட நாயக்-கருக்கு நெருங்கிய பந்து உறவு காரண-மாக வாழ்க்கைப் படுத்தப்-பட்டவர்.

அம்மை செல்வக்குடும்பத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்தவராய் இருந்-தாலும், வெங்கிட்ட நாயக்கரை மணந்த பிறகு வெங்கிட்ட நாயக்கர் தரித்திர வாழ்வு அம்மையாரையும் பீடித்து அம்மையார் செங்கல், ஓடு முதலியவை-களை காளவாயிலிருந்து ஊருக்குள் கட்டிடம் கட்டுபவர்களுக்குக் கூலிக்கு கூடைகளில் சுமந்து போட்டு தினம் 8 பைசா கூலி வாங்கி பிழைத்து வந்தவர். புருஷனுக்கு தினம் 2 அணா கூலியும், பெண்ஜாதிக்கு தினம் 0-0-8 பைசா கூலியுமாக சம்பாதித்து வந்தவர். பிறகு புருஷனுக்குக் கல்சித்திர வேலையில் தினம் பகலில் 8 அணாவும் இரவில் 0.12.0 அணாவும் பெறக்கூடிய யோக்கியதையும் வேலைத் திறமையும் ஏற்பட்டபோது, அம்மையார் வெளிவேலைக்கு போகாமல் இருக்க நேர்ந்தது.

ஆன-போதிலும் பின்னால் புருஷன் வண்டி ஓட்டிக்கொண்டு அடிக்கடி வெளியூர்-களுக்குப் போவதைச் சகிக்காத அம்மை-யாரின் தகப்பனார் ஒரு சிறு தட்டுக்கடை வைத்துக் கொடுத்தார். அந்தக் கடை ஒரு வண்டிப்பேட்டையில் வைத்தால் தன்னுடன் தோழர்களாய் இருந்த வண்டிக்காரர்கள் தன்னிடம் சாமான் வாங்குவார்கள் என்று கருதி சட்டி பானை, அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் பொடி, விறகு முதல் சகல சாமக்கிரியை சாமானும் ஒருங்கே வைத்து வியாபாரம் செய்தார்கள். இந்தக் கடைக்கு வேண்டிய சகல சாமானும் அம்மையாரும், அம்மையாரின் மாமியாரான கெம்பு அம்மாளும் வீட்டில் தயார் செய்து கொடுத்து வருவார்கள். இந்த சமயம் 2, 3 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன.

இந்த நிலையில் அந்தக் கடையில் நல்ல லாபம் கிடைத்ததாலும், பிறகு போட்டி ஏற்பட்டதாலும் அதை விடுத்து அந்தக் கடையை அப்படியே மற்றொருவனுக்கு விற்று விட்டு லாபப்-பணத்தையும், கைம்முதல் பணத்தையும் சேர்த்து ஈரோடு பஜார் ரோட்டில் ஒரு மளிகைக் கடை வைத்தார். அம்மையை கைப்பிடித்த சம்பவத்தால் கல்தச்சு வெங்கிட்டன் என்ற பெயர் மாறி வண்டிக்கார வெங்கிட்ட நாயக்கனாகி, அதுவும் மாறி தட்டுக்கடை வெங்கிட்ட நாயக்கனாகி, பிறகு மளிகைக்கடை வெங்கிட்ட நாயக்கரானார். அதில் 3 வருஷத்திலேயே மற்றவர்கள் பொறா-மைப்-படும் படியான லாபமடைந்தார். ஒரு சிறு குச்சு - அதாவது கதவு இல்லாமல் தட்டி வைத்து இரவு முழுவதும் நாயை விரட்டிக் கொண்டிருக்க வேண்டிய குடிசையை மாற்றி ஓட்டுவில்லை கட்டிட வீடும், 2 ஏக்கரா விஸ்தீரணமுள்ள நல்லவயல் நிலமும் உடையவ ரானார்.

இது சமயம்தான் அம்மையாருக்கு முன்பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துபோய் ஸ்தல யாத்திரைகள், தவங்கள் செய்து வரடி கல் சுற்றி, நிலத்தை வழித்து அதில் சாப்பாடு போட்டு பிசைந்து சாப்பிட்டு, சன்யாசிகளின் எச்சில் சாப்பிட்டு, வரம் பெற்று ஈ.வெ.கிருஷ்ண-சாமியையும், ஈ.வெ.ராமசாமியையும் பெற்றெடுத்த காலம் என்றாலும், அம்மையாருக் குள்ள பிள்ளை ஆசையால் மூத்த பிள்ளை ஒன்றே தனக்குப் போது-மென்று கருதி அதற்கே தனது முலைப்-பால் முழுதும் கொடுக்க ஆசைப்பட்டு இளைய பிள்ளையாகிய ராமனை மற்றொரு குழந்தை-யில்லாத அம்மை யாருக்கு அதாவது தன் புருஷனின் சிறிய தகப்பனார் மனைவியாகிய ஒரு விதவைக்கு ஒரு சிறு வீடும் சிறிது நிலமும் இருந்த காரணத்துக்காக அவர் களையே வளர்த்துக்-கொள்ளும் படி இனாமாய்க் கொடுத்து-விட்டார்கள்.

அந்தக் காரணத்தாலேயே ராமன் (ஈ.வெ.ராம-சாமி, பள்ளிக்கு அனுப்பாமல் தெருத்தெருவாய் சுற்றவும் கேள்வி கேட்பாடு இல்லாமல் அலையவும், கம்மநாட்டி வளர்ப்பது கழுதைக்குட்டிதான் என்ற பெயருக்கேற்ப ஒரு உருவாரமாய் இருந்து வரவும், மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக அருமையாய் செல்வமாய் வளர்க்கவும் ஆன நிலையேற்பட்டது. ஆனால் இந்தச் சமயம்தான் அதாவது இந்த இரு குழந்தைகளும் பிறந்த சமயம் தான் வெங்கிட்ட நாயக்கருக்கு பெரிய செல்வம் பெருக சந்தர்ப்பமும் பெருகி வந்த காலமாகும். அதாவது கடைசியில் சொன்ன மளிகை கடை வியாபாரமானது வலுத்து-விட்டது. வீடு, வயல், தங்க நகைகள் கேட்போர் மனமும், பார்ப்போர் கண்களும் திடுக்கிடும்-படியான தோற்றமாய் இருந்த காலத்தில் எப்படியாவது மளிகைக்கடை நடக்கும் கட்டடத்தை பிடுங்கிக் கொண்டால் தங்களுக்கு அந்த லாபம் கிடைக்குமென்று கருதி சிலர் அந்தக் கடையை கட்டடக்-காரனிடம் அதிக வாடகை வைத்து கேட்க ஆரம்பித்தார்கள்.

அம்மையாரும் - புருஷனும் யோசித்து கடையை சகல சாமானுடனும் பாக்கியுடனும் ஒப்புக்கொள்பவர் களுக்கு கொடுத்து விடுவதாய் விலை கூறினார். அதற்கு ஏற்பட்ட போட்டியில் நல்ல விலை கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு உடனே ஒரு மண்டிக்கடை அதாவது மொத்த வியாபாரக் கடை (மூட்டைக் கணக்காய் விற்பது) வைக்க யோசித்தார்கள். உடனே நல்லதொரு கடை அமைந்தது. அங்கு மண்டிக்கடை வைத்தார் புருஷன். உடனே மண்டிவெங்கிட்ட நாயக்-கரானார். சின்னத்தாயம்மையாரும் மண்டி வெங்-கிட்ட நாயக்கருக்கும் ஊரில் பணக்காரர் கூட்டத்தில் சேர்க்கத்தக்க பெயர் ஏற்பட்ட-தோடு எப்படியோ நாணயமுமேற்பட்டு விட்டது. தான் மிகவும் நாணயசாலி என்று காட்டிக் கொள்வதில் இருவர்களும் சமர்த்தர்-கள்.

அந்தக் காலங்களில் பணம் படைத்தவர்-களுக்கு பணம் போட்டு வைக்க பாங்கி இல்லாததால் நாணயத்தில் பேர்பெற்ற சின்னத்-தாயம்மாளும், வெங்கிட்ட நாயக்கரும் ஒரு சேவிங் பாங்கி ஆகிவிட்டார்கள். பணம் ஏராளமாய் தங்களிடம் டிபாசிட் வர ஆரம்பித்ததும். தங்கள் வியாபாரத்தை மிகவும் பெருக்கி விட்டார்கள். மண்டிவெங்கிட்ட நாயக்கர் தன் கடையில் வியாபாரம் செய்தால் சின்னத்தாயம்மாள் வீட்டில் நெல் குத்தும் கொட்டணம், துவரை உளுந்து உடைக்கும் வேலை, விளக்கெண்ணெய் காய்ச்சி ஊத்தும் வேலை முதலியவைகளில் வீட்டில் எப்போதும் 20, 30 பேர் வேலை செய்யும்படியான தொழில் செய்து புருஷனைப் போலவே தானும் வருஷா வருஷம் சிறிதாவது பணம் சம்பாதித்து புருஷனுக்கு கொடுத்தே வருவார்கள்.

பணம் சேர்ந்தவுடன் மத பக்தி, மத சின்னம், விரதம், நோன்பு, திதி முதலியவைகள் தானாகவே தேடி வருவது வழக்கமல்லவா? அதுபோல் அம்மையார் மிகவும் பக்தியுடைய-வரானார். விரதங்கள் அதிகமாய் அனுஷ்டிக்கத் தொடங்கினார். மண்டி வெங்கிட்ட நாயக்-கருக்கும் நாமம் பலமாக பட்டை பட்டை-யாய்த் திகழ்ந்தது. இந்த மத்தியில் வீட்டில் செல்வமாய் வளர்க்கப்பட்ட மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியும் பாகவதராக ஆகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அதாவது மண்டி வைத்து மண்டிக்கடை நன்றாய் நடக்க ஆரம்பித்து சிறிது எதிர்பார்த்ததுக்கு மேல் லாபம் வர ஆரம்பித்தவுடன் சின்னத்தாயம்மாள் சின்ன பிள்ளை ராமனை (ஈ.வெ.ராமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக இனாமாக (தத்து கொடுத்து விட்ட அம்மாளிடமிருந்து) பிடுங்கிக் கொண்டார்கள்.

ராமனை வளர்த்த அம்மாள் ஊர் பஞ்சாயத்துக் கூட்டினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கு ஒன்றும் தட்டிச் சொல்ல முடியவில்லை. சின்னத்-தாயம்மாள், 2 கண்ணு தான் எனக்கு இருக்கிறது. இதில் ஒன்றைக் கொடுக்க முடியுமா? முடியாது போ! என்று சொல்லிவிட்டார்கள். முடிவில் ராமனை சுமார் 9 வயதில் கைப்பற்றினாலும் அவள் விதவை வளர்த்த பிள்ளையாய், ஊர்சுத்தியாய், லோலனாய்த் திரிந்ததால் படிப்பு இல்லை. அது மாத்திரமா? இனிமேல் படிக்கவும் லாயக்கில்லாத சோதாவாய் ஆகிவிட்டான்.

இருந்த போதிலும் பள்ளியில் வைத்து வீட்டு வாத்தியார் வைத்துப் பார்த்தார்கள். வாத்தியாருடன் சண்டை, பிள்ளைகளுடன் பலாத்காரம், அடிதடி, கடைசியாய் உபாத்தியாயரை வைவதில்லை பிள்ளைகளை அடிப்பதில்லை என்கின்ற வாசகம் ஆயிரம் தடவை, அய்ந்தாயிரம் தடவை தண்டக் காப்பி எழுதுவதே வேலையாய் இருந்ததால் ராமனைப் பள்ளிக்கு அனுப்பு-வதை நிறுத்திக் கொண்டு, மண்டிக்கடையில் அதாவது தரகு வியாபார இலாகாவில் மஞ்சள், மிளகாய், ஏலம் கூறும் வேலையில் போட்டார்-கள். இருந்தாலும் ராமன் எங்கு வளர்த்த தாயாரிடம் போய்விடுவானோ என்றுச் சின்னத்தாயம்மாள் சின்ன மகனுக்கு சிறிது சலுகைக் காட்டி பொய் அன்பாவது காட்டிவருவார்கள்.

எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும். இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்ட நாயக்கன் என்ற பெயர் மாறி நாயக்கரானதும் சின்னத் தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கர் அம்மாள் என்ற பெயர் ஏற்பட்டது-மாகும். அம்மையாருக்கு தெய்வ பக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது நாயக்கரும் அம்மாள் சொன்னபடி ஆடியாக-வேண்டும். பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பித்து-விட்டார்கள். கண்ட விடமெல்லாம் காடுமேடெல்லாம் கோவில், சத்திரம், சாவடி கட்ட ஆரம்பித்தார்கள். பார்ப்பனர்களின் புகழுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

ஒவ்வொரு கல்யாணத்தின் போது தருமக் கல்யாணங்-கள் செய்வார்கள். நன்றாய் இருக்கும் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால் நீங்கள் பணம்கொடுக்க வேண்டியதில்லை. என் பணத்தில் செய்யுங்-கள் என்று எடுத்தெறிந்தாற்போல் பேசிவிடு-வார்கள். வீட்டில் வாரம் ஒரு காலட்சேபம், ராமாயண பாரத வாசகம், அங்குத் திரியும் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும் சதாசர்-வகாலம் உலையில் நீர் கொதித்த வண்ணமாய் இருக்கும் படியான தண்டச் சோத்து சத்திரம் போல் வீட்டை நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு விஷயம் குறிப்பிடத்-தகுந்தது. இளைய மகன் ராமனிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும் அம்மையார் ராமன் தொட்ட சொம்பு, டம்ளர், ஆகியவைகளை கழுவியே வைப்பார்கள். ராமனை சமையல் வீட்டிற்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் ஜாதி கெட்ட பயலாய் விளங்கினான். ராமனுக்கு ஆகவே சமையல் வீட்டிற்குள் வேறு யாரும் நுழையக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் அம்மையார் மாமிசம் சாப்பிடமாட்டார். ராமனுக்கு தினமும் வேண்டும். ஆதலால் ராமனுக்குக் கல்யாண-மானவுடன் அவனுடைய அனாச்-சாரத்துக்கு ஆகவே அம்மையார் ராமனை வேறு வைத்துவிட்டார்கள்.

சதா சர்வ காலம் தன் வயற்றில் இப்படிப்பட்ட பிள்ளை ராமன் பிறந்ததற்கு துக்கப்பட்டுக் கொண்டேயிருப்-பார்கள். பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள். நன்றாய் சம்பாதித்து நன்றாய் செலவு செய்தவர்கள். பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள். அளவுக்கு மீறி ஆச்சாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள். எத்தனையோ பேரைத் திருத்திய ராமனால் அம்மையாரிடம் தன் கொள்கையை சொல்லு-வதற்குக்கூட தைரியம் ஏற்படும்-படியாய் அம்மையார் இடம் கொடுக்க-வில்லை. கடைசி வயதில் கூட அம்மை-யாரைப் பார்க்க வந்தவர்களிடம் என் மகன் ராமனை சிறிது பார்த்துக் கொள்ளுங்கள் இளங்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என்று ஆவலாதி சொல்லியே வருவார்கள்.

ஒரு காலத்தில் மவுலானாக்கள் ஷவ்கத்தலி, மகமதலி அம்மையாரின் கையில் தங்கள் தலையை ஒட்ட வைத்து வாழ்த்தும்படி கேட்ட-போது தன்னை அவர்கள் தொட்டு-விட்டதற்காக முகத்தை சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப் படையாய் எடுத்துக்-காட்டி கேலி செய்து அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படிச் செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் காந்தி முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் எங்கு தன்னை தொட்டு-விடுவார்களோ என்று பயந்து ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்று தான் அவர்களுடன் பேசுவார். மூட-நம்பிக்கைகளுக்கும். குருட்டு அனாச்சாரங்-களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95-வயது வாழ்ந்து முடிவெய்தி விட்டார். எனக்கு அவர் முடிவெய்தியதைப் பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயி ருக்கிறது. அந்த அம்மாளு-டைய கோரிக்கை - எனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. எனது கோரிக்கை - எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திட-வேண்டு-மென்பதே. என் இஷ்டம் நிறைவேறிற்று.

மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி!!

-குடிஅரசு, (இரங்கல் கட்டுரை-2.08.1936)

- http://www.unmaionline.com/2010/september/16-31/page07.php

உலகை உருவாக்கியது கடவுள் அல்ல

உலகை உருவாக்கியது கடவுள் அல்ல
அறிவியல் அறிஞரின் அதிரடி

கடவுள் கருத்து உருவாக்கப்பட்ட காலம் தொட்டே,கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என தர்க்க ரீதியாக மறுப்புரைத்தோர் இருந்து வந்துள்ளனர். கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தியோரைக் கண்டிக்கும் மனிதநேயர்களும் அப்போதே இருந்தனர்.மனிதர்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடிய சுயநலக்கும்பலை அம்பலப் படுத்தினர்.

அந்த மனிதர்கள் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்தி இயற்கைக்கு எதிராக உருவாக்கப்பட்ட கடவுள் கோட்பாட்டை தகர்த்தெரிந்தனர்.இன்றுவரை பகுத்தறிவாளர்களின் தர்க்கத்திற்கு மதவாதிகளால் நேருக்கு நேர் பதில் அளிக்க முடியவில்லை.சப்பைக் கட்டுகளாலும்,அது ஒரு நம்பிக்கை என்று கூறியும் தப்பித்து ஓடுகிறார்கள்.

அறிவு யுகத்தின் கேள்விகள் தொடர,பின் அறிவியல் உலகம் மலர்ந்தபோது சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி பரிணாமக்கோட்பாட்டைக் கூறினார்.

உலகின் தோற்றம், வானவியல், இயற்பியல், உயிரினங்களின் வளர்ச்சி என பல்வேறு பொருள் குறித்த அறிவியல் கருத்துகளும் வெளிவரத்
துவங்கின. இப்படி ஒவ்வொன்றாய் வரவர அதுவரை கட்டமைக்கப்பட்ட கடவுள் கருத்து தகரத் தொடங்கியது. கணினிக் காலமான இந்தக்காலத்தில் இன்னும் அதிகமான ஆராய்ச்சி வசதிகள் வந்துவிட, விஞ்ஞானி கள் பலரும் கடவுள் என்ற கருத்தியல் மீதான அறிவியல் ஆய்வு முடிவுகளை அவ்வப்போது வெளியிட்டுவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இப்போது ஒரு அறிவியல் ஆய்வுக்கருத்தை முன்வைத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், சர் அய்சக் நியூட்டன் இருந்த ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர்.

காலத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு எனும் இவருடைய நூல் 1988 இல் எழுதப் பெற்றது. அந்நூல் இவருடைய புகழை உயர்த்தியது. பன்னாட்டு அளவில் மிக அதிகம் விற்ற நூல்களில் அதுவும் ஒன்று. தமிழ் உள்படப் பல மொழிகளில் அந்நூல் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. கடவுள் கருத்து அல்லது தெய்வீகம் என்பது பிரபஞ்சத்தைப்பற்றிய அறிவியல் புரிதலுக்கு முரண்பட்டது அல்ல என அப்போது அவர் அந்நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியிருந்தார்.

ஆனால், 2010 செப்டம்பர் 2 இல் சில பகுதிகள் வெளியிடப்பட்ட இவரது நூலான தி கிராண்ட் டிசைன் (The Grand Design) எனும் நூலில், இயல்பியலில் ஏற் பட்டுள்ள தொடர்ந்த வளர்ச்சிகளின் காரண மாக, பிரபஞ்சப் படைப்புப்பற்றிய கோட்பாடு களில் இனி மேல் கடவுளுக்கு எந்த இடமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப் படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான், என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும், படைத்துக் கொள்ளும். தானாக நிகழும் படைப்பின் காரணமாக, எதுவுமற்றது என்பதைவிட ஏதோ ஒன்று இருக்கிறது என்பதும், பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்பது, நாம் ஏன் இருக்கிறோம் என்பதும் புலனாகிறது என ஹாக்கிங் எழுதியுள்ளார்.

வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப் பிற்குக் கடவுளைத் துணைக்கு அழைக்கவேண்டிய தேவை யில்லை என்கிறார், ஹாக்கிங்.

அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தால் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் சமூக விஞ்ஞானி பெரியார்.

அறிவியல் வளர்ச்சி கடவுளை ஒழிக்கத்தொடங்கி விட்டது. மனித மூளைக்குள் அச்சம்,அறியாமை என்ற கவசத்தால் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொண்டிருக்கும் கடவுளை, அறிவியல் சம்மட்டியால் தாக்கி அழிக்கும் காலம் அருகில் வந்துவிட்டதைத்தான் ஹாக்கிங்கின் கருத்து உணர்த்துகிறது.

-http://www.unmaionline.com/2010/september/16-31/page03.php

ஆசிரியர் பதில்கள்

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மாநிலக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும்போதே, தான்தோன்றித்தனமாக மாநில உரிமைகளில் அடிக்கடி கை வைக்கும் காங்கிரஸ்கட்சி - மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால்...?

- கு.நா. இராமண்ணா, சீர்காழி

பதில் : இனி, ஒற்றை ஆட்சி மத்தியில் நடைபெற மாநில அரசுகளும் மக்களும் மவுனம் காக்க மாட்டார்கள். கூட்டாட்சித் தத்துவம் மூலம் வலுப்பெறவே விரும்புவர் மாநிலத்தவர்கள்.

கேள்வி : ஆங்கிலேய அடக்குமுறைக் கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்ட துப்பாக்கிகூட பாரதிதாசன் அனுப்பிவைத்ததுதான் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருப்பது உண்மையா?

- தெ. மதியழகன், கணியூர்

பதில் : துப்பாக்கி யார் அனுப்பி வைத்தார் என்பது ஆதாரப்பூர்வமான தகவலா என்பது ஒருபுறமிருந்தாலும், அவர் ஏன் சுட்டார்? சனாதன தர்மத்தை வெள்ளைக்கார ஆட்சி கெடுத்தது என்பதற்குத்தானே! (பெ. சு. மணி தகவல் இது!)

கேள்வி : கடவுள் மறுப்பாளரான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், மொட்டை அடித்தும் பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளதைப்பற்றி?

- வெங்கட. இராசா , ம.பொடையூர்

பதில் : அப்படி ஒரு நிர்ப்பந்தம் எதற்கோ புரியவில்லை. அவர் ஒரு நல்ல பகுத்தறிவாளர்தான்.

கேள்வி : விலைவாசி உயர்வுக்குத் தீர்வுதான் என்ன? மத்திய அரசும் மவுனம் சாதிப்பது ஏன்?

- கோவை குணாளன், மருதமலை

பதில் : தீர்வு அவ்வளவு எளிதல்ல; வாங்கும் சக்தி வளர்வதுதான் உண்மையான தீர்வாகும்.

கேள்வி : நாடாளுமன்ற உறுப்பினர்கள், 5 பங்கு சம்பளம் உயர்த்தித் தர வேண்டும் என்கிறார்களே, இது எந்த விதத்தில் நியாயம்! இவர்கள் அங்கு சென்றிருப்பது நாட்டுக்கு உழைக்கவா?

- தி.பொ.சண்முகம், திட்டக்குடி

பதில் : அண்மையில் நடந்த மிகவும் வேதனை தரத்தக்க செயல் இது!

கேள்வி : கிறிஸ்தவ மதம் மாறிய தலித்துகள், கிறிஸ்தவ மதத்தில் சமத்துவம் தமக்குக் கிடைக்கவில்லை என்பதால்தான், தம்மைத் தலித்துக் கிறிஸ்தவர் என்று கூறிக்கொண்டு, தமக்கும் தலித்துக்கான சலுகைகள் வேண்டும் என்று கேட்பது சரியா? மேற்கண்ட கோரிக்கையை, சில அரசியல் கட்சிகள் ஆதரிப்பது என்ன நியாயம்?

- அரவரசன், பல்லாவரம்

பதில் : மதம் மாறினாலும் அவர்கள் நிலை மாறவில்லையே! எனவே, கேட்பதில் தவறில்லை.

கேள்வி : மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என்று கம்யூனிஸ்டுகளும், பா.ம.க.வினரும் ஒருபக்கம் கூறிக் கொண்டு, மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்தி, வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கூறுவது எப்படிச் சரியாகும்?

- கு.பழநி, புதுவண்ணை

பதில் : அதற்குப் பெயர்தான் அரசியல்-புரிகிறதா?

கேள்வி : நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட இருப்பதாகக் கூறும் பிராணப் முகர்ஜியின் எண்ணம் எதைக் காட்டுகிறது?

- கி.கோவிந்தன், தருமபுரி

பதில் : அவர் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை; புரிந்துகொள்ளவும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

கேள்வி : மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற பிரதமரின் கருத்தினை ஏற்க முடியுமா?

- கே. பிரியா, திருவள்ளூர்

பதில் : கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது என்பது சரியானதே! நிருவாகத்துறை, நீதித்துறை, சட்டத்துறை மூன்றும் ஒருங்கிணைந்து நலம் பயக்க வேண்டும்.

கேள்வி : உற்பத்திப் பற்றாக்குறை, தன்னிறைவற்ற தன்மை உள்ள இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் எதற்கெடுத்தாலும் வேலைநிறுத்தம் செய்வது சரியா? தொழிற்சங்கங்களின் போராட்டம் வேறு எந்த வகையில் அமையலாம்?

-கீ. திவ்யா, விருதுநகர்

பதில் : வேலை நிறுத்தங்களுக்குப் பதில் முத்தரப்பு விவாதம் தேவை. தீர்வு அதன் பிறகு வரவேண்டும்

- http://www.unmaionline.com/2010/september/16-31/page05.php

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம்

சீர்காழியில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. உடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழக முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர் (சீர்காழி, 27.9.2010).

சீர்காழி மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்டது. தராசில் தமிழர் தலைவர் அமர்வதற்குமுன் மாநாட்டு வரவேற்புக் குழுவினரும், பல்துறையைச் சேர்ந்த பொதுமக்களும் சால்வை போர்த்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். தராசின் ஒரு தட்டில் தமிழர் தலைவர் அமர, மறுதட்டில் ரூபாய் நாணயங்கள் கொட்டப்பட்டன. சம அளவு வந்தபோது, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்று பொதுமக்கள் முழக்கமிட்டனர். அதன் தொகை ரூபாய் 15 ஆயிரம் ஆகும். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு இத்தொகை அளிக்கப்படும் என்று, மாநாட்டில் கழகத் தலைவர் அறிவித்தார்.

- http://www.viduthalai.periyar.org.in/20100928/news02.html

திங்கள், 27 செப்டம்பர், 2010

வெண்தாடிவேந்தரின் பிறந்த நாள்

வெண்தாடிவேந்தரின் பிறந்த நாள் சிங்கப்பூரில் மனிதநேயத் திருவிழா

சிங்கப்பூர், செப்..26- வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் 132-ஆம்ஆண்டு பிறந்த நாள் விழா சிங்கப் பூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கம்பீரமான பெரியார் படத்துடன், பெரியார் பற்றி யுனெஸ்கோ மற்றும் புரட்சிக் கவி ஞர் பாரதிதாசனின் புரட்சி வரிகள் தாங் கிய பிறந்த நாள் விழா வாழ்த்து விளம்பரம் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளியிட்டு, சிங்கப் பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கை தமிழர்களுடன் மகிழ்ச் சியையும் வாழ்த்தை யும் பகிர்ந்து கொண் டது.
அதனைத் தொடர்ந்து, செப்.18 சனியன்று பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் குடும் பத்துடன் மற்றும் புக் கிட்வியூ மேனிலைப் பள்ளி மாணவர்க ளுடன் சிங்கப்பூரில் உள்ள சீறி நாராயணா மிஷன் முதியோர் இல்லத்துக்குச் சென்று, 20ஆம் நூற் றாண்டின் மகத்தான மனிதநேய சிந்தனை யாளர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர் களின் பிறந்த நாளை, அங்கு உள்ள வயதான (மாற்றுத் திறனாளிகள்) முதியோர்களுடன், அவர் களுக்குத் தேவையான பால் பவுடர், ரொட்டி உணவு, பிஸ்கட்கள் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். முதி யோர்களை மனதள வில் மகிழ்விக்க பெரியார் சமூக சேவை மன்றம் அவர்களுக்கு விளை யாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து, அதற் குத் தேவையான விளை யாட்டுப் பொருள்கள் மற்றும் பரிசுப் பொருள் களை வழங்கியது. புக் கிட் வியூ மேனிலைப் பள்ளி மாணவ - மாண விகள் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தது, முதியோர் களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதில் பெரும் பாலானோர் சீன மாண வர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் தொடக் கத்தில் முதியோர்கள் அனைவரையும், சக்கர நாற்காலியில் அமர்ந்த வாறே அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அந்த நிறுவ னத்தின் தலைமை அலு வலர் அவர்கள் அனை வரிடமும் பெரியார் சமூக சேவை மன்றம் வந்திருப்பதற்கான நோக்கத்தை எடுத்துக் கூறி, விளையாட்டுப் போட்டிகள் பற்றியும் கூறி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
பெரியார் சமூக சேவை மன்றத்தின் மாறன் சிறப் பான வகையில் வயது முதிர்ந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டி களுக்கான ஏற்பாடு செய்து, பள்ளி மாண வர்களுடன் சேர்ந்து போட்டிகளை நடத்தி னார். முதியோர்களும் சுமார் 2 மணி நேரம் பள்ளி மாணவர்களு டன் சேர்ந்து மன மகிழ்ச்சி யுடன் விளை யாடினார்கள். அந்தக் காட் சியைப் பார்க்கும் போது, பேரப்பிள்ளை கள் தங்கள் தாத்தா, பாட்டியுடன் விளை யாடிய உணர்வை அந்த முதியவர்களுக்கு ஏற்படுத்தியதை அவர் களின் முகத்தில் காண முடிந்தது.
நிகழ்ச்சி முடிந்த வுடன் முதியோர்க ளுக்கு பரிசுப்பொருள் கள் வழங்கப்பட்டு, அவர்களை அவரவர் களின் அறைக்கு மாண வர்களும், மன்ற உறுப் பினர்களும் அழைத் துச் சென்றனர். அத னைத் தொடர்ந்து பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் கலைச்செல்வம் மாண வர்களுக்கு பெரியா ரைப் பற்றியும், மன்றத் தின் சேவையைப் பற்றி யும் ஆங்கிலத்தில் எடுத் துக் கூறினார்.
இறுதியாக மாண வர்களுக்கும், மன்ற உறுப்பினர்க ளுக்கும் பெரியார் பிறந்த நாள் விழா கேக் வழங்கி மகிழ்விக்கப் பட்டது. பெரியார் பிறந்த நாள் விழாவில் பெரி யார், பெரியவர், சிறிய வர் என்று அனைவரி டமும் சென்றார் மனித நேயம் சென்றது என்ற மனநிறைவுடன் மகிழ் வுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

- http://www.viduthalai.periyar.org.in/20100926/news12.html