புதன், 8 டிசம்பர், 2010

ஞானசூரியன் - தொடர்ச்சி - 13

ஞானசூரியன்

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1927 20 ஆம் பதிப்பு : 2010

1. மலையாளத்தில் இடைக்காலத்தில் அந்நாட்டிலுள்ள சிற்றரசர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தத னாலும், அக்காலத்தில் அரசர்கள் பிராமணன் பொருள் நீங்கலாக ஏனையோர் பொருள்களைக் கொள்ளையிட்டு வந்ததனாலும், கொள்ளைக்காரர்களுக்குப் பயந்து நாயர்கள் பிராமணர்களிடம் ஒப்படைக்க இடமாயிற்றென்றும், அதன் காரணமாகவே நம்பூதிரிகள் பிரபுக்களானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
2. இந்த முறையினைக் கையாண்ட ஆரியர்களுடைய சூழ்ச்சியினாலேயே தமிழ்நாடு முடியுடைய மூவேந்தர் களையும் இழந்ததென்று அறிய வேண்டும்.
விஷமேகாகினம் ஹந்தி
ப்ரஹ்மஸ்வம் புத்ர பௌத்ரகம்
பொருள்: விஷமானது அதையுட்கொண்ட ஒருவனை மட்டும் கொல்லுவதால், அது விஷமன்று. பிராமணனுடைய பொருளே விஷம். ஏனென்றால், (பிரஹ்மஸ்வம்) பிராமண னுடைய பொருள்களைக் கைப்பற்றியவனுடைய கால் வழிகளையும் (சந்ததிகள்) வேரோடு நாசம் பண்ணிவிடு கிறது.
பிராமணனும், கொலைக்குற்றமும்
கொலைபுரிந்த பார்ப்பனன் அடையத்தக்க தண்டனையைப் பற்றி மனு இங்ஙனம் கூறுகின்றார்.
1மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்டா
ப்ராஹ்மணானாம் விதீயதே
இதரேஷாம்து, வர்ணானாமதண்ட:
ப்ராணாந்தி கோபவேத
பொருள்: கொலைத் தொழில் புரிந்த மற்ற வருணத் தார்களைத் தூக்கிலிட வேண்டும். பிராமணன் இத்தகைய குற்றம் புரிவானாயின், அவனது தலைமயிரை மொட்டை யடித்தலே தண்டனையாகும். என்னே! மனுவின் நீதி. இதை உணர்ந்தவர்களுக்குச் சூத்திரன் செத்தால் மயிர் போச்சு என்ற பார்ப்பனக் கூற்று வியப்பைத் தரமாட்டாது. இத்தகைய வாக்கியங்கள் பலவுள; விரிக்கிற் பெருகும்.
க்ஷத்திரியன் முதலிய மூன்று வருணத்தினரின் தர்மம்
பசூனாம் ரக்ஷணம்
தானமிஜ்யாத்யயன மேவச
வ்ணிக்பதம் குஸீதஞ்ச வைஸ்ய
ஸ்ய க்ருஷீமேவச! (மனு)
பொருள்: யாகம் செய்தல், கற்றல், தானம் கொடுத்தல், பசுக்களைக் காத்தல், பயிரிடுதல், வியாபாரம் செய்தல் இவைகளும் வைசியனது தருமமாம். இந்தக் கருத்தையே இரண்டு சுலோகங்களால் யாக்ஞவல்கியர் கூறுகிறார்.
இஜ்யாத்யயன தானானி
வைஸ்யஸ்ய க்ஷத்திரியஸ்யச;
ப்ரதிக்ர ஹோதிகோ விப்ரேயா
ஜனாத்யாபனேததா,
ப்ரதானம் க்ஷத்திரியே கர்ம
ப்ரஜானாம் பரிபாலனம்;
குஸுதக் குருஷி வாணிஜ்யம்
பசுபால்யம் விச; ஸ்ம்ருதம்
இந்தச் சுலோகங்களால் மக்கள் முன்னேற்ற வழியில் க்ஷத்திரிய, வைசியர்களுக்கும் சிற்சில உதவிகளைச் செய்திருக்கிறதாக ஏற்படுகிறது. இக்காலத்து இந்நாட்டில் வசிப்பவர்களை அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நாட்டுக் கிறிஸ்தவர், இந்தியர் என நான்கு வகையாகப் பிரிக்க லாம். இவர்களுள் அய்ரோப்பியன் முதன்மையானவன் ஆவன். இரண்டா வது படியிலிருக்கிற ஆங்கிலோ இந்தி யன் அய்ரோப்பி யனைவிடத் தாழ்ந்தவன். ஆயினும், தந்தைக்கும், மகனுக்கும் இருக்கிற சம்பந்தம் இவ்விருவர்களுக் குள்ளிருப்பதால், அடுத்த படியில் எண்ணப்படுகிறான். நாட்டுக் கிறிஸ்தவனுக்கும், அய்ரோப்பியனுக்கும் இத் தகைய சம்பந்தம் இல்லாதிருந்தாலும் ஒரே சமயத்தைத் தழுவி நடப்பவர்களாதலால், சகோதரத் தன்மை ஏற்பட்டு மூன்றாவதாக நடத்தப்படுகிறான். நான்காவதாகச் சொன்ன இந்தியனுக்கும் இம்மூவர்களுக்கும் ஒரு வகையிலும் சம்பந்தமில்லை. ஆனதால், இந்துக்களின் பிரமாண நூற்படி பூமிதேவ குலத்திலுதித்த வேதிய னையுங்கூடக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்றும், பாவியென்றுங்கூறி நாயினுந் தாழ்ந்த நிலையில் பண்ணு கிறார்கள். இந்துக்களின் ஜாதிப் பிரிவினையும் இவ்வாறே யாகும். மூன்று வருணத்தார்க்குள்ளும் சிற்சில வேற்றுமை கள் காணப்படினும் ஒரே சமயத்தினரால் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்களேயாவர். இதனாலேயே இமமூன்று வருணத் தினக்கும் பொதுவாகவும் பிராமணனுக்கு மட்டும் பொதுவிலும், சிறப்பிலும் (துவிஜாதி) இருபிறப்பாளர் என்கிற பட்டப்பெயர் உண்டாயிற்று. நான்காவது வருணத் தினர் என்று இவர்களால் அழைக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டத்தினருக்கும், இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாததனால் அவர்களைத் தாழ்வாக நடத்தி வந்தார்கள்; நடத்தியும் வருகிறார்கள். ஆனால், ஆங்கிலேயனால் தாழ்ந்தவனாகக் கருதப்படும் ஒரு பார்ப்பனன் தன்னைப் பற்றி எங்ஙனம் நான் உயர்குலத்தோன்; பெருந்தன்மை வாய்ந்தவன் என்று எண்ணிக் கொள்கின்றானோ அதைப் போல, வஞ்சகம் பார்ப்பனர்களால் நான்காவது வருணத் தினர் என்று இழிவாகக் கருதப்படும் நம்மவர்களும், உயர்ந்த எண்ணத்துடன், தங்களை எண்ணிக்கொள்ளவும், தன் மதிப்பைக் காத்துக் கொள்ளவும் உரிமையுள்ள வர்களேயாவர். இத்தகைய நான்காவது வருணத்தினரின் தொகை பத்தொன்பது கோடி என்று முன்னரே கூறியுள்ளோம். இவர்களில் தமிழ் நாட்டினர் தவிர, ஏனைய நாட்டினர் இன்னும் அடிமைகளாகவே காலங்கழிக் கிறார்கள். அந்தோ!
தமிழ் நாடென்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இன்னும் சில மொழிகள் வழங்குகின்ற தென்னாடு என்று அறியவேண்டும். இந் நாடுகளை ஆரியர், திராவிட நாடு என்று சொல்லுகிறார்கள்.
இங்கு பிராமணர்களைத் தவிர்த்து 1துவிஜாதிகள் இல்லாதிருப்பதே இந்த நன்மைக்குக் காரணம். வடநாட்டில் மூன்று வருணத்தாரும் சேர்ந்து, சூத்திரர் என்கின்ற நான்காவது வருணத்தினரை எக்காலத்தும் துன்புறுத்தி வருவதால், அவர்கள் இதுகாறும் எத்துறையிலும் முன் னேற்றம் அடைய முடியாது வருந்துகின்றனர். நான்காவது வருணத்தினர்க்கு இக்காலத்தில் ஏதேனும் நன்மை ஏற்பட்டிருக்குமானால், அது ஆங்கில அரசரின் கருணை யால் என்றறியவேண்டும். தென்னாட்டில் சூத்திரர்களுக் குண்டான அபிவிருத்தி போல், வடநாட்டுச் சூத்திரர் களுக்கு நூற்றிலொரு பங்காவது உண்டாக வில்லை. இந்த ஆங்கில அரசாட்சியிலும் கூட இதற்குக் காரணம் அங்கு நான்கு ஜாதி முறையாக உள்ளதனாலேயே.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101208/news10.html