திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-45

ஆகையால், ஓ பண்டிதரே! இடையூறை விளைவித்து நஷ்டப்படுத்த வேண்டாம்! 1சுவாஹா.

இது ஒரு வேடிக்கைக் கதையாயினும் ஆகுக. வேதங் களின் கருத்து இப்படியேயாம். இவ்விதமாக உடல் வருத்த மின்றி வயிற்றை நிரப்பிவரும் ஒரு சிலர் வேதங்களும் புராணங்களும் எல்லாம் தங்களுடையனவென்றும், தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குத்தான் சொர்க்கவாசலைத் திறந்துவிடுவோம்; மற்றவர்களை நரகத்திற்கு அனுப்புவோம் என்றிவ்வாறு சொல்லுகிறார்கள். நமக்கு அவர்களின் சொர்க்கமும் வேண்டாம். நரகமும் வேண்டாம். புராணங்களும், வேதங்களும் உணர்த்துகிற விஷயம் இதை ஊன்றிப்படித்தால் அறிந்து கொள்வீர்கள். ஆதலால், அவைகளும் நமக்கு வேண்டாம். அவர்கள் பூமி தேவர்களாகவே வாழ்ந்துகொள்ளட்டும். ஆனால், நாமும் ஏனைய (பிற நாட்டிலுள்ள) மனிதர்களைப் போலாவது வாழ வேண்டாமா? அதற்காக முன்னேற்ற வழியில் முயற்சிப் போமாக. இம்மைக்கு வேண்டிய கல்வி, தொழில் முதலியவை களில் அவரவர்களின் இயற்கைக் குணத்திற்கேற்றவாறு நமது சிறுவர்களைப் பழக்க வேண்டும். மோட்சத்துக்கு உலகப் பற்றையொழித்தவன்தான் அதிகாரி. அதற்குத் தத்துவசாஸ்திர ஆராய்ச்சியும், நல்லோர்களின் கூட்டுறவும் வேண்டும். அதற்கு வேண்டிய நூற்கள் பல நம் மூதாதை யர்கள் இயற்றியிருக்கின்றனர்.
ஆதலால், இந்துக்கள் என்று நம்பியிருந்த மூட நம்பிக்கையை இதுமுதல் விட்டுவிட்டு, நம்மவர்கள் ஒவ்வொருவரும் விலகி விடுபட்டு, முன்னேற்றமடையும் வழியைக் கூறியுள்ளேன். இவ்வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, இதன்படி ஒழுகி, அதனால் நற்பயனையடையுமாறு சர்வேசுவரனாகிய ஞானகுரு அருள் புரிவானாக: (இத்தோடு மலையாள பாஷையில் முன்னமே இயற்றிய அப்ரஹ் மணோத் போதனம் முற்றிற்று)
அய்ந்தாவது அத்தியாயம்

ஆகமம் வேதஸ்மிருதியோடொத்தது
முனீந்திரர் - முனித்தலைவர் - அத்திரி, விஸ்வாமித்திரர், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர், மரீசியென்னும் எழு வரையும் மொழிகின்றது. முனிவர் - ரிஷி (மந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள்; உண்டு பண்ணினவர்கள்.)

சித்தர் - மனிதர், ஜனகர், சனந்தனர், சனக்குமாரர், கபிலர், பிருகு, பஞ்சசிகர், சிவன், உருத்திரன் பவானி, பிரமன், விஷ்ணு, அக்னி, வாயு, எமன், சூரியன், சந்திரனென்னும் பதினெண்மரும் சித் தர்களென்று ததே மன்ஷ்யாஸனக என்றெழுதிச் சொல் லுஞ் சுலோகங்களின் வாயிலாக மேலைப் படலமே விளம்புகின் றது. இப்படலத்தின் திருபுண்டரதாரண அங்குலம் - அந்தணருக்கு 6, அரச ருக்கு 4, வைசியருக்கு 2, சூத்திரர் களுக்கு பெண்களுக்கும் 1 என விதிக்கப்பட்டமையாலும், இந்நூல் வருணத்திற்கும் வேறாய ஜாதியாருக்கும் அவ்வொன்று மின்றென்றமை யானும் அந்தணர் உத்தரீயம் (மேல் வேஷ்டி) அணியலாம். சூத்திரர் அஃதணிய வொண்ணாதென்றமையானும், சாலா லட்சண விதிப்படலத்தில் அந்தணர் முதலிய மூவருணத்தார் வீடுகள் இரட்டைத்தூண் நிறுவியும் மற்றையோர் வீடு ஒன்றைத் தூண் நிறுவியும் கட்ட கட்டுப்பாடாம். அந்தண ருக்கு 11 அடுக்கும், அரசருக்கு 5 அல்லது 7 அடுக்கும், வைசியர், சூத்திரர்க்கு 3 அடுக்குள்ள வீடுகளுரியன வென்றமையானும், பூகர்ஷண விதி படலத்திற் பயிரிடற் குரிய உழவு முறை - அந்தணர்க்கும், அரசருக்கும் 32, வைசியருக்கு 15, சூத்திரருக்கு 7 என்றமையானும்; ஆலயங் களிலும், கிராமங்களிலும், சிவத்துவிசரே (ஆதிசை வரென்னும் பிராமணர்) சிறந்தவர். தட்சணை பெறற்குரி யோரென்றாமையானும்; தந்தராவதார படலத்தில் ஆதி சைவ விப்பிரர்களாகிய ஆசார்ய பரம்பரையில் இவ்வாக மங்களை ஓதலும், ஓதுவித்தலும் இவ்வுலகம் செய்யத் தக்கன. மற்றவரைக் கொண்டு அவை செய்யத்தக்கனவல்ல. சூத்திரர், சவருணர் முதலியோரும், சிற்பிகளும், சித்திரம் தீட்டுவோரும் சைவாகமங்கள் படிப்பது பாவமென்றமை யானும், பூபரிக்ரஹ விதிப்படலத்தில் அவ்வாதி சைவ ஆசாரியார் முதலியோரைப் பூசித்து, அவருக்குத் தட்சணை கொடுத்திடுகவென்றும், பூகர்ஷண விதிப்படலத்தில் நிலத்தையுழுபடை கொண்டுழும்போதும் அவ்வாசாரி யாருக்குத் தக்ஷிணையாக 5 (நிஷ்கம்) வராகனெடைப் பொன்னும் மோதிர உபகாராகப் பசு, எருது முதலியனவும் ஈந்திடுகவென்றும், கர்ப்பந்யாச விதிப்படலத்தில் வஸ்திர மும், பொன்னும் மோதிர முதலிய அணிகளுமாகிய இவற் றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து உத்தமமாகப் பதினைந்து வராகனும் மத்திமமாக 10 வராகனும் அதமமாக 5 வராகனும், அவருக்குத் தட்சணையாக கொடுத்திடுக

- http://viduthalai.in/new/page-3/4351.html?sms_ss=blogger&at_xt=4d6b78cc85205ddb%2C0