ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-34

ஞானசூரியன் தொடர்-34
ஒருவேளை தான் மற்றொருவனைத் துன்புறுத்து வானாகில், தன்னை மற்றொருவன் துன்புறுத்துங்காலையில் துக்கியாதிருக்க வேண்டும். சாம்மியவாதம் சாந்தமாகவரும் துன்பங்களை அனுபவித்துச் சும்மாயிருப்பதுதான் இனிமேல் சுகம். இக்காலம் வரைக்கும் சமணபுத்த சந்நியாசிகள் தங்கள் கையில் ஏதாகிலும் ஓர் ஆயுதத்தை எடுத்துச் சத்துருவை வெற்றிபெறப் போனதாகச் சரித்திரம் கிடைப்பது மிகத்துர்லபம்.



அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளை யிட்டிருந்ததாகச் சங்கவிஜயம் என்னும் நூலில் கூறப் பட்டுள்ளது. புத்தபிக்ஷுக்கள் இருக்கும் இடங்களிலும் அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று பிருஹந் நாரதீய புராணம் கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய சூலபாணி என்னும் பார்ப்பனன் புத்த சமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும் அதைப் போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித்திருக் கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருபவ ராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணுபகவான் கல்கியென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப்போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது.

இக்காலத்தில் இந்து சமயக்கோயில்களில் பெரும் பகுதியும் புத்தாலயங்களே. இந்தக் கோயில்களில் இருந்து புத்த விக்கிரங்களை நாசம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையினாலும், மற்றும் வேற்றுமைப்படுத்தியதனாலும் இன்னும் ஸ்தூபிகளில் பிறவிடங்களிலும் புத்த விக் கிரகங்களுள் சில அழியாமலிருப்பதே இதற்குச் சான்று விசிஷ்டாத்வைத வைஷ்ணவ குருவான இராமாநுஜர் மைசூர் சமஸ்தானத்தில் சிரவணபௌகுளா என்னும் க்ஷேத்திரத்திற்கு அருகில் இருந்த எழுநூற்றிற்குமேற்பட்ட ஜைனக்கோயில்களை அழித்து, அந்தக் கோயில்களின் கற்களால் ஆற்றில் பாலம் கட்டுவித்த கதையும் சரித் திரத்தினால் விளங்கும், இராமாநுஜரும் அவரின் சீடர்களும் இத்தோடு நில்லாமல் ஜைனர்களின் சமய நூற்களில் பலவற்றைத் தங்களது சமய நூற்களாகத் திருத்திச் சுவாதீனம் பண்ணியும் இருக்கின்றனர்.

கொலை செய்யவேண்டாம் என்று வருந்திக்கேட்கும் தருணத்தில், கொடியவர்களாகிய இந்துக்களால் அடிபட்டும் கொலையுண்டும் துன்புற்றிருந்தாலும் ஒரு காலத்தும் கொல்லாமை விரதத்தினின்றும் தவறாத புத்த பிக்ஷுக்களை இவர்கள் கொன்றிருப்பதோடு நில்லாமல், இந்தக் கொலைக்கு உதவி செய்யத் தங்கள் தெய்வத்தினிடத்தும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பலருள் ஒருவரான திருஞானசம் பந்தர் தமிழில் பாடியிருக்கிற பாடல்களில் சில கீழே எடுத்துக் காட்டு கின்றோம்.. இவை, மூவர் அடங்கன் முறை என்னும் நூலின்கண் இருப்பவை களாம். அடங்கன் முறையோ நம்மவர்களால் நித்திய பாராயணம் பண்ணப்படுவதுமாம்.

வேத வேள் வியை நிந்தனை செய்துழலாத
மில்லி யமனொடு தேரரை
வாதில் வென் றழிக் கருத்திரு வுள் ளமே
ஞால நின்புக ழேமிக வேண்டுந் தென்
னால வாயிலு றையுமெம் மாதியே
வைதிகத்தின் வழியொழுகாதவக்
கைதவம் முடைக்கார மண்டேரரை
யெய்திவாது செயத்திருவுள்ளமே
மைதிகழ்தரு மாமணி கண்டனே
ஞாலநின்புகழே மிகவேண்டுந் தென்
ஆலவாயிலுறையு மெம்மாதியே
அந்தணாளர் புரிய மருமறை
சிந்தை செய்யா வருகர் திறங்களைச்
சிந்த வாது செயத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலநின்புகழே மிகவேண்டுந் தென்
ஆலவாயிலுறையு மெம்மாதியே
வேட்டு வேள்வி செயும் பொருளைவிளி
மூட்டுச் சிந்தை முருட்டமண் குண்டரை
யோட்டி வாது செயத்திரு வுள்ளமே
காட்டிலானை யுரித்தவெங்கள்வனே
ஞாலநின் புகழே மிக வேண்டுந்தென்
ஆலவாயிலுறையு மெம்மாதியே

இவை போன்ற செய்யுட்கள் பலவுள. இவையனைத்தும் சுடலைப் பொடி பூசுகிற தங்கள் தெய்வத்தினிடம் புத்த சமயிகளைக் கொலை செய்யப் போதிய வன்மையைத் தங்களுக்குத் தந்தருளும்படி பிரார்த்திப்பனவேயாம்.

முற்கூறிய அரசர்களையும், சமயத் தலைவர்களான பார்ப்பனர்களையும்போல, இதே ஞானசம்பந்தரும், கன்னட நாட்டினனாகிய ரிஷபதேவன் முதலிய பலரும் பவுத்தர் களையும், ஜைனர்களையும், கழுவேற்றியும் உலக்கையால் அடித்தும் மற்றும் பல சித்திரவதைகளாலும் கொன்றிருக் கின்றனர். இத்தகைய கொலைகாரப் பாவிகளாகிய இவர்களைத் துலுக்கர் கொன்றதிலும், இவர்களின் பெண்களைச் சிறையெடுத்ததிலும் என்ன அதிசய மிருக்கிறது? இன்னும் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்த பிறகுதான் அந்தப் பாவம் இவர்களை விட்டொழியுமோ? ஆனால், கொல்லா விரதத்தைக் கடைபிடித்தொழுகிய பவுத்தர்கள் இவர்களுக்குச் செய்த தீமைகளைக் குறித்தும் சிறிது ஆராய்வோம்.

- http://viduthalai.in/new/page-3/2870.html?sms_ss=blogger&at_xt=4d4edc06706610bc%2C0