திங்கள், 14 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-38

இவர்களின் சமயத்திலுள்ள சில பரிபாஷைச் சொற் களின் பொருள் வருமாறு:

தீர்த்தம் என்றால், சக்தி பூசைக்குரிய மாமிசம்; இதற்கே சக்தி என்றும், புஷ்பமென்றும் சொல்லுவார்கள். தருதீயைச் சதுர்த்தி மாம்ஸம், மீன் சரவணயோனி முத்திரை, பஞ்சமி மைதுனம், ஜலதும்பிகை இவைகள் மீனைக் குறிக்கும் சொற்கள். தங்களின் தீய ஒழுக்கங்களைப் பிறர் அறிந்து நகைப்பார்களே என்றுதான் இங்ஙனம் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்தச் சமயத்திற்குக் கவுலன், சாம்பவன், ஆர்த்திர வீரன், கணேசன் இவ்வகையான பரிபாஷைப் பெயர்களும் உண்டு. பிறருக்குக் 1கண்டகன், விமுகன், சுஷ்கபசு இவை முதலிய இழிவான சில பரிபாஷைப் பெயர்களும் இவர்கள் வைத்திருக்கிறார்கள். 2பைரவி சக்கிரபூஜை பண்ணும் தருணத்தில் கட்குடத்தை வைத்துப் பூசித்து, ஓ கள்ளே! நீ பிரம்மனது சாபத்தினின்னும் விடுபட்டிருக்கின்றனையெனப் பிரார்த்தித்துப் பிறகு அங்குக் கூடியிருக்கிற ஆண், பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுள் ஓர் ஆண் மகனையும் ஒரு பெண்மணியையும் நிர்வாணமாக உட்கார வைத்துப் பெண்களெல்லாம் ஆண்மகனுடைய மர்மஸ்தானத்தையும் இலக்காக்கிப் பூசை செய்கிறார்கள். பூசை முடித்தும் மிச்சமான சாராயத்தை இவர்களுக்குத் தலைவனான ஆசாரியன் கையிலெடுத்துப் பைரவோஹம் (நானே பைரவன்) என்று குடித்துவிடுகிறான். பிறகு அதே எச்சில் பாத்திரத்தில் சாராயத்தைப் பகிர்ந்து எல்லோரும் குடிக்கிறார்கள். பழையபடி இருவரையும் நிர்வாணமாக இருக்கச் செய்து யோனி பூசை நடத்து கிறார்கள். இத்தருணத்தில் பெண்ணின் கையில் ஒரு வாளும் புருஷன் கையில் ஒரு சூலமும் கொடுப்பார்கள். இவ்விருவர்களையும் கள்ளையும், இறைச்சியையும் தின்னச் செய்து, பிறகு எல்லோரும் கள்ளையும் இறைச்சியையும் உட்கொள்ளுகிறார்கள். பிறகு பெண்களின் சில ரவிக்கை அல்லது அடையாளத் துணிகளை அவிழ்த்தெடுத்து ஒன்றாகக் கலந்து ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று எடுத்துக் கொள்ளுகிறார்கள். எந்தப் பெண்ணின் உடை எந்த ஆணின் கைக்கு வந்ததோ அன்று அந்தப் பெண் அவனுக்குச் சொந்தம். ஆயினும், தாய்க்கு மட்டும் விலக்கு ஏற்பட்டிருக்கிறது. சகோதரி முதலிய யாராயிருப்பினும் குற்றமில்லை. இச் செயலைப் பெரும் புண்ணியமாகவும் இவர்கள் நினைக்கி றார்கள்.

இந்தத் தந்திர(ஆகம) சாஸ்திரத்தின் உற்பத்தியைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியதன்றோ? புத்த சமயத்தை நாசம் பண்ணக் கங்கணங் கட்டிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. உயிர்கள் பொதுவாக அருந்தல், பொருந்தல் என்கிற இரு விஷயங்களில் பிரியமுள்ளவைகள். இவ்விரண்டும் இச் சமயத்தில் எல்லோருக்கும் எக்காலத்தும் எளிதாகக் கிடைக்கும். புத்த சமயத்தில் இவ்வகை விஷயங்களில் கண்மூடித்தனமாக நடந்துகொள்ள இடங் கொடுக்கவில்லை. மனத்தைத் தூயதாக்கும் பொருட்டு உணவில் பாகுபாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, இல்லறத்தார் பிறர் மனைவியை மனத்தில் கூட விரும்பலாகாதென்றும், அவளைப் பார்க்கும் போது, வயதில் மூத்தவளைத் தாய் போலவும், இளைய வளைத் தங்கை அல்லது மகளைப் போலவும் நினைக்க வேண்டுமென்றும், இதற்காகவே சதாபவித்ரோகம் (நான் எப்போதும் தூயவனாகவே இருப்பேன்) என்று எண்ணிக் கொண்டு அதன்படி ஒழுகி வரவேண்டும் எனறும் சொல்லப் பட்டிருக்கிறது. துறவிகள் எப்போதும் பெண் களைப் பார்த்தல் தொடுதல் இவைகளினின்றும் விலகி, ஆத்ம பாவனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. புத்த சமயத்தில் பிறப்பினால் ஜாதிவேற்றுமை இல்லாவிடினும், ஒவ்வொருவனுடைய மனோ நிலைமைக்கேற்றவாறு உயர்வு, தாழ்வு ஏற்பட்டிருக் கிறது. இத்தாந்திரீக மதத்தில் பணக்காரன் எந்த ஜாதி யானா யிருப்பினும், அவன் தீக்ஷை பெற்றுக்கொண்டு பூசைக் காலத்தில் ஒன்றாக இருக்கலாம். பூசைக்காலத்தில் எல்லோரும் துவிஜாதிகள்தான் (இரு பிறப்பாளர்). மற்ற காலங்களில் தத்தம் ஜாதி 3முறைப்படியே ஒழுக வேண்டும். இதற்குப் பிரமாணம்:-

ப்ரவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே
வர்ணா த்விஜாதய;
நிவ்ருத்தே பைரவீசக்ரே ஸர்வே
வர்ணா ப்ருதக்ப்ருதக்

பொருள்: பைரவீசக்கிர பூசையின் போது எல்லோரும் துவிஜாதி (பிராமணர்)களே பூசை முடிந்ததும் அந்தந்த வருணத்தான் தனித் தனியாகவே இருக்கவேண்டும்.

இவ்விரண்டு சமயங்களில் அறிவில்லா மாந்தர்களின் கருத்திற்கு இணங்கியது எது? புத்த சமயமா? நாகரிக சமயமா? உள்ளத்தையும், உடலையும் வாட்டியதன் பயனாக அடையும் முக்தியைக் காட்டிலும் ஒருவகை வருத்தமின்றி இம்மையிலும் சுகம், மறுமையிலும் கைலாசம் தங்களுக்கே சொந்தம்! ஆதலால், பகுத்தறிவில்லா மனிதர்களுக்குப் பார்ப்பனத் தந்திரமாகிய தந்திர சமயமே சிறந்தது. ஆனால், இதற்குப் பொருள் செலவழியும். இதை முன்னதாகவே தெரிந்துகொண்ட பார்ப்பனர்கள், பணக்காரன் தீக்ஷை பெற்றுக்கொள்ள அதிகாரியென்றும் பிரமாணம் எழுதி வைத்தார்கள். சக்கரவர்த்தியின் பிள்ளையாகப் பிறந்து, அரச போகத்தை அருவருத்துத் தள்ளி, முற்றுந் துறந்து முனிக்கோலம் பூண்ட பகவான் புத்தன், தனக்கொப்பான வர்கள் முக்தியடையத் தகுதி எனக் கூறினார். நிற்க. பார்ப்பனர்களில் புத்தமதத்தைக் கெடுக்க எண்ணி, அம்மதத்தைச் சார்ந்த துறவிகளைப் போல் வேடம் போட்டுக் கொண்டு சமயத்தைக் கெடுத்ததோடு, இத்தகைய கயவர்களை ஜீவகாருண்யத்தினால் தங்கள் குலத்துள் சேர்த்துக் கல்வி கற்பித்த புத்தமதக் குருமார்களையும் கழுவிலேற்றிக் கொன்றார்கள். இத்தோடு, தாங்கள் உணர்ந்துகொண்ட தத்துவக் கருத்துகளை அனாதியென் றும், உபநிஷத்தென்றும் எழுதி வைத்தார்கள். இதை வைத்துக்கொண்டுதான் பார்ப்பன மக்கள், தங்கள் மதத்திற்குச் சமமான மதம் வேறெதுவுமில்லையென்று சொல்லி, இக் காலத்தும் நம்மவர்களை ஏமாற்றுகின்றார்கள்.

- http://viduthalai.in/new/home/archive/3360.html?sms_ss=blogger&at_xt=4d5943727c6a65e0%2C0