வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-33

பொருள்: தண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மையைப் பயக்குவனவாகும். எங்களால் வெறுக்கப்படுகிற (பவுத்தர் முதலிய) மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆக வேண்டும். (தனது வார்த்தையாகிய) வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காதவர்களுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும்.

யஜுர் வேதத்தில் பவுத்தர்களைக் கொல்லுவதற்குரிய மந்திரங்களும், சடங்குகளும் பல காணப்படுகின்றன. உதாரணமாக ப்ரத்யுஷ்டம் ரக்ஷ: ப்ரத்யுஷ்டர் அராதய இவை முதலிய மந்திரங்களைக் கவனியுங்கள். தாங்கள் கோயிலில் மணியடிப்பதுங்கூட இராட்சதர்களைப் பயமுறுத்தும் பொருட்டாம். பல யாகச் சடங்குகளை நிறைவேற்றும்போது, சொல்லப்படுகின்ற மந்திரங்களின் பொருள், யாகத்திற்கு இடையூறு செய்கிற 1இராட்சதர்கள் நாசமடையட்டும் என்பதே.

கொல்லாமை என்னும் மகாவிரதத்தைக் கடைபிடித் தொழுகுகின்ற பவுத்தர்கள் தாம் முற்காலத்தில் யாகங்களுக்கு இடையூறு செய்திருந்தனர். அது யாகம் செய்கிற இடத்திற்குச் சென்று கொலையின் கொடுமையையும், அதனால் நேரும் பாதகங்களையும் விளங்கக்கூறி உபதேசித்ததே ஒழிய, ஒருபோதும் இவர்களை எதிர்த்துப் போர் புரிந்ததாகவே தெரியவில்லை.

புளுகுக்களஞ்சியமாகிய இராமாயணத்தில், யாகத்துக் கிடையூறு செய்த இராட்சதனாகிய மாரீசன், இரத்தத்தைச் சிந்தி யாக பூமியைக் கெடுத்தானென்றும், இரத்தத்தையே குடிப்பதும், பச்சை இறைச்சியைத் தின்பதும் இராட்சதர்களின் இயற்கையென்றும் சொல்லியிருப்பதிலுள்ள உண்மையை நீங்களே ஆராய்ந்தறிந்து கொள்ளுங்கள்.

ஆனால், இப்போது இக்கதைகளால் புத்தரைச் சாடுகிறார்கள் சிலர். இவைகள் நடந்தது எவ்வாறெனின், வேதத்தில் சைவ மதத்தை ராட்சதா மதம் என்று கூறியுள்ளார். அதற்குத் தலைவன் சிவன், சிவன் யாகத்தை மறுத்ததுண்டு. இந்த இராமாயணக்கதை பண்டையகாலத்தில் சைவரைக் கட்டாயமாகச்
சாரும் என்பர். ஆராய்ச்சி முறையால் இதன் உண்மையை அறிந்து கொள்ளுக.

ரிக் சம்ஹிதையில் 2வதீர்ஹி தஸ்யும் தனினம் கனேன் இந்திர, தாங்கள் ஒருவராகவே வச்சிராயுதத்தினால் தஸ்யுக் கூட்டத்தை (பார்ப்பனரல்லாதாரை)க் கொன்று எங்கள் துன்பத்தை யொழித்தீரே என்று இவை முதலிய வாக்கியங்களால் இந்திரனைப் புகழ்ந்து கூறியிருப்ப திலிருந்தே. அக்காலத்திய கொலைகார ஆரியர்கள நம்மவர்களுக்குச் செய்த கொடுந்தீங்குகள் நன்கு புலனாகின்றன.

இவர்கள் பல தடவைகளிலும் அளவிறந்த புத்தமதத் துறவிகளை வெட்டிக் கொன்றிருப்பது கீழ்க்காணும் குறிப்புகளால் வெளிப்படையாகும். புரோஃபசர் லக்ஷ்மிநரசு வெகு நாள்களாக உழைத்து எழுதிய மதச்சரித்திரத்தில் இந்துக்களால் புத்த பிக்ஷுக்கள் கொல்லப்பட்ட விவரத்தை இங்ஙனம் கூறியிருக்கிறார்.

அநேக யாகங்களைச் செய்தவனும் தேவபக்தனுமான புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான 3ஆராமங்களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர்களாகிய லட்சக்கணக்கான புத்த பிக்ஷுக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.

பின் ஒரு நூற் றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசா னான விக்கிரமாதித் தன் என்பானும், மற் றொரு அரசனான கனிஷ்கன் என்பா னும் மேற்கூறியவாறே பிக்ஷுக்களைச் கொல் வது, அவர்களின் பர் ணசாலைகளை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்கா ளத்திற்குஅரசனாயிருந்த சசாங்கன் கி.பி. ஏழாம் நூற் றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த 4விக்கிரங்களையும் துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் 5பரிநிர்வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.

காஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன் 6ஸ்ரீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிக்ஷுக்களையும், அவர்களின் கோவில்களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான 7குமாரிலபட்டன் என்னும் பார்ப்பனனொரு வனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிட்க்ஷுக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடுமாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. சுதன்வாவென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், தன்னை ஒருவன் துன்புறுத்தக்கூடாதென்ற எண்ணம் கொண்டவன், அவன் மற்றொருவனைத் துன்புறுத்தலாகாது.

1. புத்தர்கள் என்க.

2. (தனிமை) பணக்காரன் எனப் பொருள். இதனால் அக்காலத்தில் நம்மவர்களுக்குள் செல்வம் படைத்திருந்த பலரையும், அரசர்களையும் இந்தப் பார்ப்பனர்கள் வஞ்சித்துக் கொன்றிருப்பது வெளிப்படுகிறது. இதைப்போன்ற கதைகளும் வேதத்திற் காணலாம்.

3. புத்தபிக்ஷுக்களின் மடம். இது அழகிய வனங்களின் நடுவில் இருப்பதால், ஆராமம் என்ற பெயருடன் விளங்கியது.

4. புத்த விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணிய திருக்கோயில்.

5. முக்தி

6. ஸ்ரீஅர்ஷன் என்னும் பெயர் புத்தமத அரசனொருவன் இருந்தான். இரத்தினாவளி, நாகானந்தம், பிரியதர்சிகா முதலான பல நாடக நூற்களையும், சுப்ரபாத ஸ்தோத்திரம், அஷ்டமஹா ஸ்ரீசைதய சமஸ்க்ரி, தஸதோத்திரம், ஜாதகமாலா முதலிய புத்தசமய நூற்களையும் இவன் இயற்றியிருக்கிறான். என்றாலும், ஸ்ரீஅர்ஷன் என்னும் பெயருள்ள பலர் இருந்ததாகத் தெரிகிறது.

7. இவன் புத்த சமயத்தில் பிக்ஷுவாய்ப் பலகாலம் இருந்து, பிறகு திரும்பிப் பார்ப்பனனாய் மாறி அவர்களைக் கொன்றவன். இவன் கதை சரித்திரப்பிரசித்தம். ஆதலால்தான், அந்தக்கடவுள், துலுக்கனை உண்டு பண்ணி இந்துக் கோயில்களையும், இந்து மதத்தவரையும் வேட்டையாடுவதே தொழிலாக வேண்டிய மதத்தையும் உண்டுபண்ணி இந்நாட்டுக்கு விட்டது. இனி என்ன செய்வோம்.?

-http://viduthalai.in/new/page-3/2744.html?sms_ss=blogger&at_xt=4d4c28649871fc1a%2C0