வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-37

இவர்கள் விஷ்ணுவின்பால் அன்பு வைத்து வைகுண் டத்தை அடைந்தவர்களாம். இப்பிரபந்தத்தை வைஷ்ணவப் பார்ப்பனர்கள் தங்கள் இனத்தவருக்கொழிய வேறு யாருக்கும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். பிரிட்டிஷ் அரசாட்சியின் உதவியால் யாரேனும் கற்றுக்கொண்ட போதிலும், கோயில்களில் பாடினால் இவர்கள் ஒருங்கு சேர்ந்து அவனது. உடலை அவனுக்கு உதவாமல் பண்ணி விடுவார்கள் என்பது திண்ணம். இந்த அய்யங்கார்களின் நித்தியத் தொழில்களில் மற்றொன்று திருநீறு அணிந்து சிவனை வழிபடுகிற சைவர்களையும், சிவாலயங்களையும் நிந்தித்தலே யாகும். சிவன் கோயில் சுடுகாடு என்றும், சிவனை வழிபடுகிறவர்கள் 1பறையர்கள் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்2.

முதன் முதலில் வேதமும் அதைப்போலவே பிரபலமான தந்திர (ஆகம) சாஸ்திரமும் அவசியம் வாசிக்க வேண்டும். வாமமார்க்கம் என்ற ஒரு பகுதி தந்திர சாஸ்திரங்களிலுள் ளது. தசமஹா வித்தைகள் இதற்குள் அடங்கும்.

அவைகள் இங்கு விரித்துக்கூற வேண்டிய அவசியமில்லாமையால், சுருக்கமாகக் கூறி முடிக்கின்றோம். இம்முறை முதலில் இமய மலைச்சாரலில் இருந்த பார்ப்பனர்களால் அனுஷ்டிக்கப்பட்டு நமது நாட்டின் பற்பல பாகங்களிலும் பரவிற்று , தில்லை மூவாயிரம் என்ற சொல்லில் அடங்கியுள்ள மூவாயிரம் பார்ப்பனர்களில் ஒருவர் 3அகோர சந்நியாசியாகிய சிவனேயாம். திருச்செந்தூரிலும், பத்ரீநாராயணம் முதலியவிடங்களி லும் முறையே இரண்டாயிரம் பிராமணர்கள் வீதம் போய் இம்முறையைப் பரவச் செய்தனர். இவ்விதமாகப் பன்னி ரண்டு இடங்களைத் தங்களுக்கென அமைத்துப் பிரச்சாரம் செய்ததால், இந்நாட்டில் இம்மதத்தைத் தழுவுகிற மனிதர்கள் பெருகலானார்கள். பிறகு இம்முறையிலும் பல பிரிவுகள் தோன்றலாயின. 4இவைகளை விளக்குகின்ற பிரமாணங் களில் சில கூறுகின்றோம்.

மத்யம் மாம்ஸம் சமீனம்
சமுத்ரா மைதுனமேவச:
ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர்மோக்ஷதா
ஹியுகே யுகே (கானிகாதந்திரம்)
பொருள்: கள்ளு, இறைச்சி, மீன், முத்திரை, (பிரவிடை ஸ்திரீயின் யோனி) மைதுனம் இவ்வைந்திற்கும் பஞ்ச மகாரங்கள் என்று (பரிபாஷை) பெயர். இவைகள் ஒவ்வொன்றும் மோக்ஷத்திற்குச் சாதனங்களாம்.

பீத்வா பீத்வா புன: பீத்வா
யாவதபததி பூதலே
உத்தாயச புன; பீத்வா
புனர்ஜன்ம நவித் யதே (மஹா நிர்வாண தந்திரம்)
பொருள்: கள்ளைக் குடித்துக் குடித்து மெய்மறந்து தரையில் விழுமளவும் குடிக்க வேண்டும். தெளிந்தபின் எழுந்து குடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இவனுக்கு மறுபடி பிறவியில்லை.

மாத்ரு யோனிம் பரித்யஜ்ய
விஹரெத்ஸர்வ யோனிஷு
வேத சாஸ்த்ர புராணானி
ஸாமான்ய கனிகா இவ:
ஏகைவ சாம்பவீ முத்ரா
குப்தா குலவதூரிவ:

பொருள்: பெற்ற தாய் ஒருத்தியொழிய, மற்ற ஸ்திரீகளையெல்லாம் புணரலாம். வேதங்கள், சாஸ்திரங் கள், புராணங்கள் இவைகளை விலைமகளைப் போலவும் இந்தச் சாம்பவீ முத்திரை (இப்போது சொன்ன அனுஷ்டான முறை) யொன்று மாத்திரம் குலமகளைப் போலவும் கருதவேண்டும்.

ரஜஸ்வலா புஷ்கரம் தீர்த்தம்
சாண்டலீ துஸ்வயம் காசி
சர்மகாரீ ப்ரயாகாஸ்யாத்
ரஜதீ மதுராமதா
அயோத்யா புக்கஸீ
ப்ரோக்தா (ருத்ரயாமன தந்திரம்)

பொருள்: தீட்டுக்காரியைப் புணர்தல் (ருதுஸ்திரீ); புஷ்கர தீத்தம் ஸ்நானம்; சண்டாள (புலைச்சி) ஸ்தீரியின் சேர்க்கை காசி யாத்திரையும் கங்கா ஸ்நானமும்; சக்கிலிச்சி யின் சம்போகமே பிரயாகை ஸ்நானம்; வணணாத்தியின் சேர்க்கை, மதுரைக் குறத்தியைப் புணர்தல் அயோத்தியைத் தரிசித்த புண்ணியமாம்.

இவைகளுக்கு வேறாக அயோத்தி, மதுரை, மாயை, காசி முதலிய புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதாகச் சொல்வது பகுத்தறிவில்லாத 5பசுக்களின் கூற்றாகையால், நம்பத்தக்க தன்று என்பது இவர்களின் கொள்கை.

1. அப்படியே சமணர் முன்னர் கூறியுள்ளார். ஆனால், அக்காலத்தில் அதற்குக்தக்க காரணம் உண்டு. அச்சமண மதத்திலிருந்து தோன்றியது வைஷ்ணவ மதம். இதில் சேர்ந்துள்ளவர் பல ஜாதியினர். நீ பறையன் என்று சொல்ல யோக்கியதை இல்லை. காரணம், உன் கடவுளாகிய விஷ்ணு தங்கையைப் பறையனுக்குக் கொடுத்தார் என்ற கெட்ட பேர் வந்து உன் கடவுளின் தலையிலேறிக் கூத்தாடுமல்லவா?

2. இத்தோடு நிற்காமல் விபூதி அணிந்த ஸ்மார்த்தன் வைணவன் வீட்டில் வந்த உடனே சாணித் தண்ணீரைத் தெளிப்பார்கள். காரணம், தன் வீட்டிற்குப் பறையன் வந்துவிட்ட அந்தத் தீட்டுப் போக.

3. அகோர சந்நியாசிகள் பிணம், மற்றுமுள்ள எல்லா மாமிசமும் புசிப்பர். தலையோட்டில்தான் போஜனம். மற்றெல்லாத் தொழில் முறையாகவே இருக்கும். தாந்திரீகப் புத்தகங்களைப் பார்வையிடுக. உண்மை விளங்கும்.

4. கோர்ணவதந்திரம் முதல் பாகம் பார்க்க - தாந்திரீக ஆசாரம் 7 பிரிவாக வகுக்கப்பட்டுள்ளது.

5. பசுக்கள்- தீக்ஷையில்லாத மனிதர்கள் (இவர்களுடைய சங்கத்தில் சேராதவர்கள்) இவ்விஷயம் தெரிந்தவர்கள் - தந்திர சாஸ்திரத்தை அனுஷ்டித்துவரும் குருக்கள், எத்தகைய தீய ஒழுக்கம் செய்தாலும் கெட்டதென்று சொல்வார்களா? அவர்களுடைய மதத்தில் இச்செயல்கள் நல்லதென்று சொல்லியிருக்கிறார்கள். பிறர்க்கு இச்செய்கை கெட்டதென்று தென்பட்டால், அம்மதத்தை விட்டு விலகுவதல்லாமல் இச்செய்கைகளைக் கெட்டதென்று சொல்லிக் கண்டிக்காதே. கண்டிக்கப்பட்டவன் மற்றொரு மதத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டும். அதில் ஆபாசக் குற்றங்கள் ஒன்றும் இல்லாததாயிருக்க வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/3231.html?sms_ss=blogger&at_xt=4d55464be2d5759c%2C0