வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் - தொடர்-32

1மஹோததி என்ற பெயரையுடைய இச்சுவடி முழுவதும் இத்தகைய ஆபாச வாக்கியங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அமாவாசையன்று நடுநிசியில் வடயக்ஷிணி மந்திரம் செபிக்கிறவனால் அடையப்படுகிற சித்திகள் பின்வருமாறு:
ஸ்ருணோதி நூபுராராவம்
வந்த்ரீ கீவத்வலிம் தத்;
ஸ்ருத்வைவ ப்ரஜமேன் மந்த்ரம்
வீதத்ராஸ ஸ்சதாம் ஸ்மரேத்
தத: ப்ரத்யக்ஷதோ
தேவீ மீக்ஷதேஸுரசார்த்தினீம்;
தத: காமபூரணாத்ஸா
ததாதீஷ்டானி மந்த்ரிணே,

பொருள்: மந்திரம் செபிக்கிறவனது காதில் முதலில் சிலம்பொலியும், பிறகு சங்கீதமும் கேட்கும் இவைகளைக் கேட்டுக் கொண்டே பயமில்லாமல் மந்திரத்தைச் செபிக்க வேண்டும். உடனே தேவியானவள் இவனைப் புணர்ச்சி செய்ய விருப்பமுள்ளவளாய் நெருங்கி வருவாள். அவளது கோரிக்கை நிறைவேறினதும் இவனுடைய விருப்பங்களையும் நிறைவேறச் செய்வாள்.

உலக போகத்தையும், சத்துரு சம்ஹாரத்தையும் விரும்பிச் செய்கின்ற இத்தகைய மந்திரங்கள் பலவுள. மிக இரகசிய மென்று சொல்லியிருக்கிற மற்றொரு பூஜா விதியையும் கவனியுங்கள்.
கோபனீய; ப்ரயோகோத
ப்ரோச்யதே ஸர்வஸித்தித
1 மஹோததி என்பது: தந்திர நூற்களில் ஒன்று. இதற்கு மந்திர மஹோததி என்று பெயர். முன்காலத்திய சைவம், இவைகளை உலகியோர் பொறுக்க முடியாததனால் இரண்டு பெரு மதங்கள் வேலை செய்ததனால் சிறிது குறைந்தது. (அவை சமணமும், புத்தமும்)
பூதாஹே க்ருஷ்ணபக்ஷஸ்ய
மத்யராத்ரே தமோகனே
ஸ்நாத்வா ரக்தாம்பரதரோ
ரக்தமால்யானுலேபன:
ஆனீய பூஜயேந்நாரீம்
சுன்னமஸ்தாஸ்வ ரூபிணீம்;
ஸுந்தரீம் யௌவனாக்ராந்தம்
நரபஞ்சக காமினீம்:
ஸ்மிதாம் முக்தகபரீம்
பூஷாதானப்ர தோஷிணீம்,
விவஸ்த்ராம் பூஜியித்வைனாயுதம்
ப்ரஜபேன்மலும்: கச்சேத்தாம் ப்ரஜபேன்மலும்
அனேனவிதினா லக்ஷ்மீம் புத்ரான்
பௌத்ரானயச: ஸீகம்:
நாரீமாயுஸ்சிரம் தர்மமிஷ்டமன்யதவாப்னுயாத்
கிம்பஹுக்தேன வித்யாயா
அஸயாவிஜ்ஞான மாத்ரத:
சாஸ்த்ரஜ்ஞானம் பாபநாச:
ஸர்வஸௌக்கியம் பலேத்ருவம்
உஷஸ்யுத்தாய சய்யாய
முபவிஷ்டோ ஜபேச்சதம்:
ஷண்மாஸாப்யந்தரே மந்த்ரீ
கவித்வேன ஜயேத் கவிம்

பொருள்: மிகப் பிரயத்தனத்துடன் மறைத்து வைக்கத் தக்கதும், எல்லாச் சித்திகளையும் தரவல்லதுமான பிரயோகத்தைக் கேளுங்கள். கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியன்று நடு இரவில் ஆகாயம் மேகத்தினால் மறைந்து மிக இருட்டா யிருக்கும்போது நீராடி, சிவப்புச் சந்தனம், சிவந்த மாலை, சிவந்த உடை இவைகளை அணிந்து, ஒரு தனி இடத்தில் இருந்துகொண்டு, இளமையும் அழகும் நிறைந்தவளும், அய்ந்து மனிதர்களைப் புணர்ச்சி செய்யத்தக்க ஆற்றலைப் படைத்தவளும், அவிழ்த்துவிட்ட கூந்தலையும் புன்சிரிப்போடு கூடிய முகத்தையுமுடைய அவளுக்கு ஆடைகளும் அணிகளும் கொடுத்து மகிழ்ச்சியுண்டாக்கிப் பிறகு, அவளுடைய உடைகளைக் களைந்து நிர்வாணமாகப் பூசிக்க வேண்டும். பிறகு அவளைப் புணர்ந்துகொண்டே பத்தாயிரம் உரு மந்திரம் செபிக்கவேண்டும். இவ்விதம் செய்து வருகிற மஹானுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்மனைவி முதலிய விரும்பிய பொருள் அனைத்தும் கைகூடும். சாஸ்திரங்களை உணரும் ஆற்றலும் உண்டாகும். பாவம் இவனை அணுகாது. நாள்தோறும் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால், ஆறு மாதங்களுக்குள் சுக்கிராச்சாரியாரை விடச் சிறந்த கவியாவான்.

வாயினாற் சொல்லவும், காதினால் கேட்கவும் தகாத அத்தகைய சொற்குவியல்களே இந்துக்களின் 1சமயநூற்கள். நிற்க கவுடில்யனுடைய அர்த்த சாஸ்திரங்களைப் பார்த்தால், முற்காலத்திய ஒழுக்கங்கள் நன்கு புலப்படும். அக்காலத்தில் பகைவரை வெல்லுவதற்கு ஆயுதங்களைவிட 2அபிசார முறையையே அதிகமாகக் கையாண்டு வந்தார்கள். இந்துக்களின் ஆட்சி முறைகளை முன்னமே கூறியுள்ளோம். இவர்களின் ஆட்சியில் நம்மவர்களின் நிலையை ஆராய்ந்து பார்க்கிற யார்தான் பிரிட்டிஷ் ஆட்சியை நிந்திப்பார்கள்? மேற்கூறிய இழிவான மந்திரங்களையும் பூஜைகளையும் அனுஷ்டிக்கிற இந்துக்களின் காதில் பவுத்தன் என்ற சொல் விழுந்ததும் நிலவேம்புக் கஷாயம் குடித்தவன் முகத்தைச் சுளிப்பது போல் சுளிக்கிறார் களே இது ஏன்? காமம், வெகுளி, மயக்கம் இவைகளை ஒழித்தலும், கொல்லாமை என்கிற விரதமும் மோட்சத்திற்கு உரிய சாதனங்கள் என்று உபதேசித்த புத்தபகவானுடைய உபதேச அமுதமும், பஞ்சமா பாதகங் களையே விரதமாகக் கொண்டு ஒழுகுகிற இந்தக் கயவர்களுக்குக் கைப்பாகத் தோன்றுவது இயற்கையே.

பார்ப்பனர்கள் நாள்தோறும் செபித்து வருகிற மந்திரங்களில் ஒன்று கீழ்க் கூறப்படுகின்றது.

3ஸுமித்ரிய ந ஆப ஒஷதய: ஸந்து துர்மித்ரியா ஸ்தஸ்மை ஸந்து யோஸ்மான் த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம (யஜுர் வேதம்)

1. சமயங்களுக்கு முதனூலாகிய ஆகமம், தந்திர நூற்களாம். இவைகளையே மந்திர சாஸ்திரமென்பர்.

2. அபிசாரமென்பது மாரணப் பிரயோகமென்க.

3. இந்த மந்திரத்திற்குத் தயானந்தர் அர்த்தம் புரிந்ததைக் கவனியுங்கள். ஆரியாபி வினயம் என்ற நூலைக் கவனியுங்கள். இதில் 100 வேதப்பாட்டுகள் உள்ளதில அநேகப் பாட்டுகள் எங்களுக்கு விரோதமானவர்கள் நாசமடையட்டும் என்ற அர்த்தத்துக்கொப்பாக இருக்கும்.

- http://viduthalai.in/new/archive/2614.html?sms_ss=blogger&at_xt=4d4c2811b6522d22%2C0