புதன், 23 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-43

வடமொழியின் ஆபாசம்

வடமொழியானது புலவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு பொருள்களைக் கற்பிக்க இடமுள்ளதாயிருக்கிறது. உபநிஷத்துகளை எழுதியவர்கள் கனவில்கூட நினைத்திராப் பொருள்களைச் சங்கராச்சாரியார் எழுதி, அவைகளைத் தம் மதமாக்கி, வேதத்தின் முடிவில் உள்ளவைகள் என்று உறுதிப்படுத்தினார்.

இதைப் போலவே காவியங்களிலும் மாறுபட்ட உரைகளைப் பார்க்கலாம். ஸ்புடபின்னார்த்த முதாஹாத்தச (மாகம்) என்று தொடங்கிய சுலோகங்களில் நிந்தையும், ஸ்துதியும் இருப்பதாக வியாக்கியானங்களால் தெரிகின்றது. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற பழமொழிக்கொப்பாக ஆபாசக் களஞ்சிய மாகிய வேதத்தை அறிவாளிகள் வெறுத்துத் தள்ளுவதைப் பார்த்த பார்ப்பனர்கள், வேதம் குற்றமற்றது என்று ஸ்தாபிக்கவேண்டி, சமஸ்கிருத பாஷைக்கு எதிர்பாராத பல அர்த்தங்களையும் உண்டு பண்ணி நிகண்டுகள் எழுதி வைத்தார்கள்.

இவ்வகைக் காரணங்களால் வடமொழியானது தத்துவசாஸ்திரம் எழுதத்தக்க மொழியன்று. தத்துவ நூற்கள் பார்ப்பனரால் எழுதப்பட வில்லை. அவைகளின் உண்மைக் கருத்துகளை உணர்ந்து கையாளப்படவு மில்லை. தத்துவத்தை முதன் முதலாக மனிதர்களுக்குப் போதித்தது 1பகவான் புத்தனேயாம். பிறகு சமணர்களின் நூற்கள் குரங்கின் கையிலகப்பட்ட பூமாலையைப் போல பார்ப்பனர் களின் கையிலகப்பட்டு உபனிஷத்து ரூபமாகச் சிதைவுற்றுக் கிடக்கின்றது.

மொழிகளுக்கு முரண்பட்ட பல பொருள்களைக் கற்பித்த தால் உண்டாகும் உயர்வும், தாழ்வும் அறிய விரும்புவோர், தஸாயன சாஸ்திரத்தில் சொற்களுக்கு முரண்பட்ட பொருட்களை உணர்த்துகிற பெயர்களை வைத்துப் பார்க்கட்டும். இவ்வைந்து வார்த்தைகளுக்கும் மார்ஜனில் காணுகிறபடிக்குள்ள பொருள்கள் இருந்தால், இந்த ரஸாயன சாஸ்திரம் என்ன பயனைத்தரும்?

புத்த பகவானுடைய தத்துவ சாஸ்திரம் ரஸாயன சாஸ்திரத்தின் உருவைச் சிதைத்து, வேதத்தில் உள்ளது எங்களுக்குச் சொந்த மானது என்று பிராமணர்கள் எழுதி வைத்திருக்கின் றார்கள். இதனால் மனிதர்களுக்கு ஒருபயனும் இல்லை. வடமொழியைப் படித்தும் பேசியும் வந்த பழைய காலத்திய பார்ப்பனப் பண்டிதரின் வஞ்சகத் தன்மைக்கு ஒரு சொல்லிற்குப் பல பொருள்களைப் உணர்த்துகிற இம் மொழியே உதாரணம். முன்னுக்குப் பின் முரணாகவும் சமயத்திற் கேற்றபடி பொருள் மாற்றிக் கூறுவதும் நல்லோர்களின் செய்கையல்லவே.

ஆனால், இந்துக்களின் பழைய சொத்து இதற்கு முன் கூறிய வாக்கியங் களைப் போன்ற பல வாக்கியங்கள் அடங்கிய வேதங் களும் ஸ்மிருதிக ளுமே. வேதத்தில் ஸோம(கள்ளு)த்தைக் குறித்துப் புகழ்ந்து பாடியுள்ள பல பாடல் களும், பசு யாகத்தின் மந்திரங்களும், இவை போன்ற பல விஷயங்களும், இதில் எடுத்துக்காட்டவில்லை. பௌண்ட ரீகம் என்னும் பெயரால் ஒரு யாகமுண்டு. அது விதவை யினுடையவும் பிரம்மச்சாரி யினுடையவும் சேர்க்கையால் நிறைவேறத்தக்கது.

இத்தகைய ஆபாச வாக்கியக் களஞ்சியத்தை அறிவாளிகள் எங்ஙனம் பிரமாணமாக ஒப்புக்கொள்ள இயலும்?

உபநிஷத்துகளில் பெரும் பகுதியும் புத்த பகவானுக்குப் பிறகு உண்டு பண்ணியவைகள் என்றும், அதற்குமுன் இரண்டொன்று உண்டாயிருந்தால், அவைகள் க்ஷத்திரியர் களின் சொத்தாக இருந்தனவென்றும் முன்னரே கூறியுள்ளோம்.

அத்தியாயத்ம வித்தைக்கு இராஜ வித்தையென்றும், மற்றொரு பெயருண்டு. இதனால் இது க்ஷத்திரியர்களின் சொந்தமென்றும் நன்கு விளங்குகிறது. 1ராஜ வித்தியாராஜ குஹயம் பவித்திரமித முத்தமம் என்கிற கீதா வாக்கியத்தால், கிருஷ்ணன் இவ்வுண் மையை ஒப்புக் கொண்டிருக்கின்றார். கரும காண்டத்தைத் தழுவி நடக்கிற 2மீமாம்ஸ கர்கள் உபனிஷத்துகளை வேதப் பிரமாணமாக அங்கீகரிக்கமாட்டார்கள்.

முதன் முதலாக உபனிஷத்துகளை வேதத்தில் சேர்த்து ஒப்புக்கொள்ள வில்லை. பிறகு கருமகாண்டத்தில் மனிதர்களுக்கு நம்பிக்கை குறையவே பழைய குருட்டு நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் பொருட்டு உபனிஷத்துகளும் வேதங்களேயென்றும், ஆனால், முடிவில் இருப்பதால் கருமகாண்டப் படிக்குள்ள யாகம் முதலிய சடங்குகளை நிறைவேற்றி மனத்தூய்மை அடைந்தவன்தான் உபனிஷத் துகளை உணர்ந்து அவை களின்படி ஒழுக உரிமை உள்ளவன் என்றும் பொய்க்கதையைச் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

எக்காலத்தும் அழியாமலும் அனைத்திற்கும் காரணமாயும் இருக்கிற பரம்பொருள் ஒன்றே! என்றும், நிலைத்திருப்பது இவ்வுலகத் தோற்றம் மாத்திரமே.

1. அரசர்களின் வித்தை - அரசர்களின் இரகசியப் பொருள்.

2. இவர்கள் சங்கர மதத்தைப் பிரசன்ன புத்தமதம் (வைதிகப் போர்வையுடைய பவுத்தர்கள்) என்று சொல்லுவார்கள். இதனால் பவுத்த சமயக் கூற்றுவனாயிருந்த சங்கரர், பவுத்தர்களின் தத்துவ நூற்களை வடமொழியில் எழுதி, உபனிஷத்துகள் என்ற பெயரைக் கொடுத்தார் என்று எண்ண இடமிருக்கிறது.

- http://viduthalai.in/new/page-3/4072.html?sms_ss=blogger&at_xt=4d651bb4297cb722%2C0