வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-41

ஆஹமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்
பொருள்: ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷேபிக்கிறேன் (க்ஷேபித்தல் - இடுதல்) அதைப்போல் நீயும் செய்யவேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒருதுணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வர்யு சொல்லவேண்டிய மந்திரம்.
1ஸ்வர்க்கே லோகே ப்ரோணுவாதாம்

பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:
(ஃ) வருஷா வாஜி ரேதோதாரேதோ ததாது

பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக் கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக்கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.ஃ

உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா
வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன

பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.

2அத்வர்யு முதலிய அய்வரும் (அத்வர்யு பிரஹ்மா, ஹோதா, உத்காதா, க்ஷதா) குமாரிகளும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிற வாக்கியங்கள் வருமாறு:

முதலில் அத்வர்யு குமாரியை விளித்துத் தனது விரலால் அவளின் அல்குலைச் சுட்டிக்காட்டிப் பரிஹாசமாகச் சொல்லுகிறான்:

3யகாஸகௌ சகுந்தகா ஹலகிதி வஞ்சதி;
ஆஹந்தி கபே பஸோ நிகல்யா பீதி தாரகா

பொருள்: பெண்கள் விரைந்து நடக்கும்போதும், புணர்ச்சிக் காலத்திலும் யோனிக்குள் ஹலஹலாவென்னும் ஒலியுண்டாகிறது. பிறகு வீரியம் வெளிப்படுகிறது.

இதற்குக் குமாரியானவள் அத்வர்யுவின் லிங்கத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு விடையளிக்கிறாள்.

யகாஸகௌ சகுந்தகா
ஹலகிதி வஞ் சதி;
விவக்ஷத இவ தேமுக மத்வர்யோ
மநாஸ்த்வ மபி பாஷதா

பொருள்: அத்வர்யுவின் லிங்கத்தை விரலால் சுட்டிக்காட்டிக் கொண்டு, நுனியில் துவாரத்தையுடைய இது உன் வாய்போலிருக்கிறது. ஓ அத்வர்யுவே! அதிமாகப் பேச வேண்டாம்.

பிரஹ்மா மஹிஷியினிடம் சொல்வது:-
மாதாசதே பிதாசதே அகரம் வ்ருக்ஷஸ்ய ரோஹத:
ப்ரதிலா மீதிதே பிதா கபே முஷ்டி மதம் ஸயத்

பொருள்: மஹிஷியே! உன்தாயும், தந்தையும் கட்டிலின் மேல் ஏறிக்கொண்டு, உன் தாயின் பக்கத்தில்(யோனி) தந்தையார் முஷ்டியை (லிங்கம்) செலுத்தியதனால் நீ பிறந்தனை.

இதற்கு மஹிஷியின் விடை:
மாதாச பிதாச தேக்ரே வ்ருக்ஷஸ்ய க்ரீடத
விவக்ஷத இவதே முகம் ப்ரஹ்மன்
மாத்வம் வதோ பகு

பொருள்: உன் பிறவியும் இவ்வாறே, அதனால் அதிகமாகப் பேசாதே.
உத்காதா, குமாரிகளில் ஒருத்தியை நோக்கிச் சொல்லுவது.
ஊர்த்வமேனா முச்சராபய கிரௌ
பாரம் ஹரன்னிவ;
அதாஸ்யா மத்ய மேததாம் சீதே
வாதே புனன்னிவ

பொருள்: மலைக்குமேல் சுமையை ஏற்றுவது போலவும், குளிர்ந்த காற்று வீசுங்கால் தானியத்தின் பதர் தூற்றுவது போலவும் இவளை உயரத் தூக்கிப்பிடியுங்கள். இவளுடைய இடை அகலமாக ஆகட்டும்.

1. அதிவாஸேன ப்ரச்சாதயதி ஸ்வர்க்கே லோக இதி (காத்யாயன சிரவுத சூத்திரம்) ஸ்வர்க்கே லோக என்ற மந்திரத்தச் சொல்லி துணியைப் போட்டு மூடுகிறார்கள். ஏஷவை ஸ்வர்க்கோ யத்ரபசும் ஸம்ஜ்ஞபயந்தி எங்குப் பசு யாகம் செய்யப்படுகிறதோ அவ்விடம் சுவர்க்கமாம்.

(ஃ) அஸ்வசிச்ன முபஸ்தே குருதே வ்ருஷாவாஜீதி, (அஸ்வலிங்கம் ஹஸ்தேன த்ருத வாஸ்வ யோனித்வரா அர்ப்ப யதீத் யர்த்த) மஹிஷியானவள் குதிரையின் குறியைக் கையினால் பிடித்துத் தன் யோனித் துவாரத்தில் வைக்கிறாள் என்பது இதன் பொருள்.

2அத்வர்யு ப்ரஹ்மோத் காத்ருக்ஷத்தார குமாரீபத்நீபி; ஸம்வதந்தே யகாஸகா விதி தசர்ச் சஸ்ய த்வாப்யாம் ஹயே ஹயே ஸாவித்யா மந்தர்ய. (காத்யாயன சிரவுத சூத்திரம்)

3அத்வர்யு முதலியவர்கள் குமாரி பத்தினிகளுடன் பரிகாசமாகப் பேசுகிறார்கள். இம்மந்திரங்கள் 90 பாட்டுகள் அடங்கியது. யஜுர் வேதம் அத்தியாயம் 23-இல், 20-லிருந்து மஹீதர பாஷ்யத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

- http://viduthalai.in/new/page-3/3680.html?sms_ss=blogger&at_xt=4d5e818aefb9516d%2C0