செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-35

அதற்குரிய உதாரணங்கள் பின்வருமாறு:
பசுஸ் சேந்நிஹத்; ஸ்வர்க்கம்
ஜ்யோதிஷ்டோ மேப்ரயாஸ்யதி;
ஸ்வபிதா யஜமானேன தத்ர
கஸ்மாந்ந ஹன்யதே?
யூபம் சதித்வா பசூன்
ஹகவாக்ருத்வா ருதிரகர்த்தமம்
யத்யேவம் கம்யதே ஸ்வர்க்கே
நாகே கேன கம்யதே?
அந்தே தமஸி மஜ்ஜந்தி
பசுபிர்யே யஜந்திதே;
ஹிம்ஸா நாமபவேத் தர்மோ
நபூதோ நபவிஷ்யதி

பொருள்: ஜோதிஸ்டோம யாகத்தில் கொல்லப்படுகிற பசு சுவர்க்கத்தை அடைவது உண்மையானால், யாகம் செய் கிறவன் தன் தந்தையைக் கொன்று சுவர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைக்கப்படுகிற பசுவைக் கட்டும் தூண்) உண்டு பண்ணிப் பசுக்களைக் கொன்று, இரத்தச் சேற்றை உண்டு பண்ணுவன சுவர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்? பசுவைக் கொன்று யாகத்தை நடத்துகிறவர்கள், இருள் சூழ்ந்த நரகத்தில் விழுவார்கள். கொலையானது எக்காலத்தும் தருமமாக மாட்டாது.

இவ்வித யுக்தி வாதங்களால் இவர்களின் யாகத்தை மறுத்து வந்தது ஒன்றே பவுத்தர்கள் செய்த பிழையாகும். இதனால், இந்நாட்டினின்றும் அவர்களை ஓட்டியும் கொலை செய்தும் நாசம் பண்ணியதுடன், நாஸ்திகோ வேத நிந்தக வேதத்தை நிந்திக்கிற பவுத்தன் (1நாஸ்திகனேயாம் என்று புராணங்களிலும் இகழ்ச்சியாக எழுதி வைத்தார்கள்.

இந்தச் சனாதன தருமத்தின் உட்பிரிவுகளில் முக்கியமான தந்திர (ஆகம) சாஸ்திரங்களைப் பின்பற்றி ஒழுகுவோரையும், அவர்கள் அடைய விரும்பும் முக்தியின் முறையையும் சுருக்கமாகக் கூறிவிட்டு இவ்வத் தியாயத்தை முடித்துவிடுகிறேன்.

சுடலைச் சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், எலும்புகளைக் கோத்து மாலையாக அணிதல், தலையோட்டில் உண்ணுதல் முதலிய சிவனுடைய ஒழுக்கங்களைப் பின்பற்றி வந்த சைவர்களை ஜைனர்கள் இழிவாகக் கருதினர். திருஞான சம்பந்தருக்கு முன்னிருந்த சைவர்கள் 2நரபலி முதலிய கொடுந்தொழில்களையும் இயற்றி வந்தனர். இதை அறிவதற்குத் தந்திர (ஆகம) சாஸ்திரங்களும், ஜைன பவுத்தர்களின் நூற்களும் உதாரணங் களாக இருக்கின்றன. (

இத்தகைய கொடிய ஒழுக்கங்கள் முக்தியைத் தருவன போலும்) இக்காலத்திலும் கூட சைவசமயத்தினர் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளுகிற சில சூத்திரரும், பூணூல் போட்டுக் கொண்டு குருக்கள் என்று சொல்லித் திரிகின்ற சிலரும் தங்களுடைய வயிற்றை நிரப்பும் பொருட்டு ஏழைகளைத் துன்புறுத்துவது வழக்கமாயிருக்கிறது. பார்ப்பனரல்லா தாரின் முன்னேற்றத்திற்குப் பார்ப்பனர் எப்படித் தடை யாயிருக்கிறார்களோ, அப்படியே இந்தச் சைவர்களும் இந்து சமயச் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருக்கிற ஏழை மக்களின் முன் னேற்றத்தைத் தடுத்து வருவதைத் தமிழ் நாட்டின்கண் அறி வாளிகளாயும், சுயநலமற்ற வர்களாயுமிருக்கிற வர்களுள் ஒவ் வொருவரும் அறிந்தே இருக்கி றார்கள். இவர்கள் அனாதிச் சைவர். ஆதி சைவர், அவாந் தரச் சைவர் என 3 மூன்று

பிரிவுகளையுடையவர்கள். இவர் களின் வரலாறு:- தாங்கள் தக்ஷிணாமூர்த்தியின் குலத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அதனால் அனாதிச் சைவர்களென்று சிலர் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆதியில் சூத்திரர்களா யிருந்து, பிறகு சிவ பூஜைக்காகவே பூணூல் போட்டுக் கொண்டு குருக்கள் என்று பட்டப்பெயரும் சூட்டிக் கொண்டவரே ஆதி சைவர்கள் என்றும், கைலாசத்தி லிருந்து பூவுலகில் சிவபூசை செய்யும் பொருட்டுச் சிவனால் அனுப்பப்பட்டவர்களே எங்களின் மூதாதைகள். அதனால், நாங்கள் ஆதி சைவர்கள் என்றும் தாங்களாகவே சொல்லிக் கொள்ளுகிறவக்ள் ஆதி சைவர்கள், கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளனானான் என்கிற பழமொழிக்கிணங்க, ஆதி சைவருவடையவும், அனாதிச் சைவருடையவும் பொய் வலைக்குள் சிக்கி, அவர்களுக்குப் பணம் கொடுத்துச் சிவ தீக்ஷையும் சைவப்பட்டமும் பெற்றுக்கொண்டு, தங்கள் குலத்தினரின் முகத்தில் கரியைத் தடவி அவர்களை வெறுத்துத் தள்ளுகிற மற்றொரு சாரார் அவாந்தரச் சைவர்கள்.

இவர்களுக்கு இக்காலத்திய சமய நூற்கள் தேவாரம், திருவாசகம் முதலிய சில நூற்களேயாம். இவைகளுக்கு வைதிக சைவசித்தாந்தம் சாஸ்திரங்களென்றும், சுத் தாத்வித சைவ சித்தாந்தம், வைதிக சைவசித்தாந்தம், வேதாகமோத்தம சைவ சித்தாந்தமென்றும் மற்றும் பெயர் இவைகளின் உற்பத்திக் காலம் புத்த சமயம் இந்த நாட்டை விட்டொழிந்த காலமும் ஏறக்குறைய ஒன்றேயாம். சில தாந்திரீக பக்தர்கள் பவுத்த, ஜைனர்களைக் கொலை செய்ய உதவி செய்யும்படிக்குச் சிவனைக் குறித்துக் கூறும் பிரார்த்தனைப் பதிகங்களும் மற்றும் இவற்றுள் அடங்கி யிருக்கின்றன. இவைகளின் பழக்கம் ஆயிரத்தொரு நூற்றாண்டு இருக்கலாமென்று சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள்.

சில காலம் சென்றதும் இவைகளை ஒன்று சோத்து, பன்னிரண்டு திருமுறைகள், பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் எனப் பெயர் கொடுத் திருக்கிறார்கள். ஜைன புராணங்கள் கூறுகிறபடியே பெரியபுராணம் என்ற இவர்களுடைய நூலும் அறுபத்து மூன்று பக்தர்களின் அவதாரச் சிறப்பை எடுத்துரைக்கின்றது. இவ்வறுபத்து மூவர்களும் அடைந்தது மோட்ச மானால், சிவ தீட்சை முதலிய கருமங்கள் மற்றும் பரமசிவனிடத்தில், வைத்த அன்பு ஒன்றே இவர்களுக்கு மோக்ஷ சாதனமாக நின்றது எனத் தெரிகிறது.

1. வேதத்தை நம்பாதவன் நாஸ்திகன்
2. சிறுத்தொண்டன் மகனைக் கொன்று அருந்திய கதை உலகமறியும்.
3. சைவர்களின் பல பிரிவினைகள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் இம்மூன்று பிரிவிற்குள் அடங்கும்.

- http://viduthalai.in/new/page-3/3021.html?sms_ss=blogger&at_xt=4d513c76a09f9509%2C0