திங்கள், 14 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-39

புத்த பகவானையும் அவர் கொள்கைகளையும் மனிதர்கள் வெறுக்கும்படி எழுதிவைத்ததும், புத்த சமயத்தினரைப்போல வெளி வேடம் போட்டுத் தீய நெறியில் ஒழுகியும், இத்தாந்திரீக ஜனங்கள் உலகத்தை நரகக் குழியில் அமிழ்த்தியதோடு, அறிவிலிகளாகிய பல ஜனங்கள் அரசர்களுக்குச் சிற்சில 1உபகாரங்கள் செய்து, அவர்களின் உதவியினால் புத்மதத் துறவிகளையும், சமண முனிவர் களையும் சித்திரவதை செய்தார்கள்; கழுவிலேற்றினார்கள். அந்தோ கொடுமை! அந்தோ கொடுமை!! அவர்களின் கோயில்களையும் மடங்களையும்2 கொலைக்கள மாக்கினார்கள். விக்கிரகங்களை உடைத்தார்கள். ஆனால், இக்கொடுந் தொழிலாளர்களால் புண்ணிய பூமியென்ற ழைக்கப்படுகிற இந்த நரகக்குழியில் புத்த சமயமும், பிக்ஷுக்களும் இல்லாமற் போயினும், இன்னும் பூவுலகில் மக்கள் தொகுதியில் புத்த சமயத்தினரே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பகுதியாரும் முழு உரிமையும் உடையவர்கள். சிலோன், பர்மா முதலிய இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் அடங்கிருப்பவர்களும் இந்நரகக் குழியில் கிடந்துழலும் இந்துக்களைப் போல் எல்லா வகையிலும் யாவருக்கும் அடிமைகளாக இருப்பதில்லை.

புத்த பகவானுடைய கொள்கைகளைப் பின்பற்றி ஒழுகி வந்த அசோகன் முதலிய பேரரசர்களின் காலங்களில் கொலை, காமம் முதலிய பாகங்கள் தலைகாட்டாமல் எல்லா உயிர்களும் சுகமாய் வாழ இடமிருந்ததால், 3விண்ணாட்டிற் கொப்பாயிருந்த நாட்டில் முற்காலங்களில் பார்ப்பன நூலார்களின் மூதாதைகள் அனுஷ்டித்து வந்த களவுப் புணர்ச்சி, கொலை முதலிய பாவங்களை வளரவொட்டாமல் புத்த சமய, சமண சமயங்கள் ஒடுக்கி வருவதைக் கண்டு அப்புனித மதத்தை ஒழிக்கக் கண்டு பிடித்த பல தந்திரங்களுள் முதன்மையானது இத்தந்திர சாஸ்திரமே. இதன் பெயரும் வழக்க, ஒழுக்கங்களுமே இதற்குச் சான்று கூறும். எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிய கடவுள், இத்தகைய வஞ்சக எண்ணத்துடன் பல நூல்களும், ஒழுக்கங்களும் உண்டு பண்ணின இவர்களைத் தன்வினை தன்னைச் சுடும் என்ற முறையாகப் பிறருக்கு அடிமையாகி வருந்தும்படியாக விட்டுவிட்டார்.

பர்த்ருஹரி என்னும் பெரியார் கூறுகிறபடி தஸ்மை நம: கர்மணே அத்தகைய பெருமைபொருந்திய வினைச் செயலின் பொருட்டு நமஸ்காரம்.

நான்காவது அத்தியாயம்

ராஜன் வாழும் நகரத்திற்கு வெகு தூரத்திலுள்ள ஒரு சிற்றூரில் குடியிருந்து வந்தவளும், நகரங்களைப் பார்த்திராதவளுமான ஒரு கிழவி நெடுநாள்களாக அரசனைப் பார்க்க அவாவுற்றிருந்தனள். ஒருநாள் குடிகளின் நன்மை தீமைகளை விசா ரிக்க எண்ணி, அவ் வூருக்கு அரசன் வருகிறான் என்று கேள்வியுற்று இந் தக் கிழவியானவள் எல்லோருக்கும் முன்னதாகவே அரசன் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள்.

யானைகள், குதிரைகள் மேளவாத்தியங்கள் எல்லாம் பார்த்த இவள், அரசனது உருவம் எப்படியிருக்குமோ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அரசன் இவளது கண்முன்னின்றும் மறைந்து சில தூரம் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்ததும் கிழவி, தான் கோரிய ஆள் இன்னாரென்று தெரிந்துகொண்டு, இவனா அரசன்? இவன் மனிதனாக வன்றோ இருக்கின்றான்! நான் என்னமோ எண்ணிவிட்டேன்.

இவனைப் பார்க்கும் பொருட்டு வீணே பொழுதைப் போக்கினேனே! என்று வருத்தத் துடன் வீட்டிற்குச் சென்றாளாம். இந்தக் கிழவி அரசனைப் பார்க்குமளவும் அவன்பால் வைத்திருந்த அளவுகடந்த மரியாதைக்கு அறியாமையே காரணமென்பது வெளிப்படை.

இதைப்போலவே, வேதாகமத்தைக் கற்றுணராத நம்மவர்களும் அதனிடத்துப் பரிசுத்தத் தன்மையைக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தில் நம்மவர்களிலும் ஆங்கிலம் கற்றுத் தேர்ந்த மேதாவிகள் கூட வேதத்தைப் புகழ்ந்து கூறுவது வழிவழியாகக் கேட்டு வந்த மூடநம்பிக்கையினாலேயாகும். இந்த வேதம் கேட்கிறவனுடைய காதில் ஈயம் காய்ச்சி விடுவதும்,வேதப் பொருளை மனத்தில் வைத்திருப்பவன் நெஞ்சைப் பிளப்பதும் புண்ணியச் செயலாக நடத்தி வந்தார்களெனினும், கல்வி அறிவில்லாத உண்மைக் கருத்து விளங்காமையாலும், இவ்வேதமானது பரம்பரை யாக வந்த ஓர் ஆசானிடம் பொருள் கேட்டுத் தெரிந்து கொண்டாலன்றி, ஏனையோருக்கு விளங்காத (உலக வழக்கிலில்லாத) ஒரு மொழியில் இருப்பதாலும், வேத மென்பது தெய்வவொளி திகழ்வது: சொல்லிற்கடங்காப் பெருமையுடையது என்று இவ்வாறு நம்பிவிட்டார்கள்.

இங்ஙனம் கண்மூடி நம்புவதில் என்ன பயன்? வேதப் புத்தங்கள் அச்சிட்டு விற்பனைக்கு வந்திருக்கின்றன. நாக்கை அரிந்துவிடுவார்களே, நெஞ்சைப் பிளந்து விடுவார்களே, ஈயத்தைக் காய்ச்சிக் காதுகளிலே விட்டுவிடுவார்களே என்று பயப்பட வேண்டாம்.

- http://viduthalai.in/new/page-3/3412.html?sms_ss=blogger&at_xt=4d5944087cf8e3f9%2C0