செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-40

1அத்தகைய கொடுந்தொழில்கள் பிரிட்டிஷ் அரசாங்கத் திற்குப் பயந்து ஏடுகளிலும் வஞ்சகப் பார்ப்பனரின் உள்ளங்களிலும் அடைக்கலம் புகுந்திருக்கின்றன. இத் தகைய கொடுமைகளைக் காப்பாற்ற எண்ணியே ஹோம் ரூல் வேண்டுமென்கிறார்கள். எல்லோருக்கும் சம உரிமை வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டுமென்கின்றவர்களைத் தேசத் துரோகிகள் என்று வசை மொழிகளால் அலங் கரிக்கின்றனர். பல மனிதர்களை மிருகங்களைக் காட்டிலும் தாழ்வாகச் சில மனிதர்கள் நினைத்து வருகிற காலம் வரையில் சகோதரர்களே, உங்களுக்கு ஹோம் ரூல் வேண்டாம். நீங்கள் விரும்பினாலும், ஆங்கிலேயர்கள் கொடுக்க மாட்டார்கள்.

கொடுத்தாலும் இந்துக்களாகிய நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள். ஒற்றுமையுள்ள புறச் சமயத்தாரால் துன்புறுத்தப்பட்டுக் கஷ்டப்படுவீர்கள். ஆதலால், சிலகாலம் மட்டும் (நமக்குள் ஒற்றுமை வருமளவும்) பொருத்திருந்து, வேத சாஸ்திரங்களை வாசித்து, அவை களின் உட்கருத்துகளை ஆராயுங்கள். அங்ஙனம் ஆராயுங் கால், அஷ்டவர்ஷம் ப்ராஹ்மண முபனயீத: தமத்யா பதீதா. இவை முதலிய வாக்கியங்கள் உங்கள் கண்களுக்குப் புலனாகும். வேதத்தைப் படிக்கிற உங்களைப் பார்த்துப் பார்ப்பனர்கள், நாஸ்திகோவேத நிந்தக என்றும் மற்றும் பரிகாசம் பண்ணினாலும் எடுத்துக் கொண்ட முயற்சியி னின்றும் பின்வாங்காமல் சாதாரண சமஸ்கிருதத்தினின்றும் மாறுபட்ட இவ்வேத மொழியை மஹீதரன் முதலிய பழைய ஆச்சாரியார்களின் பாஷியத்தை வைத்துக்கொண்டு, நம்மவர்கள் எல்லோருக்கும் பயன்படும்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய நம் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து வெளிப்படுத்தவும் உறுதி செய்துகொண்டு, அதற்கேற்ற முயற்சியை ஒவ்வொருவரும் விரைந்து செய்யுங்கள்.

ஆனால், இக்காரியமானது வடமொழி, தென்மொழிப் புலமை வாய்ந்த அறிவாளர்களும், பொருளாளர்களும் கலந்து உழைத்தாலன்றி இலகுவில் முடிவுறாது. பாஷை, வேஷம், 2விசாரம் தேசம் இவைகளால் மாறுபட்ட மேனாட்டார் இக்காரியத்தில் எடுத்துக் கொள்ளுகிற முயற்சியைக் கூர்ந்து

கவனிக்கிற எந்த மனிதனும் சந்தோஷிக்கத்தக்கது. நடையிலும் உடையிலும் அய்ரோப்பியர்களைப் பின்பற்றுகிற நம்மவர்களைப் பின்பற்றி உழைத்து வருவார்களானால், நாட்டிற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்.

நிற்க, நம்மவர்களால் பரிசுத்தமென்று கருதப்பட்டு வருகிற வேதத்தினுடைய ஒரு பாகமாகிய மந்திரங்களிற் சிலவற்றை ஈண்டுக் கூறுவேன். விதி, மந்திரம், அர்த்த வாதம், நாமதேயம் என வேத வாக்கியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மந்திர மென்கிற சொல்லிற்கு நினைப்பூட்டுவது என்று பொருள். யாகத்தில் நிறைவேற்றுகிற ஒவ்வொரு சடங் கின் முதலிலும் இவைகளைச் சொல்லிப் பொரு ளையும் சிந்தித்தல் வேண்டும். இதன் கீழ்க் கூறப்புகும் மந்திரங்கள், வாஜ ஸனேயீ (சுக்ல யஜுர் வேதம்) சம்ஹிதையில் உள்ளன. இவைகளுக்கு மஹீதராசாரியார் தெளிவாகப் பாஷியம் எழுதியிருக்கிறார். ஒரே குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இருந்து வாசித்து மகிழத்தக்க புராணங்களோ, ஸ்மிருதிகளோ, வேதங்களோ இவை முதலிய எந்த இலக்கிய நூலும் இந்துக்களுக்கு இல்லை.
புத்திர காமேஷ்டி யாகம்

முற்காலங்களில் யஜமானனுக்கும், யாகஞ் செய் வோனுக்குப் பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில்3 பானேஜனம் வைத்துக் கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதுதும் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும். அதன் விபரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும் சொல்லாமல் இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். அடுத்த படியாக மந்திரத்தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும்,

பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-

1. கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2. ப்ரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே (வஸோமம)

3. நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே (வஸோமம)

பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக இருக்கவேண்டும். (மனைவிகளுள் தலைவியை 4மஹிஷியென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வரவேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினிகளும் பிராணசோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக் கடவர். பிறகு மஹிஷியானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/3501.html?sms_ss=blogger&at_xt=4d5a9b984cbab94d%2C0