செவ்வாய், 1 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-46

பசு, பூமி, தானியம், அடிமைகள் முதலியவற்றை இல்லத் திற்கு வேண்டுமளவாக அவருக்களித்திடுக வென்றும், பாலஸ்தாபன விதிப்படலத்தில் முன்னர் மொழிந்தவாறு வஸ்திரம் முதலியவற்றால் அவரை அழகுபடுத்திப் பூசித்து, அவ்வுத்தமம் முதலிய மூவகைத் தட்சணைகளையும், அவருக்குதவுகவென்றும்,

வாஸ்து சாந்தி விதிப் படலத்தில் அவ்வாசிரிய தட்சணை அம்மூவகையுமென்றுங் கூறினமை யாலும்; இன்னும்; பலவேதுக்களாலும் கல்வி, அறிவு ஒழுக்கங் களோடு கூடினவரும் அவை கூடாதாருமாகிய பலரும் வைகியுள்ள இப்பூமியின்கண் ஒரு கூட்டத்தாரையே, ஒரு சிலரையே பெரிதும் உயர்த்தலும்,அவரைப்போல ஏனையோர் இனிது தாழ்ந்தவரென்றாலும், அதருமங்கொண்டு படலம் படலமாக அவ்வொரு சிலர் சீவனோபாயத்தோடு பல கருமங்களையும் விதிக்க வந்த புத்தகமே அவ்வாகம புராண பாகமெனவும்;

ஸ்மார்த்தர் பெரிதும் சுயநலங்கருதி எழுதியுள்ள ஸ்மிருதிகளை யொத்த இப்பாகப் படலம் யாவும் சிவபெருமான் கூறியருளினவென்பது, அருளவாம் எல்லோ ரும் இனிதுய்தி பெற வேண்டுமென்னுந் திருவுளப் பெருங் கருணைத் தடங்களாய்த் தரும தேவதை மீதெழுதரு தலைமைப் பொருளாய் வழங்கும். அவனது கடவுட்டிறத்தை யிழுக்கத்துட்படுத்துவதாமாகலின், அது சால்பிற்றன்றென வும் நடுவு நிலைமை யொம்புநர் பலரும் நவில்கின்றனர்.

நடுவு நிலையோம்பல் எமக்குங் கடமையே போந்த நியதிகளை யெவரெவ்வாறு கொள்ளினும் கொள்ளட்டும். இவை ஈசன் கட்டளையென்று கூறற்கே எமது நெஞ்சம் பெரிதுமஞ்சுகிறது. போந்த தந்த்ராவதார படலத்தில், இல்லறத்து ஆதிசைவரே எல்லாக் காரியங்களிலும் அதிகார முடையவர் என்றதும் பேராசைக்கு இடனா யிருத்தல் உய்த்துணரத் தக்கதாம்.

இவ்விரு பக்கங்களில் கூறிய வசனம் முருகக் கடவுளரது இரும்பெரும் பக்தராகிய பாம்பன் சுவாமிகள் கூறியுள்ள தாகும். இப்பெரியார் பார்த்தளவும், ஆகம நூலைப்பற்றி அதிஹிப்ருயம் சொல்லிவிட்டது. ஆனால், கர்மகாண்டம் பூர்வபாகம் என்றார். சித்தாந்த பாகம ஞானகாண்டமும் சூத்திரர்கள் அதன்கிட்டே போகலாகாது. இஃதிவ்வாறிருக்க, முன் நான்காவது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிற விஷயங்கள் சுருக்கமாக அய்ந்தாவதத்தியாயத்தில் சொல்லி முடிக்கிறேன்; கவனியுங்கள்! காமிகாகமம் அத்தியாயம் 19, வாஸ்து தேவ பலிபடலம்.

பக்கம் 454, சுலோகம் 4.

1. கருத்து: எமன் பொருட்டுப் பாயசத்தைக் கொடுக்க வேண்டும். கந்தர்வரிடத்தில் கந்தம் கூறப்படுகிறது. ப்ருங்க ராஜருக்கு சமுத்திரத்தில் உற்பத்தியான மத்ஸ்யத்தையும் மிருகரிடத்தில் மத்ஸ்யத்தோடு கூடின அன்னத்தையும் நிருதியின் பொருட்டு பிண்ணாக்கு அன்னத்தையும், எண் ணெயையும் புத்திமானானவன் கொடுக்க வேண்டும். (இதைக் கொடுக்காதவன் புத்திகட்டை) இது சைவர் களுக்குச் சொந்தம்.

2. பலி விஷயத் தில் அசுரர்க்குப் பன்றி மாமிசம் கொடுக்க வேண்டு மென்பது.

3. சேஷருக்கு எள்ளரிசியும், ரோக ருக்கு உயர்ந்த மத்ஸ் யமும், வாயுவிற்கு மஞ்சள் நிற த்வஜமும் சமர்ப் பிக்க வென்பது.

4. ருத்திர மூர்த்தியின் பொருட்டு மாமிசான்னமும் ஆகும். ருத்திர புத்திரர் பொருட்டு நுரையும், ஆபருக்கு மத்ஸ்யத்தையும், ஆபவத்ஸரென்பவருக்கு மாமிசத்தையும் கொடுப்பிக்கவேண்டும்.

5. சிவபக்தர்கள் சூலத்திலிருக்கிற சாகியின் பொருட்டு நெய்யையும், மாமிசத்தையும் கொடுக்கவேண்டும். புத்திமானால், விதாரிகையின் பொருட்டு மிகவும் லவணத்தையும் கொடுக்கவேண்டும்.

6. பூதனையின் பொருட்டு விசேஷமாக எள்ளன் னத்தைக் கொடுக்கவேண்டும். பாராக்ஷஸியின் பொருட்டுக் காரமணியன்னத்தைக் கொடுக்கவேண்டும். வீடுகளில் மாமிசன்னமும் ஆகும்.

7. பாஹய தேவதைகளான எண்மருக்கும் மாமிசங் களின் அன்னம் பலியாகக் கூறப்படுகிறது.

8. தேவக்கிருஹத்தில் அவிசும், ராஜக்ருஹத்தில் மாமி சான்னமும் கொடுக்கத்தக்கது. சூத்திரக்கிருஹத் தில் கள் கூறப்பட்டது. மற்றவிடத்தில் தேன் சேர்க்க வேண்டும். (மச்சத்திற்குப் பதிலாக மாவு சேர்க்கவென்பது.)

9. பூஜை அந்த விஷயத்தில் சிவத்விஜர்கள் கிடைக் காவிடில், அனுசைவர்களாவது ப்ராஹ்மணர்களாவது ஆகும். தேவாலயத்திலும், கிராம முதலான விடங்களிலும் சிவத்விஜர் விசேஷப்பட்டவராகவிருக்கிறார். தன் வீட்டில் அனுசைவர் அல்லது மஹாசைவர் அல்லது அவாந்தரச் சைவர்களாவது ஆசாரியர்களாக இருந்து வாஸ்துஹோமம் செய்யலாம்.

10.வாஸ்து பூஜை குறைவுபடின் ஒவ்வோரிடமும் கெடுதியடை கின்றது. ஆகையால், ஆசாரியார், கிராமம், வீடு, சாலை, தேவாலயாதிகளில் வருடாவருடம் வாஸ்து ஹோமம் செய்தல் வேண்டுமென்பது.

11. காமிகம், தந்த்வதார படலம் பக்கம் 32, யாமனத்திலும், மாத்ரு தந்திரத்திலும், பாஞ்சராத்திரத்திலும், பவுத்தத்திலும் அருஹத் மதத்திலும் லாகுளத்திலும் வைதிக மதத்திலும் மற்றும் வேறாய வழிகளில் அந்தந்த சாஸ்திரங்களால் தங்க ளுக்குச் சொந்தமாகிய ஆகம சாஸ்திரப்படி ஆதிசைவர்கள் தீக்ஷை முதலிய அந்த லிங்க ஸ்தாபனம் முதலானவற்றைச் செய்யலாம்.

- http://viduthalai.in/new/page-3/4511.html?sms_ss=blogger&at_xt=4d6cf8a8590deab6%2C0