சனி, 30 அக்டோபர், 2010

பிச்சையல்ல சமூக நீதி!

திராவிடர் கழகத் தலைவரின் சட்ட ஆலோசனை காரணமாக தமிழ்-நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு நிலை பெற்றது. 1994ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டத்தை உடைத்துத் தூளாக்கிவிட வேண்டும் என்ற அதி தீவிர முயற்சியில் பார்ப்பனர்கள் பின்னணியில் இருக்க, உயர்ஜாதி தமிழர் ஒருவர் (விஜயன் என்ற வக்கீல்) வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் என்ற பெயரில் 1994ஆம் ஆண்டு முதலே உச்சநீதி மன்றத்திற்குப் போய் முட்டிக் கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசின் சட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் ஒவ்வொரு ஆண்டும் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருந்தால் திறந்த போட்டிக்கு எத்தனை இடங்கள் உண்டோ, அத்தனை இடங்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்து வந்தது.

இந்த ஆண்டும் வழக்கம் போல அந்த வழக்குரைஞர் உச்சநீதிமன்றம் சென்று கதவைத் தட்டினார். ஆனால் உச்சநீதிமன்றமோ ஒவ்வொரு ஆண்டும் அளித்து வந்த ஆணையை மாற்றியது.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்-டோர் ஆணையத்தின் கருத்தினை ஏற்று அதன் அடிப்படையில் இட-ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்பது-தான் உச்சநீதிமன்ற ஆணை (13.7.2010).

அத்தோடாவது கடையை மூடிக் கொள்ள வேண்டாமா அந்த முற்-போக்கு ஜாதி முகாமினர்.

உச்சநீதிமன்றம் ஜூலையில் அளித்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி விண்ணப்பித்தனர்.

மறு ஆய்வுக்கு வேலையில்லை என்று கூறி ஏற்கெனவே ஜூலையில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புத் தொடரும் என்று கூறப்பட்டுவிட்டது. (26.10.2010)

இடஒதுக்கீடு என்று வந்துவிட்டால் தொடக்க முதலே முட்டுக்கட்டைதான்! 1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக் கீட்டைச் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் தூக்கி எறிந்தது. இந்திய அரசியல் சாசனம் வரைவுக் குழுவில் இருந்த அனந்தசயனம் அய்யங்கார், தான் வகித்த பொறுப்பின் மரியாதையைக் காற்றில் பறக்க விட்டு உயர் ஜாதி பார்ப்பனர்களுக்காக வாதாடி அவர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

சென்னை மாநில அரசுக்காக வாதாடிய அரசு வழக்கறிஞர் குட்டி கிருஷ்ணன் என்பவர் கூறினார்.

வகுப்புவாரி முறைப்படி மாண-வர்கள் அனுமதிக்கப்படவில்லையா-னால் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஒரு மாணவர்கூட கல்லூரியில் இடம் பெற மாட்டார். மூன்று முசுலிம் மாணவர்களுக்கு மட்டும் இடம் கிடைக்கும்.

ஆனால், சென்னை மாகாணத்தில் இருந்து வரும் வகுப்புவாரி உரிமைப்படி கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்-பட்டால் பொறியியல் கல்லூரிகளில் 77 பார்ப்பனர்களுக்குக் கிடைக்கும். பார்ப்பனர் அல்லாதார் 224 பேர்களாக,-வும் இந்தியக் கிறித்துவர், 31 பேர்களாக-வும், முசுலிம்கள் 26 பேர்களாகவும், தாழ்த்-தப்பட்டவர்கள் 26 பேர்களாகவும் இருப்பர்.

மக்கள் விகிதப்படி 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களுக்கு 20 சதவிகிதம் இடம் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களுக்கு வஞ்சனை செய்வதாக எப்படிப் பொருள்படும்? என்று அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணன் சட்டப்-படியும், நியாயப்படியும் வாதாடினார். நீதிபதி விஸ்வநாத சாஸ்திரி என்ற பார்ப்பனரோ பார்ப்பனர்களுக்காக மூன்றாவது வக்கீல் போல வாதாடினார். தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற அவர்களுக்கென்று தனிக் கல்லூரி-களைத் திறக்கலாமே என்று கிண்டல் செய்தார். சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம். அடிமை இந்தியாவில் இருந்து வந்த சமூகநீதியை அடித்தே கொன்று விட்டது.

தந்தை பெரியார் கிளர்ந்தெழுந்து போராட்டப் புரட்சிக் கொடியைத் தூக்கியதன் விளைவால்தான் முதன் முதலாக தமிழ்நாட்டின் இடஒதுக்கீடுக்-காக சட்டம் 1951-இல் திருத்தப்பட்டது.

ஆனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் அது செத்துப் பிழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்றால், அது 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்றனர். இந்திய அரசியல் சாசனத்தில் எந்த இடத்திலும் இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம்தான் என்று கூறப்படவில்லை. இருந்தாலும் நீதிமன்றங்களின் உயர் ஜாதித்தனம் சிவப்பு மையால் கோடு கிழிக்கிறதே இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்-டக் கூடாது என்று -_ இந்தப் பார்ப்-பனர் பண்ணையத்தைக் கேட்பார் யார்?

நாடு சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு ஆன நிலையிலும், திருத்தப்பட்ட அரசியல் சாசனப்ளீவீலீ பிற்படுத்தப் பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்-பட்டதே! மத்திய அரசு நியமித்த காகா
க-லேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் என்னாயிற்று? யாருக்குத் தெரியும்? அலமாரிக்குள்ளேயே மூச்சைப் போட்டு விட்டது. 1980இல் பி.பி. மண்டல் தலைமையிலான பிற்படுத்தப்-பட்-டோர் ஆணையத்தின் பரிந்துரை-களும் குழிதோண்டி மூடப்பட முழு மூச்சில் ஈடுபட்டது உயர்ஜாதிக் கூட்டம்.

52 மாநாடுகளையும், 16 போராட்-டங்களையும் திராவிடர் கழகம் நடத்-தியல்லவா அதற்கு உயிர்ப் பிச்சை கொடுத்-தது! இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதியாளர்களை ஒன்று திரட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்லவே!

மண்டல் காற்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சுழன்று சுழன்று வீசிட வகை செய்யப்பட்டதே! வாராது-வந்த மாமணியாய் ஒரு வி.பி. சிங் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்தார்.

மண்டல் குழுப் பரிந்துரையில் ஒரு பகுதியை வேலை வாய்ப்பில் பிற்படுத்-தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட-ஒதுக்கீடு என்று பிரகடனம் செய்தார். (7.8.1990) உயர்ஜாதி ஆணவக் கும்பல் அவர் ஆட்சியைக் கவிழ்த்தது.


அந்த ஆணையையாவது வாழ விட்டார்களா? 50 ஆண்டுகளுக்கு முன் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத் திருக்க வேண்டிய அந்த இடஒதுக்-கீட்டை 50 ஆண்டுகளுக்குப்பிறகும்கூட நடைமுறைப்படுத்த விடாமல் உச்சநீதிமன்றம் சென்றனரே! - இடைக் காலத் தடையையும் பெற்றனரே! அதற்குப்பின் இரண்டாண்டு காலம் கழித்துத்தானே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதிலும் ஒரு குறுக்குச் சால் ஓட்டினர். கிரீமிலேயர் என்ற ஒரு பொருளாதார அளவு-கோலைக் கொண்டு திணித்தது உச்சநீதிமன்றம். ஆண்டு வருவாய் ஒரு லட்சம் ரூபாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்-கான இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது. அதன் விளைவு என்ன தெரியுமா? குரூப் மி பதவிகளில் அதுவரை 5 விழுக்காடு இடங்களைப் பெற்றுவந்த பிற்படுத்தப்பட்டோர் 3.9 விழுக்காடாகக் குப்புறத் தள்ளப்பட்-டனர். போராடிப் போராடி இப்-பொழுது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில்தான் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்-காடுக்கு (9-_ஆவது சட்டத் திருத்தம் 15-இல் துணைப் பிரிவு 5 என்று சேர்ப்பு) வகை செய்யப்பட்டது.

அதையும் உடனே கொடுக்க மாட்டார்களாம். ஒன்பது ஒன்பது விழுக்காடாகப் பிரித்து 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவர்களாம். இப்பொழுது அடுத்த கட்டத்துக்குப் போய் விட்டனர். கபில்சிபல் _ அவர்தான் மனித வள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்சர் _ நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல பார்ப்பனரைக் கல்வி அமைச்சராக ஆக்கினால் நாட்டின் கதி என்னாகும்? அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டோர், - பிற்படுத்தப்-பட்டோர் இருவருக்கும் பொதுவான வகையில் அவரவருக்குரிய விகிதப்படி கல்வியில் இடஒதுக்கீடு என்று பொது-வான சட்டம் கொண்டு வரப்பட்டது. வழக்கம்போல இதில் பிரித்தாளும் தந்திரம் கையாளப்பட்டது; தனித்தனி மசோதாக்களாகத் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு இருட்டில் ஒரு பெரிய சதிப் பின்னல்! நாடாளுமன்றத்துக்கே தெரியாது _ திடீரென மாநிலங்களவை-யில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்-பட்டது. ஒரு மசோதா தாக்கல் செய்யப்-படுவதற்குமுன் அதற்கென்று சில மரபுகள் உண்டு.

தாழ்த்தப்பட்டோர் பற்றிய மசோதா என்றால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறைக்குக்கூட அனுப்பப்படவில்லை. தேசிய தாழ்த்தப்-பட்டோர் ஆணையத்தின் கவனத்துக்-கும் கொண்டு செல்லப்படாமல் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் கடைசித் தொடரில் 2008 டிசம்பர் 23-இல் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டே இரண்டு நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவில் என்ன அடங்கி-யிருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் யாருக்குமே தெரியாது.

நாடாளுமன்ற நிலைக்குழு (தலைவர் சதர்சன நாச்சியப்பன்) தெரிவித்திருந்த பரிந்துரைகள் எல்லாம் இந்த மசோதாவில் காணாமற் போய் விட்டன.

இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு மூன்றாண்டு சிறை; 50 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனையும் என்ற அவசியமான சரத்துகளையெல்லாம் தூக்கி எறிந்து-விட்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு இரண்டே நிமிடங்களில் நிறைவேற்றிக் கொண்டனர்.

பிறகுதான் அதில் புதைந்து கிடந்த சதிகளின் சர்ப்பங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 47 கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்-டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் புதிதாகத் திணிக்கப்பட்ட சதிக் கிடங்காகும்.

இந்த அபாயத்தை முதன்முதலில் வெளியில் கொண்டு வந்தவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான்.

சமூகநீதியின் போர் வாளாகிய விடுதலை மூலம் இதனை வெளிச்சத்-துக்குக் கொண்டு வந்ததோடு, அதனைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால்முன் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி-னார் (24.2.2009), அவரே அந்த ஆர்ப்-பாட்டத்திற்குத் தலைமையும் தாங்-கினார்.

சமூகநீதி என்பது சதிகாரப் பார்ப்பனீயத்தின் வட்டத்தைத் தாண்டி வருவது என்பது எளிதல்ல. போராடிப் பெற்றாலும், அதில் சந்து பொந்துகளை உண்டாக்கி உடைத்தெறிந்து விடுகின்-றனர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்-டோர் மற்றும் சிறுபான்மை மக்கள் இதில் ஒருங்கிணைந்து தங்களின் பெரும்பான்மைப் பலம் என்ற முஷ்டி-யைத் தூக்கிக் காட்டினால்தான் நாண-யமற்ற எதிரிகளான பார்ப்பனர்களை வென்று காட்ட முடியும்.

சமூகநீதி என்பது யாரும் போடும் பிச்சையல்ல; நமது உரிமைச் சாசனம் என்று நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராடித்-தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மானத்துக்கு உகந்ததல்ல!

50-க்கு 48

1950-க்கும் 1977-க்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் 50 பேர்களில் 48 நீதிபதிகள் பார்ப்பனர்கள் _ என்று கூறுகிறார். தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன். நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தால் நாடு என்ன ஆகும்?

- http://www.viduthalai.periyar.org.in/20101030/snews01.html