வியாழன், 21 அக்டோபர், 2010

ஸ்டெம் செல் மருந்து மூலம் மூட்டு மாற்று சிகிச்சை

ஸ்டெம் செல் மருந்து மூலம் மூட்டு மாற்று சிகிச்சை
இங்கிலாந்து அறிஞர்கள் கண்டுபிடிப்பு
லண்டன், அக். 21- உலகில் மூட்டு வலி யால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்காக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர். இதனால் ஏற்படும் கடுமையான வலியை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மூட்டு மாற்று சிகிச்சையை அறுவை சிகிச்சை இன்றி ஸ்டெம் செல் மருந்து மூலம் குணப்படுத்த முடியும். இந்த சாதனையை இங்கிலாந் தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த அறிஞர்கள் குழு படைத் துள்ளனர்.
ஸ்டெம் செல் மூலம் தயாரிக்கப் படும் மருந்தை பாதிக்கப்பட்ட மூட்டு களுக்கு இடையே ஊசி மூலம் செலுத்தினர். அந்த மருந்து பாதிக்கப் பட்ட செல்கள் போன்று மாறி உறுதி யான சவ்வுகளை உருவாக்கி நோயை குணப்படுத்தியது. இதன் மூலம் 10 வருடங்களாக மூட்டு இணைப்புகள் பாதிப்பு, இடுப்பு எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்கள் பயன் பெறலாம்.
மேலும், எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டவர்களும் இச்சிகிச்சையின் மூலம் குணமடையலாம். இம்முறை யில் மூட்டு மாற்று சிகிச்சை பெறுப வர்கள் 2 வாரத்திற்குள் குணமடைய முடியும் என முன்னணி அறிவியல் பேராசிரியர் சூ கிம்பர் தெரிவித்து உள்ளார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101021/news39.html