செவ்வாய், 19 அக்டோபர், 2010

இந்து மதத்துக்கு முழுக்கு! புத்த மதத்தைத் தழுவினர் தாழ்த்தப்பட்டோர்!

நாகப்பட்டினம், அக். 18- நாகப்பட்டினம் மாவட் டத்தில், வேதாரண்யத் திற்கு அருகில் உள்ள செட்டிபுலம் கிராமத் தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தாழ்த்தப் பட்ட மக்கள், அண் ணல் அம்பேத்கர் மறைவு நாளான டிசம்பர் 6 இல் பவுத்த மதத்தைத் தழுவ முடிவு செய்துள்ளனர்.
அக் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலினுள் தாழ்த்தப் பட்டடவர்கள் அனு மதிக்கப் படுவதில்லை. 2009 ஆம் ஆண்டு, செப் டம்பர் 30 மற்றும் அக் டோபர் 14 இல் கோயில் நுழைவுப் போராட் டங்கள் இரண்டு நடந் தன. முதல் முறைப் போராட்டத்தின்போது, கோயில் மூடப்பட்டது. இரண்டாவது முறைப் போராட்டத்தின்போது காவலர்கள், மற்றும் வரு வாய்த் துறை அதிகாரி கள் பின் தொடர, தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலை நோக்கிச் சென்ற பொழுது ஒரு கூட்டம் அவர்களைத் தாக்கியது. வன்முறை வெடித்தது. துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகிய வற்றை காவல்துறை மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 27 இல், மாவட்ட ஆட்சித் தலைவர் முனியநாதன், தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலினுள்ளே அழைத்துச் சென்றார்.
இப்பொழுது அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் பவுத்த நெறிக்கு மாறு வதற்கு முடிவு செய்துள்ளனர்.
- http://www.viduthalai.periyar.org.in/20101018/news01.html