புதன், 13 அக்டோபர், 2010

பாட்னாவில் பெரியார் பிறந்தநாள் விழா

20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய புரட்சியாளர் பெரியார்
பாட்னா - பெரியார் பிறந்தநாள் விழாவில் அறிஞர்கள் புகழாரம்

பாட்னா, அக். 12- 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய புரட்சியாளர் தந்தை பெரியார் என்று அசோக் யாதவ் கூறி உரையாற் றினார். கடந்த செப்டம் பர் மாதம் 17 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர் களை நினைவு கூர்ந்திடும் அவரது பிறந்த நாள் விழா பிகார் மாநிலம் பாட்னாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு பாட்னா மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியரும், மருத்து வரும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரும், பி.ஏ.எம்.சி.ஈ.எஃப் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரு மான ராஜிவ் குமார் ரஜாக் தலைமை வகித் தார். இந்த விழாவில் மூன்று பேச்சாளர்கள் உரையாற்றினர்.
பாட்னாவில் உள்ள அரசு மேற்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வரு மான சாம்பு சுமன் பேசு கையில், தமிழ் மக்கள் தந்தை பெரியார் அவர் களுக்கு, உயர்ந்த தந்தை என்பதைக் குறிக்க தந்தை என்றும் பெரியார் என்றும் இரண்டு பெரு மைகளைத் தந்துள்ள தாகக் குறிப்பிட்டார்.
கடமை உணர்வு மிக்க உண்மையான ஒரு மாபெரும் தந்தையைப் போன்று, மனத்தளவில் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மத மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற வேண் டும் என்ற உணர்வை நம்மிடையே பெரியார் ஏற்படுத்தினார். பார்ப்ப னர்களின் வர்ணாஸ்ரம தர்மம் எனும் சமூக அமைப்பு முறையைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று அதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட பிரிவுமக்களை அவர் போராடச் செய்துள் ளார்.
பெரியார் அவர் களின் இளமைக் கால வாழ்க்கை , அவர் இந் துக்களின் புண்ணியத் தலமான வாரணாசியில் தங்கியிருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள், அவரது சொந்த ஊரான ஈரோட்டில் அவர் ஆற் றிய பொது சேவைகள் , காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்து அரசிய லில் ஈடுபட்டது, காங்கி ரஸ் கட்சி யினருடன் கொண்ட கருத்து வேறு பாடு காரணமாக நீதிக் கட்சியில் சேர்ந்தது, சோவியத் யூனியன் நாட் டுக்குப் பயணம் சென் றது, அதனால் மார்க்சீய, லெனினின் கோட்பாடு களால் அவர் கவரப் பட்டது, அவர் மேற் கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம், புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க அவரது கடவுள் சிலை உடைப் புப் போராட்டம், தனி திராவிட நாடு பிரிவி னையை அவர் கோரி யது. தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப் பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேற் கொண்ட போராட்டம், அதன்விளைவாக இந்திய அரசியலமைப் புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரப் பட்டது, அதன் விளை வாக முதல் பிற்படுத்தப் பட்டோர் ஆணைய மும், அதன் பின்னர் மண்டல் ஆணையம் என்று நன்கு அறியப் பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் உரு வாக்கப்பட்டது ஆகி யவை பற்றி அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பைச் சேர்ந்தவரும், திரிவேணி சங்கம் என்ற அமைப்பின் செயல் திட்டக் குழுவின் உறுப் பினருமான அசோக் யாதவ் விரிவாகப் பேசி னார்.
பெண்களின் விடுத லைக்கும், பெண் உரி மைகளுக்கும் பெரியார் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி அவர் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார். பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற் றும் அவரது பணிகள், படைப்புகள் பற்றி வட இந்திய மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்று அசோக் யாதவ் கூறினார். உத்திரப் பிரதேச மாநி லத்தைச் சேர்ந்த லலாய் சிங் யாதவின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுக ளையும் அவர் எடுத்துக் கூறினார். சச்சி சாமா லயண் கி சாபி என்ற புகழ் பெற்ற நூலினை லலாய் சிங் யாதவ் எழுதி னார். ராமாயணத்தைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற் கான திறவு கோல் என்ற தந்தை பெரியார் அவர் கள் எழுதிய நூலின் அடிப்படையில் எழுதப் பட்ட நூல் இது. இந்த நூல் முதன் முதலாக வெளியிடப்பட்டபோது, உத்தரப் பிரதேச அர சால் தடை செய்யப் பட்டது. இத்தடையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லலாய் வழக்கு தொடர்ந்து, அந்நூலின் மேல் விதிக்கப்பட்ட தடையை நீக்கச் செய் தார். உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உத்த ரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போதும், இந்நூலின் மீது விதிக்கப்பட்ட தடை சட்ட விரோத மானது என்று தீர்ப்பு அளித்தது. தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து லலாய்சிங் சென்னையில் ஒரு கூட் டத்தில் பேசியபோது, உத்தர பாரதத்தின் பெரியார் லலாய் சிங் யாதவ் வாழ்க என்று பாராட்டப்பட்டார். மாயாவதி தொடர் பான நிகழ்வுகளையும் அவர் நினைவு கூர்ந்தார். கடந்த முறை அம் மாநி லத்தின் முதல் அமைச் சராக இருந்த போது, லக்னோவில் பெரியார் விழா நடத்துவோம் என்று மாயாவதி அறி வித்ததையும், அதனால் அவரது அரசுக்கு பா.ஜ.க. அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், பதவி இழந்தையும் பற்றி அசோக் யாதவ் நினைவு கூர்ந்தார்.
தந்தை பெரியார், பாபாசாகிப் பிமராவ் அம்பேத்கர் மற்றும் சர்தார் பகத் சிங் ஆகிய மூவரும்தான் இந்தியா வில் இருபதாம் நூற் றாண்டில் வாழ்ந்த மிகப் பெரிய புரட்சியாளர்கள் என்று அசோக் யாதவ் குறிப்பிட்டார். அவர் களின் வாழ்க்கை வர லாறும், அவர்கள் ஆற் றிய பணிகளும், படைத்த நூல்களும் இந் நாட்டின் தாழ்த்தப்பட்ட, பழங் குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கின் ஒளி போன்று விளங்குகின்றன என்று கூறினார். மூன்றாவதாக, பி.ஏ. எம்.சி.ஈ.எஃப் அமைப் பின் மாநிலப் பிரசார கரும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவ ருமான பொறியாளர் உமேஷ் ரஜாக் பேசினார். தந்தை பெரியார் அவர் களுக்கு யுனிசிஃப் நிறு வனம் தெற்கு ஆசியா வின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது பற்றியும் அவர் குறிப் பிட்டார். பெரியாரின் வாழ்க்கை வரலாறு, அவ ரது சேவைகள், அவர் இயற்றிய படைப்புகள் ஆகியவை தாழ்த்தப் பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையே பரப்ப வேண்டியதன் தேவையை வலியுறுத்தி அவர் கூறினார்.
தந்தை பெரியார் போன்ற ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளரின் பிறந்த நாள் விழாவினை நமது சமூகத்தின் சூத்தி ரர்களும், ஆதி சூத்தி ரர்களும் கொண்டாடு வதில்லை என்பது பரி தாபத்திற்குரிய ஒன்றா கும். பெரியார் அவர் களது பெருமைகளை நம் நாட்டின் கற்றறிந் தவர்கள் கூட நன்று அறிந்திருக்க வில்லை என்ற நிலையில் படிக்கத் தெரியாத கோடிக் கணக்கான நமது மக்கள் அறிந்திருக்க முடியாது. எனவே பெரியாரின் பெரு மைகளைப் பற்றி மக் களை அறிந்து கொள்ளச் செய்ய, சமூக நீதிக்காக வும், சமூக மாற் றத்திற்கா கவும் பாடுபடும் தனிப் பட்டவர்களும், அமைப்பு களும் பாடுபடவேண் டும். இல்லாவிட்டால் நமது எதிர்காலமே இருண்டதாக ஆகி விடும்.
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பத்தி ரிகையாளரான சஷிகாந் தும் இந்த விழாவில் பேசினார். இதனைப் போன்ற ஒரு விழா, தந்தை பெரியார் ராம சாமி அவர்களின் பெரு மைகளை நினைவு கூற வும், பரப்பவும், பலப் படுத்தவும் பெரும் உதவி யாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த விழா திரி வேணி சங்கத்தின் அமைப்பா ளர் ராமேஷ்வர் சவுத்ரி அவர்களால் ஏற்பாடு செய்து, படேல் சேவா சங்க கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய அவர் பெரியாருக்கு பெரும் அளவில் புகழாரம் சூட் டினார். இந்த விழாவில் படேல் சேவா சங்கத் தலை வர் சிறீ ஜானகி சிங்கும் கலந்து கொண்டார். படேல் சேவா சங்கத்தின் நிருவாகக் குழு உறுப் பினர் அசோக்குமார் நன்றியுரை ஆற்றினார். முதன் முதலாக 1933 மே மாதம் 30ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்ட பிற் படுத்தப்பட்டோர் அமைப்பு இந்த திரிவேணி சங் என்பது குறிப்பிடத் தக்கது.

- http://www.viduthalai.periyar.org.in/20101012/news28.html