வியாழன், 28 அக்டோபர், 2010

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விட இயலாதாம்!

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விட இயலாதாம்!
முதல்வர் எடியூரப்பா தலைமையில்
அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவாம்!

பெங்களூரு, அக்.28- தமிழகத்துக்கு காவிரி யில் தண்ணீர் திறந்து விட இயலாது என்று எடியூரப்பா தலைமை யில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி நீர் நிலவரம் குறித்து சட்டசபை அனைத்து கட்சி தலை வர்கள் கூட்டம் முதல மைச்சரின் அலுவலக இல்லமான ``கிருஷ்ணா'' வில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்துக்கு முதல மைச்சர் எடியூரப்பா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மாநில நீர்ப்பாசன அமைச் சர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சட்டசபை குழு தலை வர் ரேவண்ணா, கருநா டக மேல்-சபை எதிர்க் கட்சி தலைவர் மோட் டம்மா, அமைச்சர்கள் ஆச்சார்யா, சுரேஷ் குமார், அசோக் மற்றும் தலைமை செயலாளர் ரங்கநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கருநாடக அணைகளில் தற்போது உள்ள நீர் அளவு மற்றும் கருநாடகத்துக்கு விவ சாய பணிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன் படும் நீர் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு நீர்பாசன அமைச் சர் பசவராஜ்பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதா வது:-
முதலமைச்சர் எடி யூரப்பா தலைமையில் அனைத்துக் கட்சி தலை வர்கள் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத் தில் தமிழக முதலமைச் சர் கலைஞர் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விடுத்த கோரிக்கை குறித்து ஆலோசிக்கப் பட்டது.
மேலும் இந்த கூட் டத்தில் தற்போது கருநா டக அணைகளில் உள்ள நீர்மட்டம் மற்றும் மழை அளவு, தற்போது அணைகளுக்கு வந்து கொண்டிருக்கும் நீர் வரத்து போன்றவை குறித்து விரிவாக ஆலோ சனை நடத்தினோம். கரு நாடக விவசாயிகளுக்கு தேவைப்படும் நீரின் அளவு, பெங்களூரு, மைசூரு மற்றும் கிரா மப்புறங்களுக்கு தேவைப் படும் நீரின் தேவை குறித் தும் ஆலோசித்தோம்.
தற்போது கே.ஆர். எஸ். அணையில் 124.7 அடி தண்ணீர் உள்ளது. இந்த நீரின் அளவுக்கும், கருநாடக நீர் தேவைக் கும் சரியாக உள்ளது. கர்நாடக விவசாய பணி கள் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இந்த நீர் போதுமானதாக உள் ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு தண் ணீர் திறந்து விடுவது சாத்தியம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101028/news28.html