செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-31

இனி ஆகமங்களின் கருத்துகள்:

இதுவும் தவிர, சில உபாசனைகளின் ஆபாசங்களையும் ஈண்டுக்கூறுகிறோம். அவற்றுள் காளிகாதேவியின் தியான சுலோகமும் பூசை முறையும் கீழ் வருமாறு:-

ஸத்ய: ச்சின்னசிர:க்ருபாணமபயம்
ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்
கோராஸ்யம் சிரஸர்ஸ்ரஜா
ஸுருசிராமுன் முக்த கேசாவலீம்:
ஸ்யாமாங்கீம் க்ருதமேகலாம்
சவகரைர் தேவீம் பஜேகாளிகாம் (மந்த்ர மஹோததி)

பொருள்: அப்போது அறுத்தெடுத்த தலை, வால், அபயம், வரம், இவைகளையுடைய கைகளும், கழுத்தில் மாலையாக விளங்குகின்ற தலைகளின் வரிசையும், அவிழத்துவிட்ட கூந்தலும், கடைவாயினின்றும ஒழுகுகின்ற இரத்தப் பெருக்கும், சவங்களைத் தோடாக உடைய காதுகளும், சவத்தினது கைகளின் வரிசையே ஒட்டியாணமாக அணிந்திரா நின்ற

1 மைத்திரி மித்திரத்தன்மை அதாவது நட்புரிமைக் குணம். இதன் உண்மையைக் கண்டனுபவித்து உலகத்தாருக்கு அருள் புரிந்த கருணாமூர்த்தி பகவான் புத்தனன்றோ!

இடையையும் உடைய காளிகா தேவியை நான் வழிபடுகிறேன். பின்னும் தேவியின் உருவத்தை வரு ணிப்பது:-

அஸ்மின்வீடே யாஜேத் தேவீம்
சிவரூப சவஸ்திதாம்:
மஹாகால ரதாஸக்தாம்
சிவாபிர்திக்ஷு வேஷ்டிதாம்

பொருள்: சவ ரூபாமாயிருக்கிற சிவனுடைய உடலை மிதித்துக் கொண்டிருப்பவளும், மஹா காலனுடைய சம்போகத்தில் விருப்பமுடைய வளும், பெண் நரிகளால் சூழப்பெற்றவளுமான தேவியைப் பீடத்தின் கண் ஆவா கித்துப் பூசிக்கவேண்டும். இங்ஙனம் பூஜித்தபின் மந்திரம் செபிக்கும் முறை.

ஸுத்ருசோ மதனாவாஸம்
பஸ்யன் ய: ப்ரஜபேன் மனும்:
அயுதம் ஸோசி ராதேவ
வாக்பதே: ஸமதாமியாத்

பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு, பத்தாயிரம் மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமனாவான். மந்திரம் ஜபிக்க வேண்டிய முறை மற்றொன்று:-

திகம்பரோ முக்தகேச: ஸ்மசானஸ்தோ தியாமினி:
பேத்யோ யுதமேலஸ்ய பவேயு: சர்வகாமனா:
பொருள்: இரவு சுடுகாட்டின்கண் நிர்வாணமாக இருந்து கொண்டு தலைமயிரை அவிழ்த்துவிட்டுப் பதினாயிரம் உரு செபிக்கிறவனுக்குக் கோரிய பலன் கைகூடும்.
சாவம் ஹ்ருதயமாருஹ்ய
நிர்வாஸா: ப்ரேத பூகத;
அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப் யக்தேன
ஸ்வீயரேதஸா. தேவீம் ய: பூஜயேத் பக்த்யா
ஜபன்னே கைக சோமனும்
ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத் (மஹோததி)

பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம்பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரம் சொல்லித் தேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவன்.
1
ரஜ: கீர்ணபகம் நார்யா
த்யாயன்யோ யுத மாஜபேத்;
ஸகவித்வேனரம்யேண ஜனான்
மோஹயதி த்ருவம்
பொருள்: தூரமான பெண்ணின் இரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு செபிக்கிறவன் மதுரமான செய்யுட்களால் உலகத்தை மயக்குவான்

..........................சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்;
மஹாகாலேனதேவேன மாரயுத்தம் ப்ரகுர் வதீம்,
தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸுரதம் ஸவயம்
ஜபேத் ஹைஸ்ரமபிய: ஸசங்கரஸமோ பவேத்

பொருள்: பிணத்தின் மார்பில் இருந்து மஹா காலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்துக் கொண்டு ஒரு பெண்ணுடன் சம்போகித்துக் கொண்டே ஆயிரம் உருவேனும் சபிக்கிறவன் சிவனுக்கு ஒப்பாவான். பூனை, ஆடு இவைகளின் எலும்பு, மயிர், தோல் இவை களும் தசையும் அஷ்டமி இரவு நடுச்சாமத்தில் பலி கொடுத்து மந்திரம் செபிக்கிறவனுக்கு மூன்றுலகமும் கீழ்ப்படியும், பகலில் தேவிக்கு நிவேதித்த அவிசையும், இரவில் மைதுனம்

1 விளம்பரத்தில் கண்ட (3) மூன்றாவது கேள்வியில் உற்பத்தி காலத்திற்கு முன்புள்ள நிலை எவ்வாறு இருந்தது? மேற்கூறியவாறு சைவம், வைதிக மதம் இவைகள் இருந்தது (சைவமும், சாந்தமும் அல்லது தாந்திரீக மதமும்) திருஞான சம்பந்தருக்கும், புத்த, சமணருக்கும் முன்ஒன்றுபோலவே இருந்தது.

பண்ணிக்கொண்டும். லட்சம் தடவை ஜெபித்தால் அரசனாவான். எருமை முதலிய உயிர்களின் இரத்தத்தைத் தர்ப்பணம் செய்துகொண்டு மந்திரம் ஜெபித்தால், எல்லாச் சித்திகளையும் அடைவான்.

- http://viduthalai.in/new/page-3/2531.html?sms_ss=blogger&at_xt=4d4843cb519031e2%2C0

செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஞானசூரியன் -30

மீன், மான், ஆடு, குருவி, வெள்ளாடு, ப்ருஷத் (ஒருவகை மான்), கிருஷ்ண மிருகத்தி, வெள்ளை யாட்டின் கன்று, குரு (ஒரு வகை மான்), பன்றி, முயல் இவைகளின் மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்தியடைகின்றனர்.

பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருட்கள் வருமாறு:
கட்காமிஷம் மஹாசல்கம்

மது முன்யன்னமேவச:
லோஹாமிஷம் காலசாகம்
மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச
பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.
காலசாகம் மஹாசல்கா:
கட்கலோக மிஷன்மது;
ஆனந்த்யாயைவ கல்பந்தே
முன்யன்னானிச ஸர்வச

பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,
ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்

இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.

மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத

பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.

இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே நாள்தோறும் எண்ணிறந்த பலவகைப்பட்ட உயிர்களைக் கொன்று கொண்டிருக்கிற காலத்தில், அஹிம்சை, கொல்லாமை விரதத்தின்கருத்து எங்ஙனம் இவர்களின் மனதிற்பதியும்? இதனால் அஹிம்ஸா பரமோ தர்ம என்னும் வாக்கியமென்றும் இந்து சமயத்தைக் கொலைச் சமயமென்றம் நன்றாய் அறிந்து, அதனின்றும் விலகியவர்களே இவ்விரதத்தை அனுஷ்டிக்க அதிகாரிகள் என்பதும்தான் இத்திருமந்திரத்தை உபதேசித்த புத்தபகவானின் கருத்தென்பதை நன்றாக அறியவேண்டும்.1

ஆபிசார கருமத்தை (சூனியம் வைத்துப் பகைவனைக் கொல்லுதல்) கூடத் தருமமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ச்யேனேனாபிசான் யஜேத
பகைவனைக் கொல்ல விரும்பு வோன் சியேன யாகத்தால் ஆபி சாரம் செய்யக் கடவன்.
இப்பெயர் வந்த தன் காரணமும், இதன் பயனும்
யதாவை ச்யேனோ
நிபத்யாதத்தே ததாயம்
த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்
நிபத்யாதத்தே ததாயம்
த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்
நிபத்யாதத்தே

பொருள்: பருந்தானது கோழி முதலிய ஏழைப் பிராணிகளைத் தூக்கிச் செல்வது போல் இந்த யாகமும் பகைவனை ஒழித்துவிடும் (மரணத்திற்குத் தூக்கிக் கொண்டு போகும்)

1.இக்காலத்தில் பவுத்தர்கள் மாமிசம் சாப்பிடுவதேன் என்ற கேள்விக்கு இடமுண்டு. புத்தர்களை இந்திய நாட்டினின்று துரத்தியடித்த காலத்தில் முறையாகப் புத்த மதத்தைப் பரப்ப முடியாமல் வந்ததுடன், நல்லபழக்கம் சற்றேனும் அக்காலத்துச் சைனா, பார்மா, சிலோன் முதலிய நாட்டில் கிடையாது.

அவர்கள் கடைசியாகப் புத்தரை ஒத்துக்கொண்டு தங்களது முன் பழக்கங்களை நடத்தி வந்தார்கள். இனி இந்திய நாட்டார் முன்போலவே சென்று சாம்மியவாதம் உபதேசிக்கும்போது அத்தகைய தீய ஒழுக்கங்களை அவர்களிடத்திலிருந்து போக்கமுடியும்.

இதற்கு எதிர்மறையாகப் புத்த பகவான் திருவாய் மலர்ந்தருளிய தருமபதம் என்னும் நூலின்கண் ஒரு வாக்கியம் இருப்பது வருமாறு:-

நஹிவேரேன வேரானி
சம்மந்தீஹ குதாசன!
அவேரேனஹி ஸம்மந்தி
ஏஸதம்மோ ஸனந்தனோ (தருமபதம்)

பொருள்: பகையைப் பகையினால் வெல்ல முடியாது; 1நட்பினாலேயே வெல்ல முடியும். இதுதான் என்றும் நிலைத்திருக்கிற தருமம்.

இவை முதலிய வாக்கியங்களால் புத்த பகவானது தருமோபதேசங் களுக்கும், பார்ப்பனரின் தரும நூலிற்கும், இரவிற்கும், பகலுக்கும் இருப்பதைப் போன்ற வேற்றுமை இருப்பதாகப் பெறப்பட்டது. இந்தச் சியேன யாகம் தருமமா? அதருமமா? என்று சந்தேகித்த நவீன மீமாம்ஸகனாகிய கண்டதேவன் வேத வாக்கியமானதால், தருமந்தான் என்று முடிவில் உறுதிப்படுத்துகிறார்.

- http://viduthalai.in/new/page-3/2022.html

வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஞானசூரியன் தொடர்-29

இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர்களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத்தில் வியாபிசாரத் திற்கு அனுமதிச்சீட்டுப் பெற்றுக்கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம். இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதல் முதலாகப் பார்த்த புத்தபகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட் கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.

குசா: சாகம் பயோ மத்ஸ்யா:
கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;
மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்
ப்ரத்யாக்யேயம் நவாரிச
பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராம ணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன். அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:

மஹோக்ஷம் லா மஹாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா, ஸேவனம்
ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்க வேண்டும்.

(மற்ற அவயவங்களைப் போலவே வயிறும் பெரிதாய் இருக்குமென்ற காரணத்தினால், மிருகத்தைக் குறிப்பிடு கிறார் போலும்) இத்தகைய சுரோத்திரியனைச் சக்கர வர்த்தியாயினும எழுந்து வணங்கவேண்டும்.

உணவின் பாகுபாடு கூறுமிடத்து க்ரல்யாத தாதயூ ஹாதி (ஊனைத்தின்று உயிர் வாழ்கின்ற பிராணிகள்) உண்ணத்தகாதன என்று கூறிவிட்டு உண்ணத்தக்கன வற்றைக் கூறுவதையும் கவனியுங்கள்.

பக்ஷயா பஞ்சநகா ஸேதா
கோதா கச்சபசல்யகா
கசஸ்ச மசஸ்யேஷ்வரிஹி
சிம்ஹதுண்டாக ரோஹிதா

பொருள்: உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முட்பன்றி , முயல் இவைகளும், சிங்கமத்சயம் முதலிய மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்திய டைகின்றனர்.

பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருள்கள் வருமாறு:

கட்காமிஷம் மஹாசல்கம்
மது முன்யன்ன மேவச:
லோஹாமிஷம் காலசாகம்
மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச
பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.

காலசாகம் மஹாசல்கா:
கட்கலோக மிஷன்மது;
ஆனந்த்யாயைவ கல்பந்தே
முன்யன்னானிச ஸர்வச
பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,

ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்
இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.
மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத

பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.

இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே மீன் வகைகளும் உண்ணத்தக்கனவாம். இந்த உணவு தேவர்களோடு நிற்கவில்லை. பிதிர்களுக்கும் மாமிசம் வேண்டுமாம். ஒருவன் செத்தபின் கூட அவனால் மிருகங்களுக்குத் துன்பம் ஒழிந்தபாடில்லை.

ஹவிஷ்யானேன வை மாஸம்
பாயசேனது வத்ஸாம்;
மாத்ஸ்யஹாரிண ஔரப்
சாகுனச் சாகபார்ஷதை
அய்ணரௌரவவாராஹசானர்
மாப்ஸர்யதாக்ரமம்:
மாம்ஸவ்ருத்யாஹி துஷ்யந்தி
தத்தைரிஹ பிதாமஹை
பொருள்: சாதாரண அவிசினால் ஒரு மாதமும், பாயசத்தினால் ஒரு வருடமும் பிதிர்கள் திருப்தியடை கிறார்கள்.

- http://viduthalai.in/new/page-3/1248.html

புதன், 12 ஜனவரி, 2011

ஞானசூரியன் தொடர்-28

வால் எஜமானின் பத்தினிகளைச் சார்ந்தது. இவர்கள் இதை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கக்கடவர். வலத் தோளிலுள்ள மாமிசமும், மணியைப் போலிருக்கிற மாமிசமும், விலாப்புறத்தில் மூன்று பிரிவுகளாயிருக்கிற கீஸமும்

*க்ராவஸ்துத்திற்கும், இடத் தோளிலுள்ள மாமிச மும், வைகர்த்தமென்கிற மாமிசத்தில் பாதியும்

* இந்தக் குறிகள் இடப்பட்டவர்கள் ஒவ்வொரு புரோகிதர்க ளென்று அறிந்துகொள்க. யாகத்தில் மேற்கூறிய பெயர்க ளாகும்.

ஃ கை பாஹு என்று தனித்தனி சொல்வதால், ஒன்று மேல்பாகமும் மற்றது அடிப்பாகமும் என்று சாயனாச்சாரியார் கூறுகிறார்.

*உன்னேதாவிற்கும், வைகர்த்தத்தின் மற்றொரு பாதியும், க்லோமா என்கிற மாமிசமும் *கமிதாவிற்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும்.

ஆனால், இந்தக்கமிதா பிராமண ரல்லாத ஒருவனால் யாருக்கேனும் ஒரு 1பிராமணனுக்கே கொடுத்துவிட வேண்டும். தலை, சுப்பிரமணியனைச் சார்ந் தது. தோலை 2சக்தியை உச்சரித்த பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். இடையை எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது ஹோதா தனியாகவே எடுத்துக் கொள்ளலாம்3. ஆண்டுதோறும் பசு யாகம் செய்யவேண்டும் என்ற விதியின் கருத்து இத்தன்மையதென்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மாம்ஸீயந்தி ஹ்வா அக்னயோஜுஹ்வதோ யஜமா னஸ்யதே யஜமான மேவத்யாயந்தி; யஜமானம் ஸங்கல்ப் யந்தி; பசந்திஹ்வா அன்யேஷ்வ க்னிஷுவ்ருதா மாம்ஸம்: அதை தேஷாம் நான்யாமாம் ஸாசாவித்யதே யஸ்ய சைதே பவந்தி தம்ததோ நானீ ஜானம் பசுனா ஸம்வத்ஸரோவ்ய தீயாத் ஆயுஷயோஹ்வா அஸ்யைஷ ஆத்ம நிஷ்க்ரயண

பொருள்: மாமிச யாகம் பண்ணாத எஜமானின் அக்னி எப்போதும் மாமிசத்தையே விரும்பிக்கொண்டிருக்கின்றன. இவனையே தின்று விடலாமா என்றும் நினைக்கின்றது. இவன் தினந்தோறும் மாமிசத்தைச் சமைத்து உண்கிறா னாதலால், இவனுக்கும் சமையல், அக்னிக்கும் மாமிசம் கிடைக்கிறது. யாகம் செய்கிற காலம் தவிர, எங்களுக்கு மாமிசம் கிடையாது. அதுவும் அவ்வக்காலங்களில் இப்பாவி தருகின்றானில்லை என்றும், இவ்விதமாக அக்கினிகள் நினைப்பதனால், தன் ஆயுள் விருத்திக்குக்

1. நோச்சிஸ்டம் நஹவிஷ்க்ருதம் (யாகசேஷமாகிய அவிசைக் சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது) என்கிற மனுவின் வாக்கு இக்கருத்திற்கு ஒத்திருக்கிறது.

2. பசுக்கொலை செய்வதாக துருக்கர்களிடம் சண்டை தொடுக்கும் ஆரியர்கள் இத்தகைய வேதவாக்கியங்களை உணர்ந்திருந்தால், கலகத்திற்கு இடமுண்டாக மாட்டாது.

3. ஆமாம் அய்யரே! யாகத்தில் கொலையுண்ட பசு, ஆடு, மனிதன், முதலிய பிராணிகள் உயிர்கொடுத்து அனுப்புவது வழக்கம். எங்களுடைய ரிஷிகள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறீர். இப்படிப் பங்கு கேட்டுச் சாப்பிட்டால், எதை எழுப்புவது தெரியவில்லையே.
காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ் தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன்.

இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என் னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற் குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டை களையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்விதம் கொலையே பிரமா ணமாகவுடைய யாகமே சுவர்க்கமென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும். இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர் களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத் தில் வியாபிசாரத்திற்கு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம்.

இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதன் முதலாகப் பார்த்த புத்த பகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட்கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.

குசா: சாகம் பயோ மத்ஸ்யா:
கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;
மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்
ப்ரத்யாக்யேயம் நவாரிச

பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராமணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன் அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:

மஹோக்ஷம் லா மஹாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா, ஸேவனம்
ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த காரணமான மாமிச யாகத்தை ஆஹிதாக்நி (கிருகஸ்தன்)யானவன் ஆண்டுதோறும் செய்யக் கடவன். இதே கருத்தை ப்ரதி ஸம்வத்ஸாம் ஸோம்: பசு, ப்ரதிய யனம் ததா; என்னும் வாக்கியத்தால் யாக்ஞவல்கியரும் வெளியிடுகிறார். சயனகர்மத் திற்குரிய கட்டத்திற்குச் செங்கற்களைச் சேர்த்துக் கட்டும்போது தவளைகளையும், மரவட்டைகளையும் கொன்று பசையை யெடுத்துக் கட்டும்படி சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதம் கொலையே பிரமாணமாகவுடைய யாகமே சுவர்க்க மென்னும் மாடிமேல் ஏறுவதற்கு ஏணியாகும்.

- http://viduthalai.in/new/page-3/1191.html

புதன், 5 ஜனவரி, 2011

ஞானசூரியன்-27

அதற்கு உதாரணம்:
ஜாமிவா ஏதத் யஞ்ஸ்ய க்ரியதே
யகன்வஞ் செளபுரோடாசெள
புரோடாசம் மாத்திரம் உட்கொள்ளுவதால், யஜ்ஞ, புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக் கும் பொருட்டு மத்தியில் 1வபா ஹோமம் செய்யவேண்டும்.
யஜ்ஞார்த்தம் பசவ; ஸ்ருஷ்டா:
ஸ்வயமேவ ஸ்வயம்புவா;
யஜ் ஞஸ்ய பூத்யை ஸர்வஸ்ய
தஸ்மாத் யஜ்ஞே வதோவத:
பொருள்: உயிர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிய யாகத்தின் பொருட்டுப் பிரம்மன் மிருகங்களைச் சிருஷ்டித் தான். (மனிதர்கள் மிருங்களைக் கொன்று தேவர்களுக்குக் கொடுப்பதுதான்மிருகங்களைச் சிருஷ்டித்தன் கருத்துப் போலும்). அதனால், யாகத்தில் செய்யும் கொலை பாவமாகமாட்டாது.
கொலைத் தொழில் பாவத்தை உண்டாக்குமாயினும், யாகத்தின் பொருட்டுச் செய்யும் அத்தொழில் புண்ணி யத்தையே பயக்கும் என்பது
1. வபா என்பது மனிதன் முதலிய எல்லா ஜீவன்களுடைய சரீரத்திலும் இடப்பக்கத்தின் புறத்திலுள்ள ஒரு விதமான கொழுப்பு
வைதிக மதம். கொல்லப்பட்ட பசுவின் அவயவங்களைத் தேவர்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய முறை கூறப் பட்டிருப்பதையும் கவனியுங்கள்.
ஹ்ருதயம் ஜிஹ்வா வக்ஷோ
யக்ரித் வ்ருக்வயள ஸ்வயம்
தோருபே பார்சுவே ஸ்ரோணிர்
குதத்ரிதீயமிதி தைவதானி:
தக்ஷிணம் தோஸ்ஸவ்யா ஸ்ரோணிர்
குதத்ரிதீயமிதி ஸௌவிஷ்ட
க்ருதானி; க்லோமானம் ப்லீஹாததம்
தனீஷ்டு மத்யூத்னீம் புரீனம்
மேதோ ஜாகனீ மித்யுத்தரதி (ஆபஸ்தம்ப ஸ்ரௌத சூத்திரம்)
பொருள்: ஈரல், நாக்கு, மார்பு 1யக்ருத் இரண்டு பக்கங்களிலும் உருண்ட வடிவாயிருக்கிற தசை, இடக்கை, இட விலாப்பக்கம், வலத் தொடையின் மேற்பக்கம், புட்டத் தின் மூன்றிலொரு பங்கு இவ்வளவும் தேவர்களுக்காகவும், வலக் கை, இடத்தொடையின் மேற்புறம், புட்டத்தின் மூன்றிலொரு பங்கு இவைகள் ஸ்விஷ்டக் ருத்ஹோமத்தின் பொருட்டும், யக்ருத்தைப் போன்றதும், திலகமென்ற பெயருள்ளதுமான மாமிசம், நுரையீரல், சிறுகுடல், மடி கொழுப்பு, வால் இவைகளும் எடுக்கவேண்டும்.

அவிசு பங்கிடும் முறை

அதாத; பசோர் விபக்திஸ்தஸ்ய விபாபகம் வக்ஷயாம்: ஹனூஸ ஜிஹ்வே ப்ரஸ்தோது: ஸ்யேனம் வக்ஷஉத்காது: கண்ட: காகுதர: ப்ரதிஹர்த்து: தக்ஷிணாஸ் ரோணிர் ஹோது: ஸவ்யா ப்ராஹ்மண: தக்ஷிணம் ஸக்தி: மைத்ரா வருணஸ்ய ஸவ்யம் ப்ராஹ்ம ணாச் சம்ஸின: தக்ஷிணம் பார்ஸ்வம் மாம்ஸ மத்வர்யோ: ஸவ்யமுப காத் ரூணாம் ஸவ் யாம்ஸ: ப்ரதிப்ரஸ் தாது: தக்ஷிணம் தோர்நேஷ்ட: ஸ்வயம் போது: தக்ஷிண ஊருரச்சாவாகஸ்ய ஸவ்ய ஆக்நீத்ரஸ்ய தக்ஷிணோ பாகுராத் ரேயஸ்ய ஸவ்யஸ் ஸதஸ்யஸ்ய ஸதம் சானூகஞ்ச க்ருஹபதே: தக்ஷிணௌ பாதென 1. இந்தச் சூத்திரத்திற்குப் பொருள் தயானந்த சரஸ்வதியை (ஆர்ய சாம்ராஜ்யத்தை)க் கேட்டால், என்ன உத்தரவு சொல்லுமோ அறியேன். ஆனால், இன்றுநாள் வரைக்கும் ஜனங்கள் அனுஷ்டித்து வந்த முறையை இங்கு வரைந்துள்ளேன்.
க்ருஹபதே வ்ரதப் ரதஸ்ய ஓஷ்ட ஏதயோ ஸாதாரணோபவதி தம் க்ருஹபதி ரேவ ப்ரசிம்ஷயாத் ஜாகனீம் பத்னீப்யோ ஹரந்தி தாம் பாஹ்மணாயதத்யு: ஸ்கந்தாஸ் சமணி காஸ்திரஸ்ச கீகஸா க்ராவஸ்துத: திஸ்ரஸ்சைவ கீகஸா அர்த்தஞ்ச வைகர்த்தஸ் யோன்னேது: அர்த்தஞ் சவைகர்த்தஸ்ய க்லோமாசகமிது தத்ப்ராஹ்மணாய தத்யாத் யத்யப்ராஹ்மனஸ் ஸ்யாத்: சாரஸுப்ரஹ்மண்யாயைய்யஸ் வஸ்ஸய்த்யாம் ப்ராஹ தஸ்யா ஜினமினி ஷர்வேஷாம் ஹோதுர்வா

(அய்தரேய ப்ராஹ்மணம்)

பொருள்: கொல்லப்பட்ட பசுவைப் பங்கிடும் வகை சொல்லப்படுகின்றது. நாக்கு **ப்ரஸ்தோதாவிற்கும், பருந்தின் வடிவத்தையுடைய மார்பு *உத்காதாவிற்கும், கழுத்தும் முதுகிலிருக்கிற கொண்டையும் *ப்ரதிஹர்த்தா விற்கும், வலத் தொடை *ஹோதாவிற்கும் இடத் தொடை *பிரம்மாவிற்கும், வலத் தொடையின் அடிப்பக்கம் மைத்திரா வருணனுக்கும், இடப்பக்கம் *ப்ராம்மணாச் சம்சிக்கும், வல விலாப்புறமும், வலது தோளும் அத்வர்யு வுக்கும், இடது விலாப்புறம் *உபாகாதாக்களுக்கும், இடத்தோள் ங*ப்ரதிப்ரஸ்தாவிற்கும், வலக்கை *நேஷ்டா விற்கும், இடக்கை *போதா விற்கும், வலத் தொடை *அச்சாவாகனுக்கும், இடத்தொடை ஆக்னீத் ரனுக்கும், ஃவலக்கை *ஆத்ரேயனுக்கும், இடக்கை *ஸதஸ்யனுக்கும், வல விலாவெலும்பும் அலைதாடியும் *க்ருஹபதிக்கும், வலக் கால் போஜன தாதாவாகிய *க்ருஹபதிக்கும், இடக் கால்*க்ருஹபதி மனைவிக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். உதடு கணவனுக்கும் மனைவிக்கும் உரித் தானது. அதை க்ருஹபதி கையாலெடுத்து இது உன்னு டையது என்று சொல்லி மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

- http://viduthalai.in/new/page-3/728

வெள்ளி, 31 டிசம்பர், 2010

மனிதனை சிந்திக்க வைத்த சிந்தனைச் சிற்பி பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றிட உறுதிமொழி ஏற்றனர்!




தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் சிலைக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு தந்தை பெரியாரின் பணிகளை தமிழர் தலைவர் தலைமையில் முடிப்போம் என்று உறுதி எடுத்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், செஞ்சி நகரத்தலைவர் அண்ணாமலை, சித்தரசூர் இராமநாதன், அனந்தபுரம் தண்டபாணி மற்றும் சிறப்பு அழைப் பாளராக அனந்த புரம் திமுக நகர செயலாளர் கல்யாண்குமார் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செய லாளர் கதிரவன் வரவேற்று பேசினார். காணை ஒன்றிய தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

வியாழன், 30 டிசம்பர், 2010

ஞானசூரியன்-26

இந்துமதமும், ஜீவகாருண்யமும்

இக்காலத்தில் இந்துக்களில் சிலர் அஹிம்ஸா பரமோ தர்ம கொல்லாமையே சிறந்த தருமம், இதுதான் வேதத் தின் கருத்து என்று கூறுகிறார்கள். இவர்களின் கூற்றை யும் சிறிது ஆராய்வோம்.
மனம் முதலிய முக்கரணங்களினாலும் உயிர்களுக்குத் துன்பத்தை விளைவிக்காமல் உயிர்வாழ வேண்டும் என்ற உபதேச மொழியானது புத்தபகவானது திருவாக்கினின்றும் முதன்முதலாக வெளிப்பட்டது. பிற்காலத்தில் இந்து மதத்தலைவர்கள் இந்த வாக்கியத்தைக் கற்றுக் கொண்டு, இதுவும் தங்களுக்கென்று வாய்ப்பேச்சில் மட்டும் வைத்துக் கொண்டார்கள். ஆனால், வங்காளிகள் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அவர்களில் நான்கு வருணத்தினரும் மாமிசத்தையும் மச்சத்தையும் உணவாகக் கொள்ளு கிறார்கள். இந்து சமயப்பிரகாரம் சந்நியாசத்திற்கு உரிமை யில்லாதவரும் ஆனால், சந்நியாசி என்ற பெயரால் அறியப் படுபவருமான சுவாமி விவேகானந்தர் சொல்லியி ருப்பதைக் கேளுங்கள்.
என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும், அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டு வந்தார். ஒரு உயிரைக்கொல்வது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது. 1இக்கால நிலைமைக்கு மனிதனுக்கு மாமிச உணவு அவசியமானது. உதவியற்ற சில ஆடுகளைக் கொல்வதும், தனது மனைவி மக்களைப் பகைவர்களிடமிருந்து மீட்க முடியாமலிருப்பதுமாகிய இவ்விரண்டில் எது அதிக பாவம் என்பதை ஆராயவேண்டும். உடலுழைப் பில்லாமல் உயிர் வாழ்கிற சில உயர் குடிப்பிறந்தார். மாமிச உணவை விரும்பாவிடின் அவர்களுக்கு வேண்டாம். உடல் உழைப்பினால் உயிர் வாழும்படியான நிலைமையில் உள்ளவர்கள், இந்த அஹிம்சா விரதத்தைப் பின்பற்றுவதால் சமுதாயத்திற்குப் பெரிய 1. இக்கூற்று விவேகானந்தருடைய மதம் மட்டுமல்ல இந்துக்களுடைய எல்லா முக்கிய நூல்களும் மாமிசம் மரக்கறிப் பதார்த்தம் வேண்டுமளவு கிடைக்கும் நாட்டில் மாமிசம் புசிப்பது மிக்க கெடுதி. அதிலும் ஜீவகாருண்யமே உருவான சந்நியாசிகள் (துறவிகள்) செய்வது பெருங்குற்றம். அராபியா முதலிய நாட்டில் அவர்கள் கொலை புரிந்துண்டாலும், அது குற்றமாகச் சொல்வதற் கில்லை. அந்நாடு பொதுவான மற்ற உணவுகள் கிடைக்காத நாடு. பர்மா, இந்தியா சிலோன் முதலிய நாட்டு ஜனங்களும் இதற்கொத்த நாட்டு ஜனங்களும் ஜீவஹிம்சை செய்வது, உயிர்வாழ்வது பிசகென்றே கூறலாம்.
கேடுவிளையும். இந்துமதத்தை நன்றாக ஆராய்ந்ததனா லேயே சிலர் இவ்விதம் சொல்ல நேர்ந்தது. இந்துக்களும் அவர்களின் தெய்வங்களும் மாமிச உணவையே விரும்புவ தாகக் கீழ்க்காணும் மனுவின் வாக்கியங்களால் உணரக் கிடக்கிறது.
ப்ராணஸ்யான்னமிதம் ஸர்வம் ப்ரஜாபதிரகல் பயத்:
ஸ்தாவரம் ஜங்க மம் சைவ
ஸர்வம் ப்ரா ணஸ்ய போஜனம்.
சரணாம்ன்னமசரா
தம்ஸ்ட்ரிணாமப் யதம்ஷ்ட்ரிண:
அஹஸ்தாஸ்ச ஸ்ஹஸ்தா நாம்
சூரானாம் சைவபீரவ:
நாத்தா துஷ்யத்ய தன்னாத்யான்
ப்ராணினோஹன் யஹன்யபி:
தாத்ரைவ ஸ்ருஷ்டாஹ்யாத்யாஸ்ச
ப்ராணினோத்தாரஏவ்ச
பொருள்: சரம், அசரம் (அசையும் பொருள், அசையாப்பொருள்) ஆகிய இவ்வுலகு உயிர்களின் உணவின் பொருட்டுப் பிரம்ம தேவனால் படைக்கப் பட்டிருக்கிறது. அசையா உயிர்கள் சர உயிர்களுக்கு உணவாவது போலவே, கோரைப் பற்கள் இல்லாதவை அவைகளையுடைய உயிர்களுக்கும், ஏழைகள் வலிமையுடையவர்களுக்கும் உணவாகையால், இவ்விதம் உண்பதனால் பாவமுண்டாகமாட்டாது. ஏனெனின், உண்ணுகின்றனவும் உண்ணத் தக்கனவுமான உயிர்களை இதே கருத்துடன் பிரம்மா படைத்தார்.
இந்தப் பிரமாணப்படிக்கு ஏழைகளைப் பலசாலிகள் கொன்றார்களே ஒழிய, தின்னாமல் இருந்ததே அதிர்ஷ்டவசம். தின்றிருப்பார்களாயின், கொலையானது மிதமிஞ்சிப் பெருகியிருக்கும். புத்தபகவானுடைய புத்திமான் பலசாலியாவதன்றி பலசாலி புத்திமான வதல்ல. இதை நன்றாக மற்றுமுள்ளோர் அறியவேண்டும். புத்திமந்திரம் சித்த மந்திரம், என்கிற பஞ்சப்ர மேட்டி மந்திரத்தையும், அவ்வாறே ஜபம் பண்ணத்தகுந்தது. இதை விரிவாக மற்றோரிடத்தில் கூறுகிறோம்.
கொள்கைக்கு விரோதமாகவே மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனை யும் விதித்திருக்கிறார்.
நியுக்தஸ்து யாதான்யாயம்
யோமாம்ஸம் நாத்திமானவ:
ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:
னேக் விம்சதிம் (மனு)
பொருள்: சிரார்த்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உண்ணாவிடின், இருபத்தொருதடவை மிருகமாகப் பிறப்பான். இத்தகைய வாக்கியங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளுகிறவர்களே, அஹிம்சா தருமம் என்பதற்கு வேதக்கருத்துகள் பல என்றுகூறி, அறிவிலிகளை மயக்குகிறார்கள். யாகங்களில் தேவதை களுக்குச் கள்ளும் ஊனுமே படைக்க வேண்டும்.

- http://www.viduthalai.periyar.org.in/20101229/news09.html

செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஞானசூரியன்-25

ஞானசூரியன்
1நாள்தோறும் காயத்திரி மந்திரம் ஜபிக்கிறவன் எத்தகைய இழி தொழில்களைச் செய்தாலும், அப்பாவங்கள் அவனையணுகாது. முக்தியானது அவன் கைக்குள்ளிருக்கிறது. திருமால் கோயில் திருப்பணி செய்வோன் அளவிறந்த காலம் விண் நாட்டில் சுகமனுபவிப்பான்.
1. காயத்திரி செய்கிறவன் எத்தகைய கெடுதியும் செய்யமாட்டான் என்று பொருள்; செய்தால் அதன் பயனை அனுபவிப்பான். ஆனால், அந்த மந்திரம் சூத்திரன் ஜபம் பண்ணலாகாதாம்; காயத்திரியை உண்டு பண்ணினவன் அனாரியன். (சாமியவாதி விசுவாமித்திரன்) இது எல்லோருக்கும் ஜபம் பண்ண உரிமையுள்ளது. இது அனாரியனது சொந்தம்.
திருமால் திருவடிகளில் அர்ச்சிக்கிற ஒவ்வொரு பூவும் அர்ச்சிப்பவனைப் பத்தாயிரம் ஆண்டுகள் விண்ணாட்டில் இருக்கச் செய்யும். ஆனால், மக்களின் பெருக்கத்தால் அங்கு இடமில்லாமற் போகாதது ஒன்றே பெரும் வியப்பிற்கு இடந்தருகின்றது. எல்லாப் பாவங்களையும் நாசம் பண்ணுகிற இத்தகைய பிரமாணங்களை நம்புவோர்கள் வியபிசாரம் பண்ணலாகாதா? கள் குடிக்கலாகாதா? எல்லாம் செய்யலாம். ஆனால், இவைகளை நம்பாத அறிவாளிகள் முற்கூறியவர்களின் சுவர்க்க வாசத்தை நரகவாசமென்றே கருதுவார்கள்.

விவாகம் என்கிற முறையே இவர்கள் சமயத்தில் இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. முற்காலங்களில் விலங்குகளைப் போலவே நடந்து வந்தார்கள் என்பது, வைனதேயன் ஆதிதேயா முதலிய பெயர்களினால் வெளிப்படை. பிற்காலங்களில் பிதாவின் பெயரும் சேர்த்துக் குலத்தின் பெயரைக் கூறிவந்தார்கள். இராவன் பார்க்கவன் முதலிய பெயர்கள் பிதாவின் வழியைக் குறிக்கும் சைனதேயன் ஆதிதேயன் முதலிய பெயர்கள் எதிர்மறையாக 2மாதாவின் பெயரைக் குறித்தலால், அக்காலம் பிதாவைக் குறித்து அறிவில்லாதிருந்த காலம் என்று ஊகிக்க இடமிருக் கிறது. முற்காலத்தில் வியபிசாரத்தைக் குற்றமாகக் கருதவில்லையென்பது கீழ்க்காணும் தந்தைகள் இருந்தால், அவ்விருவர்களுக்கும் பிண்டம் போடும்போது செய்யவேண்டிய விதி வருமாறு:
யதி த்விபிதாஸ்யா தேகைகஸ்மின்
பிண்டேத்வெனத் வாவுபல க்ஷயேத் (ஆப்ஸ்தம்பர்)
1. இப்படிப்பட்ட விஷயங்களைப் புத்தக ரூபமாக எழுதியதாலல்லவோ சிவன், விஷ்ணு முதலிய ஆலயங்கள் பஞ்சமாபாதகத்திற்கு மூலஸ்தானமானது. விபச்சாரங்களும் பொய்ப் புரட்டும் ஜயமடைவதற்குக் கோவிலல்லவோ முக்கியவிடம்- இவ்விடங்களை முஸல்மான் இடித்ததைப் பற்றித் துக்கிக்கலாமா? கோயிலையும் கோயிலிலுள்ள கடவுளையும் துலுக்கன் இடிப்பதற்குக் கோயிலும் கோயில் கடவுளும் என்ன கர்மம் செய்தன? கர்ம பலன்தானே அனுபவிக்கும் காரணம்? கோயில் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அன்பர்களுக்கும் அய்ந்து வகையான பெரும் பாதகங்கள் செய்யும் ஓர் ஸ்தலமாகும்.
2. இது பிரஹ தாரணியக உபநிஷத்தில் மாதுர்வர்க்கம், பிதுர்வர்க்கம் என இரண்டு பிரிவாகவே கூறியுள்ளது.
பொருள்: ஒருவனுக்கு இரண்டு தந்தைகளிருந் தால், ஒரு பிண்டத்திலேயே அவ்விருவர்களையும் குறிக்க வேண்டும். பிண்டம் போடும்போது சொல்லவேண்டிய யேசத்வாமனு என்கிற மந்திரத்தை எதத்வாம் - தாதெனயேசயுவாமனு என்றிவ்வாறு சொல்லவேண்டும். (சிரார்த்த காலத்திய உபஸ்தான மந்திரம்) எழுந்து நின்று கீழ்க் குறித்தபடி சொல்லவேண்டியது.
யன்மே மாதா பிப்ரமமாத, யச்சாரனனுவ்ரதம்;
தன்மே ரேத,
பிதாவ்ருங்க்த மாபூரன் யோபபதயதாம்;
பித்ருப்ய ஸ்வதா விப்ய: ஸ்வதா.
பொருள்: என் தாய் ஒழுக்கந் தவறிவிட்டாள்; அவள் தீய வழியில் ஒழுகினாள்! அந்த ரேதஸை (வீரியத்தை) தந்தையே உமதாக நினைத்துக் கொள்ளவேண்டும். வியபிசாரத்தினால் பிறந்தவனாகிய நான் கொடுக்கிற இந்தப் பிண்டத்தைத் தன் மகனால் கொடுக்கப் படுகிறதென்று நினைத்துப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்பது பொருள். இந்தப் பிரமாணத்தைப் பின்பற்றி இப்போதும் சிரார்த்தம் நடத்திவருகிறார்கள்.
முதற்கூறியபடி நெய் தேய்த்துக்கொண்டு புணர்ச்சி செய்து புத்திரன் பிறந்தால், அவன் தாய்க்கே உரியவன் என்று யாக்ஞவல்கியர் கூறுகிறார். அனேனவிதினா ஜாத; க்ஷேத்ரிண: ஸபவேத்ஸுத்
இங்கு க்ஷேத்ரி என்றசொல்லிற்கு நிலத்தின் சொந்தக்காரன் என்று பொருள். மக்களைப் பெறுதல் பயிர்த் தொழில் போன்றதால், தாயின் சரீரம் நிலமும், தந்தையின் வீரியம் வித்தும் என்பர் வட நூலார்1
இம்முறையை முகம்மது நபியும் தம் குரானில் கூறியுள்ளார்.
இயற்கைக்கு முரணாகவே மனிதப் பெண்களையும் விலங்குகளோடு புணரச் செய்தல் முதலிய அருவருக்கத்தக்க காரியங்களும் கடவுள் வழிபாடாக அக்காலத்தில் நம்பி, அங்ஙனம் செய்து வந்திருந்தனரென்பது நான்காவது அத்தியாயத்தில் விளக்கமாக்கப்படும்.
1. அஸ்வமேதம் முதலிய யாகங்களென்க.

- http://www.viduthalai.periyar.org.in/20101228/news12.html

திங்கள், 27 டிசம்பர், 2010

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வெடிகுண்டு வழக்கு
ஊடகங்கள் இதைப் பெரிதுபடுத்தவில்லை - ஏன்? இராசா திராவிடர் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் சுற்றிச் சுற்றி வருவதா?
பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, டிச. 25- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெடிகுண்டு வழக்கு இவைகளில் சிக்கியவர்கள் யார்? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தினவா? இராசாவை மட்டும் குற்றம் சுமத்தி ஊடகங்கள் பெரிதுபடுத்தக் காரணம் இராசா திராவிடர் என்பதுதானே? என்று திராவி டர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பி னார்.
தந்தை பெரியார் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 24.12.2010 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:
தந்தை பெரியாருடைய நினைவு நாள் இன்று. இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். பார்ப் பன ஊடகங்கள் ஆரியர் - திராவிடர் போராட் டத்தை எப்படி இன்றைக்கும் நடத்திக் கொண்டி ருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் என்று சொல்லுவதற்கு நான் சங்கடப் படுகின்றேன். ஏனென்றால், தமிழர்கள் என்ற பெய ரில் பார்ப்பனரும் சேர்ந்து நானும் தமிழன்தான் என்று வரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.
திராவிட உணர்வு
எனவே, திராவிடர் என்ற உணர்வை தந்தை பெரியார் அவர்கள் மக்களிடம் பரப்பினார். திரா விடர் கழகம் என்றே அதற்குப் பெயரிட்டார். தொலைந்து போன நம்முடைய அடையாளத்தை மீட்டெடுத்தார் தந்தை பெரியார்.
இந்த உணர்வை இன்னும் பல தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய மகத்தான கடமை நமக் கெல்லாம் உண்டு. 1925 ஆம் ஆண்டுதான் சுயமரி யாதை இயக்கம் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தோன்றியது. சுய மரியாதை இயக்கத்திற்கு நேர் எதிரிடையான அமைப்புதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவெறித்தனம் இன்றைக்கு கொடி கட்டிப் பறக்கிறது.
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்தால் அது தனக்கே என்று சொல்லக் கூடிய அளவில் வந்து, இந்த நாட்டு மக்களை ஏமாற்றி, மதவெறியை மூல தனமாக வைத்து பி.ஜே.பி. கட்சி மத்தியிலே ஆண்டது.
ஜெயலலிதாவுக்குப் பிரதமர் என்று நினைப்பா?
இனிமேல் நாம்தான். எல்லாம் நாம்தான். வரலாற்றைப் புரட்டிப் போடலாம். அரசியலை நாம் தான் நிர்ணயிப்போம் என்ற ஆணவத்தோடு இருந்த ஆரிய சக்திகளின் இயக்கமாகத்தான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. இருந்தது. அந்த மதவெறி சக்தியை தோற் கடித்து மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. தமிழகத்திலே கலைஞர் தலைமையிலே ஆட்சி நடைபெறுகிறது.
இங்கே எதிர்கட்சித் தலைவியாக இருக்கின்ற ஜெயலலிதா இராசாவை விசாரித்தால் போதாது; கைது செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார். இவர் என்ன பிரதமர் ஸ்தானத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? (கைதட்டல்) அல்லது அதி காரத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? இந்த அம்மையாருக்கு அறிவு நாணயம் உண்டா?
ஜெயலலிதா மீது சி.பி.அய். வழக்கு 10 ஆண்டு களாக நடந்துகொண்டு இருக்கிறது (கைதட்டல்).
இராசா மீது யூகத்தின் அடிப்படையிலே குற்றச் சாற்று சொல்லுகிறார்கள்.
இந்த அம்மையார் முதலமைச்சராக இருக்கும் பொழுது வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அப்படி பணம் வந்தால் ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? அரசாங்க கஜானாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணத்தை யார் அனுப்பினார்கள் என்று தீர விசாரிக்க வேண்டும்.
அதை விட்டு, விட்டு யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லி தன்னுடைய கணக்கிலே வெளிநாட்டுப் பணத்தை வரவு வைத் துக் கொண்டார்.
யோக்கியன் வருகிறான் சொம்பைத் தூக்கி உள்ளே வை!
பெரியார் ஒரு பழமொழி சொல்லுவார்: யோக் கியன் வருகிறான்; சொம்பைத் தூக்கி உள்ளே வை என்று சொல்வார் (சிரிப்பு - கைதட்டல்).
இராசாவை கைது செய்ய வேண்டும் என்று இந்த அம்மையார் சொல்லுகிறார். இராசாவை கைது செய்ய முகாந்திரம் வேண்டும் வழக்குபடி. வழக்கில் முகாந்திரம் இருந்தால்தானே கைது செய்ய முடியும்? இதோ இங்கே வழக்கறிஞர்கள் உட்கார்ந் திருக்கிறார்கள். நீதிபதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இது என்ன, இடிஅமீன் ஆட்சியா?
எதுவும் சட்டப்படிதான் செய்ய முடியும். உடனே கைது செய்ய வேண்டும் என்றால் இது என்ன இடி அமீன் ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?
சரி, இந்த அம்மையார் வழிகாட்டியிருக்கின் றாரா? இந்த அம்மையாருக்கு சி.பி.அய்.சம்மன். அனுப்பியிருக்கிறதே, அதற்காக இந்த அம்மை யாரைக் கைது செய்திருக்கிறார்களா? 30 வாய்தா வுக்கு மேலே இவருக்கு வழங்கியிருப்பதாலே முத லிலே ஜெயலலிதாவை அல்லவா சி.பி.அய். கைது செய்திருக்க வேண்டும்? (கைதட்டல்). எந்த பத்திரி கைக்காரராவது இதை எழுதியிருக்கிறாரா?
காரணம் என்ன? முதுகில் பூணூல், அவ்வளவு தான். எனவேதான் சொல்லுகிறோம், இந்த நாட் டிலே மீண்டும் மனுதர்மத்தைத் துளிர்க்க விட மாட்டோம். குழி தோண்டிப் புதைப்போம். இந்த அம்மாவே சி.பி.அய். என்ன வானத்திலிருந்து குதித்ததா? என்று கேட்டவர்தானே!
ஒரே ஒரு காரணம் இராசா திராவிடர் இனத் தைச் சார்ந்தவர். அது மட்டுமல்ல; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்தவர். எனவே, அவருக்காகக் கேட்க நாதியில்லை என்ற நினைப்பு!
சி.பி.அய்.யிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்
இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்களுக்குச் சொல்லுகின்றேன். ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை சி.பி.அய். பல மணி நேரம் குடை, குடை என்று குடைந்திருக்கிறது. ஆனால், இந்த சி.பி.அய்களைத் தாண்டி வரக்கூடிய ஆற்றல் இராசாவுக்கு உண்டு (கைதட்டல்). காரணம், அவர் பயின்ற பள்ளிக் கூடம் திராவிடர் இயக்கத்துப் பள்ளிக்கூடம். பெரியார், அண்ணா, கலைஞர் பள்ளியிலே பயின்றவர் (கைதட்டல்)..
ஆர்.எஸ்.எஸ். தலைவரை பல மணி நேரம் சி.பி.அய் குடைந்து கேள்வி எழுப்பியும், அவர் நேரடியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்று சாதாரணமாக ஒரு செய்தியை வெளியிட்டி ருக்கின்றார்கள்.
இதுபற்றி பெரிதுபடுத்தி யாராவது செய்தி சொல்லியிருக்கின்றார்களா?
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணுப் பார்ப்புக்கொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று, சதி எனக் கண்டோம் என்று பார்ப்பனப் பாரதி பாடியிருக்கின்றாரே. பார்ப்பன பாரதிக்கே பொறுக்க முடியாமல்தானே சொல்லயிருக்கின்றார்.
அய்தராபாத் மெக்கா மசூதியில் வெடிவிபத்து வழக்கில் இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவருக்குப் பங்கு இருக்கிறது என்று ஆதாரத்துடன் கேட்கிறார்கள். இது பயங்கரவாதத்தைச் சேர்ந்தது. இராசா வழக்கு பயங்கரவாதத்தைச் சேர்ந்ததா?
சி.பி.அய். வழக்கில் சொல்வதென்ன?
இவ்வளவு இழப்பு நடந்திருந்தால் என்று தானே ஸ்பெக்ட்ரம் வழக்கிலே சொல்லுகிறார்கள்.
மக்களிடம் இதைச் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அடுக்கி வைத்துக் காட்டினால் எப்படியிருக்கும் என்று சொன்னால் போதுமா? ஆனால், சி.பி.அய். வழக்கிலேயே வெறும் 22 ஆயிரம் கோடி என்றுதான் போட்டிருக்கின் றார்கள்.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியில் 22 ஆயிரம் கோடியை கழித்து விட்டால், ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி புஸ் என்று போய்விட்டது. அனுமான இழப்பு - கற்பனையிலேயே இந்த நிலை.
எவ்வளவு நாளைக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? பார்ப்பன ஊடகங்கள் உங்கள் கைகளிலே இருக்கிறது.
இராசாவை நெருங்கி விட்டார்கள். கோபால புரம் திக் திக். என்ன திக் திக். திக் திக் என்று வேறு இடத்தில் இருப்பவர்களுக்குத்தான் இருக் கிறது (சிரிப்பு கைதட்டல்).
இன்றைய விடுதலையில் இதைப்பற்றி எழுதி யிருக்கின்றோம்.
நெருக்கடி காலத்தையே சந்தித்தவர்கள்
நெருக்கடி காலத்தைவிட மோசமான காலம் இனிமேல் வரப்போவதில்லை. அதைச் சந்தித்த இடம் தான் கோபாலபுரம். அதைச் சந்தித்த இடம்தான் பெரியார் திடல்.
மக்கள் குரல் என்ற அய்யங்கார் பத்திரிகையில் எழுதினார்கள். அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் இருக்கின்றார். பெரியார் திட லுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.
இந்தச் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஏன், பெரியார் திடலுக்கு வருமான வரித்துறையினர் சென்றார்கள் என்றால், கருணாநிதி யின் கருப்புப் பணம் அங்கேதான் உள்ளே இருக்கிறது என்று சொன்னார்கள்.
கலைஞரின் பொற்கால ஆட்சி
நாங்கள் கேட்டோம். எங்ககிட்ட ஏதய்யா கருப்புப் பணம்? அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். அதைத் தாண்டி கலைஞர் அவர்கள் இன்றைக்கு அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை நடத்துகிறாரா? இல்லையா?
ஆறாவது முறையாகவும் கலைஞர் வருவது உறுதி
மீண்டும் ஆறாவது முறையாக அவர்தான் முதலமைச்சராக வரப்போகின்றார். உறுதியாகத் தெரிந்து போய் விட்டது. மக்கள் தயாராகிவிட் டார்கள். பார்ப்பனர்களே நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சி தான். நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தப் பிரச் சாரத்தைச் செய்கிறீர்களோ அடிக்க அடிக்க எழும் பந்து போல மக்கள் மனுதர்மத்தை - ஆரியத்தை குழி தோண்டிப் புதைப்பார்கள்.
மீண்டும் வரப்போவது கலைஞர் ஆட்சிதான், திராவிடர் ஆட்சிதான் என்ற சூளுரையைப் பெரியார் நினைவு நாளில் எடுத்துக் கொள்வோம். பார்ப்பன ஊடகங்களே! நீங்கள் திராவிடர் இனத் தின் மீது வீசுகின்ற குப்பைகள், கூளங்கள், மலங்கள், சேறுகள் எல்லாம் எங்கள் கொள்கை வயலுக்கு இட்ட உரங்கள், உரங்கள் என்று கூறி முடிக்கிறேன். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101225/news05.html

வெள்ளி, 24 டிசம்பர், 2010

அந்த அரிமா நோக்கில்...!

அந்த அரிமா நோக்கில்...!

நமது விழிகளைத் திறந்த பிறகே தன் விழிகளை மூடினார் தந்தை பெரியார்.

அந்த அறிவு ஆசான் உடலால், உயிரால் மறைந்து, 37 ஆண்டுகள் ஓடிவிட்டன!

ஊட்டிய உணர்வுகளும், நிலை நிறுத்திய கொள்கை லட்சியங்களும் ஓங்கி உலகளாவிப் பரவிய வண்ணம் உள்ளன.

அவரால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வேர் பிடித்து, கிளைத்து, பூத்துக் காய்த்து, கனிந்த பலன் களாகி, திராவிடர் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளன. நாளும் தொடரு கின்றது.

அதன் சிறப்பான விளைவுகள் சமூகத் துறையில் மட்டுமல்ல; அரசியலும்கூட பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தலையெடுக்க முடியாத வண்ணம் தடுத்து நிறுத்தி,

சூத்திரர்களின் ஆட்சி சொக்கத் தங்கமெனப் பிரகாசிக்கின்றது; அதனை ஒழித்திடவே தமது சூழ்ச்சி அஸ்திரங்களால் முயலுகின்றனர்!

மனுதர்மத்திற்கு மீண்டும் உயிரூட்ட வானத்திற்கும், பூமிக்குமாய் அலைகின்றது ஆரியம்!

சில தக்கைகள் மிதந்து வந்தால் அதையே தாம் கரையேறக் கிடைத்த மிகப்பெரிய கப்பல்களைப் போல் நம்பி ஓடிப் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.

காகித ஊடக ஓநாய்களின் பூணூல் புலம்பல்கள் புறப்பட்டுக் கிளம்பி, விட்டேனா பார் இந்த சூத்திரர் ஆட்சியை! என்று வேதம் ஓதி சத்ரு சங்கார யாகத்தை ஸ்பெக்ட்ரம் உருவில் நடத்திப் பார்க்கின்றனர்.

ஏவுகணை யுகத்தில் யாகக் கணையா?

ஏவுகணை யுகத்தில் யாகக் கணைகள் என்ன செய்யும் என்று அறியாப் பேதைகள் அவர்கள்!

பகுத்தறிவு ஏவுகணை, பாசறையில் பயிற்சி பெற்ற படையின் முன்னே, தார்ப்பாசூரர்களின் தகிடு தத்தம் ஒருபோதும் பலிக்காது!

மறுக்கப்பட்ட கல்வி, திறக்கப்பட்ட மடை வெள்ளமாகக் கரை புரண்டு ஓடி வருவதனால், சூத்திர சமுதாயம் இன்று பல்கலைக் கழக துணைவேந்தர்களாகி, கல்வியை கனகச்சிதமாக அனைவருக்கும் அளிக்கும் அருமையான பணி செய்கின்றனர்!

பூணூல் வேலிக்குள் சிக்கிக் கிடந்த அறிவு ஜீவி வேலை வாய்ப்பு அவாளுக்கு மட்டுமே என்ற நிலை மாற்றப்பட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா என்று உலகெங்கும் குப்பன் மகன் சுப்பனும், காத்தான் மகள் கருப்பாயியும் கணினி பொறியாளர்களாக விண்வெளிக் கலம் போல உலகெங்கும் வெற்றி உலா வருகின்றனர்!

பெரியார் மறைய மாட்டார்!

பெரியார் மறையவில்லை; மறைய மாட்டார் என்பதற்கு இவற்றைவிட ஆதாரங்கள் வேண்டுமா?

திராவிடத்தால் எழுந்தோம்; நடந்தோம்,

விரைந்தோம் வீறுகொண்டு வெற்றிப்

பாதையில் பயணிக்கிறோம் என்பதை

நன்றியுள்ள அத்துணைப் பேரும் நினைத்து நினைத்து

தந்தையின் தன்னிகரற்ற

தொண்டறம் என்றும் பலன் அளிக்கும் என நம்புகின்றனர்.

நமது சுவாசமே, வாழ்வே அவரால் என்பதால்தான்,

இளைய தலைமுறைகூட பெரியாரால் வாழுகிறோம் யாம் என்று பெருமிதம் பொங்க முழங்குகிறது!

அந்த முழக்கத்தில் அவர்தம் சாதனைகளின் பலன் பளிச்சிடுகிறது!

எனவே, பெரியார் நினைவு நாள் என்பது சடங்கல்ல நமக்கு; சம்பிரதாயம் அல்ல - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

வைக்கம் வீரர் என்று அரிமாவின் நோக்குப்போல வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ஏற்றமிகு வரலாற்றுக் குறிப்பு நாள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

- http://www.viduthalai.periyar.org.in/20101224/news03.html