வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஞானசூரியன் தொடர்-29

இத்தகைய நூறு யாகங்களைச் செய்தவன் இந்திரப் பட்டத்தை அடைந்து தேவர்களுக்குத் தலைவனாவான். அங்குள்ள அப்ஸரஸ்திரீகள் இவனிடத்தில் வியாபிசாரத் திற்கு அனுமதிச்சீட்டுப் பெற்றுக்கொண்டு பூலோகத்திற்கு வந்து, யாகம் செய்கிறவர்களை மயக்கி இடையூறு செய்கிறார்களாம். இத்தகைய ஒரு யாகத்தின் காட்சியை முதல் முதலாகப் பார்த்த புத்தபகவான், கருணை மேலிட்டு அந்த யாகத்தைத் தடுத்துக் கர்த்தாவுக்கு நற்புத்தி புகட்டி ஆட் கொண்ட கதை சரித்திரப் பிரசித்தம்.

குசா: சாகம் பயோ மத்ஸ்யா:
கந்தம் புஷ்பம் ததி க்ஷிதி;
மாம்ஸம் சய்யாஸனன் தான்யம்
ப்ரத்யாக்யேயம் நவாரிச
பொருள்: தருப்பை, காய்கறி, பால், மீன், நறுமண வகைகள், பூ, தயிர், பூமி, இறைச்சி, படுக்கை, ஆசன வகைகள் இவைகளைத் தானமாகக் கொடுத்தால் பிராம ணன் வேண்டாமென்று மறுத்துக் கூறலாகாது. நான்கு வேதங்களும் தெரிந்த ஒரு பிராமணன். அதிதியாக வீட்டிற்கு வந்தால், அவனுக்கு விருந்து செய்யவேண்டிய முறையை யாக்ஞவல்கியர் கூறுவது வருமாறு:

மஹோக்ஷம் லா மஹாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா, ஸேவனம்
ஸ்வாது போஜனம் ஸூன்ருதம் வச்

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காத விடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்று சுரோத்திரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்க வேண்டும்.

(மற்ற அவயவங்களைப் போலவே வயிறும் பெரிதாய் இருக்குமென்ற காரணத்தினால், மிருகத்தைக் குறிப்பிடு கிறார் போலும்) இத்தகைய சுரோத்திரியனைச் சக்கர வர்த்தியாயினும எழுந்து வணங்கவேண்டும்.

உணவின் பாகுபாடு கூறுமிடத்து க்ரல்யாத தாதயூ ஹாதி (ஊனைத்தின்று உயிர் வாழ்கின்ற பிராணிகள்) உண்ணத்தகாதன என்று கூறிவிட்டு உண்ணத்தக்கன வற்றைக் கூறுவதையும் கவனியுங்கள்.

பக்ஷயா பஞ்சநகா ஸேதா
கோதா கச்சபசல்யகா
கசஸ்ச மசஸ்யேஷ்வரிஹி
சிம்ஹதுண்டாக ரோஹிதா

பொருள்: உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முட்பன்றி , முயல் இவைகளும், சிங்கமத்சயம் முதலிய மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்திய டைகின்றனர்.

பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருள்கள் வருமாறு:

கட்காமிஷம் மஹாசல்கம்
மது முன்யன்ன மேவச:
லோஹாமிஷம் காலசாகம்
மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச
பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.

காலசாகம் மஹாசல்கா:
கட்கலோக மிஷன்மது;
ஆனந்த்யாயைவ கல்பந்தே
முன்யன்னானிச ஸர்வச
பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,

ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்
இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.
மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத

பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.

இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே மீன் வகைகளும் உண்ணத்தக்கனவாம். இந்த உணவு தேவர்களோடு நிற்கவில்லை. பிதிர்களுக்கும் மாமிசம் வேண்டுமாம். ஒருவன் செத்தபின் கூட அவனால் மிருகங்களுக்குத் துன்பம் ஒழிந்தபாடில்லை.

ஹவிஷ்யானேன வை மாஸம்
பாயசேனது வத்ஸாம்;
மாத்ஸ்யஹாரிண ஔரப்
சாகுனச் சாகபார்ஷதை
அய்ணரௌரவவாராஹசானர்
மாப்ஸர்யதாக்ரமம்:
மாம்ஸவ்ருத்யாஹி துஷ்யந்தி
தத்தைரிஹ பிதாமஹை
பொருள்: சாதாரண அவிசினால் ஒரு மாதமும், பாயசத்தினால் ஒரு வருடமும் பிதிர்கள் திருப்தியடை கிறார்கள்.

- http://viduthalai.in/new/page-3/1248.html