வெள்ளி, 4 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-48

பொன்னும், மணிகளும் மலை மலையாகக் குவிந்தன. இவ்விதமாக அறுநூறு ஆண்டுகளுக்கு அநியாயப் பார்ப்பனர்களின் அக்கிரமச் செலவுகள் அனைத்தும் போகப் பதினெட்டுக் கோடி ரூபாய்கள் பெரும்படியாக இரத்தினங் களும், இருபது கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள நகைகள், மற்ற பட்டாடைகள் முதலியனவும் மீதியாயின.

பதினோ ராயிரம் பார்ப்பன மக்கள் அங்கேயே குடியிருந்து, விலாப் புடைக்கத் தின்று, பார்ப்பனரல்லா தார் என்றென்றும் தங்களுக்கு அடிமைகளாகவே இருக்கும்படியான சூழ்ச்சி களைச் செய்து, கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் நமது நாட்டில் இருந்த அரசர்கள் பலரும் இக்கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் தலைவனுக்குச் சிஷ்யர்களாக இருந்தார்க ளெனத் தெரிகிறது. கூர்ஜர அரசர்கள் அறுவரும் சிஷ்யர்கள் என்பதைக் கூறவேண்டியதில்லை.

துலுக்கரின் வருகையும், ஆலயத்தின் அழிவும்

இத்தருணத்தில் இந்து மதத்தை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட துலுக்க அரசர்களின் முதல்வனான முகம்மது கஜினி என்பான், சோமநாத க்ஷேத்திரத்தைக் குறித்துக் கேள்விப்பட்டுக் கொள்ளையடிக்க எண்ணி, 25,000 (இருபத்து அய்ந்தாயிரம்) சைன்னியங்களோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

வழியிலே குஜராத் அரசர்களின் ஒற்றர்கள் உண்மையை உணர்ந்து, தங்கள் அரசர்களுக்கு அறிவிக்கவும், அவர் களும் ஆசானாகிய அர்ச்சகப் பார்ப்பானை அணுகித் துலுக்கனின் வருகையைச் சொல்லி, எங்களிடம் நாலரை லக்ஷம் சைன்னியங்கள் இருப்பதால், அவனை நாட்டில் வரவிடாமல் வழியிலேயே சென்று அடித்துத் துரத்திவிடலாம் சுவாமி! உத்தரவு கொடுங்கள் என்று விண்ணப்பித்தார்கள்.

அக்குருவோ, கோழைப் பயல்களா! நீங்கள் சொல்லுவதற்கு முன்னரே கணேசனும், காளியும், பைரவரும் என்முன் தோன்றி, மிலேச்சன் வருகிறான்; அவனால் அரசர்களுக்கு யாதும் கேடு விளையாவண்ணம் காப்பாற்றுவோம். ஆனால், விசேஷமாக ஹோமங்களும், பிராமணர்களுக்கு அன்ன தானம், சுவர்ணதானம், கன்னிகாதானம் முதலியனவும் நடைபெற வேண்டும் என்றும் சொல்லி மறைந்தார்கள்.

ஆதலால், யுத்தத்திற்குப் போகவேண்டாம். புராணங் களிலும், பிரமாண வாக்கிலும் உங்களுக்கு வரவர நம்பிக்கை குறைந்து வருவதால், இவ்வித இடையூறுகள் ஏற்படு கின்றன. இன்று தொட்டாவது நம்பிக்கையோடு ஒழுகுங்கள்; யுத்தத்திற்குச் செலவழியும் பொருளைப் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னான்.

அரசர்களும் தாம் கொண்ட கருத்தைக் கைநழுவவிட்டு, அர்ச்சகர்கள் ஆணைப்படி 1,008 யாகசாலைகள் உண்டு பண்ணி, அநேகப் பார்ப்பனர்களை வைத்து ஹோமங்களும், வருண ஜபமும் நடத்திக் கொண்டு வந்தான். அன்றியும் ஜோதிடம் தெரிந்தவர்களென்று பல பார்ப்பனர்களைக் கொண்டு சுபாசுப பலன்களை அவ்வக்காலங்களில் அரசர்களுக்குத் தெரிவித்தும் வந்தான். முகம்மது கஜினியும், சைன்னியங்களும் எட்டு மைல்க ளுக்கப்பால் வந்துவிட்டார்கள்.

கஜினி முதலில் பயந்தானெனினும், தன்னை எதிர்க்க யாரும் வராததைக் கண்டு உண்மையை உணர்ந்துவர ஓர் ஒற்றனை அனுப்பி னான். துலுக்கர் களின் வருகையை உணர்ந்த பார்ப்ப னர்கள் ஏற்கெனவே இருக்கும் 11,000 (பதினோராயிரம்) பேர்வழிகளும் தற்போது வந்திருப்பவர்களும் கலந்து யோசித்து 800 (எண்ணூறு) பேர் தவிர, மற்றவர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

கஜினியின் வேவுக்காரன் துலுக்கனாகையால், அவன் நெருப்பெரிந்து கொண்டிருக்கும் தீக்குழிகளையும், நெய், கோதுமை முதலிய தின்பண்டங்களை அக்குழிகளில் பலர் சொரிந்து கொண்டிருப்பதையும், பலர் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு ஜபம் செய்வதையும் பார்த்து வியப்படந்தவனாய்த் தன் தலைவனை அணுகி, அரசே, பெரிய தீக்குழிகளில் பலர் கோதுமை முதலிய தானியங் களையும், நெய்யையும் சந்தனக் கட்டை முதலிய மற்றும் பல விலையுயர்ந்த பொருள்களையும் போட்டு எரிக்கிறார்கள். அன்றியும் மனிதர்களின் தலைகள் பல தண்ணீரில் அசையாமல் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஊரெல்லாம் புகையால் மூடிக் கொண்டிருக்கின்றன. வேறொன்றுங் காணேன் எனத் தெரிவித்தான். 1கஜினியும் அறிவிலிகளாகிய அவர்களை அடக்குவதில் அச்சமொழிந்த வனாய்ச் சைன்னியங்களோடு நேராகப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, குருவானவன் ஏனைய அரசர்களைப் போலத் துலுக்க அரசனையும் வசப்படுத்த எண்ணியவனாய்த் தான் ஊர்ந்து வருகிற முத்துப் பல்லக்கைச் சிங்காரித்துச் சீடர்களும், கோயில் தாசிகளும் புடைசூழ எதிர் கொண்டழைத்து வரும்படி அனுப்ப, கஜினியும் அப்பல்லக்கைத் தன் ஒட்டைமீது போடச் செய்து, ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தான். கோயில் மூலஸ்தானத்தில் சுவாமிக்கு எதிரிலேயே கஜினிக்காகப் பெரிய சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அவ்வாசனம் அய்ம்பது லக்ஷ ரூபாய்கள் மதிப்புள்ளதும், வியாசபீடம் எனப் பெயர் வாய்ந்ததுமாம்.

கோயில் மூர்த்தியானது விலையுயர்ந்த ஆடையாபரண அலங் காரங்களால் மிக அழகு செய்யப்பட்டிருந்தது.

கஜினிக்கும், குருவுக்கும் சம்பாஷணை

கஜினி ஆசனத்தில் உட்கார்ந்தபின், பேதை அரசர்களை ஏமாற்றும் பேய்ப் பார்ப்பனர்களின் முதல்வனான குருவானவன் கஜினியைப் பார்த்து, ஓ இராஜாதிராஜனே!

தங்களின் நேர்மையான ஆட்சியன்றோ பிராமணர்களாகிய எங்களைக் காப்பாற்றுவது? நாவிஷ்ணு; ப்ருதிபீதி (விஷ்ணுவல்லாதவன் அரசனன்று) விஷ்ணுவின் அவதாரமாகிய தங்களைக் குறித்து இங்குள்ள போலி ராஜாக்கள் என்னென்னவோ உளறினார்கள்.

1. அப்பொழுது அங்கிருந்த முகம்மது கஜினியினுடைய குருவாகிய மவுல்லி ஒருவர் இது காபரினுடைய ஜின்னு(பிசாசு)களின் வேலையாகும்.

குரான் வாசித்துப் போனால், பிசாசுகளெல்லாம் ஓடிவிடும். நாம் ஜெயமடையலாம் எனத் தைரிய வார்த்தைகள் கூறியனுப்பினார்.

- http://viduthalai.in/new/page-3/4705.html?sms_ss=blogger&at_xt=4d70d839d5dc6674%2C0