புதன், 2 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-47

அன்பர்களே! இக்காரணங்களால் ஆகமங்கள் பிற் காலங்களில் எழுதப்பட்டனவென்று தெரிகிறது. அப்படி யிருந்தும் மாமிசத்தை விட்டுவிட அவைகளுக்குச் சம்மதமில்லை. ஆனால், யாவனொருவன் ஆகமம், வேதம், ஸ்மிருதி முதலிய நூற்களொடு நமது மற்ற நூற்களிலும் பல கெடுதிகள் உண்டென்று தெரிந்து, அவை யாவும் உள்ளதுதான், முறையே வேண்டியதுதானென்று நம்பி, மறுபடியும் அதுவே நமது நூல் என்று ஒத்துக்கொண்டு, தீரனாயிருப்பவன்தான் இந்து மதத்தை முறையாக நம்பினவன். ஆனால், அந்த நம்பிக்கைபோல் நடக்கவும், (பஞ்சமாபாதகங்கள் சரியென்று ஒப்புக்கொள்வதோடு, ஒரு பிராஹ்மணனையும், அய்யர், அய்யங்கார்களையும்) நிந்தனை செய்யாமல், தனது முன்னேற்றத்தையும் விரும்பாமல் இருக்கவேண்டும்; அவன் தீரன்.
பார்ப்பன வழிபாட்டால் வந்த கேடு,

சோமநாதபுரம் கோயில்
ஸௌராகாவனே
வாராணஸ்யாம் துவிஸ்வேசம்
த்ரியம்பகம் ஷ்ட்ரே ஸோமநாத்ம்ச
ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்;
உஜ்ஜயின்யாம் மஹாகாளம்
ஓங்காரமம லேஸ்வரே
பரல்யாம் வைஜநாதம்ச
டாகின்யாம் பீமசங்கரம்;
ஸேதுபந்தேது ராமேசம்
நாகேசம் தாருகௌதமீதடே
ஹிமாலயேது கேதாரம்
குஸ்ருணேசம் சிவாலயே
சவுராஷ்ட்ர தேசத்தில்(குஜராத்தின் ஒரு பகுதி)

சோமநாதமும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனமும், உஜ்ஜயினி யில் மஹாகாளமும் அமலேசுவரத்தில் ஓங்காரமும், பரலியில் வைஜநாதமும், டாகினியில் பீமசங்காரமும், சேதுபந்தத்தில் (இராமேச்சுரம்) ராமேசமும், தாருகா வனத்தில் நாகேசமும், காசியில் விஸ்வேசமும், கோதாவரிக் கரையில் திரியம்பகமும், ஹிமாலயத்தில் கேதாரமும், சிவாலயத்தில் குஸ்ருணேசமும் ஆகப் பன்னிரண்டு.

இவை முதலிய புராண வசனங்களால் இத்தலம் ஜோதிர்லிங் காலயங்கள் பன்னிரண்டினுள் முதன்மையான தாகக் கருதப்படுகின்றது. கல்வியறிவற்றவர்களும், கபடு சூதின்றியவர்களுமான பார்ப்பனரல்லாத மக்கள், பார்ப்பனர்களின் பொய்க்கூற்றை நம்பி, இத்தலத்தில் அநேக சித்திகள் நடக்கின்றனவென்று இங்குப் போந்து, இங்குள்ள பார்ப்பனர்களுக்கு விசேஷமான தட்சணைகளைக் கொடுத்து வந்தார்கள்.
இத்தலத்தின் உற்பத்தி

பார்ப்பனர்கள் பிறரைக் கெடுத்துச் சுயநலத்தைப் பாதுகாக்க எழுதி வைத்துக் கொண்ட ஆபாசச் சுவடிக ளான வேதங் களும், ஸ்மிருதிகளும் முறையே கடவுளா லும், கடவுளின் அருள்பெற்ற பெரி யோர்களாலும், திருவாய் மலர்ந்தருளப்பட்டன என்ற பார்ப்பனப் பொய்க்கூற்றை நம்பி, அதன்படி பார்ப்பனர்களுக்கு அடிமைகளாய்த் தனமும், மானமுமிழந்து வந்த பார்ப்பன ரல்லாதாரை மீட்க அவதரித்த ஸ்ரீபுத்தபகவான், மகாவீர சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஸத் தர்மமானது (உண்மை நெறி) மக்களை நல்வழியிற் செலுத்தி வந்ததைப் பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் அந்நன்னெறியை ஒழிக்கச் செய்த சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. இது சத்தர்ம (புத்த சமயம்) சந்திரனுக்கு இராகுவாகிய சங்கராச்சாரியார் பிற குடிமக்களைக் கெடுக்க ஊரூராய்த் திரியும் (திக் விஜயம்) காலத்துக் குஜராத்திலுள்ள பார்ப்பனர்களும் தாமும், கலந்து பேசியதன் பயனாக ஓரிடத்தில் சிவலிங்கமொன்றைப் புதைத்துவைத்துக் கைலாச நாதராகிய பரமசிவன் புத்த, ஜைனர்களை ஒடுக்கவும், பார்ப்பனத் தொண்டர்களைப் பாதுகாக்கவும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி, கூர்ச்சர (குஜராத்) தேசத்தில் சிவலிங்க ரூபமாகப் பூமிக்குள் இருக்கிறார். அவரைப் பிரதிஷ்டித்துப் பூஜை பண்ணுங்கள்; பவுத்தர்கள் நாசமாவார்கள்; உலகம் க்ஷேமத்தை அடையும் என்று கணேசன், விஷ்ணு, துர்க்கை, பைரவன் முதலிய தேவதைகள் சொப்பனத்தில் வந்து தங்கள் தங்களிடம் சொல்லிச் சென்றதாகக் கதைகட்டி, அந்நாட்டு (குஜராத்தி) அரசர்களுக்கு ஒவ்வொருவனும் தனித்தனியாகச் சென்று அறிவிக்க, அரசர்களும் ஒரே விஷயத்தைப் பல தேவதைகள் வெவ்வேறு கிராமத்தவர்களான பார்ப்பனர்கள் வாயிலாக நமக்கு அறிவித்தார்கள்.

ஆதலால் இது முற்றிலும் உண்மையென்று நம்பி, அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆலயங்கட்ட ஆணைதர, அங்ஙனமே ஆலயங்கட்டுங்கால் பார்ப்பனர்களும் சம்பக பாஷாணமென்னும் காந்தக் கல்லினாற் கர்ப்பக்கிரகத்தின் உட்புறத்தில் வேலை செய்து முடித்துச் சிவலிங்கமானது ஒரு புறத்திலும் சாராமல் அந்தரத்திலேயே நின்று கொண்டிருக்கும்படிச் செய்தார்கள். அக்காலத்தில் அந்நாடு ஆறு பேரரசர்களால் ஆளப்பட்டு வந்தது. உண்மையறிய ஆற்றலற்ற அவ்வரசர்கள், ஈதென்ன விந்தை! மூர்த்தி நிலம் தொட வில்லையே எனக்கேட்க, பார்ப்பனர்கள் சாதாரண மனிதர்களால் பிரதிஷ்டிக்கப்பட்ட லிங்கமானலன்றோ தரையில்படும்? கைலாசநாதர் தானாகவே லிங்க ரூபமாக எழுந்தருளிய தால், தரையில் படவில்லை என்று சொல்ல, அக்கூற்றை அங்ஙனமே நம்பி ஏமாந்து விட்டார்கள். அதிக விமரிசையாக ஆலயத்திற்கருகிலேயே அன்ன சத்திரங்கள், வேத பாட சாலைகள் முதலிய பார்ப்பனர்களுக்காகக் கட்டப்பட்டன.

- http://viduthalai.in/new/page-3/4550.html?sms_ss=blogger&at_xt=4d6e3987100b2ba9%2C0