ஞாயிறு, 6 மார்ச், 2011

ஞானசூரியன் - தொடர்-49

என் சொல்லம்புதான் அவர்களை அடக்கின. ஆதலால், தாங்கள் பார்ப்பனராகிய எங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யலாகாது. மூன்று கோடி ரூபாய் காணிக்கையாகத் தங்கள் தாளிணையில் சமர்ப்பிக்கிறேன். என்று சொன்னான்.

ஆடம்பரமான கோயில், அலங்கரிக்கப்பட்ட மூர்த்தி, அழகிய சிம்ஹாசனம், கையிலகப்பட்டதைக் கவர்ந்து கொண்டு கம்பி நீட்டியவர்கள் போக எஞ்சியிருப்பவர்களும், ஆபிசார(சூனியன்) மந்திரம் ஜபித்துக் கொண்டிப்பவர் களுமான பார்ப்பனர்கள, எரிந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான அக்கினிக்குழிகள், அவைகளிற் சொரியும்படிக் கொட்டி வைக்கப்பட்ட விலையுயர்ந்த பண்டங்கள், அக்கிரமமே உருவெடுத்து வந்த அர்ச்சகக் குருவின் அலங்கார வேஷம் இவைகளில் கவனம் செலுத்தி யிருந்த கஜினி, காணிக்கையைப் பெற்றுக்கொண்டு, எங்களைவிட்டுவிட வேண்டு மென்ற சொல்லைக் கேட்டவுடன், சிங்கத்தைப் போற் சீறி எழுந்து, அட காபிர் பன்றியே! என்னைப் பிச்சைக்காரனென்றா நினைத்தாய்? கல்லைக் கடவுளாக வணங்கும் கயவரைக் கருவறுக் கவன்றோ இங்குப் போந்துள்ளேன் என்று கர்ஜிக்க, கல்நெஞ்சக் குருவானவன் கண்களும், கருத்தும் கலங்கக் கஜினியின் காலில் விழுந்து, அய்யனே! இதெல்லாம் எங்கள் வயிற்றுப் பிழைப்புக்குள்ள ஏற்பாடுகள்; எங்களைக் காக்க வந்த கடவுளே, உயிர்ப்பிச்சை தந்தருள்க என்று பலதரம் அழுது வேண்டிக் கொண்டான். உடனே கஜினி, இல்லை, இல்லை; உங்களுக்கு நான் இரக்கங்காட்டேன். பகுத்தறிவில்லாப் பாமரர்களை ஏய்த்துப் பணத்தையும், மானத்தையும் பறித்த, மக்களின் பசிப்பிணியைப் போக்கத்தக்க பற்பல அரிய பண்டங்களை, அநியாயமாக அக்கினியிலிட்டு அவைகளைச் சாம்பலாக்கு கிற-அத்தீயையும், கல்லையும் கடவுளாக வணங்கும் நீங்கள், கடவுளுக்குத் துரோகிகளாதலால், உங்களுக்கு இரங்குவது தருமமன்று என்று கூறி, அப்பொக்கிஷத்தைக் காட் டெனச் சொல்லச் சிலவற்றைக் காட்டி, இவ்வளவுதான் உள்ளது எனப் பகர்ந்தனன்.

கஜினி இக்கோயிலைக் குறித்த விபரமனைத்தும் ஒற்றர்களின் எழுத்து மூலமாக முன்னரே தெரிந்திருந்தவ னாகையால், அவ்வெழுத்தைக் காண்பித்துக் குருவின் கைவிரலில் எண்ணெய்த் துணியைச் சுற்றித்தீ வைக்கச் சொல்ல, அவ்வாறே செய்யவே, அனைத்தையும் காட்டி விட்டான். கஜினியானவன், பொருள் எல்லாம் வாரி யெடுத்தவுடன், தன் படைகளை ஏவிக் கோயிலையும் இடிக்கச் செய்தான். ஆலயமானது அவனியோட வனியாய் அமர, அதுவரை அந்தரத்தில் நின்றிருந்த அற்புத லிங்க மூர்த்தியும் காந்தக்கல்லின் கவர்ச்சியினின்றும் விடுபட்டுத் தரையில் விழுந்து புரண்டது. இதைப் பார்த்த, அக்கொடிய துலுக்கனுக்குப் பின்னும் கோபம் அதிகரித்துத் தன் கையிலிருந்த தண்டாயுதத்தால் அவ்விக் கிரகத்தை ஓங்கி அடிக்க, அது சின்னபின்னமாகச் சிதறி உடைந்து, இரத்தம் பீறிட்டு ஓடுவதையொப்ப முத்து முதலிய ரத்தினங்களையும் கொட்டிற்று. பார்த்தான் கஜினிமுகம்மது; அழைத்தான் பார்ப்பனக்குருவை; அறைந்தான் அடியிற்கண்ட வண்ணம். அட பதரே! கல்லை வணங்குவது கடவுளுக்குச் சம்மதம் இல்லையென்று சொன்னேன். அவ்வுண்மையைக் கண் கூடாகப்பார்; கல்லை உடைத்தெறிந்த எனக்குக் களிப்பைத்தரும் நவ மணிகளையும், கல்லை வணங்கும் உங்களுக்குக் கடுந்துயரத்தையும் அளித்துவிட்டார்....

இன்னோரன்ன இழி மொழிகள் பேசிய பின், எல்லாப் பொருளையும் ஒட்டைமீது ஏற்றச் செய்து, அத்தோடு ஆறாயிரம் பெண்களையும், அய்யாயிரம் ஆண்களையும் பிடித்துக் கொண்டு தன் நாடு திரும்பினான். இப்பதினோராயிரம் கைதிகளில் எண்ணூறு (800) பேர் மட்டுமே பார்ப்பனர்கள்; ஏனையோர் நம்மவர்கள். ஏன் அவர்களுக்கு இந்தக் கதி வந்தது? பார்ப்பனனைக் குருவாக நம்பினதால்! இவர்களில் ஆண்களுக்குக் குதிரைக்குப் புல் வெட்டுதல் முதலிய வேலையையும், பெண்களுக்குத் துலுக்கச் சிப்பாய்களின் வைப்பாட்டியா யிருத்தலையும் செய்யக் கட்டளையிட்டான். உணவும் முறையே குதிரை தின்று மிகுந்த கடலை, கொள்ளு முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்குத் துலுக்கர் களின் எச்சிலுமாம். இவ்விதமாகப் பாரதநாட்டின் எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தான் சென்றவுடன், அங்குள்ள பெரிய மவுல்வி பார்த்து, அய்யோ அரசரே! இக்காபிர்களுக்கு ஏன் தீனி போட்டு வைத்திருக்கிறீர்கள்? இது நமது நபிநாயகத்தின் திருவாணைக்கு ஏற்ற தல்லவே. ஆதலால், கொன்று விடும் என்று சொல்லச் சூத்திரத்திற்கு அடிமையான அக்கொடிய துலுக்கத் தலைவன், ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டுப் பெண்களைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான்.

இச்சரித்திரம் விரிவான புத்தக ரூபமாக உருதுமொழியிலும், குஜராத்தி மொழியிலும் எழுதி அச்சிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர், பாரத நாடு என்னும் நம் தாய் நாட்டிற்குச் செய்த தீங்குகள் பலவற்றுள் நம் தமிழ்ச் சகோதரர்களின் உணர்ச்சிக்காக ஒன்றை மட்டும் சுருக்கமாக உதா ஹரித்தேன். மற்றவையும், ஸ்தாலீபுலாக நியாயத்தால் (பதக்கு அரிசிக் சோற்றின் பதம் ஒரு சாதத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்வது போல) தெரிந்துகொள்ளுங்கள்.

இதன் குறிப்பைத் தயானந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட சத்தியார்த்தப் பிரகாரத்தில் பதினோராவது அத்தியாயத்தில் பார்க்க.

காசிக் கருவெட்டல்

தில்லையைக் காண, காசியிலிறக்க, ஆரூர்ப் பிறக்க, எல்லையிற் பெரிதாம் அருணையை நினைக்கவெய்தலால் முக்தி என்றுரைக்க,

காஸீயாம்து மரணன் முக்திர்

ஜனனாத் கமலாலயே

தர்சனா தர்ப்ரஸரஸி

ஷ்மரணா தருணாசலே

என்பதை அருணாச்சல புராணத்திற் பார்க்க.

- http://viduthalai.in/new/page-3/4797.html?sms_ss=blogger&at_xt=4d7325da39c185d3%2C0