திங்கள், 1 நவம்பர், 2010

விடுதலை

தமிழர் வாழ்வில் அனைத் துத்துறைகளிலும் விடுதலை உணர்வையும் விவேக எழுச்சி யையும், எவனடா உயர்ந்த வன்? எவனடா தாழ்ந்தவன்? என்ற தன்மானத் தீயையும் தட்டி எழுப்பிய உலகப் பெரியாரின் ஒப்பற்ற போர் வாளான விடுதலை ஏடு- சென்னை யில் புதிய பணிமனையில் பெரியார் திடலில் திறப்பு விழா கண்டது இதே நாளில்தான் (1965).
தந்தை பெரியார் முன்னி லையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் புதிய பணிமனை யைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட் டது - ஒவ்வொரு தமிழன் இல் லத்திலும் பொது இடங்களிலும் கூட கண்ணாடி சட்டம் போட் டுத் தொங்க விடத்தக்கதாகும்.
தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க விடுதலை யைத் தொடங்கினார்கள். விடுதலையின் புரட்சிக் கருத்துக்களை வரவேற்க மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும் புவது இல்லை. அடி மட்டத்தில் உள்ளவர்களா வது வரவேற்கின் றார்களா என்றால், இப்பொழுது தான் அவர்கள் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. தமிழர் களின் நலன் கருதி நடத்தக் கூடிய விடுதலை யினை தமிழர்கள் ஒவ்வொரு வரும் வாங்கிப் படிக்க வேண் டும். விடுதலை வாங்கிப் படிப் பது - தமிழர்கள் ஒவ்வொரு வரின் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல், விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று அருளினார் தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள்.
புதிய இடத்திற்கு விடுதலை வந்து தவழ்ந்து தனித்துவத்துடன் வீறு நடை போட ஆரம்பித்து 45 ஆண்டுகள் நகர்ந்து விட்டன.
பழைய இயந்திரப் பற்களில் சிக்கி படாதபாடுபட்டு, அதன் பின்னர் காலத்துக்கேற்ற வசதி வாய்ப்புகளுடன், வளர்ந்து, இன்று தமிழ்நாட்டில் தலை சிறந்த தொழில் நுட்பத்துடனும், புத்தம் புதிய பொலிவுடனும் வீறுநடை போடும் ஏடாக இது ஒளிர்கிறது.
பல நாளேடுகளை அச் சிட்டுக் கொடுக்கும் அளவுக்கு அதன் செயல் திறன் வளர்ந் தோங்கியுள்ளது. இணைய தளத்தில் முதன்முதலாக வெளிவந்த ஒரே ஒரே ஏடு விடுதலைதான்.
திருச்சியில் இன்னொரு பதிப்பு என்கிற அளவுக்கு அதன் இறக்கைகள் வலுப் பெற்றுள்ளன.
எத்தனையோ விழுப் புண் களை ஏற்று, வீழ்ந்து கிடந்த இந்த இனத்திற்கு முதுகெ லும்பைக் கொடுத்து வருவது இந்த விடுதலைதான்!
ஒருமுறை கி.ஆ.பெ. விசுவ நாதன் அழகாகச் சொன்னார்:
ஒரே வார்த்தையில் கூறி விளக்க வேண்டுமானால், விடுதலை நேர்மை உள்ளவர் களுக்கு நீலோற்பல மாலை யாகவும், விஷமக்காரர்களுக்கு விரியன் பாம்புக் குட்டியாகவும் காட்சியளிக்கும் என்று கூறலாம். அது விடுதலை யின் குற்றமல்ல. அதை விரித் துப் படிக்கும் மக்களின் மனக் குற்றமேயாகும் (6.7.1937) என்றார்.
இந்த விடுதலை முக் கால் நூற்றாண்டைத் தாண்டி புதுப் பொலிவுடனும், புது வேகத்துடனும் - எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்கிறது என்றால், பல நிலைகளிலும் அதனை மேலால் உயர்த்திக் கொண்டு வருபவர் நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களே ஆவார்கள். 75 ஆண்டு விடுதலை வயதில் 48 ஆண்டுகள் அதன் ஆசிரியர் என்ற கின்னஸ் சாதனையும் அவரையே சாரும்.
கடைசியாக ஒன்று -தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் அருள்வாக்கை மறந்து விடாதே தமிழா!
- மயிலாடன்

- http://www.viduthalai.periyar.org.in/20101031/news11.html