செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பெரியாரின் சமூகநீதிக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம்

பெரியாரின் சமூகநீதிக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம் - கி. வீரமணி
சமத்துவம் உருவாக ஜாதி ஒழிய வேண்டும் - எம்.என். ராவ்
பெரியார் பிறந்த நாள்: கொள்கைப் பரவல் விழாவாக நடைபெற்றது


சென்னை பெரியார் திடலில் 17.9.2010 அன்று மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் பாராட்டு விழா மற்றும் பெரியார் தெலுங்கு திரைப்பட திரையிடல் வெளியீட்டில் பங்கேற்றோர்: மேடையில் இடம் இருந்து வலம் ஞான. ராஜசேகரன் அய்.ஏ.எஸ்., ரவிவர்மகுமார், நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம், நீதிபதி ஏ.கே. ராஜன், நீதிபதி எம்.என். ராவ், வீ. அனுமந்தராவ், ரவிமல்லு, கட்டி பத்மராவ், பி. சுனில், கலி. பூங்குன்றன். உரையாற்றுகிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை, நவ.19- தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2010 அன்று மாலை நடை பெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரை யில், பெரியாரின் சமூகநீதியைக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம் என்றார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் தலைமையுரையாற்றினார். தமது உரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதியைப் பாதுகாக்கின்ற பட்டாளம்

தந்தை பெரியார் அவர்களு டைய 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை உலகின் பல்வேறு பகுதி களில் இன்று உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின் றார்கள். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதே சமூகநீதிக்காகத் தான் என்று குறிப்பிட்டார்கள். அந்தச் சமூகநீதியைப் பாதுகாக் கின்ற பட்டாளம்தான் இங்கே இந்த மேடையிலே இருக்கின்ற வர்கள் - இங்கே வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினரான, பாராட் டப்படக் கூடிய தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் தலைவர் நீதியரசர் எம்.என்.ராவ் அவர்கள் வந்திருக்கின்றார்.

அவர் இமாச் சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதி யாகப் பணிபுரிந்த திறமை மிக்கவர். அவர் மிகச் சிறந்த அளவுக்கு வருமானம் உள்ள நிலைகளை எல்லாம் துறந்து, சமூகநீதிக்காகப் பாடுபட வேண்டும் என்று வந்தி ருக்கின்றார். மத்திய அரசும் சரி யான நேரத்தில் அவருக்கு இந்தப் பதவியை வழங்கியிருக்கிறது.

மத்திய அரசுக்கும் நமது பாராட்டு தல்கள். அவரும் இந்தப் பதவியை மனமுவந்து ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் களை எல்லாம் சமூகநீதியை நிலைநாட்ட அவர்களை எல்லாம் ஒருங்கிணைக் கக் கூடிய நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் கன்வீனர் வீ. அனுமந்த் ராவ்காரு எம்பி. அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்.

பெரியார் படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடுகிறது

தந்தை பெரியார் திரைப்படம் தெலுங்கு மொழியில் சிறப்பாக வெளியிட பாடுபட்ட பி. சுனில் அவர்கள் வந்திருக் கின்றார். நல்ல துடிப்பு மிகுந்த ஆற்றலாளர் அவர். இன்றைக்கு தந்தை பெரியார் திரைப்படம் ஆந்திராவில் தெலுங்கு மொழியில் வெற்றிகர மாக ஓடிக் கொண்டிருக் கின்ற செய்தியைக் கேட்டு, நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். பெரி யார் படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருக் கின்றது என்ற செய்திகள் நமக்குக் கிடைத்திருக் கிறது. ஸ்டாலின் கலந்துகொண்டார்

பெரியார் திரைப் படம் தெலுங்கு மொழி யிலே வெளியிட அய்த ராபாத்தில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சி யில் நம்முடைய துணை முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

அதேபோல பெரி யார் திரைப்படத்திற்கு தெலுங்கு மொழியில் உரையாடல் எழுதிய கட்டி பத்மராவ் அவர் கள் வந்திருக்கின்றார்.

அவர் எவ்வளவு பெரிய ஆற்றலாளர் என் பதை அவருடைய பேச்சைக் கேட்ட உங்க ளுக்கெல்லாம் தெரியும்.

அதே போல டாக்டர் ரவி மல்லு அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியாக இருக்கின்றவர். அவரு டைய முயற்சியால்தான் பெரியார் படம் தெலுங்கு மொழியில் இந்த அள வுக்குச் சிறப்பாக வந்திருக்கிறது. ஆந்திர மக்களிடையே இந்தப் படம் செல்வதற்கு மூலகர்த்தாவாக இருந்து செயல்பட்டவர்.

அதேபோல நம்மு டைய ஜஸ்டிஸ் ஜனார்த் தனம், ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் ஆகியோரும் மற்றும் ஆந்திர நாத்திக சமாஜ்ஜியத்தை சேர்ந்தவர்கள். அதே போல கர்நாடக மாநி லத்தில் பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த வரும், உச்சநீதிமன்றத்தில் மிகச் சிறப்பாக வாதாடக் கூடியவருமான வழக் கறிஞர் ரவிவர்மகுமார் வந்திருக்கிறார். அதே போல பெரியார் படத்தை எடுத்த இயக் குநர் ஞானராஜசேகரன் அய்.ஏ.எஸ். போன்ற வர்கள் எல்லாம் வந்திருக் கிறார்கள். அனைவரை யும் இந்த நேரத்தில் மன மகிழ்ச்சியோடு வரவேற் கின்றோம்.

அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் நல ஊழியர்கள் சங்க கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் கோ. கருணாநிதி அவர்கள் சிறந்த செயல் திறன் மிக்கவர். சமீபத்தில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மிகச் சிறப்பான பாராட்டு விழாவை நடத்தினார். அனைவரும் பாராட்டத் தக்க அளவிலே அவர் ஒரு நல்ல குழு அமைப்போடு, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அகில இந் திய அளவிலே பணியாற் றிக் கொண்டிருக்கின் றார். அருமையான செயல் வீரர்.

கருணாநிதி என்றால் சமூகநீதி

கருணாநிதி என்றாலே அது சமூகநீதியின் மறு பெயர்தானே. நான் ஒரு நீண்ட உரை ஆற்றப் போவதில்லை. நாமெல் லாம் உள்ளபடியே மன நிறைவோடு மகிழ்ச்சி யோடு இருக்கின்றோம்.

பெரியார் அப்பொழுதே சொன்னார்

தந்தை பெரியார் அவர்கள், தனியாக நாங் கள் அவரிடம் உரை யாடிக் கொண்டிருக் கின்ற பொழுது சொன்னார்.:

இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையிலே மத்திய அரசு ஒரு வேளை வழங்க முன்வந்தாலும், மத்திய அரசை நடத்தி வருகின்ற நிருவாகத் தினரான உயர்ஜாதிக் காரர்கள் விட மாட்டார் கள் என்று சொன்னார். அது இன்றைக்கும் எவ் வளவு பெரிய உண்மை என்பதைப் பார்க்கி றோம்.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய தலைவர் அவர்களே! வீ. அனுமந்தராவ் அவர் களே! ரவிமல்லு அவர் களே! தந்தை பெரியாரின் சமூகநீதிச் சுடரை ஏந்திச் செல்லுங்கள். சமூக நீதியை நிலை நாட்டி சமூகநீதிக் கொடி பட் டொளி வீசிப் பறக்கச் செய்ய முயற்சி எடுங்கள். உங்கள் முயற்சிக்கு என் றென்றைக்கும் நாங்கள் துணை நிற்போம். இவ் வாறு பேசினார்.

நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 17.9.2010 அன்று காலை மாபெரும் கருத்தரங்கம் நடை பெற்றது.

அடுத்து மாலை பாராட்டு விழா, பெரி யார் தெலுங்கு திரைப் படம் திரையிடல் விழா மிகச் சிறப்பாக தொடங் கியது.

வீ. அன்புராஜ்

திராவிடர் கழக தலைமை நிலையச் செய லாளர் வீ. அன்புராஜ் வரவேற்று உரையாற்றி னார். வந்திருந்த அனை வரையும் வரவேற்ற அவர், தந்தை பெரியார் கொள்கை இன்று தமிழர் தலைவரின் அரிய உழைப்பினால் பரவி வருவதை எடுத்துக்காட் டினார்.

சமுக நீதிக்காக பொது நலனுக்காகப் பாடுபடுகிறவர்களை பாராட்டுவதுதான் பெரி யார் இயக்கத்தின் வழமை; அந்த வகையிலே இன் றைக்கு வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களுக் குப் பாராட்டு விழா நடைபெறுகின்றது என்று கூறினார். பெரி யார் படம் தெலுங்கு மொழியில் வெற்றி நடை போடுவதை விளக்கினார்.

கோ. கருணாநிதி

அகில இந்திய பிற் படுத்தப்பட்ட பணியா ளர் நலச் சங்கக் கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் கோ. கருணாநிதி அறிமுகவுரையாற்றினார். அவர் தனது உரையில் தந்தை பெரியார் 132ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (செப்.17) நாடெங்கும் கொண்டாடிக் கொண்டி ருக்கின்றோம். பிகார் மாநிலத்தில் தேர்தல். அவரவர்கள் அங்கு முனைப்போடு தேர்தல் பணியாற்றிக் கொண்டி ருக்கின்ற பொழுது பீகார் பாட்னாவில் திரி வேணி சங்கமம் என் னும் அமைப்பினர் இந்த நேரத்தில் அங்கு பெரி யார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடிக் கொண்டி ருக்கின்றார்கள் என்ற செய்தி நமக்கு வந்திருக் கிறது.

இன்றைக்கு தமிழ கத்தைத் தாண்டி சமூக நீதி இந்தியா முழுவதும் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய முயற்சியால் பரவி வரு கிறது. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை, அவர்களு டைய தியாகம் ஆகிய வற்றை எல்லாம் உற்சாக மாகப் பரப்பி வருகிறார் நம்முடைய தமிழர் தலைவர்.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய தலைவர் எம்.என். ராவ் அவர்களைப் போன்ற தொரு சமூகநீதிப் போரா ளியைப் பார்க்க முடி யாது.

பெரியார் படம் இந்தியில், ஃபிரெஞ்சில்

அந்த அளவுக்கு சமூகநீதியில் அக்கறை கொண்டவர். அவர் அதே போல அனுமந்த ராவ் எம்.பி. அவர்களும் சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டிருப் பவர். பெரியார் படம் அடுத்து இந்தி மொழி யில் வர வேண்டும். ஃபிரெஞ்சு மொழியில் வர வேண்டும். உலகம் எல்லாம் ஆழமாகப் பெரியார் கொள்கை பரவ பல மொழிகளில் பெரியார் படம் வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.

கட்டி பத்மராவ்

தெலுங்கு பெரியார் திரைப்பட உரையாடல் ஆசிரியர் கட்டி பத்ம ராவ் தனது உரையில், தந்தை பெரியார் தமிழ கத்தில் மட்டுமல்ல வட புலத்திற்கும் மேலும் பரவச் செய்ய வேண்டும். ஆந்திராவில் பெரியார் படம் டிக்கெட் ரூ.300க்கு விற்பனையாகிறது என் றால் அதனுடைய வர வேற்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். தலைவர் வீரமணி அவர்களை அழைத்து ஆந்திர மாநி லத்தில் பெரியாரின் கொள்கை பரவ பெரும் பிரச்சாரத்தில் ஈடுபடு வோம் என்றார்.

வீ. அனுமந்தராவ் எம்.பி.

நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்களின் ஒருங் கிணைப்பாளர், அனுமந் தராவ் தனது உரையில்,

திராவிடர் கழகம் எனும் பெரியாரின் சீரிய இயக்கம் என்னைப் பாராட்டியமைக்கு மிக வும் மகிழ்கிறேன். அனை வருடைய சுயமரியாதைக் கும், வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்களின் சமூக நீதிக்கும் உழைத்துப் பெரும் தியாகங்கள் செய் தவர், பெரியார் என்றார்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு

அறிஞர் அண்ணா, அவரைப் பற்றிக் குறிப் பிடும் பொழுது, நூற் றாண்டுகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங் களை சில பத்தாண்டு களில் சாதித்தவர் என்றார்; அது உண்மை. இந்தியா வின் சமூகநீதிப் போராட் டத்திற்குத் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது. இங்குதான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டப் பாதுகாப்புப் பெற்று நடப்பில் இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் பிற்படுத்தப்பட்ட உறுப் பினர்களில் 140 பேரை ஒன்று சேர்த்து, சமூக நீதிக்குப் போராடி வருகி றோம். தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத் திற்குச் சட்ட முறையி லான ஏற்பு அளிக்க வேண்டுமென வலியு றுத்தி வருகிறோம். பிற் படுத்தப்பட்டவர்களின் கோரிக்கைகளை நடை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடு (மெகானிசம்) இல்லாமல் இருக்கிறது. சுயமரியாதையும் சமூக நீதியும் என்றும் நம்மை வழிநடத்திச் செல்ல வேண்டிய கொள்கைகள் என்ற வகையில் பாடு படும் திரு. வீரமணி அவர்களைப் பாராட்டு கிறேன்.

எம்.என். ராவ்

தேசியப் பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் தின் தலைவர், எம்.என். ராவ் ஆற்றிய உரையின் கருத்து: தமிழ்நாட்டில் ஒரு ஞானியாக இருந்து, துறவியாய் வாழ்ந்தவர் பெரியார். இன்று அவ ருடைய செய்தி, கொள்கை, நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. சமுதாயத்தின் சில பகுதியினரை அடிமை களாக்கி வைத்திருந்தது ஜாதி முறை. அதை எதிர்த்துப் போராடி பெரியார் பல அவமா னங்களையும் எதிர்ப்பு களையும் எதிர்கொண்டு, துணிந்து பாடுபட்டார்.

சமுதாய அடிமைத் தளத்திற்கு அடிமை யாகிவிட்ட மக்கள் அதை எதிர்த்துப் போராடும் மன உறு தியை இழந்து இருந் தனர்; அவர்களுடைய மனம் கட்டுப்பட்டுக் கிடந்தது. கட்டுண்ட அடிமை மனங்களுக்கு விடுதலை தந்தவர், பெரி யார்.

ஜாதிதான் பிரிக்கிறது

ஜாதியால் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள்; ஒதுக்கப்படுகிறார்கள். ஜாதியின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த அவலத்தை ஜாதி அடிப் படை ஒதுக்கீட்டின் மூலம்தான் போக்க முடியும். பொருளாதார அடிப்படையை மேற் கொண்டால், ஜாதி ஏற்றத் தாழ்வு நீடிக்கவே செய்யும், மறையாது. சமுதாய ஒதுக்கலை, சமூக நீதியின் மூலம்தான் போக்க முடியும்; அதற்கு ஜாதியை அளவுகோ லாகக் கொண்டு தீர்வு காண வேண்டும்.

சமுதாய மாற்றம் நிகழ்வதற்குச் சமூகநீதி தேவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண் டும்; தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவர் இடஒதுக் கீட்டின் பலனைப் பெற வேண்டும். இதை அடை வதற்கு உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும்.

60 விழுக்காட்டிற்கு மேல் பிற்படுத்தப்பட்டோர்

இந்தியாவில் குறைந் தது 60 விழுக்காடு மக் கள் பிற்படுத்தப்பட்ட வர்கள் என்பது மெய்ம் மையாகும்.

இன்றைக்குக்கூட, சதிஷ்கர், உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநி லங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை.

பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு மத்திய அரசு 27விழுக்காடு இடஒதுக் கீடு அளித்திருந்தாலும், சுமார் 7 விழுக்காடு இடங்களை மட்டுமே அவர்கள் பெற முடிந் திருக்கிறது.

கிரீமிலேயர்

கிரீமிலேயர் என்று சொல்லி, பிற்படுத்தப் பட்டவர்களில் முன்னே றியவர்கள் எனக் கூறி, ஒரு பகுதியினருக்கு இட ஒதுக்கீட்டின் நன் மையை மறுக்கும் ஏற் பாடு நீங்க வேண்டும். அப்பொழுதுதான் பிற் படுத்தப்பட்டவர்கள் தங்கள் ஒதுக்கீட்டை முழுமையாகப் பெற முடியும் இவ்வாறு அவர் பேசினார்.

சத்யராஜ் வாழ்த்து

இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற இனமுரசு சத்யராஜ் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னதாக தலைமை உரையாற்றினார்.

கலி. பூங்குன்றன்

மனிதநேய நண்பர்கள் குழு செயலாளர் அர. இராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் முழுவதையும் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொகுத்து வழங்கினார்.

தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கூட்டத்தினர். (சென்னை பெரியார் திடலில் மாலை நிகழ்ச்சி 17.9.2010)


-நன்றி "விடுதலை" 19-9-2010