திங்கள், 27 செப்டம்பர், 2010

வெண்தாடிவேந்தரின் பிறந்த நாள்

வெண்தாடிவேந்தரின் பிறந்த நாள் சிங்கப்பூரில் மனிதநேயத் திருவிழா


சிங்கப்பூர், செப்..26- வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் 132-ஆம்ஆண்டு பிறந்த நாள் விழா சிங்கப் பூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கம்பீரமான பெரியார் படத்துடன், பெரியார் பற்றி யுனெஸ்கோ மற்றும் புரட்சிக் கவி ஞர் பாரதிதாசனின் புரட்சி வரிகள் தாங் கிய பிறந்த நாள் விழா வாழ்த்து விளம்பரம் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளியிட்டு, சிங்கப் பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கை தமிழர்களுடன் மகிழ்ச் சியையும் வாழ்த்தை யும் பகிர்ந்து கொண் டது.
அதனைத் தொடர்ந்து, செப்.18 சனியன்று பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் குடும் பத்துடன் மற்றும் புக் கிட்வியூ மேனிலைப் பள்ளி மாணவர்க ளுடன் சிங்கப்பூரில் உள்ள சீறி நாராயணா மிஷன் முதியோர் இல்லத்துக்குச் சென்று, 20ஆம் நூற் றாண்டின் மகத்தான மனிதநேய சிந்தனை யாளர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர் களின் பிறந்த நாளை, அங்கு உள்ள வயதான (மாற்றுத் திறனாளிகள்) முதியோர்களுடன், அவர் களுக்குத் தேவையான பால் பவுடர், ரொட்டி உணவு, பிஸ்கட்கள் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். முதி யோர்களை மனதள வில் மகிழ்விக்க பெரியார் சமூக சேவை மன்றம் அவர்களுக்கு விளை யாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து, அதற் குத் தேவையான விளை யாட்டுப் பொருள்கள் மற்றும் பரிசுப் பொருள் களை வழங்கியது. புக் கிட் வியூ மேனிலைப் பள்ளி மாணவ - மாண விகள் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தது, முதியோர் களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதில் பெரும் பாலானோர் சீன மாண வர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் தொடக் கத்தில் முதியோர்கள் அனைவரையும், சக்கர நாற்காலியில் அமர்ந்த வாறே அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அந்த நிறுவ னத்தின் தலைமை அலு வலர் அவர்கள் அனை வரிடமும் பெரியார் சமூக சேவை மன்றம் வந்திருப்பதற்கான நோக்கத்தை எடுத்துக் கூறி, விளையாட்டுப் போட்டிகள் பற்றியும் கூறி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
பெரியார் சமூக சேவை மன்றத்தின் மாறன் சிறப் பான வகையில் வயது முதிர்ந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டி களுக்கான ஏற்பாடு செய்து, பள்ளி மாண வர்களுடன் சேர்ந்து போட்டிகளை நடத்தி னார். முதியோர்களும் சுமார் 2 மணி நேரம் பள்ளி மாணவர்களு டன் சேர்ந்து மன மகிழ்ச்சி யுடன் விளை யாடினார்கள். அந்தக் காட் சியைப் பார்க்கும் போது, பேரப்பிள்ளை கள் தங்கள் தாத்தா, பாட்டியுடன் விளை யாடிய உணர்வை அந்த முதியவர்களுக்கு ஏற்படுத்தியதை அவர் களின் முகத்தில் காண முடிந்தது.
நிகழ்ச்சி முடிந்த வுடன் முதியோர்க ளுக்கு பரிசுப்பொருள் கள் வழங்கப்பட்டு, அவர்களை அவரவர் களின் அறைக்கு மாண வர்களும், மன்ற உறுப் பினர்களும் அழைத் துச் சென்றனர். அத னைத் தொடர்ந்து பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் கலைச்செல்வம் மாண வர்களுக்கு பெரியா ரைப் பற்றியும், மன்றத் தின் சேவையைப் பற்றி யும் ஆங்கிலத்தில் எடுத் துக் கூறினார்.
இறுதியாக மாண வர்களுக்கும், மன்ற உறுப்பினர்க ளுக்கும் பெரியார் பிறந்த நாள் விழா கேக் வழங்கி மகிழ்விக்கப் பட்டது. பெரியார் பிறந்த நாள் விழாவில் பெரி யார், பெரியவர், சிறிய வர் என்று அனைவரி டமும் சென்றார் மனித நேயம் சென்றது என்ற மனநிறைவுடன் மகிழ் வுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

- http://www.viduthalai.periyar.org.in/20100926/news12.html