புதன், 29 செப்டம்பர், 2010

இவர் பகுத்தறிவாளர்


பெயர்: லீவ் ஆர்னெசென் (Liv Arnesen)

பிறப்பு: ஜூன் 1 -1953

பிறந்த இடம்: நார்வே நாட்டில் உள்ள பேரும் (Baerum) நகர்

துறை: கண்டுபிடிப்பாளர்,கல்வியாளர் மற்றும் பேராசிரியர்

சாதனை: 1994ஆம் ஆண்டு, பூமியின் தென் துருவத்தை யாருடைய துணையுமின்றி தனியே 50 நாட்களில்(1200 கிலோ மீட்டர் தொலைவு) கடந்தவர். இதன் மூலம் இச் சாதனையைப் புரிந்த உலகின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் கல்வி குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளித்து கருத்துகளை உள்ளத்தில் விதைக்கும் மிகச்சிறந்த பேச்சாளர். விருதுகள்: * 2008ஆம் ஆண்டுக்கான உமன் ஆப் டிஸ்கவரி கரேஜ் அவார்ட் (Women of Discovery Courage Award) என்ற விருதினை விங்க்ஸ் அமைப்பு இவருக்கு அளித்து சிறப்பித்தது உலகப் புகழ் பெற்ற கிளாமர் பத்திரிகை இவருக்கு 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்மணி விருது வழங்கிச் சிறப்பித்தது அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அரசு சார்ந்த பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். இலக்கியம்,வரலாறு,விளையாட்டு மற்றும் நிருவாக மேலாண்மை கற்ற கல்வியாளரான இவர்,20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியாளராகப் பணியாற்றுவதுடன் போதைக்கு அடிமையானோருக்காகவும் பாடுபட்டுவருகிறார்.

நாத்திக பஞ்ச் : உலகில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நான் தென் துருவத்திற்குச் சென்ற போது அவர் அங்கு இருப்பார் கருதினேன். ஆனால் அங்கு அந்தக்கடவுள் இல்லை.எனக்கு என்மீதும், இயற்கையின் மீதும், இந்த உலகத்தின் மீதும்தான் நம்பிக்கை உள்ளது,மதங்களின் மீது நம்பிக்கை இல்லை.

- புருனோ

- http://www.unmaionline.com/2010/september/16-31/page12.php