வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுடில்லி, செப். 24- அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அலகா பாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில் வெள் ளிக்கிழமை தீர்ப்பளிக் கப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ் வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரி வித்தனர். அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரி பாதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதி பதிகள் ஆர்.வி. ரவீந்தி ரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக் கில் தீர்ப்பை வெளியிடு வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப் பட்டுள்ளது.

மேலும் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண்ப தற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக் கில் சம்பந்தப்பட்டவர் களுக்கு தாக்கீது அனுப் பவும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.

அயோத்தியில் சர்ச் சைக்குரிய நிலம் யாருக் குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வு கள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற் படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்சநீதி மன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவைப் பரி சீலித்த நீதிபதிகள் அல் தமஸ் கபீர், ஏ.கே. பட் நாயக், இதை விசாரிப் பதற்கான அதிகாரம் இந்த அமர்வுக்கு இல்லை. எனவே, வேறு நீதிபதி களைக் கொண்ட அமர்வு இதை விசாரிக்கலாம் என்று பரிந்துரைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் ஆர்.வீ. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி ரவீந்திரன், மனு வைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரி வித்தார். அதேநேரத்தில் நீதிபதி கோகலே, சம ரசத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க ஒரு வாய்ப் பளிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். மாறுபட்ட கருத்து இருந் தாலும் நீதிபதி கோகலே வின் கருத்தை நீதிபதி ரவீந்திரனும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அலகா பாத் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க ஒரு வாரம் தடை விதித்து உத்தர விடப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடை வர்களுக்கு தாக்கீது அனுப் பவும் உத்தரவிடப்பட் டது. அட்டார்னி ஜென ரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக திரிபாதி சார்பில் வாதிட்ட முகுல், இந்த வழக்கு இரு தரப் பினருக்கு மட்டும் தொடர் புடையது அல்ல. லட் சக்கணக்கான, கோடிக் கணக்கான மக்களுடன் தொடர்புடையது. சம ரச முயற்சி மூலம் சுமுகத் தீர்வு காண்பதற்கு வாய்ப் புள்ளது என்றார்.

நிலம் யாருக்கு என் கிற தீர்ப்பு வெளியா னால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், மதக் கலவரம் வெடிக் கும். எனவே தீர்ப்பை ஒத்திவைக்க உத்தர விடுங்கள் என்று திரி பாதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோட் டகி மீண்டும் வலியுறுத் திக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக் கீட்ட நீதிபதி, மக்கள் எல்லோரும் பக்குவம் இல்லாதவர்கள் என்று நீங்களாக ஏன் கருது கிறீர்கள்? மத உணர்வு கள் தூண்டப்படும் போதுதான் மக்களும் அதற்குப் பலியாகின்ற னர். நீங்கள் சும்மா இருங்கள், எல்லாம் சரி யாகவே நடக்கும்' என்றார்.

அய்யா, நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அது நொந்த மனங் களுக்கு ஆறுதலை வழங் கும்; சம்பந்தப்பட்டவர் கள் அமர்ந்து பேசி சம ரசமாகப் போக வழி உண்டா என்று பாருங் கள் என்று நீங்கள் ஒரு முறை சொல்லித்தான் பாருங்களேன்' என்றார் ரோட்டகி.

தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ள திரிபாதி, இந்த வழக்கில் தீவிரப் பங்கு வகிக்காத வர்; இதற்கு முன் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளில் அவர் பங்கேற்கவில்லை. நாளை (வெள்ளிக் கிழமை) தீர்ப்பு வெளி யாகும் வேளையில் இது போன்று மனுச் செய் வது நியாயமில்லை. பிரதமர் அளவில் சம ரச முயற்சிகள் செய்தும் பலனில்லை. எனவே தீர்ப்பு வெளியாக வேண் டும் என்று பிரதிவாதி தரப்பில் ஆஜரான வழக் கறிஞர் அனூப் சவுத்ரி கூறினார். இதே கருத்தை வாதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.

தீர்ப்பை ஒத்திவைக் கக் கூடாது என்பதில் வழக்கின் இரு தரப்பின ரும் காட்டும் ஒற்று மையை பிரச்சினைக்கு சமரசமாகத் தீர்வு காண் பதில் காட்டுங்கள் என் றார் நீதிபதி.

இந்த வாதத்தை நீதி பதி ரவீந்திரன் ஏற்க வில்லை. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை ஒத்தி வைக்க உத்தரவிட்ட தோடு சம்பந்தப்பட்ட வர்களுக்கு தாக்கீது அனுப்புமாறும் கூறி னார்.

அயோத்தி வழக்கில் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங் கப்படாவிடில் மேலும் நீண்ட காலம் தாமதமாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதி களில் ஒருவர் செப்டம் பர் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி ஓய்வுபெற்றால் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு அவர், வழக்கை புதிதாக நடத்தி, விசாரித்த பின் னரே தீர்ப்பு வழங்க முடியும்