சனி, 2 மே, 2009

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என்கிறார் ஜெயலலிதா - அவர் கனவு பலிக்குமா?

- அ. தமிழ்குமரன், ஈரோடு

பதில் : கனவு காண அவருக்கு உரிமை உண்டு. இப்போதா முதல் முறையாக அவர் சொல்கிறார்? திமுக பதவியேற்ற அடுத்த நாளிலிருந்தே அந்தப் பல்ல வியை பாடியதோடு, உச்சநீதிமன்றம் போய் மூக்குடைபட்டும் அவர் திருந்த வில்லையே!

கேள்வி : கருத்துக் கணிப்புகளை மக்கள் தீர்ப்பு பொய்யாக்கினாலும்.. சில இதழ்கள் அதனைக் கைவிட மறுப்பது ஏன்?

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : தங்கள் இனம் - மனம் பிறரை ஆள வேண்டும் என்பதற்காகவே!

கேள்வி : பா.ஜ.க., ஆட்சி வந்தால் ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்கப் படும் என இல. கணேசன் கூறியுள் ளாரே?

- சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில் : பா.ஜ.க., ஆட்சி வந்தால் மட்டுமா? அம்மா பிரதமராக, வைகோவும் மருத்துவர் இராமதாசும் முன் மொழிந்து, வழி மொழிந்து இடதுசாரிகள் வரிசை யில் நின்று வந்த 100 நாள்களில்கூட அதுதானே நடக்கும். இரு கட்சிகளும் உருவத்தால் மாறுபட்டாலும், உள்ளத் தால் ஒன்றே

கேள்வி : முதல்வர் கலைஞர் எந்த நல்ல காரியத்தை நாட்டு மக்களுக்குச் செய்தாலும், அதனை ஒரு நாடகம் என்று சொல்லுவது எதிர்க்கட்சிகளின் ஃபேஷனாகப் போய் விட்டதா?

- மு.சுகுமாரன், சென்னை-40

பதில் : மக்களை தப்புக் கணக்குப் போட்டு இப்படி பேசிடுபவர்களுக்கு, மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் வரும் தேர்தலில்!

கேள்வி : கலைஞர் உண்ணா விரதத்தைத் தொடர்ந்து ஈழத்தில் போர் நிறுத்த அறிவிப்பைச் செய்தஅந்த அரசு - எவ்வளவு காலத்திற்கு இந்தப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும்?

- வி. குணசுந்தரி, திருவண்ணாமலை

பதில் : இராஜபக்சே அரசின் போக்கினை உலக நாடுகளில்கூட சைனா, ஜப்பான், பாகிஸ்தான் தவிர, வேறு எவையும் ஆதரிக்கவில்லை. பொருளாதாரத் தடையும் வரும். எனவே அவர் மீண்டும் தன் போக்கைக் காட்டினால் புத்திகற்பிக்கப்படுவார் என்பது உறுதி!

கேள்வி : கச்சத் தீவை மீட்பேன் என்று தேர்தல் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா பேசியுள்ளது குறித்து...

- சு. சுப்பிரமணியம், குற்றாலம்

பதில் : அப்படி அவர் முதன் முதலில் முதல்வர் பதவியேற்ற முதல் நாளே சொல்லி பல ஆண்டு காலம் ஆயிற்று- தினத்தந்தியில் எட்டு காலச் செய்தி அன்று! அதற்கு பிறகு அவர் 2 முறை முதல்வராக இருந்தபோது என்ன செய்தார்? பழைய பாட்டு - புதிய ராகம்! இதற்காக வழக்குப் போட்டது தி.க., 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அது இன்னும் நிலுலையில் உள்ளது!

கேள்வி : ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற எந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும்?

- வி. சேட்டு, காரைக்கால் - 1

பதில் : நிச்சயமாக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். உருப்படியாக செய்யும் வாய்ப்பு இந்த அணிக்கே உண்டு. சொன்னதைச் செய்யும் அணி. செய்வதையே சொல்லும் அணி இதுதான்!

கேள்வி : ஈழத் தமிழர் பிரச்சினையைக் கையாளும் அதிகாரி பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் மலையாளி களாகவும் இருப்பது ஏன்?

- தா. நீலமகன், தூத்துக்குடி

பதில் : நம் சுதந்தரத்தின் விடியல் அவ்வளவுதான்!

கேள்வி : ஈழத் தமிழர்களுக்காக தலைவர் மற்றும் அமைச்சர்கள் பங் கேற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பல ஊர்களில் காங்கிரஸ்காரர்களும் பங்கேற்றார்களே? (எடுத்துக்காட்டு சேலத்தில் கே.வி. தங்கபாலு)

- கு. ருத்ரன், சேலம்-2

பதில் : அவர்களும் தமிழர்கள்தானே; இன உணர்வு இருப்பது இயல்பு தானே!

கேள்வி : வாகை சூட வாரீர்! நிகழ்ச்சி தங்கள் அமைப்பினர் திடீர் என்று நடத்த வேண்டிய அவசியம் என்ன?

- மு.வ. சேகரன், புதுச்சேரி

பதில் : விடுதலை ஏடும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் சேர்ந்து இப்படி ஒரு கல்விப் பெருவிழா நடத்துவது இது முதல் தடவை அல்ல.

முதன் முதலில் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் தஞ்சை, திருச்சி போன்ற ஊர்களில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்ததே நாம் தான்!

இப்போது மேலும் விரிவாக யாரும் நடத்தாதநிலையில் ஒரே நாளில் 8 பெரு நகரங்களில் வெற்றிகரமாக நடத்தியதே! வாகை சூடிய வரலாற்றின் பதிவு அல்லவா? அடுத்த ஆண்டு இன்னும் விரைந்து மேலும் பல புதிய உத்திகளுடன் அந்தப் பெரு விழா நடைபெறு வது உறுதி.

nandri: viduthalai 2-5-2009