சொந்த புத்தியைவிட
அய்யா தந்த புத்தி ஒன்றே போதும் என்று
தமிழ் சமூகத்தின் விடிவெள்ளியாக
தமிழர் தலைவர்
கி.வீரமணி
இனமானப் போரை தலைமை ஏற்று நடத்துபவராக ,
சமூக நீதியைக் காப்பவராக,
ஆரியரை வெல்லும் படையை
வழி நடத்துபவராக உள்ளார்.
ஈரோட்டுக் கண்ணாடி கொண்டு எதையும்
தொலை நோக்கோடு கண்டு தமிழ் சமூகத்தின்
கலங்கரை விளக்காக திகழ்கிறார்.
அகவை ௭௬ ஆனாலும் கொள்கை குன்றாக,
உலகின் எந்த மூலையிலும்
தமிழர் இன்னலுற்றார் என்றால் துடித்து எழுவார்.
தன்முனைப்புக்கு இடமின்றி எடுத்த செயலை செவ்வனே செய்து முடிப்பதில் வல்லவர்.
அய்யாவின் அடிச்சுவட்டில் அயராது என் கடன்
அய்யா பணி செய்துமுடிப்பதே என்று
இலக்கு தவறாத எழுச்சித் தலைவராக
திராவிடர் கழகத்தை தலைமை ஏற்று வழி நடத்துவது மட்டுமின்றி
ஒட்டுமொத்த தமிழர்களின் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.