ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

உறுதி ஏற்போம்.

இன்று திலீபன் நினைவு நாளாகும். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் பணி முடிக்க சூளுரை ஏற்கிறேன். வாழ்த்து தெரிவித்த அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் இதயமார்ந்த நன்றி.ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் மத்தியில் போராட்டத்தின் உள்ள உறுதியை உலகோருக்கு உணர்த்தி மாவீரன் திலீபன் வரலாறு படைத்து விட்டான். இனத்தின்பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் தமிழர்கள் ஓரணியில் திரண்டு வடிவம் எதுவாகினும், விடுதலைக் காற்றை தமிழர்கள் ஈழத்திலே சுவாசிக்கும் நாள் எந்நாளோ? அந்நாளே அனைவருக்கும் ஒரு பொன்னாளாகும். மண் விடுதலைக்காக போராடினாலும், முதலில் மக்கள் விடுதலை வேண்டும். ஆம். பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறல் வேண்டும். தமிழன் ஜாதிகளைக் கடந்து தமிழனாக வாழ்ந்திட வேண்டும். பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை அடையாளம்கண்டு நமக்கு உதவாத சாத்திரக்குப்பைகளை, கடவுள் கருத்துக்களை களைந்திட வேண்டும். பார்ப்பான் எப்போதும் தமிழன் தன்மானத்துடன் வாழ்ந்திட விடமாட்டான். எச்சரிக்கையுடனும், துணிவுடனும், பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை புரிந்து முறியடிக்க வேண்டும். நம்மை எது பிரிக்கிறது என்பதைவிட எது நம்மை இணைக்கிறது என்று பார்க்கவேண்டும். தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரம் ஒன்றுதான் தமிழனை அடிமைத்தளைகளில் இருந்து மீட்கும். ஆரியர்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழரை மீட்டு தன்மானம் உள்ள தமிழராக வாழ்வோம் என்று உறுதி ஏற்போம். நன்றி.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

விநாயகனை வெட்டி, கை, கால்களை அறுத்து கடலில் தூக்கிப் போட்டது நீங்களா? நாங்களா?

விநாயகனை வெட்டி, கை, கால்களை அறுத்து
கடலில் தூக்கிப் போட்டது நீங்களா? நாங்களா?
சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி

சென்னை, செப். 24- விநாயகனின் கை - கால்களை அறுத்து வெட்டி தூக்கி எறிந்தது நீங்களா? நாங்களா? விநாயகனை பங்கப் படுத்தியது நீங்களா? நாங்களா? என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

உலகத்தை படைத்தது கடவுள் இல்லை

ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மிகப்பெரிய அறிஞர். அண்மையில் அவர் ஒரு புத்தகமே ஆராய்ச்சி நூலாக வெளியிட் டிருக்கின்றார்.

பிரபஞ்சம் உலகம் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல என்று சொல்லியிருக் கின்றார். அதே போன்று கடவுள் மறுப்பு கருத்தை லிண்டர் அவான்ஸ் என்ற விஞ்ஞானியும் கூறியிருக்கின்றார்.

பல பேர் கேட்பார்கள் உலகத்தை படைத்தது கடவுள் என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அந்தக் கடவுளைக் காட்டிதான் நம்மை கீழ்ஜாதியாக்கினான். நமக்குப் படிக்க உரிமை இல்லை என்று சொன்னான். இன்றைக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அறிவியல் பூர்வமான, ஆதார பூர்வமான கருத்துகள். கடவுள் இல்லை என்று அறிவியல் அறிஞர்கள் அறிக்கை மேல் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியார் சொன்ன கருத்துகள்தான்

தந்தை பெரியார் அவர்களும், அவருடைய இயக்கமும் அறிவியல் ரீதியாக சொன்ன கருத்துகளைத்தான் நாங்கள் வலியுறுத்தக் கூடிய பிரச்சாரத்தை செய்கின்றோம். இந்த பிரச்சாரம் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய பிரச்சாரம். எதிலே அரசியல் சட்டத்திலே. அரசாங்கங்கள் இதை ஊக்கப் படுத்த வேண்டுமே தவிர, தடுக்கக் கூடாது. காரணம், என்னவென்றால் இந்திய அரசியல் சட்டத்திலே ரொம்பத் தெளிவாகவே அடிப்படை உரிமைகள் பற்றி (குரனேயஅநவேயட சுபைவள) சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல இன்னொரு பகுதி இருக்கிறது. இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது. வழக்கறிஞர்களுக்குக் கூட பல பேருக்கு தெரியாது. அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள் (குரனேயஅநவேயட னுரவநைள) என்ற பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கக் கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற கடமைகள் என்ன? 1. அறிவியல் மனப்பான்மையை மக்களிடத் திலே ஒவ்வொரு குடிமகனும் வளர்க்க வேண்டும்.

2. ஏன்? எதற்கு? என்று கேட்க வேண்டும்.

3. மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.

4. சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள கடமை

இந்திய அரசியல் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கக் கூடிய கடமை இது. இதைத்தான் பிள்ளையார் விழா ஆனாலும், ராமர் பிரச்சினை ஆனாலும், இந்த மூடநம்பிக்கைகளை எடுத்து விளக்கி நாங்கள் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றோமே. தவிர, வேறு ஒன்றும் இல்லை.

பிள்ளையாருக்கும், நம்முடைய நாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. ஏழாம் நூற்றாண்டு வரையிலே நம்முடைய நாட்டிற்குப் பிள்ளையார் வரவில்லை. மதவெறியைப் பரப்ப பிள்ளையார்

தந்தை பெரியார் பிள்ளையார் சிலையையே உடைத்தார். அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி பிள்ளையார் ஊர்வலம் கிடையாது. ஆனால் இன்றைக்கு பிள்ளையார் ஊர்வலம் எதற்குப் பயன்படுகிறது? மத வெறியைப் பரப்பப் பயன்படுகிறது.

ஒரு சமுதாய மக்கள் இன்னொரு சமுதாய மக்களை வெறுப்பதற்காக பயன்படுத்தப் படு கிறது. மதவெறியை மாய்த்து மனித நேயத்தைக் காப்பாற்ற வேண்டிய எங்களுக்குடைய கடமை என்பதற்காகத்தான் இந்த பொதுக் கூட்டத் தைப் போட்டு நடத்துகின்றோம்.

யாருக்கும் சிக்கலை உண்டாக்குவதற்கு அல்ல. யாருக்கும் பிரச்சினையை உண்டாக் குவதற்கு அல்ல. இன்று மாலை வந்த பத்திரி கையை நண்பர்கள் காட்டினார்கள்.

வருடாவருடம் நாங்கள் புராணக்கதைகளில் உள்ள மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லி எவ்வளவு ஆபாசமாக, அருவருப்பாக இருக்கிறது இந்தக் கதைகள் என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி மக்களுக்கு விளக்குவோம்.

இங்கே சொன்னார்கள் பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டு போய் அதை உடைத்து, கை, கால்களை தனித்தனியாக அறுத்து, கடலில் தூக்கி எறிகின்ற வேலையை நாங்கள் யாரும் செய்வதில்லை.

விநாயகரை அவமதித்து துண்டுப் பிரசுரம்

கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற வர்கள்தான் நாங்கள். ஆனால், நாங்கள் யாரும் இதைச் செய்வதில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் இந்த பாடுபடுத்து கிறார்கள். அது அவர்களுடைய உரிமை. அது எப்படியோ போகட்டும்.

எனக்கு இந்த செய்தி வந்ததினாலே நான் சொல்லுகின்றேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசாமல் அய்யா அவர்களுடைய தொண்டைத் தான் அதிகமாக பேச வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று மாலை வந்த செய்தி விநாயகர் சிலையை அவமதித்து துண்டு பிரசுரம். சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் விநாயகர் சிலையை அவமதித்து திராவிடர் கழகம் சார்பில் துண்டு பிரசுரம் வெளி யிட்டதாக கூறப்படுகிறது. நாங்கள் ஓன்றும் எதையும் ரகசியமாக செய்யக் கூடியவர்கள் அல்ல.

லட்சக்கணக்கான துண்டறிக்கைகள்

விடுதலையில் விளம்பரப்படுத்தி லட்சக்கணக்கான துண்டறிக்கைகள் மூலம் நாடு பூராவும் பிரச்சாரம் செய்கின்றோம் இருப்பதை எடுத்துச் சொல்லுகின்றோம்.

எக்ஸ்ரே மீது கோபப்பட முடியுமா?

யாராவது எக்ஸ்ரே கருவி மீது கோபப் படுவீர்களா? எக்ஸ்ரே எடுக்கும் பொழுது எலும்பு முறிந்திருக்கிறது என்று சொல்லுகின்றான்.

இரத்த பரிசோதனை கருவி இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

உடனே இரத்தப் பரிசோதனைப் பற்றி சொன்னவர் மீது நடவடிக்கை எடு என்றால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி? நடவடிக்கை எடுத்தால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி?

ஆகவே நாங்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயார்.

கலைஞரின் பொற்கால ஆட்சி

நாங்கள் எப்பொழுதும் எதிர்நீச்சல் அடித் தே வளர்ந்து கொண்டிருக்கிறவர்கள். நாங்கள் ஏதாவது சீட்டு வாங்கப் போகிறவர்களா?

தி.மு.க ஆட்சி கலைஞர் ஆட்சி பொற்கால ஆட்சியை தமிழகத்திலே நடத்தி வருகிறது. வாராது வந்த மாமணி போன்ற ஆட்சியை ஆதரியுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். கலைஞர் ஆட்சியை காப்பது நமது கடமை என்று சொல்ல வேண்டியது எங்களுடைய வேலை. அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப் படுவதை விட அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுவதுதான் திராவிடர் கழகத் தினுடைய, சமுதாய புரட்சியாளர்களுடைய சிந்தனை. இந்து முன்னணி புகாராம்!

இந்து முன்னணியைச் சார்ந்த பொறுப் பாளர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரைத் திட்டமிட்டு அவர்கள் சொல்லியி ருக்கின்றார்கள்.

ஏனென்றால் இதன் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பதற்றத்தை உண்டாக்க வேண்டும். ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். அவர்கள் திராவிடர் கழகத்தோடு மோத வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு சிக்கலை உண்டாக்க வேண்டும் என்பது தான். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர் களுடைய நோக்கம். அதற்காக இதை செய்கிறார்கள்.

மனதைப் புண்படுத்துகிறது

புகார் மனுவில் இந்து மக்களுடைய மனதைப் புண்படுத்தும் வகையில், விநாயகர் சிலையை அவமதித்து துண்டுப் பிரசுரம் வெளியிட்ட திராவிடர் கழகம் மீதும், அதன் தலைவர் திரு.கே.வீரமணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. பம்மல், திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் இந்த மாதிரி செய்திருக்கிறார்கள்.

அப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் காவல் துறை மீதோ, அரசாங்கத்தின் மீதோ எங்களுக்கு கோபம் இல்லை.

நடவடிக்கை எப்பொழுது?

நடவடிக்கை எப்பொழுது வரும் என்று ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கின் றோம் (கை தட்டல்). தயது செய்து யாரும் தாமதிக்க வேண்டாம். நீங்கள் எங்கள் மீது வழக்கு போடுங்கள். நான் கோர்ட்டுக்கு போய் நீண்ட நாள் ஆகிவிட்டது.

அரசியல் சட்ட வழக்கிற்காக, பொது நல வழக்கிற்காக, தடா வழக்கிற்காக நீதி மன்றத்திற்குப் போயிருக்கின்றேன். அதே மாதிரி வாய்ப்பு வர வேண்டும். பிள்ளையார் கதையை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்

இந்த பக்தர்களை கூண்டில் நிறுத்தி ஒவ்வொரு புராணத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை படித்து, விநாயகர் புராணத்தை எடுத்துக் காட்டி விளக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். பொதுக்கூட்டங் களில் இதைப் பற்றி விளக்கிச் சொல்லுகின் றோம். அதுபோல, வாய்ப்பு கிடைக்கின்ற இடத்தில் குறிப்பாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விளக்க வேண்டும் என்று நினைக்கின் றோம். ஒவ்வொரு இடத்திலும் பதிவு பண்ணு வார்கள்.

இந்த பிள்ளையாருடைய யோக்கியதை என்ன என்பதை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோம். இதை விட உலகத்திற்கு தெரிய வைக்கக் கூடிய வாய்ப்பு வேறு கிடைக்காது. எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லுகின்றார்.

விநாயகர் புராணம்

விநாயகர் புராணத்தில் உள்ள செய்தி பெரியார் சொன்ன செய்தியைச் சொல்லுகின் றேன். இது தேவாரத்தில் பாடலாக இருக்கிறது. பல கதைகள் உண்டு.

ஏழாம் நூற்றாண்டில் வந்தது

ஏழாம் நூற்றாண்டில் பிறந்தது எப்படியோ? என்ற தலைப்பில் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கின்ற நூல். இவர் எழுதிய கட்டுரை பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பாடமாக இருக்கிறது. நரசிம்ம வர்மனின் படைத் தலைவனான பரஞ்சோதி வாதாபியை வென்று திரும்பி வந்த பொழுது கொண்டு வந்த பொம்மை தான் வாதாபி கொண்ட கணபதி. இதுதான் பிள்ளையார் வந்த வரலாறு என்று எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

பார்வதி மனைவி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறார். உடம்பில் இருக்கின்ற அழுக்குருண்டையைத் திரட்டி ஒரு பிடி பிடித்து உருவமாக வைத்து விட்டுப் போய் அதற்கு உயிர் கொடுத்தார். இதுதான் பிள்ளை யார்.

ஒரு வெட்டு வெட்டினான்!

பாத்ரூமுக்கு கதவு கிடையாது. நான் குளிக்கும் பொழுது யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லி விட்டார். பார்வதி சிவ பெருமான் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார் போல இருக் கிறது. ஆகவே விடாதே என்று சொல்லி விட்டு போய் விட்டார். சிவபெருமான் திடீரென்று வந்து உள்ளே போகிறார். விநாயகன் தடுக்கின்றார். என்னை தடுப்பதற்கு நீ யார் என்று வாளை எடுத்து பிள்ளையார் கழுத்தை சிவபெருமான் சீவி விடுகின்றார். உடனே உள்ளே போய் விடுகின்றார்.

இந்த அம்மா கேட்கிறார். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள். நான் ஒரு காவலாளியை வைத்திருந்தேனே என்று சொல்லுகின்றார்.

இல்லை ஒருவன் தடுத்தான். நான் அவன் கழுத்தை வெட்டிவிட்டேன் என்று சிவபெருமான் சொல்லுகின்றார்.

அப்படியா.. அந்தப் பிள்ளைக்கு உயிர் ஊட்டுகின்றேன் என்று சொல்லுகின்றார்.

பிள்ளையாரின் ஆபாசமான கதைகள்

என்ன செய்வது என்று சிவபெருமான் பார்த்தார். ஒரு யானை இருந்தது. யானை தலையை வெட்டி, வெட்டிய உடலுக்கு உயிர் ஊட்டினார். இது ஒரு கதை. பிள்ளையாருக்கு என்று எழுதி வைத்திருக்கின்றான்.

இன்னொரு கதை- பரமசிவனும், பார்வதியும் காட்டில் உலவுவதற்குப் போனார்கள். அவர்கள் சென்ற பொழுது ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கூடி கலவியில் இருந்ததைப் பார்த்த இவர்கள். அதே மாதிரி நாமும் செய்ய வேண்டுமென்று நினைத்தார்கள். இதை விட அசிங்கம் வேறு இருக்க முடியுமா? இதுதான் விநாயகன் பிறந்த கதைகள். நாங்கள் கொஞ்சம் தரத்தோடு பேசுகின்றோம்.

புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாச மான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள். இன்னும் கேவலமாக இவைகள் எல்லாம் விநாயகர் புராணங்கள் பரமசிவனும், பார்வதியும், கலவியில் ஈடுபட்டால் எப்படி யானை தலையோடு மனித உருவம் பிறக்கும், இருக்கும்? இப்படி கேள்வி, ஆராய்ச்சி என்று இறங்கினால் அது ரொம்ப தூரத்திற்கு இழுத்துக் கொண்டே போய்விடும்.

(தொடரும்)

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுடில்லி, செப். 24- அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அலகா பாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில் வெள் ளிக்கிழமை தீர்ப்பளிக் கப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ் வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரி வித்தனர். அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரி பாதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதி பதிகள் ஆர்.வி. ரவீந்தி ரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக் கில் தீர்ப்பை வெளியிடு வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப் பட்டுள்ளது.

மேலும் பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண்ப தற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக் கில் சம்பந்தப்பட்டவர் களுக்கு தாக்கீது அனுப் பவும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.

அயோத்தியில் சர்ச் சைக்குரிய நிலம் யாருக் குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வு கள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற் படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்சநீதி மன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவைப் பரி சீலித்த நீதிபதிகள் அல் தமஸ் கபீர், ஏ.கே. பட் நாயக், இதை விசாரிப் பதற்கான அதிகாரம் இந்த அமர்வுக்கு இல்லை. எனவே, வேறு நீதிபதி களைக் கொண்ட அமர்வு இதை விசாரிக்கலாம் என்று பரிந்துரைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் ஆர்.வீ. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி ரவீந்திரன், மனு வைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரி வித்தார். அதேநேரத்தில் நீதிபதி கோகலே, சம ரசத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க ஒரு வாய்ப் பளிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். மாறுபட்ட கருத்து இருந் தாலும் நீதிபதி கோகலே வின் கருத்தை நீதிபதி ரவீந்திரனும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அலகா பாத் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க ஒரு வாரம் தடை விதித்து உத்தர விடப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடை வர்களுக்கு தாக்கீது அனுப் பவும் உத்தரவிடப்பட் டது. அட்டார்னி ஜென ரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக திரிபாதி சார்பில் வாதிட்ட முகுல், இந்த வழக்கு இரு தரப் பினருக்கு மட்டும் தொடர் புடையது அல்ல. லட் சக்கணக்கான, கோடிக் கணக்கான மக்களுடன் தொடர்புடையது. சம ரச முயற்சி மூலம் சுமுகத் தீர்வு காண்பதற்கு வாய்ப் புள்ளது என்றார்.

நிலம் யாருக்கு என் கிற தீர்ப்பு வெளியா னால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், மதக் கலவரம் வெடிக் கும். எனவே தீர்ப்பை ஒத்திவைக்க உத்தர விடுங்கள் என்று திரி பாதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோட் டகி மீண்டும் வலியுறுத் திக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக் கீட்ட நீதிபதி, மக்கள் எல்லோரும் பக்குவம் இல்லாதவர்கள் என்று நீங்களாக ஏன் கருது கிறீர்கள்? மத உணர்வு கள் தூண்டப்படும் போதுதான் மக்களும் அதற்குப் பலியாகின்ற னர். நீங்கள் சும்மா இருங்கள், எல்லாம் சரி யாகவே நடக்கும்' என்றார்.

அய்யா, நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அது நொந்த மனங் களுக்கு ஆறுதலை வழங் கும்; சம்பந்தப்பட்டவர் கள் அமர்ந்து பேசி சம ரசமாகப் போக வழி உண்டா என்று பாருங் கள் என்று நீங்கள் ஒரு முறை சொல்லித்தான் பாருங்களேன்' என்றார் ரோட்டகி.

தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ள திரிபாதி, இந்த வழக்கில் தீவிரப் பங்கு வகிக்காத வர்; இதற்கு முன் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளில் அவர் பங்கேற்கவில்லை. நாளை (வெள்ளிக் கிழமை) தீர்ப்பு வெளி யாகும் வேளையில் இது போன்று மனுச் செய் வது நியாயமில்லை. பிரதமர் அளவில் சம ரச முயற்சிகள் செய்தும் பலனில்லை. எனவே தீர்ப்பு வெளியாக வேண் டும் என்று பிரதிவாதி தரப்பில் ஆஜரான வழக் கறிஞர் அனூப் சவுத்ரி கூறினார். இதே கருத்தை வாதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.

தீர்ப்பை ஒத்திவைக் கக் கூடாது என்பதில் வழக்கின் இரு தரப்பின ரும் காட்டும் ஒற்று மையை பிரச்சினைக்கு சமரசமாகத் தீர்வு காண் பதில் காட்டுங்கள் என் றார் நீதிபதி.

இந்த வாதத்தை நீதி பதி ரவீந்திரன் ஏற்க வில்லை. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை ஒத்தி வைக்க உத்தரவிட்ட தோடு சம்பந்தப்பட்ட வர்களுக்கு தாக்கீது அனுப்புமாறும் கூறி னார்.

அயோத்தி வழக்கில் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங் கப்படாவிடில் மேலும் நீண்ட காலம் தாமதமாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதி களில் ஒருவர் செப்டம் பர் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி ஓய்வுபெற்றால் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு அவர், வழக்கை புதிதாக நடத்தி, விசாரித்த பின் னரே தீர்ப்பு வழங்க முடியும்

புதன், 22 செப்டம்பர், 2010


மக்களிடையே...

மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள கோயில், பூசை, யாகம் மற்றும் பழக்கவழக்கமான சடங்குகளே காரணமாய் இருப்பதால், இவைகள் ஒழிக்கப்படும்வரை மக்களிடையே சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை வளராது.

(விடுதலை, 9.8.1965)


இலக்கியமும்- பெரியாரும்

பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பில் நேற்று (21.9.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பெரியாரின் இலக்கியப் பார்வை - புதுவெள்ளம் - புதுநோக்கு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 13.1.1936 அன்று திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை மய்யப்படுத்தி, அதன் சாராம்சத்தை எடுத்துக்காட்டிய விளக்கவுரையாக அது அமைந்திருந்தது.

பொதுவாக தந்தை பெரியார்பற்றி தமிழர்களில் புரியாதவர்களும், பார்ப்பனர்கள் திட்டமிட்டும் ஒரு பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். வெறும் சொற்களின்மீதான பார்வையால் மட்டும் சொல்லப்படும் குற்றச்சாற்று இது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தந்தை பெரியார் பாடுபட்டதுபோலவும், கருத்துகளைச் சொன்னதுபோலவும் - ஆக்க ரீதியாக இன்னொருவர் செய்தார்; சொன்னார் என்று கூறிட முடியாது.

தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப்பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்.

இதன் பொருள் ஆங்கிலத்திற்கு நிகராக தமிழும், விஞ்ஞான மொழியாக வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதானே தவிர, தமிழை அவமானப்படுத்தியதாகவோ, தரம் தாழ்த்தி சொன்னதாகவோ பொருளாகாது.

தமிழையும், மதத்தையும் தனியே பிரித்துவிடவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதையும், மதச் சார்பற்றவர் களுக்குத் தமிழில் இருப்பது எது என்று தந்தை பெரியார் வினா எழுப்பியதையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.

தமிழ் மொழியிலிருந்து புராணங்களையும், இதிகாசங் களையும் கழித்துவிட்டால், எஞ்சி நிற்பது எதுவாக இருக்கும் என்பது அர்த்த வளமிக்க வினாவாகும்.

மதம் என்னும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்று புரட்சிக்கவிஞர் பாடியதும் இந்த அடிப்படையில்தான்.

நமது தமிழ்ப் புலவர்களுக்குப் புராண ஞானம் இருக்கும் அளவுக்கு பொது ஞானமோ, அறிவியல் ஞானமோ இருப்பதில்லையே என்று தந்தை பெரியார் கூறியதும், நமது புலவர்களின் அறிவு காலத்துக்கேற்ற அளவு மேம்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

தமிழிலேயே வருணம் புகுத்தப்பட்டு இருப்பதுபற்றி தந்தை பெரியார் கேட்கிறார். மக்கள், தேவர், நாகர் உயர்திணை என்று தமிழ் இலக்கணத்திலேயே கூறப் பட்டுள்ளதே என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு அன்றைக்கு அய்யாவோடு இருந்த திரு.வி.க., நமசிவா யனார், கந்தையா போன்ற புலவர்கள்முதல் இன்றுவரை உள்ள புலவர்களும் விடையிறுத்ததில்லையே!

இந்த இடத்தில் இன்னொன்றும் முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்கது ஒன்றுண்டு. பாக்களில் சிறந்ததான வெண்பாவால் பார்ப்பனர்களை மட்டும் பாடவேண்டும்; அரசனுக்கு ஆசிரியப்பா, வைசியருக்கு கலிப்பா, சூத்தி ரருக்கு வஞ்சிப்பா என்று வருணப் பிரிவை இலக்கணத்தில் (வச்சணந்தி மாலை) திணிக்கப்பட்டுள்ளதே!

பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் (சத்திரியர்) என்றும், அடுத்த நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் இலக்கணம் கூறப்பட்டதற்கு என்ன சமாதானம்?

தந்தை பெரியார் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்; ஒன்றின் மீது வினாவை எழுப்புகிறார் என்றால், அது நோய்நாடி, அதன் முதல் நாடுவதாகத்தான் இருக்கும்.

லென்ஸ் வைத்து தந்தை பெரியார் படித்ததுபற்றி கூறிய விடுதலை ஆசிரியர் அவர்கள், நமது இலக்கியங்களில், புராணங்களில் நெளியும் கிருமிகளைக் கண்டுபிடிக்கத் தான் என்று நயத்தோடும், அதேநேரத்தில் ஆழ்ந்த பொருளோடும் கூறினார்.

ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்து உனக்கு இங்கிலாந்து வேண்டுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? என்று கேட்டால், எனக்கு இங்கிலாந்து வேண்டாம்; ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று கூறுவான் என்று தந்தை பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் கூறியதை எடுத்துக்காட்டி, அடுத்து அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் சொன்ன கருத்து அவையில் வெடிச்சிரிப்பையும், அத்தோடு விவேக அலையையும் எழுப்பியது.

உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால், இந்த இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்ல முடியும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு ஆமாம் போடுவதைத் தவிர வேறு வழி என்ன?

இலக்கியம் முதல் இனக் கோட்பாடுவரை எதைத் தொட்டாலும் தந்தை பெரியார் தன்னிகரற்ற சூரியனாகவே தகிக்கிறார் என்பதுதான் உண்மை! உண்மையிலும் பேருண்மை!!

-http://www.viduthalai.periyar.org.in/20100922/news06.html


அடடே மதி...

http://www.viduthalai.periyar.org.in/20100922/news04.html

வானொலியில் சமஸ்கிருதத்திற்குரிய அதே நேரம் செம்மொழியான தமிழுக்கும்

வானொலியில் சமஸ்கிருதத்திற்குரிய அதே நேரம் செம்மொழியான தமிழுக்கும்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பெரியாரின் சமூகநீதிக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம்

பெரியாரின் சமூகநீதிக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம் - கி. வீரமணி
சமத்துவம் உருவாக ஜாதி ஒழிய வேண்டும் - எம்.என். ராவ்
பெரியார் பிறந்த நாள்: கொள்கைப் பரவல் விழாவாக நடைபெற்றது


சென்னை பெரியார் திடலில் 17.9.2010 அன்று மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் பாராட்டு விழா மற்றும் பெரியார் தெலுங்கு திரைப்பட திரையிடல் வெளியீட்டில் பங்கேற்றோர்: மேடையில் இடம் இருந்து வலம் ஞான. ராஜசேகரன் அய்.ஏ.எஸ்., ரவிவர்மகுமார், நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம், நீதிபதி ஏ.கே. ராஜன், நீதிபதி எம்.என். ராவ், வீ. அனுமந்தராவ், ரவிமல்லு, கட்டி பத்மராவ், பி. சுனில், கலி. பூங்குன்றன். உரையாற்றுகிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை, நவ.19- தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2010 அன்று மாலை நடை பெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரை யில், பெரியாரின் சமூகநீதியைக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம் என்றார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் தலைமையுரையாற்றினார். தமது உரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதியைப் பாதுகாக்கின்ற பட்டாளம்

தந்தை பெரியார் அவர்களு டைய 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை உலகின் பல்வேறு பகுதி களில் இன்று உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின் றார்கள். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதே சமூகநீதிக்காகத் தான் என்று குறிப்பிட்டார்கள். அந்தச் சமூகநீதியைப் பாதுகாக் கின்ற பட்டாளம்தான் இங்கே இந்த மேடையிலே இருக்கின்ற வர்கள் - இங்கே வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினரான, பாராட் டப்படக் கூடிய தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் தலைவர் நீதியரசர் எம்.என்.ராவ் அவர்கள் வந்திருக்கின்றார்.

அவர் இமாச் சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதி யாகப் பணிபுரிந்த திறமை மிக்கவர். அவர் மிகச் சிறந்த அளவுக்கு வருமானம் உள்ள நிலைகளை எல்லாம் துறந்து, சமூகநீதிக்காகப் பாடுபட வேண்டும் என்று வந்தி ருக்கின்றார். மத்திய அரசும் சரி யான நேரத்தில் அவருக்கு இந்தப் பதவியை வழங்கியிருக்கிறது.

மத்திய அரசுக்கும் நமது பாராட்டு தல்கள். அவரும் இந்தப் பதவியை மனமுவந்து ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் களை எல்லாம் சமூகநீதியை நிலைநாட்ட அவர்களை எல்லாம் ஒருங்கிணைக் கக் கூடிய நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் கன்வீனர் வீ. அனுமந்த் ராவ்காரு எம்பி. அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்.

பெரியார் படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடுகிறது

தந்தை பெரியார் திரைப்படம் தெலுங்கு மொழியில் சிறப்பாக வெளியிட பாடுபட்ட பி. சுனில் அவர்கள் வந்திருக் கின்றார். நல்ல துடிப்பு மிகுந்த ஆற்றலாளர் அவர். இன்றைக்கு தந்தை பெரியார் திரைப்படம் ஆந்திராவில் தெலுங்கு மொழியில் வெற்றிகர மாக ஓடிக் கொண்டிருக் கின்ற செய்தியைக் கேட்டு, நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். பெரி யார் படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருக் கின்றது என்ற செய்திகள் நமக்குக் கிடைத்திருக் கிறது. ஸ்டாலின் கலந்துகொண்டார்

பெரியார் திரைப் படம் தெலுங்கு மொழி யிலே வெளியிட அய்த ராபாத்தில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சி யில் நம்முடைய துணை முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

அதேபோல பெரி யார் திரைப்படத்திற்கு தெலுங்கு மொழியில் உரையாடல் எழுதிய கட்டி பத்மராவ் அவர் கள் வந்திருக்கின்றார்.

அவர் எவ்வளவு பெரிய ஆற்றலாளர் என் பதை அவருடைய பேச்சைக் கேட்ட உங்க ளுக்கெல்லாம் தெரியும்.

அதே போல டாக்டர் ரவி மல்லு அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியாக இருக்கின்றவர். அவரு டைய முயற்சியால்தான் பெரியார் படம் தெலுங்கு மொழியில் இந்த அள வுக்குச் சிறப்பாக வந்திருக்கிறது. ஆந்திர மக்களிடையே இந்தப் படம் செல்வதற்கு மூலகர்த்தாவாக இருந்து செயல்பட்டவர்.

அதேபோல நம்மு டைய ஜஸ்டிஸ் ஜனார்த் தனம், ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் ஆகியோரும் மற்றும் ஆந்திர நாத்திக சமாஜ்ஜியத்தை சேர்ந்தவர்கள். அதே போல கர்நாடக மாநி லத்தில் பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த வரும், உச்சநீதிமன்றத்தில் மிகச் சிறப்பாக வாதாடக் கூடியவருமான வழக் கறிஞர் ரவிவர்மகுமார் வந்திருக்கிறார். அதே போல பெரியார் படத்தை எடுத்த இயக் குநர் ஞானராஜசேகரன் அய்.ஏ.எஸ். போன்ற வர்கள் எல்லாம் வந்திருக் கிறார்கள். அனைவரை யும் இந்த நேரத்தில் மன மகிழ்ச்சியோடு வரவேற் கின்றோம்.

அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் நல ஊழியர்கள் சங்க கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் கோ. கருணாநிதி அவர்கள் சிறந்த செயல் திறன் மிக்கவர். சமீபத்தில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மிகச் சிறப்பான பாராட்டு விழாவை நடத்தினார். அனைவரும் பாராட்டத் தக்க அளவிலே அவர் ஒரு நல்ல குழு அமைப்போடு, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அகில இந் திய அளவிலே பணியாற் றிக் கொண்டிருக்கின் றார். அருமையான செயல் வீரர்.

கருணாநிதி என்றால் சமூகநீதி

கருணாநிதி என்றாலே அது சமூகநீதியின் மறு பெயர்தானே. நான் ஒரு நீண்ட உரை ஆற்றப் போவதில்லை. நாமெல் லாம் உள்ளபடியே மன நிறைவோடு மகிழ்ச்சி யோடு இருக்கின்றோம்.

பெரியார் அப்பொழுதே சொன்னார்

தந்தை பெரியார் அவர்கள், தனியாக நாங் கள் அவரிடம் உரை யாடிக் கொண்டிருக் கின்ற பொழுது சொன்னார்.:

இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையிலே மத்திய அரசு ஒரு வேளை வழங்க முன்வந்தாலும், மத்திய அரசை நடத்தி வருகின்ற நிருவாகத் தினரான உயர்ஜாதிக் காரர்கள் விட மாட்டார் கள் என்று சொன்னார். அது இன்றைக்கும் எவ் வளவு பெரிய உண்மை என்பதைப் பார்க்கி றோம்.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய தலைவர் அவர்களே! வீ. அனுமந்தராவ் அவர் களே! ரவிமல்லு அவர் களே! தந்தை பெரியாரின் சமூகநீதிச் சுடரை ஏந்திச் செல்லுங்கள். சமூக நீதியை நிலை நாட்டி சமூகநீதிக் கொடி பட் டொளி வீசிப் பறக்கச் செய்ய முயற்சி எடுங்கள். உங்கள் முயற்சிக்கு என் றென்றைக்கும் நாங்கள் துணை நிற்போம். இவ் வாறு பேசினார்.

நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 17.9.2010 அன்று காலை மாபெரும் கருத்தரங்கம் நடை பெற்றது.

அடுத்து மாலை பாராட்டு விழா, பெரி யார் தெலுங்கு திரைப் படம் திரையிடல் விழா மிகச் சிறப்பாக தொடங் கியது.

வீ. அன்புராஜ்

திராவிடர் கழக தலைமை நிலையச் செய லாளர் வீ. அன்புராஜ் வரவேற்று உரையாற்றி னார். வந்திருந்த அனை வரையும் வரவேற்ற அவர், தந்தை பெரியார் கொள்கை இன்று தமிழர் தலைவரின் அரிய உழைப்பினால் பரவி வருவதை எடுத்துக்காட் டினார்.

சமுக நீதிக்காக பொது நலனுக்காகப் பாடுபடுகிறவர்களை பாராட்டுவதுதான் பெரி யார் இயக்கத்தின் வழமை; அந்த வகையிலே இன் றைக்கு வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களுக் குப் பாராட்டு விழா நடைபெறுகின்றது என்று கூறினார். பெரி யார் படம் தெலுங்கு மொழியில் வெற்றி நடை போடுவதை விளக்கினார்.

கோ. கருணாநிதி

அகில இந்திய பிற் படுத்தப்பட்ட பணியா ளர் நலச் சங்கக் கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் கோ. கருணாநிதி அறிமுகவுரையாற்றினார். அவர் தனது உரையில் தந்தை பெரியார் 132ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (செப்.17) நாடெங்கும் கொண்டாடிக் கொண்டி ருக்கின்றோம். பிகார் மாநிலத்தில் தேர்தல். அவரவர்கள் அங்கு முனைப்போடு தேர்தல் பணியாற்றிக் கொண்டி ருக்கின்ற பொழுது பீகார் பாட்னாவில் திரி வேணி சங்கமம் என் னும் அமைப்பினர் இந்த நேரத்தில் அங்கு பெரி யார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடிக் கொண்டி ருக்கின்றார்கள் என்ற செய்தி நமக்கு வந்திருக் கிறது.

இன்றைக்கு தமிழ கத்தைத் தாண்டி சமூக நீதி இந்தியா முழுவதும் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய முயற்சியால் பரவி வரு கிறது. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை, அவர்களு டைய தியாகம் ஆகிய வற்றை எல்லாம் உற்சாக மாகப் பரப்பி வருகிறார் நம்முடைய தமிழர் தலைவர்.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய தலைவர் எம்.என். ராவ் அவர்களைப் போன்ற தொரு சமூகநீதிப் போரா ளியைப் பார்க்க முடி யாது.

பெரியார் படம் இந்தியில், ஃபிரெஞ்சில்

அந்த அளவுக்கு சமூகநீதியில் அக்கறை கொண்டவர். அவர் அதே போல அனுமந்த ராவ் எம்.பி. அவர்களும் சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டிருப் பவர். பெரியார் படம் அடுத்து இந்தி மொழி யில் வர வேண்டும். ஃபிரெஞ்சு மொழியில் வர வேண்டும். உலகம் எல்லாம் ஆழமாகப் பெரியார் கொள்கை பரவ பல மொழிகளில் பெரியார் படம் வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.

கட்டி பத்மராவ்

தெலுங்கு பெரியார் திரைப்பட உரையாடல் ஆசிரியர் கட்டி பத்ம ராவ் தனது உரையில், தந்தை பெரியார் தமிழ கத்தில் மட்டுமல்ல வட புலத்திற்கும் மேலும் பரவச் செய்ய வேண்டும். ஆந்திராவில் பெரியார் படம் டிக்கெட் ரூ.300க்கு விற்பனையாகிறது என் றால் அதனுடைய வர வேற்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். தலைவர் வீரமணி அவர்களை அழைத்து ஆந்திர மாநி லத்தில் பெரியாரின் கொள்கை பரவ பெரும் பிரச்சாரத்தில் ஈடுபடு வோம் என்றார்.

வீ. அனுமந்தராவ் எம்.பி.

நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்களின் ஒருங் கிணைப்பாளர், அனுமந் தராவ் தனது உரையில்,

திராவிடர் கழகம் எனும் பெரியாரின் சீரிய இயக்கம் என்னைப் பாராட்டியமைக்கு மிக வும் மகிழ்கிறேன். அனை வருடைய சுயமரியாதைக் கும், வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்களின் சமூக நீதிக்கும் உழைத்துப் பெரும் தியாகங்கள் செய் தவர், பெரியார் என்றார்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு

அறிஞர் அண்ணா, அவரைப் பற்றிக் குறிப் பிடும் பொழுது, நூற் றாண்டுகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங் களை சில பத்தாண்டு களில் சாதித்தவர் என்றார்; அது உண்மை. இந்தியா வின் சமூகநீதிப் போராட் டத்திற்குத் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது. இங்குதான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டப் பாதுகாப்புப் பெற்று நடப்பில் இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் பிற்படுத்தப்பட்ட உறுப் பினர்களில் 140 பேரை ஒன்று சேர்த்து, சமூக நீதிக்குப் போராடி வருகி றோம். தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத் திற்குச் சட்ட முறையி லான ஏற்பு அளிக்க வேண்டுமென வலியு றுத்தி வருகிறோம். பிற் படுத்தப்பட்டவர்களின் கோரிக்கைகளை நடை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடு (மெகானிசம்) இல்லாமல் இருக்கிறது. சுயமரியாதையும் சமூக நீதியும் என்றும் நம்மை வழிநடத்திச் செல்ல வேண்டிய கொள்கைகள் என்ற வகையில் பாடு படும் திரு. வீரமணி அவர்களைப் பாராட்டு கிறேன்.

எம்.என். ராவ்

தேசியப் பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் தின் தலைவர், எம்.என். ராவ் ஆற்றிய உரையின் கருத்து: தமிழ்நாட்டில் ஒரு ஞானியாக இருந்து, துறவியாய் வாழ்ந்தவர் பெரியார். இன்று அவ ருடைய செய்தி, கொள்கை, நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. சமுதாயத்தின் சில பகுதியினரை அடிமை களாக்கி வைத்திருந்தது ஜாதி முறை. அதை எதிர்த்துப் போராடி பெரியார் பல அவமா னங்களையும் எதிர்ப்பு களையும் எதிர்கொண்டு, துணிந்து பாடுபட்டார்.

சமுதாய அடிமைத் தளத்திற்கு அடிமை யாகிவிட்ட மக்கள் அதை எதிர்த்துப் போராடும் மன உறு தியை இழந்து இருந் தனர்; அவர்களுடைய மனம் கட்டுப்பட்டுக் கிடந்தது. கட்டுண்ட அடிமை மனங்களுக்கு விடுதலை தந்தவர், பெரி யார்.

ஜாதிதான் பிரிக்கிறது

ஜாதியால் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள்; ஒதுக்கப்படுகிறார்கள். ஜாதியின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த அவலத்தை ஜாதி அடிப் படை ஒதுக்கீட்டின் மூலம்தான் போக்க முடியும். பொருளாதார அடிப்படையை மேற் கொண்டால், ஜாதி ஏற்றத் தாழ்வு நீடிக்கவே செய்யும், மறையாது. சமுதாய ஒதுக்கலை, சமூக நீதியின் மூலம்தான் போக்க முடியும்; அதற்கு ஜாதியை அளவுகோ லாகக் கொண்டு தீர்வு காண வேண்டும்.

சமுதாய மாற்றம் நிகழ்வதற்குச் சமூகநீதி தேவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண் டும்; தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவர் இடஒதுக் கீட்டின் பலனைப் பெற வேண்டும். இதை அடை வதற்கு உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும்.

60 விழுக்காட்டிற்கு மேல் பிற்படுத்தப்பட்டோர்

இந்தியாவில் குறைந் தது 60 விழுக்காடு மக் கள் பிற்படுத்தப்பட்ட வர்கள் என்பது மெய்ம் மையாகும்.

இன்றைக்குக்கூட, சதிஷ்கர், உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநி லங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை.

பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு மத்திய அரசு 27விழுக்காடு இடஒதுக் கீடு அளித்திருந்தாலும், சுமார் 7 விழுக்காடு இடங்களை மட்டுமே அவர்கள் பெற முடிந் திருக்கிறது.

கிரீமிலேயர்

கிரீமிலேயர் என்று சொல்லி, பிற்படுத்தப் பட்டவர்களில் முன்னே றியவர்கள் எனக் கூறி, ஒரு பகுதியினருக்கு இட ஒதுக்கீட்டின் நன் மையை மறுக்கும் ஏற் பாடு நீங்க வேண்டும். அப்பொழுதுதான் பிற் படுத்தப்பட்டவர்கள் தங்கள் ஒதுக்கீட்டை முழுமையாகப் பெற முடியும் இவ்வாறு அவர் பேசினார்.

சத்யராஜ் வாழ்த்து

இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற இனமுரசு சத்யராஜ் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னதாக தலைமை உரையாற்றினார்.

கலி. பூங்குன்றன்

மனிதநேய நண்பர்கள் குழு செயலாளர் அர. இராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் முழுவதையும் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொகுத்து வழங்கினார்.

தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கூட்டத்தினர். (சென்னை பெரியார் திடலில் மாலை நிகழ்ச்சி 17.9.2010)


-நன்றி "விடுதலை" 19-9-2010

செஞ்சியில் தந்தைபெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

செஞ்சி, செப்.19- செஞ்சியில் தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாளில் திராவிடர் கழக கொடியேற்றும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், செஞ்சி நகரத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோபண்ணா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விவே கானந்தன், மாவட்ட அமைப்பாளர் துரை, செஞ்சி நகர துணை செயலாளர் இரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அனந்தபுரத்தில் தந்தைபெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கழகக் கொடி ஏற்றி வைத்து அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சவுந்தரி நடராசன், புலவர் எத்திராசன், திமுக அனந்தபுரம் நகர செயலாளர் கல்யாண்குமார், காணை ஒன்றியத் தலைவர் நாராயணன், செஞ்சி நகரத் தலைவர் அண்ணாமலை, நல்லாப் பாளையம் கலையரசன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நன்றி "விடுதலை" நாளிதழ் 19-9-2010

சனி, 4 செப்டம்பர், 2010