சனி, 9 அக்டோபர், 2010

-- http://www.viduthalai.periyar.org.in/20101008/news02.html

கார்ட்டூன்!

திரிநூல் - தினமலர் இன்று ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. (தனியே காண்க).

விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதியாகிவிட்டது; அதற்குக் கல்லறை எழுப்பி யாகிவிட்டது; இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வும் வீணாக அதுபற்றிக் கட்டி அழுகிறார்கள் என்பது இந்தக் கார்ட்டூனின் நோக்கம்.

ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமைக்காகக் குரல் கொடுக் கும் அமைப்புகளும், அதன் தலைவர்களும் கேட்கும் வினாவை ஏதோ ஒரு வகை யில் தினமலரும் வழிமொழி கிறது என்று கருதலாமே!

அவர்களின் கருத்துப் படியே சமாதி செய்யப்பட்டு விட்ட ஒரு இயக்கத்துக்கு ஏன் தடைகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

இன்னொரு வகையிலே இதே கார்ட்டூனைக்கூட கொஞ்சம் மாற்றிப் போட லாமே தினமலர்... தமிழர் தலைவர் வீரமணி மற்றும் வைகோ ஆகியோரின் படங் களை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பிரதமர் மன் மோகன்சிங் படத்தைப் போட்டு தடை விதிப்புமூலம் - கல்லறைக்குப் போன வர்களுக்கு உயிர் கொடுக் கிறார் என்று போடலாமே!

ஏன் போடவில்லை? விடுதலைப்புலிகள் என்ற பேச்சே இருக்கக்கூடாது. புலிகள் என்ற ஒரு வார்த்தை யைக் கேட்கும் மாத்திரத்தி லேயே சிங்களக் கூட்டமும், இந்தியாவில் உள்ள அவர் களின் இனத்தைச் சேர்ந்த வர்களுமான பார்ப்பனர் களும் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறார்கள்.

சிங்களவர் ஆரிய இனத் தைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. ஒருமுறை ஜெயவர்த்தனே கூட என் மூக்கும் இந்திரா காந்தியின் மூக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் - காரணம் நாங்கள் இருவரும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல வில்லையா?

விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படு கிறது என்ற போர்வையில், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர் கள்மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும்; ஈழத் தமிழ்- இளைஞர்கள் விடு தலைப்புலிகள் கண்ணோட் டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற தீய நோக்கம்தானே இதில் பதுங்கி இருக்கிறது?

தமிழ்நாட்டிலும், இந்தியா விலும் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசினாலோ, அதன் விடு தலைப்புலிகளுக்கு ஆதர வான பேச்சு - கருத்து என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டத்தை ஏவச் செய்யவேண் டும் என்ற கொடூர ஈனப் புத்திதானே இதன் பின்னணி யில் இறக்கை கட்டிப் பறக்கிறது.

சோவாக இருந்தாலும், குருமூர்த்தியாக இருந்தாலும், இந்து ராம் ஆனாலும், தினமலர் வகையறாக்கள் ஆனாலும் புலிகள் என்றாலே கிலி அடையக் காரணம் என்ன?

இனத் துவேஷம்! இனத் துவேஷம்!! இனத் துவேஷம் தான்!!!

ஆதிக்க இனம் இன் னொரு இனத்தை ஒடுக்க ஒடுக்கப் புலிகளும், சிங்கங் களும், சிறுத்தைகளும் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதைத் தினமலர் கூட்டம் உண ரட்டும்!

- மயிலாடன்

-- http://www.viduthalai.periyar.org.in/20101008/news03.html


‎'தினமல' பார்ப்பனத்தனத்தை தமிழர்கள் புரிந்துகொண்டால் சரி. தமிழன் வாழ்வில் அத்துணை நிகழ்வுகளிலும் பார்ப்பனர்கள் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பங்கேற்று தமிழர்களை இழித்தும், பழித்தும் மந்திரங்கள் பெயரால் செத்த மொழியில் இழிவு படுத்துவதை உணரேவண்டும். தமிழன் ஒருவன் உயிரிழந்தால் துக்கம் விசாரிக்ககூட வராதவன்தான், பிதிர்லோகத்தில் உள்ள மூதாதையர்க்கு அவிர்பாகம் கொண்டு செல்லும் கூரியர் சேவை செய்கிறானாம், நம்புகிறான் தமிழன். தற்போது முள்ளிவாய்க்கால் மனித அவலத்தில் உயிர் இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கும் அவிர் பாகம் வேண்டி 'தினமல' பார்ப்புகள் அலைகிறதோ?

வெள்ளி, 8 அக்டோபர், 2010

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை ஏன்?

விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக ராஜபக்சேவே கூறிவிட்ட நிலையில்
இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்?
இந்திய அரசுக்குத் தமிழர் தலைவர் கேள்வி

விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறிவிட்டார். இந்நிலையில், இந்திய அரசு மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை செய்வது தேவையற்ற ஒன்று என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாயக் கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

ராஜபக்சேமீது பான்-கி-மூன் குற்றச்சாற்று

சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமை பறிப்புகள் பற்றி, அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்; விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர்பற்றி அய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.

இந்தியா அளித்த உதவி என்னாயிற்று?

இந்த நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங் களாக்கிடும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை ஏன்?

இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!

இலங்கை அரசே இங்கே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் - சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படை யிலோ என்று நமக்குப் புரியவில்லை.

காஷ்மீருக்கு ஒரு நீதி - விடுதலைப்புலிகளுக்கு மற்றொரு நீதியா?

காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சல்கள் பெருகிய பல வட மாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் - நல்லெண்ண முயற்சிகளை மேற் கொள்வது - அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!

அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத் திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் - இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாற்றின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினை (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும்.

இலங்கை அரசை நிர்பந்தப்படுத்துக!

எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப் படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுகவேண் டும். நிர்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிடவேண்டும் - முன்னுரிமை அதற்குத்தான் தரப்படவேண்டும்.


தலைவர்,
திராவிடர் கழகம்

- http://www.viduthalai.periyar.org.in/20101007/news01.html

வியாழன், 7 அக்டோபர், 2010

இந்தியாவில் புதிய மொழி

இந்தியாவில் புதிய மொழி
வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம்வ்
வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம்
இந்தியாவின் வடகிழக்கில் தொலைதூரத்து ஒதுக்குப்புறப் பகுதி ஒன்றில் புதிய மொழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோரோ என்று அழைக்கப்படும் இந்த மொழி இந்தியாவின் வடகிழக்கில் இமயமலை பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பேசப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் மொழி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது இனம் காணப்பட்டுள்ள இந்தக் கோரோ மொழி, அது சார்ந்த மொழிக் குடும்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆய்வு

நேஷனல் ஜியாகரஃபிக் தொலைக்காட்சிக்காக அழிந்து வரும் மொழிகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கான தயாரிப்பில் நிபுணர்கள் ஈடுபட்டிருந்தபோதே மிகச் சிலரால் இந்தக் கோரா மொழி பேசப்படுவது தெரியவந்தது.

அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூரத்து ஒதுக்குப்புறப் பகுதிகளில் சிறிதளவே அறியப்பட்டிருந்த வேறு இரண்டு மொழிகளை தேடிச் சென்றபோதுதான், இது வரை பதிவு செய்யப்படாததும், முற்றிலும் மாறுபட்டதுமாக இருந்த இந்தக் கோரோ மொழியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மொழியானது இந்தியாவில் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கிய திபேத்திய பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் கோரோ மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய வேறு எந்த மொழியும் இந்த மொழிக் குடும்பத்தில் இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அழிவின் விளிம்பில்...

உலகில் தற்போது அறியப்பட்டுள்ள 6909 மொழிகளில் பாதியளவு அழிந்து போகக் கூடிய நிலையில் உள்ளது என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கோரோ மொழியும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.

கோரோ மொழி எழுத்து வடிவில் இல்லை என்பதும் அதை தற்போது 800 முதல் 1200 பேர் வரையிலானவர்களே பேசிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101006_newindialanguage.shtml

ஆயுதபூசைபற்றி அண்ணா


எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்-டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனி-தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்-பவர்கள் எல்லாம். சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண்டாடாதவர்கள்!!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம், ஆயுதபூசை செய்தவர்களல்ல!

நவராத்திரி கொண்டாடினவர்-களல்ல!

சரஸ்வதி பூசை இல்லை!

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும் மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள் தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்-துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்.

நீ, கொண்டாடுகிறாய்-_

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை!!

ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சுயந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு, உன், பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்துவந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளை, பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்-குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல், யோசி _ உன்னை-யுமறியாமல் நீயே சிரிப்பாய்.

உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூற்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடி-யிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்-சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

எல்லாம் மேனாட்டான், கண்டு-பிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை, மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

சரஸ்வதி பூசை, விமரிசையாக நடைபெற்றது _ என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட், அல்லது ராய்ட்டர் சர்வீஸ் _ தந்தி முறை _ அவன் தந்தது!

தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!

ராகவன், ரேடியோ கேட்டதில்லை, சிபி, சினிமா பார்த்தில்லை!

தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!

இவைகளெல்லாம், மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது _ அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம்.

அவர்கள், சரஸ்வதி பூசை ஆயுத பூசை! செய்தறியாதவர்கள் என் பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம். இதுமுறைதானா?

பரம்பரைப் பரம்பரையாக நாம் செய்து வந்த

சரஸ்வதி பூசை ஆயுத பூசை _

நமக்குப் பலன் தரவில்லையே! அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்-களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பிறகு வெட்கமாக இருக்கும், அதை-யும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் _ அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

திராவிடநாடு 26.10.1947

- http://www.viduthalai.periyar.org.in/20101006/news06.html

இந்து மத பண்டிகை தொல்லைகள்

வேண்டியது

மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான் வேண்டும். பணம் சம்பாதிப்பதில் போட்டி போடு வதைவிடப் புத்தி சம்பாதிப்பதில் போட்டி போட வேண்டும்.

விடுதலை, 14.3.1961


நவராத்திரியாம்!

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.

விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

ஒவ்வொரு நிமிடமும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத காலமாகும். காலத்தைக் கண்ணாகப் போற்றும் மனிதனும், நாடும்தான் முன்னேற்றப் பாதையில் முனைந்து ஓடும்.

தொடர்ச்சியாக ஒன்பது நாள்களை மதத்தின் பெயரால் பாழ்படுத்தும் ஒரு நாடு எப்படித்தான் முன்னேறித் தொலைய முடியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான கதையளப்பு! அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அழுக்கு மூட்டைகள் அவை.

கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சூலாயுதத்துடனும், வேலாயுதத்துடனும், கபாலத்துடனும், சிங்கத்தின்மீதும், மூஞ்சூறு மீதும், புலியின் மீதும், காகத்தின் மீதும் சவாரி செய்வது போன்ற உருவங்கள் - வழிபாடுகள் - கோயில்கள் என்றால் இந்த முரண்பட்ட, வெட்கம் கெட்ட மூடத் தனத்தை எண்ணி எங்கு போய் முட்டிக்கொள்வது!

ஒவ்வொன்றுக்கும் ஸ்தல புராணக் குப்பைகள் வேறு - பராசக்தியே துர்க்கையாக இருந்து தீமை களை அழிக்கிறாளாம்; அவளே சரசுவதியாக இருந்து கல்வியையும், அறிவையும் கொடுக்கி றாளாம்; அவளே மகாலட்சுமியாக இருந்து செல்வத்தையும் வாரி வழங்குகிறாளாம்.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள்தான் கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முத லிடத்தில் இருக்கவேண்டும்.

11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்டும் இன்னும் தற்குறித்தனம் ஒழிக்கப்படவில்லை. இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை.

பூஜைகளுக்கும், புராணப் புளுகுகளுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சரசுவதி பூஜை கொண்டாடாத நாட்டில் நூற்றுக்கு நூறு படித்திருக்கிறார்களே! முயற்சி வேண்டாம் - பக்தி போதும் என்று போதனை செய்து வளர்க்கப்பட்ட நாட்டிலே புத்தி எப்படி வளப்பம் பெறும் - முன்னேற்றம் எங்கே முளைகட்டும்?

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவி கள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?

அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப் படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழி லாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?

குண்டூசி கூட கண்டுபிடிக்கத் தெரியாத நாட்டில் ஆயுத பூஜைக்கு மட்டும் குறைவு இல்லை. கடவுள்களின் கைகளில் இருக்கும் கருவிகள் எல்லாம் கொலைக்கருவிகளாகத்தான் இருக் கின்றன - அந்தக் கருவிகளைக் கொண்டு இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய்துள்ளன - அதற்காகத்தான் பூஜை புனஷ்காரங்களா?

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?

- http://www.viduthalai.periyar.org.in/20101006/news05.html

செவ்வாய், 5 அக்டோபர், 2010

நம் கடன் பெரியார் பணி முடிப்பதே!







பார்ப்பனர்களின் நரித்தனத்தால் தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ளோம். உணர்வு உள்ள தோழர்களை இணைப்பதுடன், புதிய தோழர்களை பகுத்தறிவுப்பாதைக்கு இட்டு செல்லவேண்டியது அனைவரின் கடமையுமாகும். உண்மையாகவே பக்திமானாக இருப்பவனுக்கு கடவுள் இல்லை என்றதும் மிகுந்த கோபம்தான் வரும். அவனே சிந்தித்துவிட்டால், அவன் முழுமையான பகுத்தறிவுவாதி ஆகிவிடுவான். கோபத்திற்கான அடிப்படைக்காரணம் பிறந்ததுமுதல் அவனை எட்டிய செய்தி, மேலும் நம்பிக்கையே ஆகும். ஆக, நம் கடன் பெரியார் பணி முடிப்பதே. பகுத்தறிவு பிரச்சாரம் என்பது எவரையும் மாற்றுவது என்பதை விட சிந்திக்க தூண்டுவதே ஆகும்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயுமா?

பாபர் மசூதி வளாகத்துக்குள் மசூதி கட்டக்கூடாது என்று கூறுகிறார் காஞ்சி சங்கராச்சாரியார்
காசி, மதுராவில் உள்ள மசூதிகளையும் அகற்றவேண்டும் என்று தூபம் போடுகிறார் சு.சாமி
கலவரங்களைத் தூண்டும் இவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயுமா?
தமிழர் தலைவர் அறிக்கை

பாபர் மசூதி தொடர்பான வழக்குத் தீர்ப்பினைத் தொடர்ந்து கலவரம் வெடிக்குமோ என்று அச்சப்பட்ட சூழலில், அந்நிலை ஏற்படாத நிலையில், கலவரத்தைத் தூண்டும் வண்ணம் அடுத்து காசி, மதுராவில் உள்ள மசூதிகளை அகற்றவேண்டும் என்று சு.சாமிகள் சொல்லுவது கலவரத்தைத் தூண்டக் கூடியதாகும்.

இவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடம் ராமன் பிறந்த இடம் என்று சொல்லப்பட்டதால், நம்பப்படுவதால் அங்கே ராமனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம்? பாபர் மசூதி பாதுகாப்புக் குழுவுக்கா? அல்லது ராமன் கோயில் கட்ட விழையும் குழுவுக்கா? என்பதற்கான வழக்கில் கடந்த (60 ஆண்டுகளுக்குப் பின்) 30.9.2010 அன்று லக்னோவில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு - தனித்தனித் தீர்ப்புகளைக் கூறிவிட்டது!

கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு!

பொதுவாக இத்தீர்ப்பு ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆக உள்ளதே தவிர, சட்டத்தின் அடிப்படையில், சாட்சியங்களையோ, முக்கிய ஆதாரங்களையோ அலசி ஆராயாமல், நீண்ட கால மக்கள் நம்பிக்கை - மத நம்பிக்கை என்ற அடிப்படையில் அமைந்துள்ளது என்று பிரபல சட்ட வல்லுநர்கள் - உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் - ராஜீவ் தவான், பி.பி. ராவ் போன்றவர்கள் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்!

காரணம், மூன்று பாகமாக அந்நிலத்தைப் பிரித்து - மூன்றில் ஒரு பாகம் பாபர் மசூதி குழுவினருக்கு; மீதி இரண்டும் இரு இந்து அமைப்புகளிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். மூன்று மாத கால அவகாசம் அப்பீல் செய்வதற்கு என்று தெரிவிக்கப் பட்டது. பாபர் மசூதி கட்டிய இடம் ராமன் பிறந்த இடம்தான் என்று மக்கள் நம்புவதால், அதனை ஏற்கவேண்டும் என்று நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பைக் கூறிவிட்டனர்!

வருங்காலத்தில் வீண் வம்பு!

தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் சர்வே கண்டுபிடிப்புகள் அடிப்படையிலோ அல்லது வரலாற்றுச் சான்றாதாரங்கள் அடிப்படையிலோ இத்தீர்ப்பு எழுதப்படாமல், வெறும் மக்கள் நம்பிக்கை அடிப்படையைக் கொண்டு எழுதப்பட்டதால், இது வருங்காலத்தில் பல வீண் வம்பு வல்லடி வழக்குகளை உண்டாக்கக் கூடிய அபாயப் போக்குக்கு வித்திட்டிருக்கிறது என்பதை நாம் முன்பு எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

இதே கருத்தை - துணிச்சலாக அறிவு நாணயத்துடன் ரொமிலா தாப்பர் என்ற பிரபல மூத்த வரலாற்று ஆசிரியரும் மற்றும் பல்வேறு பொது அறிஞர்களும் ஓர் அருமையான கூட்டறிக்கையைத் தந்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்!

சட்ட விரோதங்களுக்கு அங்கீகாரம்!

இது மதச்சார்பின்மை என்ற நமது அரசியல் கட்டமைப்பின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது தீர்ப்பு என்பதை அந்த வல்லுநர்கள், அறிஞர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவோடு இரவாக, பாபர் மசூதிக்குள் இராம் லல்லா என்ற சிறு குழந்தை இராமனின் 3 சிலைகளை, பாபர் மசூதி மத்திய டூம் பகுதி அடிப்பகுதியில் வைக்கப்பட்ட சட்ட விரோதச் செயல்பற்றியோ (அப்போதைய பிரதமர் நேரு இந்தச் சிலைகளை அகற்றுமாறு வலியுறுத்தி, எதிர்காலத்தில் இது அபாயத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லும் என்று கூறி, உ.பி. முதல்வர் பண்டிட் கோவிந்தவல்லப பந்த் (பார்ப்பனர் இவர்) கடிதம் எழுதியும், அவர் அகற்ற போதிய நடவடிக்கை எடுக்காததோடு, அயோத்தியா பகுதி அதிகாரி நய்யார் மூலம் அதை அகற்றினால், அது பொதுமக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்று சாக்குபோக்கு கூறினார். இந்த அதிகாரி - நய்யார் - பிறகு ஜனசங்க எம்.பி. ஆனார், ஓய்வு பெற்ற பிறகு! இவர் எப்படிப்பட்ட இந்துத்துவா வெறியர் என்பதற்கு இது ஓர் ஆதாரம் போதாதா?) 1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அம்பேத்கர் நினைவு நாளில் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட சட்ட விரோத குற்றத்தைப் பற்றியோ ஏதும் கூறாமல் அமைந்துவிட்டது இத்தீர்ப்புகள்.

ஹீரோக்கள் ஆன குற்றவாளிகள்!

லிபரான் ஆணையத்தின் குற்றவாளிகள் மிகப் பெரியவர்கள்; அதுபற்றி இனி என்ன ஆகப் போகிறது? செலவிட்ட மக்கள் பணம், தேடிய நீதி எல்லாம், வாதாபி ஜீரணாபி என்ற பெரு ஏப்பம்தானோ!

அந்தக் குற்றவாளிகள் எல்லாம் இப்போது மாபெரும் ஹீரோக்கள்!

ஜெயேந்திர சரசுவதியின் தந்திரம்!

சங்கரராமன் கொலைக் குற்றவாளியாகிய காஞ்சி சங்கராச்சாரியார் - திடீரென மத்தியஸ்தம் செய்ய அயோத்திக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டதுபோல, இரு சாராரும் சமரசம் செய்துகொள்வதுபற்றி இதோபதேசம் கூறுகிறார்!

இவர் முன்பு போய் மூக்கறுபட்டு திரும்பியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பு அவருக்கு! (மக்கள் மறதிதானே பலருக்கு மூலதனம்?).

அவரை நோக்கி செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று நிரூபித்து விட்டார் - நீதிமன்றம் முன்பு கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவரான லோக குரு!

இந்த வழக்கில், முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப் பீர்களா என்பது பத்திரிகையாளர்களின் கேள்வி.

அதை முஸ்லிம்களே விரும்பமாட்டாளே - அவாளுக்குத்தான் அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளனவே - அதனால் இன்னொரு மசூதியைக் கட்ட அவாள் விரும்பமாட்டா!

மேலும் அவர், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்! என்று கூறியுள்ளார்.

என்னே தந்திரம், சூழ்ச்சி! ராமனுக்கு ஏற்கெனவே அயோத்தியில் 700 கோயில்கள் உள்ளன என்று பிரபல வீக் வார ஏடு ஒரு சிறப்புக் கட்டுரையே முன்பு வெளியிட்டுள்ளதே!

மேலும் ராமன் இருக்குமிடம் எல்லாம் அயோத்தி என்பதுதானே பழமொழி. அப்புறம் புதிதாக ராமனுக்கு சர்ச்சைக்கு இடையில் ஏன் புதிய கோயில்? சகிப்புத் தன்மைக்கே(?) பேர் போன இந்து மதவாத தத்துவகர்த்தா சங்கராச்சாரியார் ஏன் இப்படி இரட்டை நாக்குடன் பேசுகிறார்?

பேச்சுவார்த்தை என்ற சாக்குக்காட்டி 1949 செயலை நாட்டி நாட்டில் மீண்டும் கலவரத்தைத் தூண்டிட தூபம் போடப்படுகிறதோ என்ற அய்யம்தான், அமைதி விரும்பு வோர், நடுநிலையாளர்கள் உள்ளத்தில் எழக்கூடும்.

சமாதானப் பேச்சு சரிப்படுமா?

சமாதானப் பேச்சு நடைபெறுகிறது என்ற தலைப்புப் போடும் ஏடுகளில் - குறிப்பாக ஆங்கில நாளேடுகளில் ராமஜென்ம பூமியின் சார்பாக கோயில் கட்டத் துடிக்கும் நிருத்திய கோபால்தாஸ் (இப்போது இவர்தான் இராமச்சந்திர தாசுக்குப் பிறகு ராமஜென்ம பூமி நியாஸ் தலைவர்) கூறுகிறார், ராம் லல்லா ஏக் பட்டா தீன் ஹிஸ்ஸே மெயின் கைசே ரீஷென்ஞ் - கடவுள் ராமர் எப்படி மூன்றில் ஒரு பாக நிலத்தில் வசிக்க முடியும்? - அடடா என்ன அறிவுள்ள கேள்வி!

கல்யாண்சிங் (உ.பி. முதல்வராக இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் குற்றவாளிகளில் ஒருவர் இவரும்!) பிரதமருக்குக் கடிதம் எழுதி 67 ஏக்கர் நிலத்தையும் ராமன் கோயில் கட்டுவதற்குக் கொடுத்துவிடவேண்டும் என்று கோரியுள்ளார்!

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் குருமூர்த்தி அய்யர் எழுதுகிறார்:

மூன்றில் ஒரு பங்குகூட எப்படி பாபர் மசூதி குழுவினருக்குக் கொடுப்பது - அது அநியாயம் அல்லவா என்கிறார்!

இப்படி உள்ளவர்கள் சமாதானப் பேச்சு என்றால், அது சிங்கள இராஜபக்சே செய்த சமாதானப் பேச்சுபோல ஆகிவிடாதா?

வழக்கு - உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது பிரச்சினைக்குச் சட்டத் தீர்வு காணப்படவேண்டும் என்ற அவாவுடன் இருப்பினும், 25 ஆவது அரசியல் சட்ட விதிக்கே தவறான வியாக்கியானம் தந்த அலகாபாத் தீர்ப்பின் அபாயமாவது குறைய வழி ஏற்படக்கூடும். சட்டப்படி தீர்க்கவேண்டிய வழக்கை, வெறும் நம்பிக்கை அடிப்படையில் வைத்து, அது மேலும் பல புதிய கலவரப் பூமிகளை உருவாக்க வழிவகை செய்வதை - முதலில் தடை ஆணை வழங்கியாவது அப்பீல் நடப்பது அவசியமாகும்!

சு.சாமிமீது நடவடிக்கை தேவை!

இன்றைய எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ளார் - பச்சைப் பார்ப்பன சூழ்ச்சியாளர்கள் பகிரங்கமாகக் கிளம்பிவிட்டார்கள்!

அடுத்து மதுரா, கிருஷ்ணன் அவதரித்த பூமி, காசி - வாரணாசி ஆகியவைகளில் உள்ள மசூதிகளையும் அகற்றவேண்டும் என்ற பழைய ஓய்ந்த குரலுக்குப் புது வலிமை வந்து விட்டதாகக் காட்டுகின்றனவே.

இவர்களைவிட நாட்டில் வேறு பயங்கரவாதிகள், கலவரம் தூண்டுவோர் வேறு எவர் உளர்?

ஏற்கெனவே 1993 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு விரோதமாக இப்பேச்சு உள்ளதால், உள்துறை இத்தகையவர்கள்மீது தேசியப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டாமா? அமைதி காக்க இது அவசியம் - அவசரம்!

அலகாபாத் தீர்ப்பு - கட்டப் பஞ்சாயத்து ஆக இருந்தபோதிலும், நாட்டில் அமைதி தவழுவதற்கு ஒரு மூல காரணம்,

இந்த 2010 என்பது 1992 அல்ல என்பதுதான்; அதாவது மக்களின் பெரும்பகுதியினர் அவர்கள் எம்மதத்தினராயினும் சரி - மதவெறிக்கு முன்னுரிமை தராமல், மனிதநேயத்திற்கும், சகோதரத்துவத்திற்குமே முதலிடம் தந்து, மனிதத்தை நிலை நிறுத்தும் உயர் பக்குவத்தை நோக்கி முன்னேறுகின்றனர் என்பதன் காரணமாகவே ஆகும்!

இனிமேல் எவரும் மதவெறியைத் தூண்டி, அரசியல் லாபம் பெற்று ஆட்சிகளைப் பிடிக்க நினைத்தால் அது முடியாத காரியம்; மனிதனுக்கு முதுகில் மூன்றாவது கை முளைப்பது போன்ற முடியாத செயலாகும்.


தலைவர்,
திராவிடர் கழகம்.

4.10.2010
சென்னை

- http://www.viduthalai.periyar.org.in/20101004/news01.html

திங்கள், 4 அக்டோபர், 2010

சிந்திப்பீர்!

கடவுள் இல்லை என்று சொல்லும்போது ஏதோ இந்து மதக்கடவுளை மட்டும்தான் சொல்லுவதாக எண்ணுகிறார்கள் நண்பர்கள் சிலர். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று திருத்தமாக கூறுவதன் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும். எந்த விதமான கடவுளும் இல்லை, எங்குமே இல்லை என்றுதான் பொருள் ஆகும். மதம் கூடாது என்றால் எம்மதமும் சம்மதமில்லை என்றுதான் பொருள். சொல்வது யாராக இருந்தாலும், சொல்லப்படும் கருத்து எதுவாக இருந்தாலும், அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும். எதையும் பகுத்துப் பார்க்கவேண்டும். எப்போதோ சொல்லப்பட்ட கருத்து என்பதால் அப்படியே ஏற்கவேண்டும் என்பது இல்லை. புரட்சிக்கவிஞர் சொல்வதுபோல் வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ளவேண்டாம். திருவள்ளுவர் சொல்வதுபோல் எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எப்பொருள் எத்தன்மையதாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அய்யா தந்தை பெரியார் சொல்வதுபோல் அறிவுக்கு வேலை கொடு. அறிவுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள், இல்லை என்று பட்டால் தள்ளிவிடு.
தோழர்களே! மதங்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் ஏன்? எப்படி? எதற்கு? என்று கேட்க முடியுமா? சிந்தித்தால் பாமரனும் பகுத்தறிவாளன் ஆவான். படித்தவன் படிப்பாளியே தவிர பகுத்தறிந்து பார்ப்பவன்தான் அறிவாளி. சிந்திப்பீர்!

சிந்திப்பீர் தோழர்களே!

கடவுள் என்னும் கருத்து தோற்றுவிக்கும்போதே அடுத்தவனை ஏய்ப்பதற்கு என்று உணரலாம். இந்த காலத்தில் கூட சிலர் புதிய மனைப்பிரிவு தொடங்கும்போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருப்பதால் மக்களைக்கவர பக்தியின் பெயரால் ஏதேனும் கோயில் என்று ஒன்றை ஏற்படுத்தி விடுவார்கள். landmark அடையாள இடம் என்பதுபோல் வியாபாரத்திற்கு செய்யத்தொடங்கி, பின்னர் உண்டியல்மூலம் வருவாய் பெருக்குவார்கள். யார் எப்படி பாதிக்கப்பட்டால் என்ன என்று பொதுநல அக்கறை இல்லாமல், சுய நலமே நோக்கமாக, எது எப்படி இருந்தாலும், கோயில் என்பதை அங்கீகரிக்க பார்ப்பனர்கள் வேகமாக முன் வருவார்கள். ஊரைவிட்டு தள்ளி ஆள் நடமாட்டமே இல்லாத, நெடுஞ்சாலை, புறவழி சாலை என்று எங்கு பார்த்தாலும் திடீர் கோயில்களும், பார்ப்பன அர்ச்சகர்களும் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய உண்டியல்களும் இருக்கும். மனிதனுக்கான தேவைகளை நிறைவு செய்து கொள்ளவே ஊர் ஊராக கோயில் குளம் என்று சுற்றுகிறான் என்கிறார்கள். ஆனால், பக்தியின் பேரால் உண்டியல், மூட நம்பிக்கை என்று பெரிதும் சுரண்டப்படுகிறான். அறிவையும், பணத்தையும் இழக்கிறான். நாம் கேட்பதெல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான்-சர்வ வியாபி என்றால் எதற்கு எங்கு பார்த்தாலும் கோயில்கள்? தேடி சென்று வழிபடுதல்கள் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் மனிதனின் இன்ப, துன்பங்களுக்கும் அவன்தானே பொறுப்பு? எல்லோரும் இறைவனின் குழந்தைகள் என்றால், தம் மக்களை எவராவது துன்பப்படுத்தி பார்ப்பார்களா? சிந்திப்பீர் தோழர்களே!

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஏழுமலையான்! திருப்பதி கோவிலில் மாபெரும் ஊழல் அம்பலம் டிக்கெட் விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி!


திருப்பதி, அக்.3- இந்தி யாவிலேயே பணக்காரக் கோவில் என்ற அழைக் கப்படும் திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் நடந்த மிகப் பெரிய ஊழல் வெளிச் சத்துக்கு வந்துள்ளது. முக்கிய வி.அய்.பி.,க்கள் என்ற பெயரில் ஆர்ஜித சேவா டிக்கெட்கள் கள் ளச்சந்தையில் விற்கப் பட்டு, கோடிக்கணக்கில் பணம் சுருட்டல் நடந் துள்ளது.

சம்பந்தப்பட் டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் படி, காவல்துறையில் கோவில் நிருவாகமே புகார் செய்திருப்பது தான் மிகப்பெரிய வேடிக்கை. திருமலை கோவில் வரலாற்றில், இதுவரை நடந்திராத ஒன்று.

சமீப காலமாக பல சிக்கல்கள்

திருமலை வெங்கடா ஜலபதி கோவில் சமீப காலமாக பல்வேறு சிக் கல்களை சந்தித்து வரு கிறது. கோவில் நிருவா கத்தில் முறைகேடுகளும், ஊழல்களும் நடப்பதாக முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு நாயுடு குற்றம் சாற்றினார். கோவில் நிரு வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரிக் கையும் வைத்தார். இந் நிலையில், கோவில் நிரு வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப் பட்டனர். லட்டு விற்பனையில் முறைகேடு நடப்பதாக வும், லட்டு தரம் குறைந்து வருவதாகவும் குற்றம் சாற்றப்பட்டது. தர்ம தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, இரண்டு லட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக ரூ.20 பெறப்படுகிறது. லட்டு ஊழல்

லட்டு ஒன்றின் எடை 175 கிராம் இருக்க வேண் டும். ஆனால், தற்போது வழங்கப்படும் லட்டு 100 கிராம் எடை கூட இல்லை. தர்ம தரிசனத் தில் வரும் பக்தர்களுக்கு லட்டு வினியோகிக்கும் கவுன்டர்களில், லட்டு களை உதிர்த்து கையில் பிடித்து ஊழியர்கள் கொடுக்கின்றனர். இது ஈரப்பதமாகவும் இருக்கிறது. உதிர்வதில் பெரும்பகுதி மிஞ்சும் படி செய்து அதை கவுன் டரிலேயே கள்ளச்சந்தை யில் அதிக விலைக்கு விற்கின்றனர். இதைப் பார்த்து பக்தர்கள் செய் வதறியாது குமுறுகின்ற னர். தற்போது லட்டு தரத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள் ளது.

டிக்கெட்டில் ஊழல்

இந்நிலையில், ஆர் ஜித சேவை டிக்கெட் விற்பனையில் மிகப் பெரும் ஊழல் நடந் துள்ளது தெரியவந்துள் ளது. திருமலை கோவி லில் காலை 3.30 மணிக்கு சுப்ரபாத சேவை, அதை தொடர்ந்து தோமாலா சேவை, அர்ச்சனா, வெள்ளிக்கிழமை நடத் தப்படும் வஸ்திர அலங் கார சேவை போன்ற சேவைகளுக்கு முன் பதிவு பல ஆண்டு களுக்கு தொடர்ந்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் பங் கேற்க விரும்பும் வி.வி. அய்.பி.,களுக்கு என்று சில டிக்கெட் "வரை யறுக்கப்பட்ட கோட்டா' என்ற பெய ரில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. மேலும் சேவைக்கு முதல் நாள், விஜயா வங்கி கவுன்டரில் கடைசி நேர பக்தர் களுக்கு என்று சில டிக் கெட் விற்கப்படுகின்றன.

பணம் படைத்தவர்களுக்கே

இதில் டிக்கெட் பெறு வது என்பது குதிரைக் கொம்பு மாதிரிதான். இங்குள்ள ஊழியர்களே இரவில் வாங்கிவிடுவர். ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நா டகா ஆகிய மாநிலங் களை சேர்ந்த செல் வாக்குமிக்க அரசியல் வாதிகள், பணம் படைத்த தொழில் அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்து வைத்துள் ளனர்.

கோவிலில் அதி காலையில் நடக்கும் அபிஷேக அலங்காரங் களை சாதாரண பக்தர் கள் பார்க்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த சேவா டிக்கெட்டு களை வழங்குவதில் தேவஸ்தான அதிகாரி கள், ஊழியர்கள், நிரு வாக போர்டில் உள்ள உறுப்பினர்கள் தனி உதவியாளர்கள் என பலரும் கூட்டணி அமைத் துக் கொண்டு கள்ளச்சந்தையில் சேவை டிக்கெட்டுகளை விற்று கோடிக்கணக்கில பணம் சுருட்டியுள்ளனர்.

சேவா டிக்கெட் விற்பனையில் ஊழல் நடப்பதாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து, மாநில அரசு உயர் அதிகாரிகளை நியமித்து புலனாய்வில் இறங்கிய போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது. போர்டில் உள்ள உறுப் பினர்கள் இதில் சம்பந் தப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்த போதுதான், நீண்ட காலமாக நடந்து வரும் முறைகேடு என்பது தெரியவந்துள்ளது. கோவிலில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுமே நம்பகத் தன்மைமிக்கவர்களா என்று சந்தேகப்படும் அளவிற்கு ஊழல் நிறைந்துள்ளது.

ஊழல் தடுப்பு மற்றும் அம லாக்க குழு டைரக்டர் ஜெனரல் வி.தினேஜ் ரெட்டி தலைமையில் மிகவும் கவனமாக நடத்திய சோதனையில், 55 பேர் ஊழலில் சம் பந்தப்பட்டு இருப்பதாக கண்டுபிடித்தது. துணை நிருவாக அதிகாரிகள் இருவர் தான் மய்ய புள்ளி யாக செயல்பட்டு வந்துள் ளனர். அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனைவரும் சஸ்பெண்ட்

இது தொடர்பாக முழு விசாரணை நடத் துவதற்காக விசாரணை அதிகாரி ஒருவரை தேவஸ்தான சிறப்பு அதிகாரி நியமித்துள் ளார். இவரது விசார ணைக்கு பின், ஊழலில் சிக்கிய அனைவரும் பணி யில் இருந்து இடை நீக் கம் செய்யப்பட உள்ளனர்.

ஆர்ஜித சேவா டிக் கெட்கள் பல ஆண்டு களுக்கு முன்பதிவு செய் யப்பட்டுள்ளன. புதிதாக சேவா டிக்கெட் வாங்கு வது என்பது இயலாத காரியமாக இருந்தது. தற்போது, தேவஸ்தானத் தின் சிறப்பு அதிகாரி மாற்றப்பட்ட பிறகு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னையில் விற்பனை

சேவா டிக்கெட் களை திருமலை தேவஸ் தானத்தின் கிளை அலு வலக மய்யங்கள் உள்ள சென்னை போன்ற நகரங்களில் சேவா டிக் கெட்களை விற்க நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. குறிப்பிட்ட சேவைகளில் காலியாக இருக்கும் டிக்கெட் களில், குறிப்பிட்ட சத விகிதம் சென்னையில் விற்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யப் படுகிறது. (எ-டு) டிசம்பர் 15ஆம் தேதிக்குரிய சேவைக்கு அக்டோபர் 17ஆம் தேதி பதிவு). வெள் ளிக்கிழமை நடை பெறும் நிஜபாத சேவை டிக்கெட்டுக்கான பதிவு, வாரத்தில் திங்கள் கிழமை செய்யப்படுகிறது.


நினைவிருக்கிறதா?

திருட்டுத்தனமாக பாபர் மசூதி வளாகத்துக்குள் 1949 டிசம்பர் 23இல் ராமன் சிலையைக் கொண்டு போய் காவிக் கும்பல் வைத்தது. இதன் பின்னணியில் இருந்தவரான காசியாபாத் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.கே. நய்யார் பதவி ஓய்வுக் குப்பின் ஜனசங்கத்தில் சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101003/news01.html