இன்றைக்குத் திருவரங் கத்திலே திராவிடர் கழகத் தின் சார்பில் திராவிடர் எழுச்சி மாநாடு. திருவரங் கம் என்று சொன்னாலே வைணவர்களின் முக்கிய தலமாகக் கூறப்படுவ துண்டு.
இந்த ஊர் கோயிலுக்கு எத்தனை எத்தனையோ தல புராணங்கள் உண்டு. ஏகாதசி விழா இந்தக் கோயிலில் பிரசித்தம் - வைகுந்தம் செல்வதற்குச் சொர்க்க வாசலைத் திறப் பதுண்டு. ஆனால், எந்தப் பக்தரும் சொர்க்கத்திற்குச் சென்றதாகத் தகவல் இல்லை. கோயிலுக்குச் சென்றவர்கள் திரும்பி அவரவர் வீடுகளுக்குத் தான் திரும்பி வருகிறார்கள்.
சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்ட பின் உள்ளே சென்றவர்கள் திரும்ப முடி யாது என்ற நிலையிருந் தால் எந்த ஒரு பக்தனும் அந்தக் கோயில் பக்கம் தலை வைத்துப் படுக்கவே மாட்டான் என்பது யதார்த் தம்.
சின்ன வயதிலே மண் சோறு பொங்கி, மரப்பாச்சி வைத்து விளையாடும் பழக் கம் - பெரியவர்கள் ஆனா லும் அவர்களை விட்டுப் போவதில்லை. அதற்கு அடையாளம் பெரிய பெரிய பொம்மைகளை வைத்து விளையாடுகிறார்கள் - பெரியவர்களாக ஆனவர் கள். சின்ன சின்ன பொம் மைகளை வைத்து விளை யாட முடியாது அல்லவா!
இவ்வளவு சக்தியை அந்த ரெங்கநாதன்மீது ஏற்றி வைக்கிறார்களே - அந்த ரெங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் இந்தக் கோயில் ஒரு 50 ஆண்டு களுக்குமுன் தீப்பிடித்து எரிந்து, ரெங்கநாதன் உரு வமே வெடித்துச் சிதறி அதற்குப் பின் புதிய பொம்மை (சிலை) அடித்து வைக்கப்பட்டது. அப்பொழு தாவது கடவுளின் சக்தி என்பதெல்லாம் வெத்து வேட்டு என்று தெரிந்து கொண்டிருக்கவேண்டும்.
பக்தி மூளையை அல்லவா கவ்விப் பிடித்து விட்டது. எப்படி சிந்திப்பார் கள் - திருந்துவார்கள்?
ஏகாதசியன்று இரவு இந்த ரங்கநாதனை எப்படி துதிக்கவேண்டுமாம்? அதற்குப் பாட்டு எல்லாம் எழுதி வைத்துள்ளனர்.
தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண் டாம்! ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரி யும் நாயாக பிறக்கும் பாக் கியத்தை எனக்குக் கொடுப் பாயாக!
(தினமலர், 28.12.2009)
என்றெல்லாம் ஏகாதசி இரவு அன்று பக்தர்கள் பாட்டுப் படிக்க வேண்டு மாம்.
பக்தி மனிதனை நாயாக ஆக்குகிறது - பகுத்தறிவு மனிதனாக நிலைக்கச் செய்கிறது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
கடவுளை மற - மனி தனை நினை என்றாரே தந்தை பெரியார் - அதற்கு ஈடு இணையும் உண்டோ!
- மயிலாடன்
- http://www.viduthalai.periyar.org.in/20101108/news02.html
திங்கள், 8 நவம்பர், 2010
கிரந்த எழுத்து தமிழில் திணிப்பு!
தமிழின் முப்பத்தோரெழுத்து களும் அவ்வாறே யின்றளவு மிருக் கின்றன. சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி, தமிழிலிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்.. . . . தமிழுஞ் சம்ஸ் கிருதமுங் கலந்த மொழி கேள்விக் கின்பம் பயக்குமென்ற போலி யெண்ணமே இத்தகைய ஆபாச மொழி யொன்று வகுக்குமாறு தூண்டிற்று. என்று பரிதிமாற் கலைஞர் எழுதுவார். பாரதி பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்கு குறியீடுகள் உருவாக்க வேண்டும் என்று 1916 இல் ஞான பானு இதழில் தமிழில் எழுத்துக் குறை என்ற தலைப்பில் எழுதினார். விடுதலைப்போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து நின்றவரும், அன்போடு உறவுமுறையில் மாமா என்று அழைத்தவரும் ஆகிய வ.உ.சிதம்பரனார் இதனால் தமிழின் ஒலிப்புமுறைக்கும் தனித்தன்மைக் கும் கேடு நிகழும் என்றும் கூறி இதனைக்கடுமையாக எதிர்த்தார். ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தைப் புகுத்தவும், தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற் றொலிகள் வராமல் காக்க வேண்டும். வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம்) கட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன. அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம். வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழிலிருந்து சிதைவால் தோன்றின. இனியும் தமிழைச் சிதைக்க விட வேண்டா. கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, ஒ, ற, ழ, ன என்ற 5 எழுத்துகளைச் சேருங்கள் என்று திரு நாக.கணேசன் முயல் கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க வேண்டியவர் கள் தானே கவலைப்பட வேண்டும்! நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங் குறியில் - தமிழின் ஒலிச் சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில் தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் - கிரந்த எழுத்துகள் 5 (ஜ,ஷ, ஸ, ஹ, க்ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால், அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச் சேர்த்தார்கள்! இப்போது- தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்பதல்லவா இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால் வெளி யிடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வொலிகள் தமிழுடன் முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமணமதத் தினராலும் கட்டுரையாசிரியர்களா லும் கொண்டுவரப்பட்ட மணிப் பவழ(பிரவாள) நடை தோற்றது. தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்த்துத் தமிழின் தனித்தன் மையைக் கெடுத்து, மேலும் கன்னடம், மலையாளம்போல் சிதைக்க முயலும் இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க வேண் டும் என்னும் எங்களின் கருத்து. உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாதுஎன செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத் தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்திய தால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது. தற் காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார்,டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருத சொற்களும் புகுந்து, தமிழ் மலை யாளம் மொழி 2என அழைக்கப் படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும், இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும். மேலும் செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழி யியல் குறியீடுகள் போதும். எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேரா சிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக் கிறோம்.
1 கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை இன்றி இயங்கும். 2. அய்ந்து எழுத்தால் ஆன பாடை இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவை இல்லை. மொழி இயலார் பயன் படுத்தும் குறியீடுகளை (ஈஆ - ஈன் டெர்னடிஒனல் கொனெடி அல்ப்க பெட்ச்) பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக் காட்ட இயலும். அப்படி இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்? 3. இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங் குறியீடுகள் முதலியன ...தமிழ் எழுத் துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த எழுத்துகள் வலிந்து நுழைக்கப்படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.
4. கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு தமிழ்த் தாய் சீர்குலைப் புக்கு ஏதுவாகும் . இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படி இருப்பினும், கிரந்த எழுத் துகளின் படையெடுப்பை முறிய டிக்க வேண்டிய கடமை தமிழறிஞர் களுக்கு மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு
- முனைவர் பா. இறையரசன்
- http://www.viduthalai.periyar.org.in/20101108/news08.html

மூன்று முறை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டுள்ளதே
வீதிக்கு வருகிறார்களாம்!
அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸின் முக்கிய பிரமுகர்கள் தேவேந்தர், லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, சந்தர் சேகர் லவே, சுனில் ஜோஷி உள் ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியப் பிரமுகரான ஆர்.எஸ்.எஸ். தேசியக் குழுவின் உறுப்பினர் இந்தரேஷ் குமார் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைபேசிகளும், சிம் கார்டுகளும் பல ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளை அடை யாளம் காட்டிவிட்டன.
ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறைப் பிரிவினர் தீவிரமாகச் செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணை யில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அந்த அமைப்பைத் தடை செய்வதற்குப் போதுமானவை என்றும், ஆர்.எஸ்.எஸின் வன்முறை நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதுதான் தாமதம் - தாங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிவிட்டோம் என்பதைத் துல்லிய மாக உணர்ந்து கொண்ட ஆர்..எஸ்.எஸ். கும்பல் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.
ஆர்.எஸ்.எஸின் நாக்பூர் தலைவர் ரவி ஜோஷியும், இணைச் செயலாளர் ஒருவரும் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர்.
கடந்த 80 ஆண்டுகாலமாக கட்டுப்பாடான வாழக்கை வாழ்வது எப்படி என மக்களிடம் எடுத்துரைத்து வருகிறோம். தன்னலமற்ற இந்தச் சேவையை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. தேசிய பேரிடர் வரும்போதெல்லாம், உடனடியாகக் களமிறங்கி, பாதிக்கப்பட்டோருக்குச் சேவை செய்கிறோம். வன்முறைக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் சகட்டு மேனிக்கு எங்களை விமர்சிக்கிறது என்று கூறியுள்ளனர்.
வரும் 10 ஆம் தேதி புதுடில்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டமும் நடத்தப் போகிறார்களாம்.
நெருப்பு சுடாது, பனிக்கட்டி குளிராக இருக்காது என்று சொன்னால், எப்படி நம்பமாட்டார்களோ அதைப் போன்றதுதான் ஆர்.எஸ்.எசுக்கும், வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகும்.
மூன்று முறை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டுள்ளதே - அது எந்த அடிப்படையில் என்பதை விளக்குவார்களா?
ஆண்களுக்கும், பெண்களுக்கும் துப்பாக்கிப் பயிற்சிகளையும், வன்முறைப் பயிற்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். கொடுத்து வருகிறதே - இதன் தன்மை என்னவாம்?
காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்கள் யார்? கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று தங்கள் மீது விழுந்த கறையைக் கழுவிக் கொள்வதற்காக இவர்கள் மறுக்கலாம்.
நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேயும், அவரது மனைவியும் நாதுராம் கோட்சே கடைசிவரை ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பேட்டி கொடுத்துள்ளனரே - மறுக்க முடியுமா?
நெல்லை மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது பழியைச் சுமத்தி மதக் கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம் போட்டார்களே - அது அம்பலம் ஆகவில்லையா?
கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்தது என்ன? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, வெடிகுண்டு வெடித்து பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலியானார்களே - அதற்குப் பெயர் என்னவாம்?
2006 ஜூலையில் மும்பை ரயில், 2007 பிப்ரவரியில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அதே ஆண்டு மே திங்களில் அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அக்டோபரில் அஜ்மீர் தர்கா ஷெரீஃப், 2008 ஜூலையில் அகமதாபாத், அதே ஆண்டு செப்டம்பரில் மாலேகான் குண்டுவெடிப்பு களில் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டனர் என்ற புரளியைக் கிளப்பி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டனரே!
அவையெல்லாம் முழுப் பொய் - இந்த வன் முறைகளின் பின்னணியில் இந்த சங் பரிவார்க் கும்பல்தான் இருந்துள்ளது என்று தக்க ஆதாரத் துடன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பேராபத்துத் தலைக்குமேல் வந்தேவிட்டது என்ற அச்சத்தில் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர்.
இந்த அச் சுறுத்தல்களைக் கண்டு மிரண்டு போகாமல் இந்தக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர மத்திய அரசு மேலும் காலம் தாமதம் செய்யாமல் செயல்படவேண்டும். அதன்மூலமே வன்முறை சக்திகளின் ஆணிவேரை வீழ்த்த முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- http://www.viduthalai.periyar.org.in/20101108/news06.html

பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு
இன்று கந்தசஷ்டி திரு விழா தொடங்குகிறதாம். சிவ பெருமான் நெற்றிக்கண் ணின் தீப்பொறியில் இருந்து தோன்றியவன் முருகபெரு மான் (ஸ்கந்தனாகிய இவன் சிவபெருமானின் இந்திரிய வெள்ளத்திலிருந்து தோன்றி யவன் என்பது இன்னொரு கதை!)
அவன் சூரபத்மனோடு போரிட்டு வதம் செய்த நாள் தான் இந்தக் கந்த சஷ்டியாம்.
தீபாவளி என்று சொல்லி நரகாசுரனை வதைத்து நேற்று தீபாவளி கொண்டாடி யாயிற்று. இன்றோ சூரபத் மன் என்ற அசுரனைக் கொன்று கந்தசஷ்டி விழா - ஆறு நாள்கள் முருகன் கோயில்களில் தடபுடலாக விழா நடக்கும். எதையாவது காரணம் சொல்லி, கோயில் சுரண்டல் சாங்கோபாங்க மாக நடந்தாக வேண்டுமே!
கடவுள்களுக்குச் சக்தி யிருந்தால் சண்டை போட் டுத்தான் கொல்லவேண்டுமா என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது - அப்படி கேட்டால், நாஸ்திக வாதம் என்று வாய் நீளம் காட்டு வார்கள். பதில் சொல்ல சரக்கு இல்லாதவர்கள் வேறு எதைத்தான் சொல்லி சமாளிப்பார்கள்?
ஒரு மனிதனுக்கு ஒரு பிறப்புதான் இருக்க முடியும். மாற்றிச் சொன்னால் சந் தேகப்படுவார்கள் - கொச் சையாகப் பேசுவார்கள். ஆனால், முருகன் பிறப்பாக இருந்தாலும் சரி, அவன் சகோதரன் விநாயகன் பிறப் பாக இருந்தாலும் சரி பல பல தகவல்கள் - ஆபாசச் சாக் கடைக் குட்டைகள்!
கடவுள் சமாச்சாரம் ஆயிற்றே - யார் கேள்வி கேட்கப் போகிறார்கள். பக்தி என்று சொன்னால், மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய வற்றைப் பஞ்ச கவ்யம் என்று சொல்லி தட்சணை கொடுத் துக் குடிப்பவர்களிடத்தில் அறிவையும், மானத்தையும் தான் எதிர்பார்க்க முடியுமா? பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்?
இந்தக் கந்த சஷ்டியைப் பற்றி ஆன்மீகக் கர்த்தாக் கள் ஒரு வியாக்கியானம் சொல்லுவார்கள்.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியே தவறு. சஷ்டியில் இருந்தால் அகப் பையில் வரும் என்பதுதான் உண்மையான பழமொழி.
சஷ்டியில் முருகப்பெரு மானை வேண்டி, திருமணம் ஆன பெண்கள் விரதம் இருந்தால், அவர்களது கருப் பையாகிய அகப்பையில் குழந்தை வரும் என்பதுதான் இதன் உண்மையான பொருள் என்று கூறுகிறார் கள். அது சரி, அந்த சஷ்டி கதாநாயகனான முருகப் பெருமானுக்கு வள்ளி, தெய் வானை என்று இரண்டு பெண்டாட்டிகள் இருந்தும், குழந்தை இல்லையே - அவரா மற்றவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கொடுப் பார்?
பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு என்கிற பிச்சைக்காரனுக்கும், இவர் களுக்கும்தான் என்ன வித்தியாசம்?
- மயிலாடன்.
- http://viduthalai.periyar.org.in/20101106/news01.html

தமிழர் தலைவர் கோரிக்கைக்குக் கைமேல் பலன்
ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் சமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் கோரிக்கை
சென்னை, நவ.7- ஒருங்குறியீட்டுக் கூட் டமைப்பில் (யூனிகோர்டு கன்சார்ட்டியம்) சமஸ் கிருதம் மற்றும் கிரந்த எழுத்துக்களை இடம் பெறச் செய்வது தொடர் பான முடிவை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு முதல் அமைச் சர் கலைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இதுகுறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து விடுதலையில் (28.10.2010) அறிக்கை வெளியிட்டுயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் கலை ஞர் அவர்கள் எழுதி யுள்ள கடிதம் வருமாறு:
நமது பாரம்பரிய அறிவு பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர், இண்டர் நெட் மற்றும் மின்ஊட கங்களில் இடம்பெறும் வகையில் வேதகால, சமஸ்கிருத மற்றும் கிரந்த எழுத்துக்களை (ஜ, ஸ, ஷ போன்ற எழுத் துக்கள்) ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் (யூனி கோடு கன்சார்ட்டியம்) சேர்ப்பது தொடர்பாக அந்தக் கூட்டமைப்புக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ள விவரம் தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய திட்டம், உலகம் முழுவதும் உள்ள தமிழர் கள் மத்தியில் கேள் வியை எழுப்பி உள்ளது. இந்த திட்டத்தை குறிப் பாக, கிரந்த எழுத்துருக் களுடன் 5 தமிழ் எழுத் துக்களை சேர்ப்பது தொடர்பாக, ஒருங்குறி யீட்டு கூட்டமைப்பிடம் சமர்ப்பிப்பதற்கு முன் பாக தமிழறிஞர்கள், மற்றும் மொழியியல் அறிஞர்களிடம் தேவை யான அளவு ஆலோ சனை செய்யப்படவில்லை என்று பெரும்பாலா னோர் கருத்து தெரிவித் தனர். இதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி அமைச்சர்கள், தமிழறி ஞர்கள், மொழியியல் அறிஞர்கள், தொழில் நுட்ப நிபுணர்களை வர வழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன்.
அந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பேரா சிரியர் அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் பொன்முடி மற்றும் மூத்த அமைச் சர்களும், தமிழறிஞர் களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தை சாமி, கான்பூர் அய்.அய்.டி. தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கவி ஞர் கனிமொழி எம்.பி., எழுத்தாளர் ரவிக்குமார் எம்.எல்.ஏ., தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜேந்திரன், சிங்கப் பூர் தகவல் தொழில் நுட்ப நிபுணர் அரவிந் தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடமொழி எழுத்துக் களை ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் இடம் பெறச்செய்யும் திட் டத்தை முடிவு செய்வ தற்கு முன்பாக தமிழ றிஞர்களுடன் விரிவான ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ றிஞர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு நியமிக்கப் பட்டு, ஆலோசனை நடத்தி, அந்தத் திட்டம் தொடர்பாக பரிந்துரை கள் பெறப்படும்.
மத்திய அரசு ஏற்கெ னவே இந்தத் திட்டம் தொடர்பான கருத்து ருவை ஒருங்குறியீட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி விட்டதால், அதுதொடர்பாக உட னடியாக முடிவு செய்து விடாமல், தமிழறிஞர் கள், மொழியியல் அறி ஞர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி, பெறப்படும் கருத்துகள் வரும்வரை சற்று காத் திருக்குமாறு அந்த கூட் டமைப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா அறிவுரை வழங்க வேண் டும்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- http://www.viduthalai.periyar.org.in/20101107/news02.html

சனி, 6 நவம்பர், 2010
ராஜபக்சே விஷயத்தில் பிரிட்டன் நடந்துகொள்ளும் முறையில் இந்தியா நடந்துகொள்ளாதது - ஏன்?
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை
வாங்கித் தரவேண்டியது மத்திய அரசின் கடமை
சோனியா கருத்தை வரவேற்று தமிழர் தலைவர் அறிக்கை
ராஜபக்சே விஷயத்தில்
பிரிட்டன் நடந்துகொள்ளும் முறையில் இந்தியா நடந்துகொள்ளாதது - ஏன்?
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா அவர்களின் கருத்தை வரவேற்றும் - ராஜபக்சே பிரச்சினையில் மனிதநேய உணர்வோடு பிரிட்டின் நடந்துகொண்டுள்ள நிலையில், இந்திய அரசு வேறு விதமாக நடந்துகொள்வது ஏன் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள்மீது சட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடரவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அண்மைத் தீர்ப்புகளும்கூட, பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளை விடுவித்துவிடவில்லை என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் காவிச் சாமியார்கள் அமைப்பு இவைதான் இடித்த குற்றவாளிகள் என்பதற்கு ஏராளம் ஆதாரங்கள் உண்டு - படங்கள் உள்பட.
அதைவிட முக்கியம் - நாங்கள்தான் இடித்தோம்; அது அவமானச் சின்னம் என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர்கள் இந்த அமைப்புகளைச் சார்ந்த பலர். இன்னமும் சட்டமும், நீதியும் ஊமையாகவே உள்ளன!
ஜஸ்டிஸ் லிபரான் ஆணையம் அறிக்கை
பல கோடி ரூபாய்களை செலவழித்து நடந்த ஜஸ்டீஸ் லிபரான் விசாரணை ஆணைய அறிக்கை வெளிவந்து, அதன்படி குற்றவாளிகளாக்கப்படும் நபர்களை கூண்டில் ஏற்றி, நீதி விசாரணை நடத்தி - ஏற்கெனவே கிரிமினல் வழக்குகள் உள்ள - அயோத்தி காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரின் சாட்சியங்களும் உள்ளன. தண்டிக்கப்படுவதற்கான அதிக சட்ட நிர்ப்பந்தம் - நியாயத் தேவை உள்ளது.
இதனைக் காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியுள்ளது. இதில் எதிர்க்கட்சியுடன் ஆளுங்கட்சி எந்தவித சமரசப் போக்கையும் கைக்கொள்ளவில்லை என்பதை நாட்டிற்குத் தெளிவுபடுத்தி உள்ளது வரவேற்கத்தக்கதே!
இது சம்பந்தமாக மேலும் காலதாமதம் காட்டாது, மத்திய அரசின் உள்துறை உடன டியாக கவனஞ்செலுத்தி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையை வாங்கித் தரவேண் டியது - நீதி செத்துவிடாது என்று காட்டுவதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
இங்கிலாந்து செல்ல அஞ்சிய ராஜபக்சே!
மற்றொரு செய்தி. இங்கிலாந்துக்குப் பயணமாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே அங்கே போனால், தனது நாட்டில் பல லட்சக்கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்து தீவிரவாத ஒழிப்புப் போர்வையில், அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழ்ப் பெண்களின் மானத்தையும், கற்பையும் சூறையாடியதோர் நிலைக்கு மூலகாரணமாக இடி அமீனாக இருந்தார் என்பதால், போர்க் குற்றவாளியாக அய்ரோப்பிய யூனியன் நாடுகளால் கருதப்படுவர்; எனவே, எங்கே தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுமோ பிரிட்டிஷ் அரசு என்று அஞ்சி, அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்ற செய்தி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை யைப் பறித்தவர்கள் என்றாவது ஒரு நாள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, சட்டத்தினால் தண்டிக்கப்படுவர் என்ற இயற்கை நீதியைச் சுட்டிக்காட்டுவதாக அச்செய்தி அமைந்துள்ளது! இவ்வச்சமே அவமானம்தானே!
காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்கு ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பளம்
பாபர் மசூதியை இடித்தவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று கூறும் மத்திய அரசின் கூட்டணி ஆட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவி திருமதி சோனியா அவர்களும், அதே பிரிட்டன் உள்பட பங்கு கொண்ட டில்லி காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவிற்கு, தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சேவை முக்கிய விருந்தினராக அழைத் தது எவ்வகையில் நியாயம்? மனிதாபிமானத்தை டில்லி விரித்த சிவப்புக் கம்பளத்தின் கீழே போட்டு மிதித்ததோர் அநியாயச் செயல் அல்லவா!
இந்த இரட்டை நிலையை காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசோ எப்படி நியாயப்படுத்த முடியும்? இதுபற்றிய குமுறல் - தமிழ்நாட்டுத் தமிழர்களில் தொடங்கி, உலகத் தமிழர்கள் வரை உலகம் முழுவதும், பரவலாக உள்ளதே, அதுபற்றி அலட்சியம் காட்டலாமா?
பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் எனது (சிங்கள) அரசு போர் தொடுக்கிறது என்று கூறி, பல லட்சம் தமிழர் களைக் கொன்று குவித்து, அஞ்சிய அப்பாவி மக்களை இன்னமும்கூட முள்வேலிக்குள் அடைத்து, கொடுமைக்கு ஆளாக்கும் நபரை அழைத்து விருந்து கொடுப்பதைவிட, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்திய செயல், மனிதநேயத்தை மரணப் படுகுழியில் தள்ளிய செயல் வேறு உண்டா?
தமிழக மீனவர்கள்
நாளும் அனுபவிக்கும் கொடுமை
தமிழர்கள் நெஞ்சங்களில் வடியும் ரத்தக் கண்ணீர் வீணாகிவிடாது. ஆற்றாது அழுத தமிழர்களின் கண்ணீர் அது!
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை நாளும் கொடுமைப்படுத்துவது அன்றாட அவலமாகிவிட்டதே!
நம் மக்கள் வரிப் பணம், நன்கொடை இவைமூலம் தமிழக அரசு, மத்திய அரசு கொடுத்த பல நூறு கோடி களைப் பெற்ற சிங்கள ராஜபக்சே அரசு உண்மையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்குச் செய்ததென்ன?
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்த தமிழர்களின் வீடுகள், காணிகளில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டு நடத்தப்பெறும் நிலைதானே இன்றும் தொடருகிறது?
இந்திய அரசு இதுபற்றி தட்டிக் கேட்டால், சுண்டைக் காய் நாடு ஓரளவு திருந்தியாவது நடக்க வாய்ப்பு ஏற் படுமே - செய்யவில்லை ஏன்? அவர்கள் எம் இனமில்லை; ஆகவே, எமக்கு மனமில்லை என்று எண்ணுகிறாரோ என்ற நியாயமான சந்தேகம் தமிழர்களின் உள்ளங்களில் பீறிட்டுக் கிளம்புகிறதே!
பிரிட்டிஷ் அரசு காட்டும் மனித நேயம், சாயாத தராசு நீதி - நமது மத்திய அரசு காட்டவேண்டாமா?
இனியாவது வற்புறுத்தி வாழ்வுரிமைக்குக் காப்பு கேட்கட்டும்!
தலைவர்,
6.11.2010 திராவிடர் கழகம்
- http://www.viduthalai.periyar.org.in/20101106/news02.html

வியாழன், 4 நவம்பர், 2010
அசுரர்கள் யார்-?
ஆரியர் வெறுத்த ராட்சதர்கள்!
ராட்சதர்களாக ஆக்கப்பட்டது ஏன்-?
ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார்கூட ஆரம்பத்தில் தேசியவாதியாக இருந்தவர்தான். 1914_இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர் தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங்களெல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல் இழிவுபற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள்தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்றபிறகுதான் நாங்கள் இராட்சதர்களாக்கப்பட்டோம்.
_ தந்தை பெரியார்
(விடுதலை 14-_12_-1950)
ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.
இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10ஆம் பக்கத்தில் இருக்கிறது.
திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர் களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.
இது ஷோஷி சந்தர்டட் எழுதிய இந்திய அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15ஆம் பக்கத்தில் இருக்கிறது.
அசுரர்கள் யார்-?
ஆரியக் கடவுள்களாகிய இந்திரனையும், இதர கடவுள்களையும்
பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது. இது ஏ.ஸி. தாஸ் எம்.ஏ.-, பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151ஆம் பக்கத்தில் இருக்கிறது.
ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர் களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள். இது சி.எஸ். சீனிவாச்சாரி எம்.ஏ., & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17ஆம் பக்கங்களில் இருக்கிறது. பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும். இது ஜி.எச்.ராபின்சன் சி.அய்.ஈ. எழுதிய இந்தியா என்னும் புத்தகத்தின் 155_ஆம் பக்கத்தில் இருக்கிறது.
பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றிய எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
இது நாகேந்திரநாத்கோஷ் பி.ஏ., பி.எல்., எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்கத்தின் 194_ஆம் பக்கத்தில் இருக்கிறது.
- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews28.html

தீவாளியா? - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
தீவாளியா?
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
_ இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட் பவனை, ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று கேட்கும் நாள்,
மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்,
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீ என்று விடுவிரே!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews23.html

பிரமுகர்கள் பேசுகிறார்கள் தீபாவளியைக் கொண்டாடக் கூடாது ஏன்?
திராவிடர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாத இந்தத் தீரர்கள் என்ன சொல்கிறார்கள்?
நம் துக்க நாளை, நாமே கொண்டாடலாமா?
அமைச்சர் உ. மதிவாணன்
தீபாவளி கதைப்படி தேவர்களுக்கு எதிரான நரகாசுரனை அழித்த நாள் அதற்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.. நரகாசுரன் கதைப்படி அசுரன். எனவே திராவிடன். இது ஆரிய திராவிடப் போராட்டம்தான். திராவிடனான நரகாசுரனை அழித்த நாள் ஆரியர்களுக்கு வெற்றியாகும். நமக்கு எப்படி விழாவாக முடியும்?
நம் இனத்தவரான நரகாசுரன் மறைந்த நாளை நாமே கொண்டாடலாமா? வேண்டுமானால் துக்கம் கடைப்பிடிக்கலாம், கதையை நம்புகின்ற மக்கள். நான் நம்பவில்லை. அய்யாவின் வழி நடப்பவன். எனவே, தீபாவளிக் கொண்டாடுவது தமிழர்களின் அறியாமையையும், இழிவையும் குறிப்பதாகும்.
தமிழர் மரபு சார்ந்த விழா அல்ல!
தமிழச்சி தங்கபாண்டியன்
(கவிஞர் -பேராசிரியர்)
தீபாவளி என்ற பண்டிகை தமிழர்கள் மரபு சார்ந்த பண்டிகை அல்ல. என் மண் சார்ந்த செய்திகளால் முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டும், தமிழ் மரபோடு இயைந்து வளர்ந்த காரணத்தாலும் பொங்கல் திருநாள் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் முறை சார்ந்த பதிவுகளை மய்யப்படுத்தியே நான் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.
ஏர்க்கலப்பை, மாடு, வைக்கோல் போர், சேறு இவற்றின் மணத்தை மனது முழுக்கப் பூசிக் கொண்ட கிராமம் சார்ந்த பெண்ணாகவே பதிவாகி இருக்கும் என் சிந்தைக்குள் தமிழர்களின் மரபிற்கு அப்பாற்பட்ட தீபாவளியை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை.
மூடநம்பிக்கையின் உச்சம்
த. உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ்.,
தீபாவளியை நான் 9ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே கொண்டாடுவதில்லை. எனக்கு தீபாவளி குறித்த கதையில் நம்பிக்கை இல்லை. காரணம், இந்தப் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் இரண்யட்சகன் என்னும் அரக்கன் கடலுக்குள் ஒளிந்து கொண்டான் என்பதையோ, பின்னர் பன்றி உருவத்துடனான மகாவிஷ்ணுவுடன் பூமி உறவு கொண்டு நரகாசுரன் பிறந்தான் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை.
இக்கட்டுக் கதை மூடநம்பிக்கையின் உச்சமாகும். உலகில் கொடிகட்டிப் பறந்த தமிழர் நாகரிகத்தின் சிறப்பினை இதுபோன்ற கதைகள் ஊடுருவி சிதைப்பது மட்டுமே இதன் நோக்கமாகும்.
நமக்கு எதிரான கதை
ரமேஷ் பிரபா
தீபாவளிக் கதை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான கதையாகும். அதில் நமக்கு எதிரான கருத்துகள் தான் அதிகம் அடங்கியுள்ளன. பெரும்பாலும் கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போல இவ்விழா இல்லை. பொங்கல் பணம் சார்ந்த பண்டிகை அல்ல. அதாவது ஏழை - பணக்காரன் வேறுபாட்டை அதில் காண முடியாது. அனைவரின் வீட்டிலும் பொங்கல் கொண்டாடப்படும்.
வீட்டு வாசலில் பொங்கலிடுவது, மாட்டுப் பொங்கல், கரும்பு என மகிழ்ச்சியுடன் சமத்துவமாய் பாகுபாடின்றிக் கொண்டாடுவோம். ஆனால், தீபாவளிப் பண்டிகை அவ்வாறு இல்லை. வசதியுள்ளவன் ஆயிரம் ரூபாய்க்குப் பட்டாசு வாங்கி வெடிப்பான். வசதி இல்லாத ஏழைச் சிறுவர்கள் கிழிந்த சட்டை யுடன், பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள். எனவே, இதை நான் கொண்டாடுவதில்லை.
தொகுப்பு
- நம்பியூர் மு. சென்னியப்பன்
- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews20.html

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)