திங்கள், 4 அக்டோபர், 2010
சிந்திப்பீர் தோழர்களே!
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஏழுமலையான்! திருப்பதி கோவிலில் மாபெரும் ஊழல் அம்பலம் டிக்கெட் விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி!
திருப்பதி, அக்.3- இந்தி யாவிலேயே பணக்காரக் கோவில் என்ற அழைக் கப்படும் திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் நடந்த மிகப் பெரிய ஊழல் வெளிச் சத்துக்கு வந்துள்ளது. முக்கிய வி.அய்.பி.,க்கள் என்ற பெயரில் ஆர்ஜித சேவா டிக்கெட்கள் கள் ளச்சந்தையில் விற்கப் பட்டு, கோடிக்கணக்கில் பணம் சுருட்டல் நடந் துள்ளது.
சம்பந்தப்பட் டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் படி, காவல்துறையில் கோவில் நிருவாகமே புகார் செய்திருப்பது தான் மிகப்பெரிய வேடிக்கை. திருமலை கோவில் வரலாற்றில், இதுவரை நடந்திராத ஒன்று.
சமீப காலமாக பல சிக்கல்கள்
திருமலை வெங்கடா ஜலபதி கோவில் சமீப காலமாக பல்வேறு சிக் கல்களை சந்தித்து வரு கிறது. கோவில் நிருவா கத்தில் முறைகேடுகளும், ஊழல்களும் நடப்பதாக முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு நாயுடு குற்றம் சாற்றினார். கோவில் நிரு வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரிக் கையும் வைத்தார். இந் நிலையில், கோவில் நிரு வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப் பட்டனர். லட்டு விற்பனையில் முறைகேடு நடப்பதாக வும், லட்டு தரம் குறைந்து வருவதாகவும் குற்றம் சாற்றப்பட்டது. தர்ம தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, இரண்டு லட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக ரூ.20 பெறப்படுகிறது. லட்டு ஊழல்
லட்டு ஒன்றின் எடை 175 கிராம் இருக்க வேண் டும். ஆனால், தற்போது வழங்கப்படும் லட்டு 100 கிராம் எடை கூட இல்லை. தர்ம தரிசனத் தில் வரும் பக்தர்களுக்கு லட்டு வினியோகிக்கும் கவுன்டர்களில், லட்டு களை உதிர்த்து கையில் பிடித்து ஊழியர்கள் கொடுக்கின்றனர். இது ஈரப்பதமாகவும் இருக்கிறது. உதிர்வதில் பெரும்பகுதி மிஞ்சும் படி செய்து அதை கவுன் டரிலேயே கள்ளச்சந்தை யில் அதிக விலைக்கு விற்கின்றனர். இதைப் பார்த்து பக்தர்கள் செய் வதறியாது குமுறுகின்ற னர். தற்போது லட்டு தரத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள் ளது.
டிக்கெட்டில் ஊழல்
இந்நிலையில், ஆர் ஜித சேவை டிக்கெட் விற்பனையில் மிகப் பெரும் ஊழல் நடந் துள்ளது தெரியவந்துள் ளது. திருமலை கோவி லில் காலை 3.30 மணிக்கு சுப்ரபாத சேவை, அதை தொடர்ந்து தோமாலா சேவை, அர்ச்சனா, வெள்ளிக்கிழமை நடத் தப்படும் வஸ்திர அலங் கார சேவை போன்ற சேவைகளுக்கு முன் பதிவு பல ஆண்டு களுக்கு தொடர்ந்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் பங் கேற்க விரும்பும் வி.வி. அய்.பி.,களுக்கு என்று சில டிக்கெட் "வரை யறுக்கப்பட்ட கோட்டா' என்ற பெய ரில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. மேலும் சேவைக்கு முதல் நாள், விஜயா வங்கி கவுன்டரில் கடைசி நேர பக்தர் களுக்கு என்று சில டிக் கெட் விற்கப்படுகின்றன.
பணம் படைத்தவர்களுக்கே
இதில் டிக்கெட் பெறு வது என்பது குதிரைக் கொம்பு மாதிரிதான். இங்குள்ள ஊழியர்களே இரவில் வாங்கிவிடுவர். ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நா டகா ஆகிய மாநிலங் களை சேர்ந்த செல் வாக்குமிக்க அரசியல் வாதிகள், பணம் படைத்த தொழில் அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்து வைத்துள் ளனர்.
கோவிலில் அதி காலையில் நடக்கும் அபிஷேக அலங்காரங் களை சாதாரண பக்தர் கள் பார்க்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த சேவா டிக்கெட்டு களை வழங்குவதில் தேவஸ்தான அதிகாரி கள், ஊழியர்கள், நிரு வாக போர்டில் உள்ள உறுப்பினர்கள் தனி உதவியாளர்கள் என பலரும் கூட்டணி அமைத் துக் கொண்டு கள்ளச்சந்தையில் சேவை டிக்கெட்டுகளை விற்று கோடிக்கணக்கில பணம் சுருட்டியுள்ளனர்.
சேவா டிக்கெட் விற்பனையில் ஊழல் நடப்பதாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து, மாநில அரசு உயர் அதிகாரிகளை நியமித்து புலனாய்வில் இறங்கிய போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது. போர்டில் உள்ள உறுப் பினர்கள் இதில் சம்பந் தப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்த போதுதான், நீண்ட காலமாக நடந்து வரும் முறைகேடு என்பது தெரியவந்துள்ளது. கோவிலில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுமே நம்பகத் தன்மைமிக்கவர்களா என்று சந்தேகப்படும் அளவிற்கு ஊழல் நிறைந்துள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் அம லாக்க குழு டைரக்டர் ஜெனரல் வி.தினேஜ் ரெட்டி தலைமையில் மிகவும் கவனமாக நடத்திய சோதனையில், 55 பேர் ஊழலில் சம் பந்தப்பட்டு இருப்பதாக கண்டுபிடித்தது. துணை நிருவாக அதிகாரிகள் இருவர் தான் மய்ய புள்ளி யாக செயல்பட்டு வந்துள் ளனர். அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனைவரும் சஸ்பெண்ட்
இது தொடர்பாக முழு விசாரணை நடத் துவதற்காக விசாரணை அதிகாரி ஒருவரை தேவஸ்தான சிறப்பு அதிகாரி நியமித்துள் ளார். இவரது விசார ணைக்கு பின், ஊழலில் சிக்கிய அனைவரும் பணி யில் இருந்து இடை நீக் கம் செய்யப்பட உள்ளனர்.
ஆர்ஜித சேவா டிக் கெட்கள் பல ஆண்டு களுக்கு முன்பதிவு செய் யப்பட்டுள்ளன. புதிதாக சேவா டிக்கெட் வாங்கு வது என்பது இயலாத காரியமாக இருந்தது. தற்போது, தேவஸ்தானத் தின் சிறப்பு அதிகாரி மாற்றப்பட்ட பிறகு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னையில் விற்பனை
சேவா டிக்கெட் களை திருமலை தேவஸ் தானத்தின் கிளை அலு வலக மய்யங்கள் உள்ள சென்னை போன்ற நகரங்களில் சேவா டிக் கெட்களை விற்க நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. குறிப்பிட்ட சேவைகளில் காலியாக இருக்கும் டிக்கெட் களில், குறிப்பிட்ட சத விகிதம் சென்னையில் விற்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யப் படுகிறது. (எ-டு) டிசம்பர் 15ஆம் தேதிக்குரிய சேவைக்கு அக்டோபர் 17ஆம் தேதி பதிவு). வெள் ளிக்கிழமை நடை பெறும் நிஜபாத சேவை டிக்கெட்டுக்கான பதிவு, வாரத்தில் திங்கள் கிழமை செய்யப்படுகிறது.
நினைவிருக்கிறதா?
திருட்டுத்தனமாக பாபர் மசூதி வளாகத்துக்குள் 1949 டிசம்பர் 23இல் ராமன் சிலையைக் கொண்டு போய் காவிக் கும்பல் வைத்தது. இதன் பின்னணியில் இருந்தவரான காசியாபாத் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.கே. நய்யார் பதவி ஓய்வுக் குப்பின் ஜனசங்கத்தில் சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்.
தமிழீழ அரசு-முதல் பாராளுமன்ற கூட்டம்
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமராக உருத்திரகுமாரன் தேர்வு
நியூயார்க்கில் நடைபெற்ற முதல் பாராளுமன்ற கூட்டம்
நியூயார்க், அக்.3- இலங்கை தமிழர்களுக் காக அமைக்கப்பட் டுள்ள நாடு கடந்த தமி ழீழ அரசு முறைப்படி செயல்படத் தொடங் கியது. நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் முதல் பிரத மராக உருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் நடந்த உச்சகட்ட போரில் விடு தலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. இதனால், இலங்கைத் தமிழர்களின் தனி ஈழ நாடு அமைக்கும் கனவு முடிந்து விட்டதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாடு களில் இருந்தபடியே தமிழீழ அரசை செயல் படுத்துவது என இலங்கை தமிழர் ஆதரவு அமைப் பினர் முடிவு செய்தனர். அதன்படி, நாடு கடந்த தமிழீழ அரசு அமைக் கப்பட்டது. அதற்காக, உலக அளவில் இலங்கைத் தமிழர்களிடையே வாக் கெடுப்பு நடத்தி மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி.க் கள்) தேர்வு செய்யப்பட் டனர்.
இணைய தளம் வாயிலாகவே, இத் தகைய முயற்சிகள் அனைத்தும் நடைபெற் றன. இத்தகைய நட வடிக்கைகள் மூலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பிரதிநிதிகளின் முதல் கூட்டம் அமெ ரிக்காவில் நடைபெற் றது. மூன்று நாள் கூட்டம்.
நியூயார்க் நகரில் அய்.நா.சபை அருகே உள்ள ஓர் உணவு விடுதி யில் நடந்த அந்த கூட் டத்தில் ஏராளமான பிர திநிதிகள் பங்கேற்றனர். லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண் டனர். கடந்த 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்த அந்த கூட்டத்தில், தமிழீழ அரசுக்கான அரச மைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல் நாள் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்தவர் களுக்கு அமைதி மரி யாதை செலுத்தப்பட் டது. அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் சட்ட அமைச்சர் கிளார்க், மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, கொலம்பியா பல்கலைக் கழக மனித உரிமைகள் கல்வி மய்யத் தின் பேராசிரியர் பிலிப், வாஷிங்டன் சட்டக் கல்லூரி பேராசிரியர் அலி பெய்டவுன் போன் றோர் உரையாற்றினர்.
பிரதமர், சபாநாயகர் அதைத்தொடர்ந்து, மரபு சார்ந்த பாராளு மன்ற கட்டமைப்பே தமிழீழ அரசுக்கு உகந் தது, அரசின் தலைவராக பிரதமர் செயல்படுவார், அவருக்கு உதவியாக மூன்று துணைப் பிரதமர் களை தேர்வு செய்வது, ஏழு அமைச்சர்களை நியமிப்பது போன்ற தீர்மானங்களை பிரதி நிதிகள் அடங்கிய பாரா ளுமன்றம் நிறைவேற்றி யது.
மக்கள் பிரதிநிதிகள், நியமன பிரதிநிதிகள் (செனட்) என இரண்டு அவைகளைக் கொண் டதாக பாராளுமன்றம் செயல்படும். தேர்வு செய் யப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடைமுறை யும் பாராளுமன்றத்தால் வகுக்கப்பட உள்ளது. மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் முத லாவது புதிய பிரதமராக விசுவநாதன் உருத்திர குமாரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் சபா நாயகராக கனடாவை சேர்ந்த பொன் பால் ராஜன் என்பவரும் துணை சபாநாயகராக சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுகன்யா புத்திரசிகா மணி என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: நடைபாதைகளில் குடிசைகள் ஆக்கிரமிப்புபற்றி படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர் போன்ற ஏடுகள், நடைபாதைகளில் ஆக்கிரமிக்கும் கோயில்கள் பற்றி படத்தையோ, செய்தியையோ வெளியிடுவதில்லையே -_ ஏன்?
- சி. இராசம் கந்தசாமி, சென்னை - 2
பதில்: அவாள் புத்திக்கு இது அப்பட்டமான எடுத்துக்காட்டு. பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்று ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னதற்கு அரிய உதாரணம்!
கேள்வி: குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காக மட்டுமே குரல் கொடுப்பவர்கள் சமூகநீதிக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ள முடியுமா?
-- மு. இரவிச்சந்திரன், திண்டிவனம்
பதில்: அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம். என் ஜாதி, என் மதம் மட்டும் என்பது ஒரு குலத்துக்கொரு நீதியே!
கேள்வி: பீகார் தேர்தல் பிரச்சாரத்துக்கு நரேந்திரமோடி வரக் கூடாது என்று நிதீஷ்குமார் கூறுவது -_ ஏன்?
-- மு. சுலைமான், பாளையங்கோட்டை
பதில்: மோடி! (மஸ்தான்) வந்தால் ஓட்டு மர்கயா -_ வாக்கு வங்கியில் தோல்வி என்பது அவரது எண்ணம்.
கேள்வி: போப்பைக் கொலை செய்ய முயன்ற 5 பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளனரே?
-- ஜே.ஜோசப், சென்னை-1
பதில்: ஆண்டவரையே கொலை செய்ய முடியுமா? முடியாது எங்களால் என்று அவர்கள் கோர்ட்டில் வாதாடு வார்களோ!
கேள்வி: கணக்கு மற்றும் இலக்கணம் என்றால் மாணவர்களில் பெரும் பாலோர்க்குக் கசக்கிறதே _ பள்ளிப் பருவத்தில் தாங்கள் எப்படி?
-- சா. தமிழரசன் (மாணவன்), சேத்தியாதோப்பு
பதில்: கசக்கவில்லை; இனிக்கவில்லை. மதிப்பெண் கூடுதலாகவும் வாங்கினேன். பொதுவாக எனக்கு கசப்பு பிடிக்கும்.
கேள்வி : மத்திய அமைச்சகத்தில் இணை அமைச்சர் என்று ஒரு பிரிவு இருக்கிறதே - _ இவர்களுக்கு உருப்படி யாக ஏதாவது பொறுப்புகள் உண்டா?
-- ஆடுதுறை ந.கவுதமன், சென்னை-112
பதில்: உண்டே! _ விழாக்களில் கலந்து கொள்வது! சில துறைகளில் இவர்களுக்கு கோப்புகளும் வரக் கூடும்!
கேள்வி : மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இந்தி நாள் கொண்டாடப்பட்டுள்ளதே?
-- கி. சிவாஜி, மதுரை-2
பதில்: தமிழ் வளர்த்த மதுரையிலா இக்கொடுமை! நம் மாணவர்கள் சினிமாவின்முன், தொலைக்காட்சி முன் கிரிக்கெட் மைதானத்தில் திரண்டுள்ளார்களே -_ அதன் பலனா இது?
கேள்வி: ஆண்டாள் -_ரங்கநாதன் உறவு - _ பக்தி என்ற நிலையைக் கடந்து கணவன் _ மனைவி யானது நயத்தக்க நாகரிகம்தானா?
-- புலவர் நக்கீரன், இராசபாளையம்
பதில்: பக்திக்கும், புத்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே இல்லையே! பிரம்மா _ சரஸ்வதி உறவை விடவா மோசம் இது?
- http://viduthalai.periyar.org.in/20101002/snews10.html
யார்?ஆரியரா?அவர்அடிமைகளா?
1.. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
2. திராவிட இராவணப் பெரியாரை இராமாவதாரங் கொண்டு கொன்றது யார்?
3. திராவிட சூரபதுமனை முருகனாக வந்து கொன்றது யார்? 4. திராவிட இரணியனை நரசிங்கரூபங் கொண்டு கொன்றது யார்?
5. கம்சனை கிருட்டினனாக வந்து கொன்றது யார்?
6. திராவிட நரகாசுரனை மகாவிஷ்ணு ரூபத்தில் கொன்றது யார்?
7. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
8. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
9. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
10. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவை களைச் சுட்டுத்தின்று சுராபான மருந்தியது யார்?
11. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
12. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
13. புராண ஆபாசக் கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
14. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
15. உயர்ந்த உத்தியோகத்திலிருப்பவர்கள் யார்?
16. மோட்சலோகத்துக்கு வழிகாட்டி டிக்கட்டு கொடுப்பவன் யார்?
17. திவசம், திதி, கருமாதி, கலியாணம் சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
18. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்துபவன் யார்?
19. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?
20. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
21. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?
22. பல ஜாதிகளையும், மதங்களையும் உண்டு பண்ணியது யார்?
23. உடன் கட்டை ஏறும்படி செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
24. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
25. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
26. திராவிடன் ஆரியப் பாஷையைக் காதால் கேட்டிருந்ததற்காகக் காதில் ஈயத்தைக் காய்ச்சி விட்டது யார்? 27. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?
28. திராவிட சோதரி சூர்ப்ப நகையை மானபங்கம் செய்தவன் யார்?
29. வாலியைக் கொன்று மனைவியை சுக்ரீவனுகுக்குக் கூட்டி வைத்தது யார்?
30. இராவணனைக் கொன்று விபீடணனுக்குப் பட்டம் கட்டியது யார்?
31. சூரனைக் கொன்று சிங்கமுகனுக்குப்பட்ட மளித்தது யார்?
32. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
33. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவன் யார்?
34. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவன் யார்?
35. கடவுளைத் தரிசிக்கத்தகாதவனாக இருப்பவன் யார்?
36. ஆரிய சமாசம், ராட்டிர சேவாசங்கம், இந்து மகா சபை, கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி இவைகளுக்குத் தலைவன், காரியதரிசி யார்?
37. வெள்ளையனை வெளியேற்றி, தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
38. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாதகாரியம் செய்தலைபவன் யார்?
39. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
40. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடது கையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
41. பெண்களை ஆடல், பாடல் கற்பித்த சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
42. தமிழ்நாடு வெ-றுத்த இராஜாஜியை வங்காளக் கவர்ன ராக்கியது யார்? இன்று கவர்னர்_ ஜெனரலாக் கியது யார்?
43. கதர்வேட்டி கட்டி காங்கரசில் தலைமைப் பதவியிலிருப்பவர் யார்?
44. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங்கேட்கும் பஞ்சாங்கம் யார்?
45. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
46. நான்கு ஜாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
47. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
48. முதல் ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
49. ஜமீன் ஒழிப்பு மசோதாவைத் தடைசெய்தது யார்?
50. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
51. வில்வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
52. காப்பி ஓட்டல் முதல் கலெக்டாராபீஸ் வரை உயர்ந்த பதவியிலிருப்பவன் யார்?
53. உலகில் கோடீஸ்வரனாயும், ஜமீன் தாரியாயுமிருப்பவன் யார்?
54. தாசீல் வந்தால் கொம்பு ராசினாமாக் கொடுத்து விட்டால் சொம்பு என்று சொன்னது யார்?
55. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
56. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
57. ஹரிஜன சோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவர் யார்?
58. ஜாதி வித்தியாசமேயில்லை எல்லோரும் ஒன்று எனக் கூறுபவன் யார்?
59. ஜாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
60. ஜாதியைக்கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளேந்தும் என்றவன் யார்?
61. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் -சுட்டுக் கொன்றது யார்?
62. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
63. காந்தியார் சாம்பலை நதிகளில் கரைத்துவிட்டது யார்?
64. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
65. காந்தியார் மகனுக்குப் பெண் கொடுத்தது யார்?
66. காந்தியாரை மகானாக்கி, மகாத்மாவாக்கியது யார்?
67. காந்தியாருக்கு நிதிதிரட்டி ஏப்பமிடுவது யார்?
68. காந்தியாருக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்வது யார்?
69. காந்தியார் கோயிலுக்கு அர்ச்சகனாக வரப் போகிறவன் யார்?
70. காந்தியார் கொலை வழக்குகளைப் பிரசுரிக்கக் கூடாதென்பவர் யார்?
71. பெரியார் சொன்ன காந்தி சகாப்தம், காந்தி மதம், காந்தி தேசம் வேண்டாமென்றது யார்?
72. திராவிடர் இழிவு நீங்க அணிந்திருந்த கருப்புச் சட்டைகளுக்குத் தடை விதித்தது யார்?
73. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்து விட்டது யார்?
74. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவர் யார்?
75. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
76. திராவிடனைத் தலையெடுக்காமல் தட்டி விட்டுக்கொண்டிருப்பவன் யார்?
77. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
78. சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் யார்?
79. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
80. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டு களைக் களவாடியவன் யார்?
81. உலகம் போற்றும் உத்தமர் காந்தியார் உயிருக்கு உலைவைத்த கூட்டம் எது?
82. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடி யிருந்து குடி கெடுப்பவன் யார்?
83. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
84. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
85. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
86. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
87. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
88. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண் டாளக் கேட்டது யார்?
89. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?
90. சைவனுக்கு கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராமபுராணமும் கட்டியது யார்?
91. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
92. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பவன் யார்?
93. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியவன் யார்?
94. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
95. பல காமாந்தகாரக் கடவுளர்களை யுண்டு பண்ணியது யார்?
96. நம்மைப் பல ஜாதிகளாக்கி மொழி, கலை, நாகரிகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
97. எண்ணத் தொலையாத இறைவனை உண்டாக்கி எழுதியது யார்?
98. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளைக் குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
99. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
100. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
(குடிஅரசு 22.1.1949)
- http://www.viduthalai.periyar.org.in/20101002/snews03.html
பயிரை மேயும் வேலிகள்!
மின்சாரம்
அப்பாடா! ஒரு வழியாகப் பிரச்சினை தீர்ந்தது என்று பெருமூச்சு விடுகின்றனர் சிலர்; இது என்ன தீர்ப்பு _ கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று விமர்சனம் செய்பவர் சிலர். அடித்த-வனும், அடிபட்டவனும் ஒன்றுதானா என்று ஏக்கப் பெரு மூச்சுவிடுபவர் சிலர்.
இப்படியெல்லாம் பழைய கதை-களைத் தோண்ட ஆரம்பித்தால், அது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே ஆபத்து வந்துவிடும். அதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உண்டு. ஆய்வு நூல்களும் வெளிவந்து இருக்கின்றனவே - _ வீணாகப் புதிய புயலை உண்டாக்-கலாமா அலகாபாத் உயர்நீதிமன்றம் என்று வினா எழுப்புவோர் உண்டு.
நமக்கு ஏன் இந்த வீண் வம்பு என்று பந்தை உச்சநீதிமன்றம் பக்கம் தள்ளி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து-விட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம் என்பது சிலரின் கணிப்பு. 1949 டிசம்பர் 23ஆம் தேதியன்று திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்து பாபர் மசூதியின் மய்யப் பகுதிக்குள் _ அதுதான் ராமன் பிறந்த இடம் என்று கூறி ராமன் பொம்-மையை வைத்தார்களே, அந்த அத்து-மீறல் திருட்டுத்தனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டதா? அப்படி-யென்றால் மதக்காரணத்தைக் காட்டி இதுபோன்ற சட்ட விரோதமான காரி-யங்களில் ஈடுபடுவது சரிதான் _- அது ஒன்றும் குற்றமில்லை என்று உயர்நீதி-மன்றம் கூறி விட்டதாகக் கருதலாமா?
ராமன் பிறந்த இடம் அந்த இடம்தான் என்று சொன்னதன் மூலம் ராம ஜென்ம பூமிக்காரர்களின் குரலுக்கு நியாய வண்ணத்தைத் தீட்டும் ஓவியர்-களாக நீதிபதிகள் மாறி விட்டார்களா?
புராணம் மற்றும் இதிகாசங்களில் புனையப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள் எல்லாம் வரலாற்று மாந்தர்களாக நினைப்பதை பொது அறிவு உடைய-வர்களும், வரலாற்று ஆசிரியர்களும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகி-றார்கள்? அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு இதன்மூலம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறதா _ இல்லையா?
ராமன் பிறப்பு என்பதை ஏற்கும்போது, அதே இராமாயணத்தில் ராமன் எப்படிப் பிறந்தான் என்று வால்மீகி வரைந்து தள்ளியிருக்கிறாரே -_ குதிரையோடு தசரதனின் மனைவி-மார்கள் ஓர் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? புரோகிதர்களிடம் தசரதனின் மனைவிமார்கள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள்மூலம் அப்பெண்கள் கர்ப்பம் தரித்தார்கள் என்பதையும் கனம் நீதிபதிகள் கவனத்தில் கொள்ளாமலா இருந்திருப்பார்கள்?
சட்டம் எல்லாம் தேவையில்லை -_ இது மதசம்பந்தமான நம்பிக்கைப் பிரச்சினை _ இதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது _ -கூடாது என்று சங்பரிவார்க் கூட்டம் உரக்கக் கூறிக் கொண்டு இருந்ததே -_ அந்தக் கூற்றுக்கு ஆமாம் சாமி போட்டு விட்டனரா நீதிபதிகள்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலை அறிக்கையில் (1.10.2010) குறிப்பிட்டி-ருந்தபடி- _ பிற்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா? சட்டத்தை நெட்டித் தள்ளிவிட்டு, நம்பிக்கை எனும் வெளிச்சத்தில்தான் இனி நீதிபதிகள் தீர்ப்புகளை தோண்டி எடுப்பார்களோ!
சாட்சியம், ஆதாரம், ஆவணங்கள் என்பவைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நம்பிக்கை என்னும் போலிக் கோபுரங்களை எழுப்பிடும் ஆபத்துக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்து விட்டதோ அலகாபாத் உயர்நீதிமன்றம்!
இந்த நம்பிக்கை என்பது இந்து-மதக்காரர்களுக்கு மட்டுமே உள்ள ஏகக் குத்தகையா? அதே நம்பிக்கையைக் காட்டி கிறித்தவர்களோ, முஸ்லிம்-களோ, பவுத்த மார்க்கத்தவர்களோ பிரச்சினைகளைக் கிளப்பினால் நாட்டின் கெதி என்னாகும்?
விநாயகன் கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் புத்தர் விகார்கள் அல்லவா! புத்தருக்குத்தான் விநாயகன் - _ தலைவன் என்று பெயர் இருந்தது என்பதற்கு எதிர்க்க முடியாத ஆதாரங்கள் உண்டே!
சாஸ்தா என்றுகூட புத்தருக்குப் பெயருண்டு. அந்தப் பெயரைத் திருடி அய்யப்பனுக்கு வைத்துக் கோயில் எழுப்பி விட்டனரே _ அய்யப்பன் கோயில்களை மீண்டும் புத்தர் விகார்-களாக மாற்றிட அலகாபாத் உயர்நீதி-மன்றம் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்துவிட்டது என்று நம்பலாமா?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று நீதிமன்றம் பச்சை மையால் கையொப்-பம் போட்டுக் கொடுத்து விட்ட பிறகு பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் நியாயவான்கள் ஆகிவிட்டார்களா? இந்தத் தீர்ப்பு வெளிவந்த அந்தக் கணமே அத்தனைக் குற்றவாளிகளும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று பொருளா?
நிலுவையில் இருக்கும் அந்த வழக்கில் அலகாபாத் தீர்ப்பு முக்கிய இடம் பெற வாய்ப்பு _ இருக்குமோ!
ஏற்கெனவே ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் -_ இந்து சாம்ராஜ்யத்தை நிறுவப் போகிறோம் என்று இசுரேல் வரை சென்று திட்டம் தீட்டியவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது என்று அந்த வெறிபிடித்த காவிக் கொடி அனுமார்கள் பூமிக்கும் வானுக்கும் தாவிக் குதிக்க மாட்டார்களா? அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா?
அயோத்தியைத் தவிர காசி உள்பட ஆயிரக்கணக்கான மசூதிகளின் பட்டியல் எங்கள் கைகளில் இருக்கின்றன என்று கனல் கக்கிக் கொண்டிருந்தவர்களுக்குக் கைலாகு கொடுத்துவிட்டது நீதித்துறை என்று குற்றம் சொன்னால், அது தவறாகுமா?
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. அது என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறதோ!
வேலியே பயிரை மேயலாமா என்ற கேள்வியை இனியாரும் கேட்க முடியாது! மேய்கிறது! மேய்கிறது!! மேய்ந்துகொண்டே இருக்கிறது!!!
- http://www.viduthalai.periyar.org.in/20101002/snews01.html
காந்தியார் பிறப்பும் - காமராசர் மறைவும்
நியமிக்கின்றன
சட்டத்தின் மூலமாகவும், மத, சமுதாய முறைப்படியும் சில விசயங்களில் இருந்து வரும் நிர்ப்பந்தம் தவிர மற்றபடி இயற்கையில் மனிதனுடைய முயற்சியும், சம்பவங்களுமே மக்களை நியமிக்கின்றன.
(குடிஅரசு, 16.5.1937)
காந்தியார் பிறப்பும் - காமராசர் மறைவும்
இன்று காந்தியார் அவர்களின் பிறந்த நாள் (1869). பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் நினைவு நாள் (1975).
இந்த இரு தலைவர்களும் நாட்டு மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்கள்; பொதுத் தொண்டில் அப்பழுக்கற்ற மாமணிகளாக ஒளி வீசியவர்கள்.
இவர்களை இந்நாளில் நினைப்பது என்றால், மாலை மரியாதைகள் மட்டுமல்ல - மனிதகுலம் சிந்திக்கவேண் டிய கூறுகள்பற்றி சிந்திப்பதுதான் சீலமானதாகும்.
காந்தியாரின் பிறந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காந்தியார் என்று நினைக்கும்பொழுது, அவரின் இந்த அகிம்சை அனை வருக்கும் நினைவிற்கு வருவது இயல்பானதுதான். அதேநேரத்தில், அந்த அகிம்சா மூர்த்தி வன்முறையால் தான் மறைய நேரிட்டது என்பது கவனிக்கத்தக்க சான்றாகும். மத நம்பிக்கையாளரான காந்தியார் மதவாத நம்பிக்கையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
காந்தியாரின் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ அவரைக் காப்பாற்றவில்லை என்பது ஒரு சிந்தனை. மத நம்பிக்கையாளர்கள் மனிதநேயக் காரர்கள் அல்லர்; நன்னெறிகளை நம்பிக் கடைப்பிடிப் பவர்களும் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு - உன்னதமான ஒரு மாமனிதரை திட்டமிட்டுக் கொலை செய்ததாகும்.
நான் ஒரு சனாதன இந்து என்று காந்தியார் அவர்கள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருந்தும், நம்பியிருந்தும், அந்த இந்துவை இந்துத்துவா சக்திகள் விட்டு வைக்கவில்லை.
இந்துத்துவா என்பது இந்துக்களை ஒற்றுமைப் படுத்தக் கூடியது - இந்து மக்களுக்குப் பாதுகாப் பானது என்பது கடைந்தெடுத்த பொய் என்பது தெற்றென விளங்கிவிட்டது. ஒரு சனாதன இந்துவை - ஒரு சனாதன இந்துக் கும்பலே கொன்று முடித்து, இனிப்பு வழங்கியதன்மூலம் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் வேறு கோணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் ஆகிவிடவில்லையா?
இந்துவாக உள்ள ஒருவர் நியாயவாதியாக, பொதுத்தன்மை வாய்ந்தவராக இருக்க முடியாது. அப்படியிருந்தால், அத்தகையவரை இந்துத்துவா காவிகள் காவு கொடுத்துவிடுவார்கள் என்பதும் காந்தியார் கொலை நாட்டு மக்களுக்குச் சொல்லித் தரும் சொக்கத்தங்கமான பாடமாகும்.
காந்தி இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார் காந்தி. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று கூறியுள்ளார் தந்தை பெரியார் (விடுதலை, 13.1.1965).
இந்துத்துவா என்று சொல்லும்பொழுது இந்து மதத்தின் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதையும்விட, வருணாசிரமத் தன்மையில் முதல் இடத்தில் உரிமைகளை அனுபவிக்கக் கூடிய பார்ப் பனர்களின் நலனைச் சார்ந்ததைத்தான் முக்கியமாகக் கருதப்படுகிறது.
பார்ப்பனர்களைப்பற்றி காந்தியார் தெளிவாகக் கணிக்கத் தொடங்கினார்.
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் ஜாதி இந்துக்களானால், அவர்கள் சிறுபான்மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டீஷார் வெளியேறி, இந்தியாவில் சுதந்திரத்தை நிலைநாட்டிய பின், இருந்த இடம் தெரியாமல் அவர்கள் அழிந்து போக வேண்டியதுதான் (திராவிட நாடு, 12.2.1947) காந்தியாரின் இந்தக் கணக்குக்குப் பிறகும், பார்ப்பன சக்திகள் விட்டு வைப்பார்களா? பார்ப்பனர்களின் கடந்தகால வரலாற்றை நன்கு உணர்ந்தவர்கள் இதனை இம்மியளவு அய்யமின்றி உணர்ந்து கொள்வார்களே!
அழிந்து போவார்கள் என்று சாபமிட்டவரை அழித்துவிட்டனர் பார்ப்பனர்கள்.
பச்சைத் தமிழர் காமராசரைப் பொறுத்தவரை - அவரும் மதவாத சக்திகளால் கொலை செய்யப்பட வேண்டியவராகவே இருந்தார். குறிப்பாக பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே காந்தியாரைக் கொன்ற கா(லி)விக் கும்பல் கொலை செய்ய எத்தனித்ததா இல்லையா? (7.11.1966).
இந்தக் கொலைக் கும்பலில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், சங்கராச்சாரியார், சாதுக்கள் இடம்பெற்றி ருந்தனரே!
காந்தியாரின் பிறந்த நாள் - காமராசரின் மறைவு நாள் தரும் சிந்தனை என்ன?
மதவெறியை மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்! என்றார் தமிழர் தலைவர் கி. வீரமணி.
வெள்ளி, 1 அக்டோபர், 2010
2010 ,செப்டம்பர் 29 ல், புதிய கோள் கண்டுபிடிப்பு..!
நமது சூரிய குடும்பம் போலவே, இரவு வானில் தெரியும் விண்மீன்களுக்கும் குடும்பம் உண்டு; அதனைச் சுற்றும் கோள்களும் உண்டு. நம் சூரியனைவிட சிறிய, சிவப்பு குள்ள விண்மீன் ஒன்றை, சுமார் 20.3 ஒளியாண்டுகள் தொலைவில், 2005, ஆகஸ்டில் கண்டுபிடித்தனர்.அதற்கு கிளிஸ் 581 (Gliese 581 ) என பெயரும் வைத்தனர். அப்போது அதனைச் சுற்றும் கோளையும் கண்டனர்.இதன் பெயர் கிளிஸ் 581 ப என பெயர் சூட்டப் பட்டது . அது நம் பூமியைப் போல, 10 மடங்கு நிறை உள்ளது; அதாவது நம் சூரிய மண்டல, நெப்டியூனின் அளவு இருக்கும்.இந்த கோள், இந்த சிவப்பு குள்ள விண்மீனை 5 .4 நாளில் சுற்றுகிறது . இந்த சிவப்பு குள்ள விண்மீன், விண்வெளியில் உள்ள துலா ராசி விண்மீன் படலத்தில் உள்ளது.
சூரியன் நமது பால்வழி மண்டலத்திலுள்ள, ஓரியன் கைகளுக்குள் உள்ளது.கிளிஸ் 581 நம் சூரியனின் நிறையில் மூன்றில் ஒரு பகுதிதான். இது சூரியனுக்கு அருகிலுள்ள விண்மீன்களில், 87 வது இடத்தில் இருக்கிறது. இதன் மையத்தில், ஹைடிரஜன் மிகக் குறைந்த வேகத்திலேயே எரிகிறது. இந்த விண்மீன் நம் சூரியனின் அளவில் 0 ௦.2 % பிரகாசத்துடன்மட்டுமே இருக்கும்.
அதன் மேல் பகுதி வெப்பம் 2,926.85 °C / 5,300.33 °F ஆக உள்ளது. நமது சூரியனின் மேற்பரப்பு வெப்பம், 5,505 °C / 9,941 °F
.கிளிஸ் 581 ன் மற்றொரு கோள் ஒன்றினை ஏப்ரல் 2007 ல் கண்டுபிடித்தனர்.இதன் பெயர் கிளிஸ் 581 c . இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட வெளிக்கோள்களில்,இதுதான் மிகக் குறைந்த நிறை உடையது என அப்போது கருதப் பட்டது . மேலும் இது நம் பூமி போன்ற வாழிட சூழல் உள்ளதாகவும் கூறப் பட்டது. ஆனாலும் இதன் மேற்பரப்பு வெள்ளியின் தன்மை கொண்டது என கருதப் பட்டதால், இது உயிர் வாழும் சூழலில் இல்லை.இதன் மேற்பரப்பு வெப்பம் -3 °C --40 °C .இது 13 நாட்களில் அதன் சூரியனை சுற்றுகிறது. அப்போதே, .கிளிஸ் 581 ன் அடுத்த கோளும் கண்டறியப்பட்டது. பெயர் கிளிஸ் 581 d .இது நம் பூமியைப் பூமியைப் போல 7 மடங்கு பெரியது. நமது யுரேனசின் அளவு இருக்கும். இது கிளிஸ் 581 ஐ 66 .8 நாட்களில் சுற்றும். இதுவும் கூட உயிர்கள் வசிக்கும் சூழல் உள்ளதாக சொல்லப் பட்டது.அதன் பின், கிளிசின் அடுத்த கோள், 2009 ,ஏப்ரல் 21 ம் நாள், கண்டுபிடித்ததாக அறிவிக்கப் பட்டது. இதுவே, மிகக் குறைந்த நிறையுள்ள வெளிக்கோள். இது பூமி போல 1 .9 மடங்கு நிறை.ஆனால் கிளிஸ் 581 ஐ 3 .4 நாளில் சுற்றிவிடும்.
கிளிஸ் 581 ன் அடுத்த கோள் 2010 , செப்டம்பர் 29 ல் கண்டுபிடிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதனை , ஹவாய் தீவிலுள்ள வானோக்கு நிலையமான W. M. Keck Observatory மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. இது ஓர் இறந்த எரிமலையான மௌனா கியா ( Mauna Kea ) மேல் அமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள தொலைநோக்கி ஆடியின் விட்டம் மட்டும் 10 மீ. உலகின் இரண்டாவது பெரிய தொலை நோக்கி இது. கிளிஸ் 581 ன், இந்த கோளுக்கு, கிளிஸ் 581 g என பெயரிடப் பட்டுள்ளது.இதனை,வானவியல் பேராசிரியர்,ஸ்டீவன் வோக்ட் ( Steven Vogt), கலிபோர்னிய பல்கலைக் கழக சாண்டா க்ருசும்(Santa cruz ) , மற்றும் அவருடன் பணியாற்றுபவரான , வாஷிங்டனின், கார்னேஜி நிறுவனத்தைச் சேர்ந்த பால் புட்லரும் (Paul Butler) இணைந்த குழு கண்டுபிடித்துள்ளது
இது தன் சூரியனான கிளிஸ் 581 ஐ, 37 நாட்களில் சுற்றும்.அதன் தாய் விண்மீனிலிருந்து 0௦.146 வானியல் அலகு தொலைவில் உள்ளது. இது நம் பூமி போல 3 .1 -- 4 .3 மடங்கு நிறையும்1 .3 --2.0 மடங்கு ஆரமும் உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கோள், நம் பூமி போலவே,1 .3 --1 .5 மடங்கு கற்பாறை யினாலும், 1 .7 --2 மடங்கு நீரினாலும் ஆனது என கருதப் படுகிறது. இதன் மேற்பரப்பு ஈர்ப்பு விசையும், பூமியினதைப் போல 1.1 -1.7 மடங்கு உள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இங்கு உயிரினம் வாழும் சூழல் உள்ளதாவும் கருதப் படுகிறது.
கிளிஸ் 581 ன் , 581 g கோளில் நிச்சயம் , அதாவது 100 % உயிரினம் இருக்கும் என ஸ்டீவன் வோக்ட் உறுதியாக கூறுகிறார். ஆனால் அது மற்றவர்கள் சொல்வதுபோல, வேற்றுகிரக வாசியாக இருக்க வேண்டியதில்லை. அவை பாக்டீரியா , அதற்கு இணையான பாசி வகையாக கூட இருக்கலாம். இதுதான் பூமியின் தனித்துவம் என கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டீவன் வோக்ட் .எதிர்காலத்தில் நாம் இந்த கோளுக்கு சென்று பார்க்கலாம்.
அயோத்தி வழக்கு ஒரு பார்வை!
தலைநகர் புதுடில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். இது 7ஆம் நூற்றாண்டில் பல கோயில்களை உள்ளடக்கி கோயில் நகரமாக இருந் தது என்று சீனத் துறவி யுவான் சுவாங் தனது குறிப்பு களில் தெரிவித்துள்ளார். அங்கு ராமர் கோயில் இருந் ததாக 12ஆம் நூற்றாண்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பாபர் மசூதி இடிப்பதற்கு முன்...
1527: மொகலாய மன் னர் பாபர் இந்தியா மீது படையெடுத்தார். அவர் பல ஹிந்து மன்னர்களை வெற்றிகண்டார். தான் வெற்றிகண்ட பகுதிகளில் ஆட்சிபுரிய ஜெனரல் மீர் பாகியை வைஸ்ராயாக நியமித்தார். மீர் பாகி அயோத்திக்கு 1528 இல் வருகை தந்தார். சர்ச்சைக் குரிய இடத்தில் உள்ள கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக கூறப் படுகிறது. பின்னர் பாபரின் பெயரை அந்த மசூதிக்கு சூட்டினார்.
1853: சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத் துவது தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம் களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த நேரத்தில் சீதா ரசோய் (சமையல் கூடம்), ராம் சபூத்ரா (வேள்விக் கூடம்) கட்டப்பட்டன.
1855 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக் களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்துள்ள தாக பிரிட்டிஷ் காலனி ஆட்சி தகவல்கள் தெரிவிக் கின்றன.
1859: ராமஜென்ம பூமியில் இந்துக்கள் வழிபட தனி இடமும், முஸ்லிம்கள் வழிபட தனி இடமும் ஒதுக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்பி வலை அமைத்தனர்.
பாபர் மசூதியை இடிக்கும் இந்து மத வெறியர்கள்
1936 ஆம் ஆண்டுக்குப் பின் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்று ஹிந்துக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 1949 டிசம்பர் 22: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்துக்களும் முஸ்லிம்களும் அந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்ற படி ஏறினர். அப்போது சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு வளாகத் துக்கு பூட்டுப் போடப்பட்டது.
1950: கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் பரமஹம்ச ராமச்சந்திர தாஸ் ஆகிய இருவரும் ராமர் சிலையை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது உள்பகுதி பூட்டப்பட் டது. ஆனால் வளாகத்தில் பூஜை நடத்த அனு மதிக்கப்பட்டது.
1959: நிர்மோஹி அகடா என்ற இந்து அமைப் பினர் மற்றும் மஹந்த் ரகுநாத் ஆகியோர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய தாங்கள்தான் உரிமை உள்ளவர்கள் என்று அவர்கள் கோரினர்.
1961இல் சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதிக்கு உரிமை கொண்டாடியதோடு அதனைச் சுற்றியுள்ள இடம் சமாதி என்று கூறியது.
1986: ஃபைஸாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹரிசங்கர் துபே என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த பிப்ரவரி 1இல் அனுமதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூட்டுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முஸ்லிம் கள் சார்பில் பாபர் மசூதி நடவடிக்கை குழுஅமைக் கப்பட்டது.
1989: நவம்பர் 9 ஆம் தேதி ராமர் கோயில் கட்ட பூமி பூஜைக்கு அப்போ தைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதியளித்தார். இதே ஆண்டில் மசூதியை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவர் நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் வழக் குத் தொடர்ந்தார்.
2002: சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந் ததற்கான அடையாளங் கள் உள்ளதா என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக் கப்பட்டது.
பாபர் மசூதியை இடித்த பின்பு...
2010: இந்த பெஞ்ச் தனது விசாரணையை கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறைவு செய்து செப்டம்பர் 24இல் தீர்ப்பு என்று அறிவித்தது. ஆனால் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தடை உத்தரவை செப்டம்பர் 28ஆம் தேதி விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல்
நம்பிக்கையின் அடிப்படையில் என்பது ஆபத்தானது!
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து அமைதி காக்கவும்!
தமிழர் தலைவர் அறிக்கை
சட்டத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் அமைப்புகளாக அல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நீதி மன்றம் தீர்ப்புக் கூறுவது - எதிர்காலத்தில் பல சிக்கல் களை ஏற்படுத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:
பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு - பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு - அலகாபாத் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகளால் நேற்று (30.9.2010) அளிக்கப் பட்டுவிட்டது.
மூவரும் தனித்தனி தீர்ப்பு
மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத் தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப்படையில் அமைவதைவிட - நம்பிக்கை - நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவைகளால் அமைந்த விசித்திரத் தீர்ப்பாகும்! வல்லடி வழக்குகளும்கூட!
நம்பிக்கையின் அடிப்படையில்
தீர்ப்பு என்பது ஆபத்தானது!
நம்பிக்கை அடிப்படையில் என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது - பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
அதற்கு இந்த அலகாபாத் தீர்ப்பு ஓர் அருமையான விசித்திரத் தீர்ப்பு!
இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் ஒரு சொற் றொடரை Steele and Addison ஆகிய இருவருடைய கட்டுரைகளில் பயன்படுத்தி பின் அதைப் பிரபலப் படுத்தினார்கள்.
‘‘Much might be said on both sides’’
இரண்டு பக்கங்களிலும் நியாயங்கள் ஏராளம் சொல்லலாம் என்று கூறும் நிலையே அது.
யாரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைப் பவர்கள் இதுபோன்ற நிலையை பல வாதங்களிலும், வழக்குகளிலும் எடுப்பதுண்டு.
அதுபோல்தான் இம்மூன்று தீர்ப்புகளும் அமைந் துள்ளன!
எங்கும் பதற்றம் இல்லை
தீர்ப்பு வெளியாகும் முன்பே பாதிக்கப்பட்டவர்கள், இதை ஏற்க இயலாத வழக்காடிகளில் ஒரு சாரார், மேல் முறையீட்டை - அப்பீலை - உச்சநீதிமன்றத்தில் செய் வார்கள் - செய்ய வாய்ப்புண்டு என்று மத்திய அரசு தெளிவாகவே கூறி, யாரும் பதற்றம் அடையாமல் இருந்து, எவ்வித கலவரங்களுக்கும் இடம்தராமல் - சுமுகமான வாழ்வு வாழவேண்டும் என்று அறிவித்து, தக்க முன்னேற்பாடுகளை மும்முரத்துடன் செய்ததால், இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் - குறிப்பாக வடக்கே உள்ள பல மாநிலங்கள் உள்பட எங்கும் அமைதி தவழுவது மிகவும் ஆறுதலானது.
அமைதிப்பூங்காவாகத் தமிழ்நாடு!
தந்தை பெரியாரின் சுயமரியாதை - பகுத்தறிவு மண்ணான தமிழ்நாடு, முன்பு போலவே (1992) அமைதிப் பூங்காவாகவே காட்சியளிப்பது அதிசயம் அல்ல; காரணம், மதவெறி மாய்த்து மனிநேயத்தைக் காத்த திராவிடர் இயக்கத்தின்ஆட்சியாகும்!
சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா?
புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை - சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.
இராமாயணமே 57 இராமாயணங்கள் உள்ள நிலையில், ராமன் பிறந்த இடம், பிரச்சினைக்குரிய அந்த இடம்தான் என்று சொல்வது - நம்பிக்கை அடிப்படையில்தான் - சட்ட சான்றுகள் அடிப்படையில் அல்ல என்ற நிலையே உள்ளது!
இறுதித் தீர்ப்பை எதிர்பார்க்கவும்
எப்படி இருப்பினும், நாடு அமைதிப்பூங்காவாகவே தொடரவேண்டும்.
ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக்காடாக மாறக்கூடாது!
சமாதான சகவாழ்வின் மூலம்தான் நம் நாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண முடியும்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு 3 மாதங் கள் அவகாசம் உள்ளது - எனவே, இதற்காக வெற்றிக் கூச்சலோ, தோல்வி மனப்பான்மையுடன் கலவரங் களிலோ எவரும் ஈடுபடுவதோ கூடாது, மீண்டும் சட்டத்தின் ஆளுமையின் இறுதித் தீர்ப்பையே எதிர்பார்ப்போமாக!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
1.10.2010
