வியாழன், 4 நவம்பர், 2010

தீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்

- சாமி.சிதம்பரனார்

தீபாவலிப் பண்டிகைக்காக வழங்கி வரும் கதையே சுட்டுக் கதையாக முடிகின்றபோது, தீபாவலியை எப்படி நமக்குரிய பண்டிகையென்று கொள்ள முடியும்? இத்தகைய மூடக் கதையை-பொருந்தாத போலிக் கதையை ஆதாரமாகக்கொண்ட தீபாவலியை வீண் செலவு செய்து ஏன் கொண்டாட வேண்டுமென்றுதான் கேட்கின்றோம்?


இந்துக்கள் என்பவர்கள் கொண்-டாடும் பண்டிகைகளில் தீபாவலிப் பண்டிகையும் ஒன்றாகும். இதுவும், இந்து மதவழக்கத்தில் ஒன்றாகும். ஒவ்-வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு புராணக் கதை கற்பிக்கப்பட்டு இருப்-பதை யாவருமறிவோம். அவ்வாறே தீபாவலிக்கும் ஒரு புராணக் கதையைச் சுருங்கக் கூறி முடித்துவிட்டு அதன் பின்னர் நமது எண்ணத்தை வெளி-யிடுகின்றோம்.

இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்து கொண்ட பொழுது, திருமால் பன்றி-யுருக்கொண்டு வந்து இரண்யாட்-சதனைக் கொன்று பூமியை நிலைக்கச் செய்தாராம். அப்பொழுது பன்றியு-ருவோடிருந்த திருமாலை, பூமி தேவி மணம் செய்து கொள்ள விரும்பி-னாளாம், உடனே பன்றியும் பூமி-தேவியும் திருமணம் செய்து-கொண்டார்-களாம். அவ்விரு வர்களுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நரகாசுரன் என்று பெயர். இவன் மாகிஷ்மதி என்னும் பட்டணத்தை அரசாண்டு கொண்டி-ருந்தான். துவஷ்டாவின் பெண்ணா-கியணா கசேரு என்பளை இவன் ஒரு யானை உருவத்துடன் சென்று சிறை பிடித்துக்கொண்டு வந்து மணம் செய்து கொண்டானாம். இவன் காசிபரின் மனைவியாகிய அதிதியென்பவளின் காதணியையும், வருணனுடைய குடை-யையும் கவர்ந்து கொண்டானாம். அன்றியும் எப்பொழுதும் தேவர்-களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந்தானாம். இவ்வாறே இவன் அனேக, ஆண்டுகள் வாழ்ந்து வந்தானாம்.

இந்நரகாசுரன் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல், தேவர்களனை-வரும், முறையிட்டதைக் கேட்ட திருமால் அவனைக் கிருஷ்ணாவதாரத்-தில் கொன்று விடுவதாக வாக்-களித்திருத்திருந்தாராம். அதன்படியே, கிருஷ்ணன், ஒரு சமயத்தில் திருமாலின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற தானும், பூமிதேவி அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமை-யென்னும் தனது மனைவியும் சேர்ந்து நரகாசுர பட்டினத்தையடைந்தார்கள். கண்ணன் நரகாசுரனுடன் எதிர்த்துச் சண்டை செய்து கொன்றான். நரகா-சுரன் இறக்கும்போது தான் இறந்த நாளை உலகத்தார் கொண்டாடும்படி செய்ய வேண்டுமென்று வேண்டிக்-கொண்டானாம். அவன் வேண்டு-கோளை நிறைவேற்றவேண்டுமென்று சத்தியபாமையும், விரும்பினாளாம். அதற்கறிகுறியாகத்தான் தீபாவலிப் பண்டிகை ஏற்பட்டதாம். இதுதான் பாகவதம் முதலிய புராணங்கள் வழங்கும் கதையாகும்.

இனி இக்கதை எவ்வளவு தூரம் உண்மையாக விருக்க வேண்டுமென்-பதைச் சிறிது ஆராயலாம். பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிந்தான் என்னுங் கூற்று பொருந்-துமா? பூமி உருண்டை வடிவமா? தட்டை வடிவமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் ஒளிப்பது எப்படி? பூமியெங்கிருக்கின்றது, கடல் எதன் மீது இருக்கின்றது? என்ற கேள்விகளைக் கேட்போமாயின், திருமாலின் பன்றியவதாரத்திற்கே ஆபத்து வந்து விடுகின்றதன்றோ? பிறகு பூமிதேவி பன்றியைக் கண்டு ஆசைப்-பட்டாள் என்று கூறுவதனால் பூமி என்பது ஒரு பெண்ணுருவமா? ஒரு பெண்ணின் மேலா நாம் இவ்வளவு காரியங்களையும் செய்து கொண்டி-ருக்கின்றோம்? என்ற கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை-யன்றோ? ஒரு இயற்கைப் பொருளைப் பெண்ணாக ஆக்கி அப்பெண் ஒரு பன்றியோடு சேர்ந்து பெரும் புகழ் வாய்ந்த ஒரு பிள்ளையைப் பெற்றதாகக் கூறப்படும் கதையையும் உண்மை-யென்று நம்புவார் பகுத்தறிவுடைய-ராகவிருக்க முடியுமா?

இனிக் கடைசியாக நரகாசுரனைக் கொன்றதாகக் கூறப்படும் கண்ணனைப் பற்றிச் சிறிது நினைத்துப் பார்ப்போம். திருமாலவதாரமென்று சொல்லப்-படுகின்ற கண்ணன் நரகாசுரனுக்குத் தந்தையாக வேண்டுமன்றோ? ஆகவே தகப்பன் மகனைக் கொலை புரிந்த கதைதான் தீபாவலியென்று முடிக்கின்-றதன்றோ? தகப்பன் தான் மட்டுஞ் சென்று மகனைக் கொல்லாமல் தாயாரையும் பக்கத்தில் வைத்துக்-கொண்டு கொன்றானாம், பூமி தேவியின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்தியபாமை நரகாசுரனுக்கு தாயன்றோ? மகனைக் கொன்ற கண்ணன் பெருமை-யைத்தான் பெருமையாகப் பேசுகின்-றோம். அந்தோ, இதை விட குறைந்த அறிவுடைய செயல் வேறென்னவிருக்-கின்றது!

மேற்கூறிய உத்தமமான புராணக்-கதையினால், நமது பரிசுத்தமான தீபாவலிப் பண்டிகையின் பெருமையை நீங்களே ஊகித்து உண்மையை உணர லாம். சிலர் தீபாவலிப் பண்டிகை மழைக் காலத்தில் வருவதால் அன்று சுகாதார முறையைக் கைக்கொள்வதற்குப் பதிலாக இப்பண்டிகையின்மூலம் நம்மையும் நமது வீடுவாசல்களையும் சுத்தஞ்-செய்கின்றோம் என்கிறார்கள். எண்ணெய் தேய்த்து முழுகுவதும் புதிய ஆடையை உடுத்துக்கொள்வதும், சுகாதாரத்திற்கறிகுறியாம். வாணங்களை வாங்கிக் கொளுத்திக் கெட்ட காற்றை உட்-ககொள்வதும் சுகாதாரமாம். எண்ணெய்ப் பண்டங்களை உண்டு பிணியடைவதும் சுகாதாரமாம் என்னே இவர்தம் அறியாமை?

நாம் தீபாவலியைப் பற்றிக் கூறுங்-கால் ஏராளமான பொருளை வீண் செலவு செய்யும், பொருளற்ற மத சம்பந்தமான சடங்குகளில் ஒன்றுதான் தீபாவலி என்றுதான் கூறுவோம். தீபாவலியன்று நமது இந்தியாவில் எவ்வளவு பொருள் வீணாகின்ற, தென்பதைக் கணக்கிடுவோமாயின் கோடிக்கணக்கான பொருள் வீணாகின்றதென்பது விளங்கும், புதிய ஆடைகளுக்காக-ஆடம்பரமான உடைகளுக்காக-அந்நிய நாட்டினர்க்கு அளவு கடந்த பொருளை அள்ளிக்-கொடுக்கிறோம். ஒரு பயனுமற்ற வெடிகளுக்காக எத்தனை லட்சம் ரூபாய் அள்ளி இறைக்கின்றோம். காசைக் கரியாக்காதே வாணத்தை வாங்கிச் சுடு என்ற பரிகாசப் பழமொழி நம்மை ஏளனஞ் செய்வதற்கு எழுந்த பழமொழியன்றோ? நமது இச்செய்-கையைக் கண்ட அந்நியர் எவர்தான் நகைக்க மாட்டார்கள்? எவர்தான் நம்மை அறிவிலிகள் என்று கூற-மாட்டார்கள்?

இம்மட்டோ! இன்னும் இவ்வெடி-களால் உண்டாகும் ஆபத்துக்கள் எவ்வளவு? வெங்காயவெடி செய்வ-தனால் கண்ணிழக்கின்றவர்கள் எத்-தனை பேர்? கை யிழக்கின்றவர், காலிழக்-கின்றவர் எத்தனை பேர்? உயிர் விடு-வோர் எத்தனை பேர்? மற்றும் வெடிக்-கும் வெடிகளால் காயமடைவோர் எத்தனை பேர்? இதற்கெல்லாம் காரணம், தீபாவலி யென்னும் பாழும் கடன்கார மதச்சடங்கன்றோ? மதச்-சடங்கு என்பதைவிட மடச்சடங்கென்று கூறுவது பொருந்துமென்று நினைக்கின் றோம்.

இதுமட்டோ? மழை நாளில் எண்ணெய்ப் பண்டங்களையுண்டு வயிற்று நோய் கொண்டோர் எத்தனை பேர்? விஷ பேதிக்குட்படுவோர் எத்தனை பேர்? சுரநோய் கொள்வோர் எத்தனை பேர்? இதற்கு வேறு உதாரணம் வேண்டாம், தீபாவலியன்று காலையில் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று பார்வை யிடுவீர்களாயின் பலகாரப் பெருமையையும் தீபாவளியின் மாண்-பையும் உணரலாம்.

ஆகவே, மதம் மதம் என்று சொல்லிக்கொண்டிருப்பதனால்- எவ்வளவு துன்பமுண்டாகின்ற தென்-பதை ஆராய்ந்து பாருங்கள். இந்தத் தீபாவளிச் சடங்கினால், நமது பொரு-ளுக்கும், உடம்புக்கும், அறிவுக்கும், எவ்வளவு சேதமுண்டாகின்ற-தென் பதைச் சிறிது கூர்ந்து நோக்கு-வோமாயின் இதுபோன்ற சடங்கு-களைக் கொண்டாட-மத சம்பந்தமான சடங்கென்று சொல்ல முன் வருவோமா? தமிழ் மக்களுக்குப் பல வகையிலும் சேதம் விளைவிக்கின்ற இத்தீபாவலிப் பண்டிகையை- ஆரியப் புராணக்கதையில் ஏற்பட்ட இத் தீபாவலிப் பண்டிகையை-இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளை-யிடும் இத்தீபாவலிப் பண்டிகையை ஒழிப்பதற்கு வழி தேடவேண்டும். இவ்வாறனா மூடச்சடங்குகளையும், பண்டிகைகளையும், வழக்கங்களையும், ஒழிப்பதில்தான், நமது விடுதலை அடங்கிக் கிடக்கின்றது.

மாமிச ராமன்பற்றி ஆச்சாரியார்!


இவ்விடத்திலும் இன்னும் பல இடங்களிலும் இராம லட்சு மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த_அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த வேட்டையாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக்கிறார். சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கமாக எழுதியிருக்கிறார். இதைப் பற்றி நாம் குழப்பம் அடைய வேண்டியதில்லை.

க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி, மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை. காலத்துக்கும் குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப்பதற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜையில் வைத்து, அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத்துக்கு பொது தருமம்.

- இராஜகோபாலாச்சாரியார் -
சக்கரவர்த்தி திருமகன் - பக்கம் 88

- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews10.html

கீதைபற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்துகொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக _ அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா? இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப் படுவதுபோல குருக்ஷேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி _ குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜுன னுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சனை எழுகிறது.

அர்ஜுனன், ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குரு க்ஷேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

- விவேகானந்தர்

கீதையைப்பற்றிக் கருத்துக்கள் என்ற நூலில
் (ஆதாரம்: ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 116, 117)

- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews09.html

நரகாசுரரப் படுகொலை

நரகாசுரன்

தந்தை பெரியார்
(நரகாசுரப் படுகொலை என்ற பெயரில் அருப்புக் கோட்டை M.S. இராமசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலுக்கு தந்தை பெரியார் அளித்த முகவுரை -_ 1947)


நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதுகிறேன். நரகாசுரன் என்பதாக என்பதாக ஒருவன் இருந்தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ என்பதும் பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும் ; தங்கள், வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும் ; அவர்கள் நலத்திற்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும், கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு உணர்த்துவதற்கு ஆக பொதுவாகவே, ஆரிய சாஸ்திர புராண இதிகாசங்களின் ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள் என்பதாகக் கருதியே, எழுதச் சம்மதித்தேன்.

திராவிட மக்கள் அருள்கூர்ந்து, நரகாசுரன் வதைப் புராணத்தை, சற்று, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். கதையின் சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன், அயோக்கியனாக இருந்தான்; கடவுளால் கொல்லப்பட்டான்; பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், இதற்காக சித்திரித்த கதையின் தன்மை எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20----_ஆம் நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி இக்கருத்துக்கு ஆளாகலாமா? என்பதைச் சிந்திக்கத்தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற புத்தகம், அருப்புக்கோட்டை தோழர் வி.ஷி. இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மூலக்கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை இழிவுபடுத்துவதற்கு என்று, எழுதப் புகுந்த கற்பனையில், ஆரியர்களது நிலை, தன்மை, ஆகியவை எவ்வளவு இழிவாகக் கூடியதாயிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், இக் காரியத்தில் புகுந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சமாதானம் என்னவாக இருக்குமென்றால், இக்கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு காட்டுமிராண்டிகளாகவும், அவ்வளவு மானாவமானக் கவலையற்ற மிருக வாழ்வு வாழ்ந்தவர்களாகவும், இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும், இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது, எவ்வளவு விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இது போன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டுமிராண்டித் தனமானதும், மானாவமான லட்சியமற்றதும், மிருகப்பிராயத்திலிருப்பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர்கள் கருதி இருப்பதாகவாவது இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், இனியாவது பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது திராவிடர் கடமையாகும். ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன் :

1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டது.

2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.

3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.

4. இக் கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஒரு அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்களுக்கும், தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு செய்தது.

5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.

6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.

7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளி கொண்டாட்டம்.

என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப் புத்தகம் எழுதியவருடைய ஆவல்.

ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக்கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்று பட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.

இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் M.S. இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews01.html

தேவாசுரப் போராட்டம் அசுரர்கள் - திராவிடர்கள்

முதல்வர் மாண்புமிகு கலைஞர்
(அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான செல்வி ஜெயலலிதா முதல்வர் கலைஞர் அவர்களை நரகாசுரனுக்கு ஒப்பிட்டு வதம் செய்யவிருப்பதாக வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் வடசென்னை தங்கசாலையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் 8.10.2006 நாளன்று கலைஞர் உரையாற்றிய திலிருந்து இந்தப் பகுதி தரப்பட்டுள்ளது. (`முரசொலி 9.10.2006)


ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு எழுதியுள்ள சரித்திரப் புத்தகத்தில், சிறையிலே-யிருந்து மகளுக்கு எழுதிய கடிதங்களில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்; ஆரிய, திராவிட போராட்டம் தான் தேவாசுர யுத்தம் என்று வர்ணிக்கப்படுகிறது என்று அதிலே எழுதியிருக்கிறார்.

தேவர்களுக்கும் அசுரர்-களுக்-கும் நடைபெற்ற போராட்டத்தைத் தான் தேவர்-கள் அசுரர்களை இகழ்வதற்-காகப் பயன்படுத்திய வார்த்தை, அசுரர்கள் என்றால் கொடியவர்கள் என்றும், அவர்-கள் வாழக் கூடாத வர்கள், அவர்கள் மனித சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் வசை மொழிகளுக்கு ஆளாக்-கப்பட்டு நூல் களில் கதா-பாத்திரங்களாக வர்ணிக்கப்-பட்-டார்கள்.

நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எனக்-குக்கூட நீண்ட நாளாக அந்த உண்மை தெரியாமலே இருந்-தது. நம்முடைய ராஜ்பவனத்-தில், ஒரு நாள் எங்களுக்-கெல்லாம் மாலை நேர விருந்துக்கு அழைப்பு வந்தது. அப்போது கவர்னராக ஓர் அம்மையார் இருந்தார். அந்த விருந்தில் பாடகர் ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். கச்சேரி நடைபெறும் போதே, எங்க ளுடைய கைகளிலே அச்சடிக்கப்பட்ட தாள் ஒன்று வழங்கப்பட்டது. அதைப் படித்துப் பார்த்தேன். அதிலே ஓணம் பண்டிகை பற்றிய குறிப்பு என்று எழுதப்பட்டி-ருந்தது. கேரளத்தைச் சேர்ந்-தவர் தமிழக கவர்னராக இருந் தார். எனவே ஓணம் பண்டிகையை கொண்டாடுவ-தற்காக அமைச்சர்களுக் கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்-கும், முக்கிய பிரமுகர்களுக்கும் விருந்து வைத்து எங்களை அழைத்திருந்தார். ஓணம் பண்டிகை பற்றிய குறிப்பு அச்சடிக்கப்பட்ட தாளிலே இருந்தது. படித்துப் பார்த்தேன்.

ஓணம் பண்டிகை என்பது மாவலி சக்கரவர்த்தி ஒரு நாள் கேரளத்தில் தன்னுடைய மக்கள் எப்படி வாழ் கிறார்கள் என்று பார்ப்பதற்காக வரு கிற நாள். அந்த நாளைத் தான் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் என்று அதிலே குறிப்பிடப்பட்டிருந்-தது. மாவலி சக்கரவர்த்தி, மாப் புகழ் பெற்ற மன்னன். அவனை தீயவன் என்றும், கொடியவன் என்றும் அங்கிருந்த ஆரியர்-கள் வர்ணித்து, அவன் தொடர்ந்து ஆண்டு கொண்டி-ருந்தால், நாம் ஆட்சிக்கு வர முடியாது.

இப் பொழுதே அவனை வீழ்த்தி விட வேண்டு-மென்று அவனைப்பற்றி இல் லாததும், பொல்லாதது-மாகச் சொல்லி, அவனை அழிப்பதற்காக அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு, அதற்கு அவர், ``பயப்படாதீர்கள், நான் அவனை அழித்து விடுகிறேன் என்று சொல்லி வாமனாவ-தாரம் எடுத்தா ரென்றும், எடுத்து மூன்றடி மண் கேட்-டாரென்றும், அவனும் கொடை வள்ளல் என்ற காரணத்தால் தருவதாக வாக் களித்தான் என்றும், வாக்-களித்தபடி மூன்றடி மண் கொடு என்று கேட்டு, இரண்-டடியை பூமியிலே அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு நிலம் இல்லாத காரணத்தால் அவன் தலை யிலே காலைப் பதித்து அவனை அழித்து விட்டான் என்றும், அப்பொ-ழுது இறக்கும் தறுவாயில் மாவலி மன்னன், மகாவிஷ்-ணுவைப் பார்த்து, ``சரியா-கவோ, தவறாகவோ என்னை நீங்கள் இன்றைக்கு வீழ்த்தி விட்டீர்கள், ஆனால் நான் என்னுடைய மக்களை ஆண்-டுக்கொரு முறை போய்ப் பார்த்து அவர்கள் நன்றாக இருக்கிறார்களா, வளமாக வாழ்கிறார்களா என்று தெரிந்து கொள்ள என்னை நீங்கள் அனுமதிக்க வேண்-டும் என்று கேட்டுக் கொண்-டானென்றும், அதற்கேற்ப அவனுக்கு அந்த வரம் வழங்-கப்பட்ட தென்றும், அதுதான் ஓணம் பண்டிகைத் திருநாள் என்றும் அந்தத் துண்டுத் தாளிலே அந்த வரலாறு எழுதப்பட் டிருந்தது.

இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். மாவலி என்ற மன்னன், அரக்கன் அல்ல, நல்லவன், மனிதன் தான் மக்களை வாழ வைத்தவன், தன்னுடைய குடிமக்களுக்கு செங்கோல் மூலமாகச் சிறப்பு செய்தவன், அவர்களுடைய வாழ்வையெல்லாம் செழிக்க வைத்தவன், இப்படித்தான் தேவர்கள் அசுரர்கள் என்ற இந்த இரண்டு பிரிவினர் பற்றிய வரலாறு இருக்கிறது.

அப்படிப்பட்ட அசுரர் பிரிவிலே சேர்க்கப்பட்டவன் தான் நரகாசுரன். என்னை யாரோவொரு எதிர்க்கட்சித் தலைவர் இன்றைக்கு விடுத்த அறிக்கையில் நரகாசுரன் என்று வர்ணித்து விட்டதால், நான் ஒன்றும் கெட்டவனா-கவோ, தீயவனாகவோ, பொல்-லாதவனாகவோ ஆகி விட மாட்டேன், நான் எப்படி மாவலி சக்கர வர்த்தி மலை-யாளத்திலே தன்னுடைய மகத்துவத்தை உணர்த்துவதற்-காக மக்களிடம் செல்-வாக்கைப் பெற்றிருந் ததைக் காட்டுவதற்காக ஓணம் பண்டி கையே கொண்டாடப்-படுகிறதோ, அதைப் போலத்-தான் எங்களையும், பண்டித நேரு அவர்கள் வர்ணித்ததைப்-போல, பல சரித்திரப் பேரா-சிரியர்கள் வர்ணித்ததைப் போல, தேவர்கள் என்போர், அசுரர்கள் என்போர் என்ற இனங்களைப் பிரிக்கும் நேரத்தில், அசுரர்கள் எல்லாம் திராவிடர்கள், ஆகவே நாங்கள் அசுரர்கள் என்றால் திராவி-டர்கள் என்று நீங்கள் சொல்-லாமல் சொல்லுகிறீர்கள், ஆகவே நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்து அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொள்-ளத் தயாராக இருக்கிறோம்.

- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews03.html

தயார், தயார் தானா?

தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: ஒருவரைப் பார்த்து, நீ யார் என்று கேட்டால், எத்தனை பேர், தமிழன் என்று சொல்கிறோம்? முதலியார், யாதவர், பிராமணர், வன்னியர், தேவர், நாயுடு, செட்டியார் என்றோதானே சொல்கிறோம். இது மாறவேண்டும்; நாம், தமிழர்கள் என்று சொல்லவேண்டும்.
டவுட் தனபாலு: அப்படியா...? ரொம்ப நல்ல நோக்கமா இருக்கே... கல்வி நிலையங்கலயும், அரசு நிர்வாகத்துலயும் கேட்குற சான்றிதழ்கள்ல, எந்த ஜாதியையும் குறிப்பிடாமல், தமிழர்னு குறிப்பிட்டா சலுகை வழங்குவீங்களா? ஜாதியைச் சொன்னா சலுகை வழங்குறீங்களா?
தினமலர், 3.11.2010
பார்ப்பனர்கள் அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் அடிமடியில் கைவைத்துவிடுவார்கள் - அந்த அடிமடிதான் இட ஒதுக்கீடு.
இட ஒதுக்கீட்டிற்காக ஜாதி கேட்பதை நிறுத்திவிடலாமே - அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை.
எப்பொழுது?
தினமலர் கூட்டம் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் நடத்தி பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்களே, அதை நிறுத்தும்போது -
சங்கர மடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் மடாதிபதியாக வரும் காலம்தான் உண்மையான சுதந்திரம் வந்த காலம் என்று காகாகலேல்கர் கூறியுள்ளாரே - அது நடைமுறைக்கு வரும்போது -
ஜாதியை, வருண தர்மத்தை வலியுறுத்தும் கீதை, இராமாயணம், வேதம், மனுதர்ம சாஸ்திரங்களை பொது இடத்தில் கொளுத்தி, அவற்றின் சாம்பலைக் கூவத்தில் தூக்கி எறிய சங்கராச்சாரியார் தலைமையில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடும்போது -
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைக் காப்பாற்ற இரும்புக் கூண்டு செய்து வைத்துள்ளார்களே, அந்தப் பிரிவை நீக்கிட பார்ப்பனர்களே முயற்சிக்கும் போது - (இந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தைத்தான் தந்தை பெரியார் அறிவித்தார். 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தை எரித்து மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அனுபவித்தனர்).
நூற்றுக்கு மூன்றே சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் எங்களுக்கு இந்த அளவுக்கு மட்டும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடங்கள் அளித்தால் போதும் என்று பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பகிரங்கமாக அறிவிக்கும்போது -
இவைகளை வெளிப்படையாக, எள்மூக்கு முனை அளவுக்குக்கூட சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் செயல்படுத்திக் காட்டினால்,இட ஒதுக்கீட்டுக்காக - ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக இப்பொழுது நடைமுறையில் இருந்துவரும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு மூடு விழா செய்யப்படும். இந்தக் கண்ணோட்டத்தில் கேட்கப்படும் ஜாதிபற்றிய குறிப்பும் கேட்கப்படுவது நிறுத்தப்படும்.
என்ன, தினமலரே,
தினமணியே,
இந்து வகையறாக்களே
சங்கர மடங்களே,
தயார், தயார்தானா?
- கருஞ்சட்டை -

http://www.viduthalai.periyar.org.in/20101103/news04.html

செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழோசை அலைவரிசை மாற்றம்

பிபிசி உலக சேவை
அக்டோபர் 31 ஆம் தேதி,2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தமிழோசை அலைவரிசைகளில் மாற்றம் இடம்பெறுகின்றது.

தமிழோசை நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை

41 மீட்டரில் 7600 கிலோ ஹேர்ட்ஸ்

31 மீட்டரில் 9605 கிலோ ஹேர்ட்ஸ்

25 மீட்டரில் 11965 கிலோ ஹேர்ட்ஸ்

49 மீட்டரில் 6135 கிலோ ஹேர்ட்ஸ்

ஆகிய சிற்றலை வரிசைகளிலும்

இலங்கை நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாகவும் கேட்கலாம்.

- http://sarvadesavaanoli.blogspot.com/2010/11/blog-post.html

இப்படி ஓர் இயக்கத்தைக் காண முடியாது

குளிர்சாதன அறையில் உட்கார்ந்து எழுதுபவர் முடிவு செய்வதல்ல குடிசை வீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டிற்கு சென்றவன் முடிவு செய்துவிட்டான் 2011-லும் தி.மு.க. ஆட்சி!
ஆறாவது முறையாக கலைஞர் முதல்வராகிறார்
திராவிடர் இயக்க வரலாற்று நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, நவ. 2- குளிர்சாதன அறையில் உட்கார்ந்து எழுதுகிறவன் முடிவு செய்வதல்ல. குடிசை வீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டிற்குச் செல்பவன் 2011 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர, ஆறாவது முறையாக கலைஞர் முதலமைச்ச ராக வர முடிவு செய்வான் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

வட சென்னை மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் திராவிடர் இயக்க வரலாறு எனும் தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி 1-11-2010 திங்கள் கிழமை இரவு 7.15 மணிக்கு இராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது சிறப்புரையில் ஆற்றிய முக்கியப் பகுதி வருமாறு:

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் இப்படி ஓர் அருமையான நிகழ்ச்சியை தி.மு.க. இலக்கிய அணி யின் வட சென்னை மாவட்ட செயலாளர் பி.டி. பாண்டிச் செல்வம் தோழர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.
முத்துக்களை உதிர்த்ததுபோல்...
திராவிட இயக்க வரலாறு ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை அவ்வளவையும் இந்த குறுகிய நேரத்திலே சொல்லிவிட இயலாது. ஒரு நூலுக்கு உரைப்பாயிரம் போல இங்கே பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்கள் பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் மிக அருமையாக முத்துக்களை உதிர்த்தது போல எடுத்துச்சொல்லி என் பணியைக் குறைத்து அவருடைய உரையில் நல்ல அஸ்திவா ரத்தை அமைத்து எனக்குக் கொடுத்திருக்கின்றார்.
இழந்ததை மீட்டெடுக்க...
திராவிடர் இயக்கம் ஏன் தோன்றியது? நாம் இழந்ததை மீட்டெடுக்கத் தோன்றியதுதான் திராவிட இயக்கம். நாட்டிலே இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளைப் பார்த்து இது எந்தக் கட்சிக் கொடி என்று சொன்னால் எவராலும் சொல்ல முடியாது. புற்றீசல் போல அந்த அளவுக்குக் கட்சிகள். வானவில்லில் ஏழு வண்ணத்தைத் தாண்டி எட்டாவது வண்ணத்திலும் கொடிகளை வைத்தி ருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மக்களைப் பற்றிய நல்ல எண்ணங்களைவிட, கொடிகளின் வண்ணங்களைத் தான் உருவாக்கிக்கொண்டிருக் கிறார்கள்.

இப்படி ஓர் இயக்கத்தைக் காண முடியாது

உலகத்திலேயே திராவிட இயக்கத்தைப் போன்ற ஒரு இயக்கத்தை எங்கும் காண முடியாது. முதலில் நீதிக்கட்சி தோன்றியது. அதற்கடுத்து சுயமரியாதை இயக்கம் தோன்றியது. இந்த இரண்டு இயக்கத் திற்கும் தலைவராக இருந்திருக்கின்றார் தந்தை பெரியார் அவர்கள்.
1937 ஆம் ஆண்டு நீதிக்கட்சி படுதோல்வி அடைந் தது. பெரிய பெரிய மிட்டா, மிராசு ஜமீன்தார்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள். நீதிக்கட்சி பொதுத் தேர்தலில் தோற்றவுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அப்படிப்பட்ட காலத்தில் தான் சிறையிலிருந்த தலைவர் தந்தை பெரியார்தான் நீதிக் கட்சிக்குத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தக் கூடிய
ஆற்றல் படைத்தவர் என்று சொல்லி அய்யா அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அறிவகம் முக்கிய இடம்
இன்றைக்கு நான் பேசுகின்ற இந்த இடம் அறிவகம். திராவிட இயக்க வரலாற்றிலே பல முக்கிய முடிவுகளை எடுத்த இடம். அண்ணா அவர்கள் இங்கிருந்து பேசினார்கள். ஒரு குழல் இங்கே இருக்கிறது. இன்னொரு குழல் பெரியார் திடல்; இரண்டும் இரட் டைக் குழல் துப்பாக்கியாக இயங்கும். இரண்டு இயக்கத்திற்கும் ஒரே பார்வை என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய இடம் இந்த இடம்.

தொடர்ந்து தலைவராக கலைஞர்
இந்தியாவிலேயே இன்றைக்கு அய்ந்தாவது முறையாக முதலமைச் சராக ஆட்சி செய்துகொண்டிருக் கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர் கள் தொடர்ந்து 11 முறையாக, 12 ஆவது முறையாக தலைவராக இருந்து கொண்டு வருகின்ற மாபெரும் ஆற்றலாளர்.
அறிவகம் அன்றைக்குப் பழைய கட்டடமாக இருந்தது. அந்த பழை மையை மாற்றி புதுமையான கட்ட டமாக மாற்றியிருக்கின்றார் கலைஞர் - அண்ணா அறிவாலயம் போல.

மூத்த முன்னோடிகள்

அமைத்த மேடை வட சென்னையை எடுத்துக் கொண்டால் ராயபுரம், கல்மண்டபம் இதுபோன்ற பகுதிகளுக்கு தோழர் களால் அழைக்கப்பட்டு பேசியிருக் கின்றேன். பழனிச்சாமி, எஸ்.பி.டி திராவிடமணி, எஸ்.பி.வீரமணி எஸ்.ஆர். சாண்டோ, ஆரிய சங்காரன், என்.எஸ்.சங்கரரூபன், கண்ணபிரான், க. பலராமன் போன்ற முன்னோடிகள் அமைத்த மேடை இந்த மேடை. அவர் கள் கட்டிய மேடையிலிருந்து என்னு டைய உரையைத் தொடங்குகிறேன்.

திராவிட இயக்கம் என்பது ஒரு பேரியக்கம். இது ஒரு கொள்கைக் குடும்பம்.
எங்களோடு மிசாவிலே இருந்த ராமதாஸ் அவர்கள் இந்த மேடையில் இருக்கின்றார்.
பதவிக்காக தோன்றிய இயக்கமல்ல!
அருமைச் சகோதரர் டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் சொன்னது போல ஏதோ பதவிக்காக இந்த இயக்கம் தோன்றியதல்ல. பதவி என்பது ஒரு கருவி, அவ்வளவுதான்.
மீண்டும் ஆறாவது முறையாக கலைஞர் தான் முதல்வராக வரப்போகிறார். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை.
இன மீட்சிக்காக பாடுபடுகிற ஆட்சி! இந்த ஆட்சி சமுதாய மீட்சிக்காக, சமுதாய மாற்றத்திற்காக, இன விடுதலை மீட்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டு வருகின்ற ஆட்சி. நூறு ஆண்டுகால வரலாற்றை ஒரு முக்கால் மணி நேரத்தில் சொல்லிவிட முடியாது.
விமானத்தில் பயணம் செய்யும்பொழுது இதுதான் - வடசென்னை, இதுதான் அண்ணா நினைவிடம், இதுதான் கடல் என்று சொல்லு வதைப்போல- சொல்லவேண்டியுள்ளது. திராவிடர் இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப் பட்டது? ஆட்சிக்கு வர இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் தேவை, இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் தேவை என்று பார்க்கின்ற இயக்கம் அல்ல.

கலைஞரின் நாகை உரை
சமீபத்தில் நாகப்பட்டினத்திலே கலைஞர் அவர்கள் உரையாற்றுகின்றபொழுது சொன்னார்கள், ஆட்சி என்பது திராவிடர் இயக்கக் கொள்கையை இலட்சியத்தை செயல்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பு என்று அவர்கள் சொன்னார்கள்.
அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க...
ஓர் இலட்சியத்தை ஓர் இலக்கு நோக்கி செல்லக்கூடியது. ஜாதி ஒழிந்த சமுதாயம் அமையவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று பாடுபடக் கூடிய ஆட்சி -திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னார்கள்.
மக்களைத் தயார்படுத்தக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம். திராவிடர் கழகம் தேர்தலிலே நிற்காத ஒரு இயக்கம். திராவிடர் இயக்கக் கொள்கையை நிறைவேற்ற மக்களை ஆயத்தப்படுத்தக் கூடிய இயக்கம். மக்களை தயார்படுத்தக் கூடிய இயக்கம், இந்த இயக்கம்.
தந்தை பெரியார் அவர்களுடைய குருகுலத்திலே பயின்றவர்தான் அண்ணா, கலைஞர், நாங்க ளெல்லாம். அதனால்தான் தி.மு.க. ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணத்திற்கு சட்டவடிவம் கொடுத்தவர் அண்ணா. அதேபோல, இன்றைக்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் கலைஞர் அவர்கள். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றியவர் கலைஞர்.
தந்தை பெரியாரின் திட்டங்கள் எல்லாம் அண்ணா, கலைஞர் ஆட்சியில் சட்டமாக மலர்ந்தன. காஷ்மீரில் இருக்கின்ற பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் - கன்னியாகுமரியில் இருக் கின்ற பார்ப்பானுக்கு நெறி கட்டும்.

ஓட்டை உடைசல் கிடைக்காதா?

அதனால்தான் ஊடகத்தை தங்களுடைய பிடியிலே வைத்திருக்கின்ற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் கலைஞர் ஆட்சியை குறை சொல்ல ஒரு ஓட்டை, உடைசல் கிடைக்காதா, எந்தத் துரும்பாவது கிடைக்காதா என்ற எண்ணத்துடனேயே பார்க்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை என்று கேட்பதுதான் இதற்குமுன் எதிர்க்கட்சியினரின் வழக்கம். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால், தேர்தல் வாக்குறு திகளை ஏன் நிறைவேற்றினீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏராளமான வாக்குறுதிகளை கலைஞர் நிறை வேற்றியிருக்கிறார். சொன்னதையும் நிறைவேற்றி யிருக்கிறார். சொல்லாததையும் நிறைவேற்றி யிருக்கிறார். காரணம் என்ன? கலைஞர் அவர்கள் அடித்தட்டு மக்களுக்காகவே சிந்தித்து, சிந்தித்து பல காரியங்களை சிறப்பாக செய்து வருகிறார்.

யார் முடிவு செய்வது?

ஆறாவது முறையாக கலைஞர்தான் மீண்டும் முதல்வராக வரப் போவதைப்பற்றி ஏதோ குளிர்சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு எழுதுகிறவன் முடிவு பண்ணுகிற விசயமல்ல. குடிசை வீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டிற்கு மாறியிருக்கிறார்களே ஏழை, எளிய கிராமப்புற மக்கள் அந்த மக்கள்தான் நிர்ணயிக்கப் போகிற வர்கள். ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போடப்படும் என்று அறிவித்தார் கலைஞர்.
இதெல்லாம் நடக்குமா? ஏதோ கொஞ்ச நாளைக்குப் போடுவார்கள். அவர்களால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. நிறுத்திவிடு வார்கள் என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் அவர்களோ, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதை மேலும் குறைத்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை இன்றைக்கும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிந்திக்கிறார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் நல்வாழ்விற்காக நாள்தோறும் சிந்தித்துப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார். ஒரு பக்கம் சமூகப் புரட்சியை செய்துகொண்டு வருகின்றார். இன்னொரு பக்கம் பொருளாதார வளர்ச்சியை செய்து கொண்டு வருகின்றார் என்று கூறினார். திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு இந்த சமுதாயத்தின் நிலை எப்படியிருந்தது?
நாடகம் பார்க்க உரிமை இல்லை
இந்த வட சென்னையில் சொல்லுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். இது 1899 ஆம் ஆண்டு போடப்பட்ட நோட்டீஸ். வடசென்னை யானை கவுனி பகுதியில் லட்சுமி விலாஸ் நாடக சபை சார்பில் அபிராம சுந்தரி நாடகம். இந்த நாடகத்தை ஏன் பார்க்க வர வேண்டும்? இந்த நாடகத்தில் உள்ள கதையின் முக்கிய பகுதி என்ன என்பதை போட்டுவிட்டு நாடகம் பார்ப்பதற்குரிய கட்டணம் சோபா ஒரு ரூபாய். சேர் 12 அணா. இன்டர்மீடியட் சேர் 8அணா. காலரி 4 அணா. புருஷாளுக்குப் பாய் 4 அணா ஸ்திரீகளுக்கு ஜமக்காளம் 3 அணா என்று இப்படி கட்டணங் களைப் போட்டுவிட்டு கடைசியாக குறிப்பு என்று இந்த நோட்டீசில் போட்டிருக்கிறார்கள்.
பஞ்சமர்களுக்கு நாடகம் பார்க்க அனுமதி இல்லை என்று போட்டிருக்கிறார்கள். நாடகம் பார்க்க என்ன ஜாதி சர்டிபிகேட்டுடன் தான் வர வேண்டுமா? இன்றைக்கு யாராவது அந்த மாதிரி சொன்னால் புழல் சிறையில்தான் அடைக்கப் படுவார்கள்.
நூறு வருடத்திற்கு முன்பு இருந்த நிலை மாறியிருக்கிறதே இதற்கு யார் காரணம்? வருடா வருடம் ஆயுத பூஜைகள் வந்ததினால் ஏற்பட்ட மாறுதலா? அல்லது வருடா வருடம் தீபாவளி வந்ததினால் ஏற்பட்ட மாறுதலா? திராவிடர் இயக்கத்தின் அபாரத் தொண்டு திராவிடர் இயக்கத்தின் அபாரமான தொண்டு உலகத்திலேயே இப்படி ஒரு மனித நேய இயக்கத்தைக் காண முடியாது. மேலை நாடுக ளிலே ஆயுதம் ஏந்தி புரட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இந்த நாட்டிலே மாபெரும் சமுதாயப் புரட்சியை செய்தவர் தந்தை பெரியார்.

கலைஞர் செய்த காரியம்

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ராமகோபாலன் கீதை புத்தகத்தைக் கொடுக்க வருவதாக தகவல் வந்தது. அவர் வரட்டும் யாரும் தடுக்காதீர்கள் என்று கலைஞர் சொல்லிவிட்டார். உடனே அண்ணா அறிவாலயத்தில் இருந்து நான் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வாங்கி வைத்துக் கொண்டார். ராமகோபாலன் வந்து கலைஞரை சந்தித்தார். இந்த நூலை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று வந்தேன். இந்த நூலை நீங்கள் படிக்க வேண்டும் என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு இந்த நூலை வீரமணி எழுதியிருக்கின்றார் இதை நீங்கள் படிக்க வேண்டும் என்று ராமகோபாலனிடம் கொடுத்தார். அவர் அதிர்ச்சியோடு வாங்கிக் கொண்டார். இந்த செய்தியை கலைஞர் அவர்கள் தான் எனக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னார். பிறகு நண்பர்களும் நடந்த சம்பவத்தை எனக்குச் சொன்னார்கள். அந்த அளவுக்கு வேகமான, விவேகமான சிந்தனையாளர் கலைஞர் அவர்கள்.

அவமானங்களைப் பெற்றதால் பிறந்த இயக்கம்

எனவே அவமானங்களைப் பெற்றதால் திராவிட இயக்கம் பிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதனுடைய காலிலே போடப்பட்ட பொரு ளாதார விலங்கு கண்ணுக்குத் தெரியும் மனிதனு டைய கைகளிலே போடப்பட்ட அரசியல் விலங்கு கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும். ஆனால் மூளையிலே போடப்பட்ட அடிமை விலங்கு அவ்வளவு சுலபமாக கண்ணுக்குத் தெரியாது.

திராவிட இயக்கம் ஏன் பிறந்தது? அதன் வேலை முடிந்ததா?

அதன் வேலை தொடர வேண்டுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் ஒரு ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கி அவனுக்குப் பரிசு விழுந்தால் லட்சாதிபதி ஆகிவிடாலம். ஆனால் ஒருவனுக்குள்ள ஜாதி அவன் இறந்துவிட்டால் சுடுகாட்டுக்குச் சென்று அவனை எரித்த பிறகும் அவன் சாம்பலாகிறானே தவிர, ஜாதி சாவதில்லை. இராணுவ அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்கள் முன்னாள் முதல்வர் சம்பூர்ணானந்த் சிலையை உத்தரப்பிரதேசத்தில் திறக்கச் சென்ற பொழுது அங்குள்ள உயர் ஜாதி மாணவர்கள் இவரை அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.

பாபுஜெகன்ஜீவன்ராம் குமுறினார்

தாழ்ந்த ஜாதிக்காரன் நீ அமைச்சராகி விட்டால் எங்களுடைய ஷூக்களுக்கெல்லாம் யார் பாலிஷ் போடுவது என்று அவமானப்படுத்தி அனுப்பினர். சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் தந்தை பெரியார் பிறந்த மண் என்று சொல்லி அவருடைய மனக் குமுறலைக் கொட்டினார்.
அதனால்தான் கலைஞர் அவர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்து வைத்தார். அது மட்டுமல்ல, இந்த நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி நடத்திக் கொண்டு வருகின்றார்.
தியாகராயரும், டி.எம்.நாயரும்
சர்.பிட்டி.தியாகராயர் காங்கிரஸ்காரர். பெரிய பக்திமான். டி.எம்.நாயர் நாத்திகவாதி. இரண்டு பேரும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நின்றபொழுது பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் தோற்கடித்தார்கள். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் இருவருமே எலியும் பூனையும் போல இருந்தவர்கள். இவரும் கீரியும், பாம்பும் போல இருந்தவர்கள்.
சர்.பிட்டி.தியாகராயர் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பெரிய தொகையை நன்கொடையாக வழங்கினார். கும்பாபிஷேக விழாவிற்கு இவர் சென்றார். பார்ப்பனர்கள், இவரை கும்பாபிஷேக மேடையில் ஏற்றுவார்கள் என்று சர்.பிட்டி.தியாகராயர் நினைத்தார். இவரைப் பார்ப்பனர்கள் ஏற்றவில்லை. இவரிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த பார்ப்பனரை மற்ற பார்ப்பனர்கள் கும்பாபிஷேக மேடையில் ஏற்றினார்கள். இந்த அவமானத்தை பார்ப்பனர்களின் ஆணவத்தை உணர்ந்த தியாகராயர் உடனே காரை எடு என்று சொல்லி டி.எம்.மாதவன் நாயர் வீட்டிற்குச் சென்றார். இவர் எதற்கு இங்கு வந்திருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை. டி.எம்.நாயரைக் கண்டவுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார் சர்.பிட்டி.தியாகராயர். திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு இவைதான் காரணங்கள்.

நாயரின் ஸ்பர்டாங் ரோடு பேச்சு
டாக்டர் டி.எம்.நாயர் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் சென்னை ஸ்பர்டாங் சாலைப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார். சேத்துப்பட்டிற்கு அருகில்தான் இருக்கிறது ஸ்பர்ட்டாங் ரோடு.
டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய சொற்பொழிவில் அரிய செய்தி ஒன்றைச் சொல்லுகின்றார். இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிடர் இனம், மற்றொன்று, நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் போது, வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம்! (நீங்கள் கை தட்டியது போல்தான் அன்றைக்கும் கூட்டத்தினர் வெட்கம், வெட்கம் என்று ஆரவாரித்துக் கைதட்டினர்)
இத்தகைய இழிதகைமை கொண்ட ஆரிய இனம், நாட்டின் இந்தப் பகுதிகளில் திருட்டுத் தனமாக நுழைவதற்கு என்றே, அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே, ஏற்படுத்தப்பட்டு விட்டதோ என்று எண்ண வேண்டிருக்கிறது. வட இந்திய மலைப் பகுதிகளான இமயமலை, இந்துகுஷ்மலை ஆகியவற்றின் இடையிடையே உள்ள கைபர் கணவாய், போலன் கணவாய் முதலிய கணவாய்களின் வழியாகத் தாங்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு சாரை சாரையாக உள்நுழைந்து, வழி நெடுக, மேய்த்துக்கொண்டே வந்து ஆங் காங்குப் பரவி முகாம் அடித்துக்கொண்ட வர்கள்தாம், இந்த ஆரியப் பரதேசிகள் (கைதட்டல்! ஆரவாரம்!) என்று பேசியிருக்கின்றார். சமுதாய ஏற்றத்தாழ்வு, நிலையை மாற்றத்தான் திராவிட இயக்கம் பிறந்தது.

2011இல் மீண்டும் கலைஞர் ஆட்சி

1917இல் டாக்டர் டி.எம்.நாயர் சொன்ன செய்தியை நடைமுறைப்படுத்தியவர் நமது கலைஞர் அவர்கள். அதனால்தான் அனைத்து ஜாதியி னரையும் அர்ச்சகராக்க சட்டம் இயற்றினார்.
எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டுமென்று பாடுபடுகின்ற இயக்கம்தான் திராவிட இயக்கம். 2011ஆம் ஆண்டு திராவிட இயக்க ஆட்சி கலைஞர் ஆட்சி-மலர்வது உறுதி. ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் கலைஞர்தான் இந்த நாட்டை ஆளப்போகின்றார். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101102/news01.html

திங்கள், 1 நவம்பர், 2010

earth - Think Atheist

earth - Think Atheist

விடுதலை

தமிழர் வாழ்வில் அனைத் துத்துறைகளிலும் விடுதலை உணர்வையும் விவேக எழுச்சி யையும், எவனடா உயர்ந்த வன்? எவனடா தாழ்ந்தவன்? என்ற தன்மானத் தீயையும் தட்டி எழுப்பிய உலகப் பெரியாரின் ஒப்பற்ற போர் வாளான விடுதலை ஏடு- சென்னை யில் புதிய பணிமனையில் பெரியார் திடலில் திறப்பு விழா கண்டது இதே நாளில்தான் (1965).
தந்தை பெரியார் முன்னி லையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் புதிய பணிமனை யைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட் டது - ஒவ்வொரு தமிழன் இல் லத்திலும் பொது இடங்களிலும் கூட கண்ணாடி சட்டம் போட் டுத் தொங்க விடத்தக்கதாகும்.
தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க விடுதலை யைத் தொடங்கினார்கள். விடுதலையின் புரட்சிக் கருத்துக்களை வரவேற்க மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும் புவது இல்லை. அடி மட்டத்தில் உள்ளவர்களா வது வரவேற்கின் றார்களா என்றால், இப்பொழுது தான் அவர்கள் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. தமிழர் களின் நலன் கருதி நடத்தக் கூடிய விடுதலை யினை தமிழர்கள் ஒவ்வொரு வரும் வாங்கிப் படிக்க வேண் டும். விடுதலை வாங்கிப் படிப் பது - தமிழர்கள் ஒவ்வொரு வரின் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல், விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று அருளினார் தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள்.
புதிய இடத்திற்கு விடுதலை வந்து தவழ்ந்து தனித்துவத்துடன் வீறு நடை போட ஆரம்பித்து 45 ஆண்டுகள் நகர்ந்து விட்டன.
பழைய இயந்திரப் பற்களில் சிக்கி படாதபாடுபட்டு, அதன் பின்னர் காலத்துக்கேற்ற வசதி வாய்ப்புகளுடன், வளர்ந்து, இன்று தமிழ்நாட்டில் தலை சிறந்த தொழில் நுட்பத்துடனும், புத்தம் புதிய பொலிவுடனும் வீறுநடை போடும் ஏடாக இது ஒளிர்கிறது.
பல நாளேடுகளை அச் சிட்டுக் கொடுக்கும் அளவுக்கு அதன் செயல் திறன் வளர்ந் தோங்கியுள்ளது. இணைய தளத்தில் முதன்முதலாக வெளிவந்த ஒரே ஒரே ஏடு விடுதலைதான்.
திருச்சியில் இன்னொரு பதிப்பு என்கிற அளவுக்கு அதன் இறக்கைகள் வலுப் பெற்றுள்ளன.
எத்தனையோ விழுப் புண் களை ஏற்று, வீழ்ந்து கிடந்த இந்த இனத்திற்கு முதுகெ லும்பைக் கொடுத்து வருவது இந்த விடுதலைதான்!
ஒருமுறை கி.ஆ.பெ. விசுவ நாதன் அழகாகச் சொன்னார்:
ஒரே வார்த்தையில் கூறி விளக்க வேண்டுமானால், விடுதலை நேர்மை உள்ளவர் களுக்கு நீலோற்பல மாலை யாகவும், விஷமக்காரர்களுக்கு விரியன் பாம்புக் குட்டியாகவும் காட்சியளிக்கும் என்று கூறலாம். அது விடுதலை யின் குற்றமல்ல. அதை விரித் துப் படிக்கும் மக்களின் மனக் குற்றமேயாகும் (6.7.1937) என்றார்.
இந்த விடுதலை முக் கால் நூற்றாண்டைத் தாண்டி புதுப் பொலிவுடனும், புது வேகத்துடனும் - எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்கிறது என்றால், பல நிலைகளிலும் அதனை மேலால் உயர்த்திக் கொண்டு வருபவர் நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களே ஆவார்கள். 75 ஆண்டு விடுதலை வயதில் 48 ஆண்டுகள் அதன் ஆசிரியர் என்ற கின்னஸ் சாதனையும் அவரையே சாரும்.
கடைசியாக ஒன்று -தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் அருள்வாக்கை மறந்து விடாதே தமிழா!
- மயிலாடன்

- http://www.viduthalai.periyar.org.in/20101031/news11.html

சனி, 30 அக்டோபர், 2010

இலங்கை போர்க்குற்ற ஆதாரங்களை டிசம்பர் 15ஆம் தேதி வரை அய்.நா. சபைக்கு அனுப்பலாம்!

ஈழத் தமிழர்களுக்கு வல்லுநர் குழு கோரிக்கை!

நியூயார்க், அக்.28- இலங்கையில் நடந்த போர்க்குற்ற ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அய்.நா.சபைக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம் என்று அய்.நா. வல்லுநர் குழு கூறியுள்ளது.
இலங்கை அரசு படைகளுக்கும் , புலிகளுக்கும் நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் பன்னாட்டு போர்விதிகள் மீறல்கள் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான்-கீ-மூன் நியமித்துள்ள அய்.நா.வல்லுநர் குழு அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கவென அய்க்கிய நாடுகள் செயலாளர் பான்-கீ-மூன் நியமித்துள்ள வல்லுநர்கள் குழு அறிவித்துள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் முறையீடுகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அய்.நா. சபை செயலாளர் பான்-கீ-மூன் ஆகியோருக்கிடையில் நியூயார்க் கில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஏற்பட்ட ஒப்பந்தத் தின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை ஆரம்பிப்பதற்கு வல்லுநர் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் இது குறித்து ஆதாரங்களை தெரிந்து வைத்திருக்கும் யாரும் தமக்கு தெரிந்த உண்மைகளை முறையீடுகளா மின்னஞ்சல் மூலம் வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் ரகசியமாக பேணப்படும். அய்.நா.சபை வல்லுநர் குழுவில் இந்தோனேசியாவின் முன்னாள் நீதிபதி மர்சூக்தருஸ்மான் தலைமை பொறுப்பை வகிப்பதுடன், அமெரிக்க சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரட்னர், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர் யஸ்மின் கூகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி விசாரிக்க கடந்த ஜூன் 22ஆம் தேதி அய்.நா. ஒரு வல்லுநர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக்குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வல்லுநர் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், விவரங் களையும் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது.
தமிழர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். 10 பக்கங்களுக்கு மிகாமல் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வல்லுநர் குழுவிற்கு தமிழர்கள் அனுப்பி வைக்க தவறினால் சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விட வேண்டாம். எம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் நாம் செய்து கொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லாது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலோ அய்.நா. வல்லுநர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள்.
ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளை தொடர்பு கொள்ளுங்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்ய வேண்டும் என்று அனைத்து தமிழர்களையும் அய்.நா. வல்லுநர் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் அய்.நா.வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் அய்.நா. வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் விரைந்து செயல்பட்டு சாட்சிகளை உடனே அய்.நா. வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

- http://viduthalai.in/news/index.php?option=com_content&view=article&id=246:2010-10-28-13-34-18&catid=38:2010-09-15-05-14-04&Itemid=55